விபத்துகளை தவிர்ப்போம் - விழிப்புணர்வு பகிர்வோம்

விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான்

சாலையின் ஓரமாக நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுகிறது. வளர்ச்சி என்ற மோகத்தில் அதிவேக வண்டிகளை அறிமுகம் செய்து விட்டது வாகனச் சந்தை
வேகம் என்ற பெயரில் வாகனத்தை இயக்கி கட்டுப்பாட்டை இழந்து வண்டி ஓட்ட கூட தெரியாத ஏழை நடுத்தர மக்களின் மீது ஏற்படும் வலிகளை தவிர்ப்போம்

சாலையின் பாதைகளில் செல்லும் வாகனங்களின் வேகம் எத்தனை 
மலை பாதைகளில் செல்லும் வாகனங்களின வேகம் எத்தனை.
இவை அறிவிப்பு பலகையாக மட்டும் இல்லாமல் சாலையிலும் செயல்படுத்த பட்டால் மட்டுமே சாலை விபத்துகளை தவிர்க்க முடியும் 

கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவை.

விபத்து வண்டி ஓட்டி வந்தவரின் அஜாக்கிரதையால் நடந்ததா.. அல்லது வண்டி தன் கட்டுப்பாட்டை இழந்து உருண்டதா..

மலை சரிவில் இருந்த ஓற்றை மரத்தின் உதவியால் உயிர் பிழைத்தனர் பலர்.அப்படியாயின் மலை சரிவுகளில் இனி அதிக அளவில் மரங்களை வளர்ப்பது சாலை விபத்துகளை தடுக்க வழி வை செய்யுமா..

இதை பற்றி ஊடகங்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளி வந்தால் சிறந்ததாக இருக்குமா...


சனாதன, ஜாதி மத சர்ச்சைகளுக்கு விவாதம் நடத்தி நேரத்தை செலவழிக்கும் ஊடகங்களே... விபத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவோம்.


சாலை விதிகளை மதிப்போம்..பாதுகாப்பாக வாழ்வோம்

செவாலியே சிவாஜி - அப்பாவின் அறிவுரை

 இனிமே அப்பா உன்னை அடிக்கவே மாட்டேன். ஏன்னா நீ ரொம்ப பெரியவனா வளர்ந்துட்டே..

பழமை வாய்ந்த அந்த கல்லூரியின் மாபெரும் ஆலமரத்தின் அடியில் நின்று கொண்டு சுற்றி இருப்பவர்கள் பற்றிய நினைவின்றி பேசினார்.

நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் தானே..வலிக்குதாடா....

இரண்டு ஆண்டுகளாக பெல்டை தொடாத அப்பா, அவனின் கன்னத்தை தடவிக்கொண்டே அனுசரணையாக கேட்டார்.

அன்னிக்கு உன்னை அடிச்சவனும் நான் தான் இன்னிக்கு இப்படி பாசமா பேசுறவனும் நான் தான்.. நான் பெரிய சிவாஜி ரசிகன் தெரியுமா.. கல்யாணம் ஆன புதுசுல அவரை மாதிரியே நடிச்சு காண்பிச்சு உங்க அம்மாவ சிரிக்க வைப்பேன்..

அதனால் நான் எது பண்ணிணாலும் நான் நடிக்கிறதா கிண்டல் பேசுறா.. உங்க தாய் மாமன் கூட போன வாரம் கல்யாண வீட்டுக்கு போன என்னை செவாலியே சிவாஜி வர்றார் பாருங்க என பேசி சிரிக்கிறான்

ஆனா நான் உண்மையான தான் இருக்கேன்டா.. எங்க தலைவர்கிட்ட உங்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க தெரியலை என்ற போது சொன்னாரூ.. எனக்கு திரையில் நடிக்க தெரிஞ்சுது வாழ்கையில் நடிக்க தெரியலை அப்படின்னு.

நான் மட்டும் இல்லடா, சிவாஜி ரசிகர்கள் எல்லோருமே உணர்ச்சிவசப்பட்டவங்க தான் ஆனால் எங்களுக்கு வாழ்கையில் நடிக்க தெரியாதுப்பா பேச பேச அவரின் நாக்கு குளறியது 

அன்னிக்கு உன்னை தப்பா நினைச்சுகிட்டே அடிச்சுட்டேன்.அந்த காலத்துல பொண்ணுகளை நினைச்சு கவலைப்பட்டோம் இந்த காலத்துல பொண்ணை விட பையனை பத்தி கவலை தான் அதிகமா இருக்கு

இல்லப்பா எனக்கு வலிக்கவே இல்லை..ஆனா எதுக்கு அடிச்சீங்கன்னு தான் இன்னும் புரியவே இல்லை.

நான் காதலுக்கு எதிரானவன் இல்லடா..ஆனா உன்னை எந்த பொண்ணும் ஏமாத்திட கூடாதுன்னு தான் அப்படி செஞ்சேன்.

நான் யாரையுமே காதலிக்கலையே.உங்களையும் அம்மாவையும் விட எனக்கு யாரையுமே தெரியாதே.. நீங்க எங்களை யார் வீட்டுக்கும் கூட அழைச்சுட்டு போகலையே.

இல்லட்டா அன்னிக்கு நீயும் அந்த பொண்ணும் பேசிக்கொண்டு இருந்ததை மாடியில் இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..

ஏதோ என்னோட சின்ன வயசு வேதனை.. அதனால் தான் உனக்கு அறிவுரை  தெரியாம அப்படி பண்ணிட்டேன்.

அப்பா நான் எல்லாரிடமும் அன்பா தான் பழகுவேன்.அதுக்காக நான் அவளை லவ்வு பண்ணிட்டேன்னு நீ நினைச்சா எப்படிப்பா.

தப்புதான்டா கண்ணா.. அவனின் தோளை கட்டிக்கொண்டு மன்னிச்சிடு கண்ணா..இனி நீயாவது உன் இஷ்டப்படி சுதந்திரமா வாழுடா..

யாராவது உன்னை காலேஜில் படிக்கும் போது லவ்வு பண்ணினாலும் அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்டா..

கல்லூரியில் சேர அப்பிளிக்கேஷன் வாங்கிய நாளில், காலேஜ் சீட் கிடைக்குமா என்று கவலை படாமல், மகனின் வருங்காலத்தை பற்றி பேசியது அப்பாவின் கோழை மனது.

எனக்கு நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வரணும்..அதே சமயம் நீங்க அனுமதிச்சா ஹாக்கி டீம்ல சேருவேன்.

நம்புங்கப்பா நிச்சயமாக படிப்புலையும் கவனம் செலுத்துவேன்.

இவர்களின் பேச்சு அனைவரின் காதுகளில் விழுந்ததா என்று தெரியாது.ஆனால் அனைவரின் கண்களும் இவர்களை நோக்கியே இருந்தது.

கண்கலங்கிய அப்பாவின் தோளில் கிடந்த கட்டம் போட்ட சிட்டி துண்டை எடுத்து அவரின் கண்களை துடைத்தான்.

அப்பா வாங்கப்பா போகலாம்..

இல்லப்பா, இங்கே கேண்டீன் இருக்கும் அதுல போய் சாப்பிட்டு விட்டு போகலாம்.

அம்மா சமைச்சு வைச்சிருப்பாளே.. 

ஓர் நாள் வெளியே சாப்பிட்டா அவ கோபிச்சுக்க மாட்டா.

பாப்பா இல்லாம எப்படிப்பா தனியா நாம சாப்பிட முடியும்.இதை கேட்டா அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா.

கண்ணில் மின்னல் தெரிக்க பேசியவரின் முகத்தில் கவலை படர்ந்தது.

சில நிமிட மெளனத்தகற்கு பிறகு.

சரிப்பா நாம வீட்டுக்கு போகும் போது அந்த பஸ்ஸாப்புல இருந்த கடையில் சம்சாவும் அவளுக்கு பிடிச்ச ஆந்திரா முறுக்கும் வாங்கிட்டு போவோம் சரிதானா..


ஏதோ இந்தியாவும் பாகிஸ்தானும் சமரச ஒப்பந்தம் கையெழுத்திட்டு களைத்து போய், அடுத்த கட்ட நிலைக்கு செல்வது போல் காலேஜ் கேண்டீன் நோக்கி சென்றனர்.

ஐயா.. பொங்கல் மட்டும் தான் இருக்கு.. பஜ்ஜி போட பத்து நிமிஷம் ஆகும் உள்ளே நுழையும் முன்னரே சத்தமாக கேஷியர் சொல்வது காதில் விழுந்தது.

எது இருக்கோ அதை தாங்க, தம்பி ஏதோ வயிறு நிறைச்சா போதும் வாய்க்கு ருசியே இல்லாட்டியும் பரவாயில்லை

டீ மாஸ்டர் சன்னமாக சிரித்தார்...அண்ணாச்சி நீங்க கிராமத்து ஆளா.

ஆமாம் எப்படி உடனே கண்டுபிட்டிச்சீங்க.

அவரோட அறிவுக்கு அமெரிக்காவுல தான் வேலைக்கு கூப்பிட்டாங்க. ஆனாலும் என்கூடவே இருக்கணும்ன்னு ஆசைபட்டு மாஸ்டர் வேலை பார்க்கிறாரு.

இலைய போட்டு தண்ணீரையும் பொங்கலையும் வைத்த படி நக்கலாக சொன்னார் சர்வர் சண்முகம்

டேய், என்னடா அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கே, சட்னி சாம்பார் உங்க வீட்டு கிழவியா வந்து கொடுப்பா சீக்கிரம் வாடா.. நமக்கு வியாபாரமே நாலு மணி நேரம் தான் இதுல எப்போ பாரூ போன் நொண்டிக்கிட்டு..

எப்படி கண்டுபிட்டிச்சீங்க சொல்லவே இல்லையே, அதை முதல்ல சொல்லுங்க தம்பி மீண்டும் கேட்டார் வேலு..


அட நீங்க வேற இது என்ன பிரம்ம சூத்திரமா...மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படையா பேச கிராமத்துகாரங்களால் தான் முடியும்.மனசுல ஓண்ணு வைச்சுகிட்டு வெளியே நல்லவன் மாதிரி நடிக்க தெரியாத வெள்ளந்தியான குணம்.

நான் கூட இங்க வந்து புதுசுல இப்படித்தான் வெளந்தியா பேசி கஷ்டப்பட்டேன்.. ஆனா இந்த எட்டு வருஷத்துல எண்பதாயிரம் நெளிவு சுழிவு கத்துக்கிட்டேன்... மனசுல இருக்கிறதை வெளிப்படையாக எப்பவுமே பேசவே மாட்டேன்..என்ன உண்மையவே பேசினா வியாபாரம் படுத்து தூங்க வேண்டியது தான் ஓனர் செந்தில் சொல்லவும் கடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

பல நாட்களுக்கு பிறகு தன்னையும் அறியாமல் உண்மைய சத்தமாக பேசிவிட்டு, அவர்கள் சிரித்த பிறகே தன்னை உணரந்த படி அசடு வழிந்தார் கடை ஓனர்.

அண்ணாச்சி பஜ்ஜி சூடா இருக்கு..

ஆளுக்கு இரண்டு சூடா வையுடா..

தம்பி அதுவெல்லாம் வேண்டாம்.காசு கம்மியா தான் இருக்கு

அட... எங்க அண்ணன் நாலு பஜ்ஜி சாப்பிட்டாலும் கல்லாவுல காசு நிறைச்சு தான் இருக்கும் என்ற படி கண்சிமிட்டினார்

அவரை தன் உடன் பிறந்த அண்ணனாகவே ஏற்றுக்கொண்ட ஓனர்.

சுடச்சுட பரிமாறப்பட்ட பஜ்ஜியின் சூட்டை தாங்க இயலாமல், மகனின் கை சுட்டது.

தம்பி, சூடான பஜ்ஜிய இப்படி பிச்சு சாப்பிடணும்.

அந்த பஜ்ஜியை உடைத்து அவனுக்கு ஊட்டி விட்டார் அவனின் அன்பான அப்பா

அப்போது கேண்டீன் உள்ளே வந்த ஓருவரை பார்த்து அனைவருமே எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

ஆனால் அப்பாவும் மகனும் பஜ்ஜியில் இருந்த எண்ணெயுடன் போட்டி போட்டு தங்களின் பாசத்தை புழிந்து கொண்டு இருந்தனர்.

அவர் சாப்பிடுவதை நின்று வேடிக்கை பார்த்த படி இருந்த மனிதர்.

எப்போதும் அதிகார தோரணையில் பேசும் அவர் மெலிதான குரலில் கேட்டார்.

ஐயா உங்க பையனா.. காலேஜில் சேர்க்க வந்தீங்களா..

ஆமாங்கய்யா..ஆனா காலேஜ் சீட் கிடைக்குமான்னு தெரியலை.. இங்கே எல்லாம் பணக்கார வீட்டு புள்ளைங்களுக்கு தான் சீட்டு கிடைக்குமாமே..

எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு.ஆனா இவனுக்கு இந்த காலேஜ் மேல ஏதோ கிறுக்கு பிடிச்சு இருக்கு...படிச்சா இங்கே தான் படிப்பேன் இல்லாட்டி.நானும் உன் கூடவே ஆடு மாடு மேய்சுகிட்டு வயல வரப்புன்னு வாழுறேன்னு சொன்னான்.சரி நாம தான் படிக்காம போயிட்டோம் இவனாவது படிச்சு நல்ல நிலைக்கு வந்தா நல்லது தானே.

பிரின்ஸ்பாலை போய், பார்த்து உங்க நிலையை சொல்ல வேண்டியது தானே.

அவர் ரூம் முன்னாடி தான் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்தோம். திங்கள்கிழமை வரச் சொல்லிட்டாங்க..அவர் ஏதோ மீட்டிங்கில் இருக்கிறாம். அவர் வேற கோபக்கார மனுசனாமே. அதான் என்ன செய்யுறதுன்னே புரியாம இருக்கோம்.. இன்னிக்கு வயலுக்கு தண்ணி பாச்சல..செம்மறி கூட்டத்தை மச்சான்கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன். ஆறு மணிக்கே கிளம்பியாச்சு.மணி இப்போ 11 மணி அதான். வந்த வேலைதான் முடியலைன்னு வயித்து தெரியலையே..பசி உயிர் போகுது அதான் ஏதாவது சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று இங்கே வந்துட்டோம். ஜப்பசியில் பெய்த்த அடைமழை போல் பேசி முடித்தார்.

கேண்டீன் இருந்தவர்களுக்கு அதிசயமாக இருந்தது, எட்டு வருஷத்துல ஓர் நிமிஷத்துக்கு மேல யாராவது பேசினாலே கோபத்தை காட்டும் மனிதர் இப்படி அமைதியா இருக்காறே புரியாமல் வியந்து பார்த்தனர்.

அந்த கோபக்கார மனுஷன் நான் தான் புன்னகையுடன் சொன்னார்..

ஏதோ பெரிய தவறு செய்துவிட்ட நினைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறந்து. ஐயா என்னை மன்னிசுடுங்க எப்படியாவது என் பையனுக்கு இந்த காலேஜில் சீட் கொடுங்கய்யா எச்சில் கையுடன் காலில் விழுந்தார்..

ஏலே நீயும் விழுடா அவர் சொன்னவுடன் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு போல் அவனும் அவர் காலில் விழுந்தான்.

Sorry Sir.., எங்க அப்பா அவ்வளவா படிக்கலை அவருக்கு சூதுவாது எதுவுமே தெரியாது.. ஆடுமாடு, வயல் தவிர அவருக்கு எதுவுமே தெரியாது..

அப்பாவும் மகனும் பஜ்ஜி தின்ற எச்சில் கையுடன் கூப்பிட்ட படி நின்றனர்.

கூட்டத்தில் அனைவரும் முணுமுணுத்தனர்.சீட் இனி கிடைச்ச மாதிரி தான்.

நீங்க முதல்ல சாப்பிட்டு முடிங்க.. நான் காத்திருக்கிறேன்.

முதன் முதலாக கல்லூரி பிரின்ஸிபாலை சிரித்த முகத்திலும் இவ்வளவு அன்பாகவும் பார்த்து செய்வதறியாது தவித்தனர் 

இருவரையும் மீண்டும் சாப்பிட வைத்தார்.

மாஸ்டர் டீ போடுங்க. இஞ்சி டீயை வாங்கி மிகவும் ரசித்து குடித்தார்.. அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த தமிழ் துறை பேராசிரியர் பிரின்ஸ்பாலை கண்டு பம்மினார்.

டூட்டி நேரத்தில் கேண்டீனில் என்ன வேலை என்று கத்திவிடுவாரே என்ற பயத்தில்.ஆனால் அவரோ சந்தோஷமாக வாங்க சார் பஜ்ஜி வாசம் ரூம் வரை வந்துடுச்சா..கேலியாக கேட்டார்.

அசடு வழிந்தார் . மிஸ்டர் குமரேசன்  நீங்க போய் ஆபிஸ் இருந்து College seat allocation, கோவிந்தனை பேப்பர் ஸ்டாம்ப் எல்லாம் எடுத்து கிட்டு சீக்கிரமா வரச்சொல்லுங்க பத்து நிமிஷத்துல ஓர் சீட் போடணும் ரொம்ப அவசரம். நீங்களும் உடனே வரணும் புரியுதா..

சரி சார் என்ற படி L.G.K குழந்தை ஓடுவது போல் வேகவேகமாக ஓடினார் .

சில நிமிடங்களில் அது கேண்டீனா.அல்லது ஆபிஸ் அலுவலகமா என்பது போல் காட்சிகள் மாறியது.

தம்பி, உன்னோட மார்க் ஷீட் காட்டு..

பதற்றமாக கை கால் நடுநடுங்க இருந்தவனை ஆதரவாக பற்றினார்..

பதட்டமே படாத தம்பி..அந்த பையை கொடு.. அழுக்கெறிய அந்த கோவில் கும்பாபிஷேக மஞ்சள் பை அதில் கைபிடி கூட பியிந்து போயி சிரித்தது.

அதிலிருந்து ஓவ்வொரு பேப்பரையும் எடுத்து பார்த்தார்.

அதில் அவர் வரைந்த ஓர் அழகான ஓவியமும் இருந்தது.

ஐயா அது இவனோடது தான்.எப்பவாச்சும் இப்படி பென்சில்ல கிறுக்குவான்.

உன்கிட்ட நிறைய திறமை இருக்குடா.. அதிகாரதோரணை அவரை மீண்டும் அரவணைத்தது.

நல்ல மார்க் எடுத்து இருக்கே உனக்கு எந்த டிபார்ட்மெண்ட் வேணும்.

பதில் சொல்ல தெரியாமல் அப்பாவும் மகனும் திணறினர்.

சார், எனக்கு நீங்க எந்த சீட் கொடுத்தாலும் சம்மதம் தான்.

அப்போ B.A arts, தந்தா போயி படிப்பீயா சிம்மம் போல் வார்த்தையில் கர்ஜித்தார்.

சரிதான், பையனுக்கு சீட் அவ்வளவுதான்.

மீண்டும் இப்படியாக கூட்டம் நினைத்தது.

கண்கலங்கிய படி அந்த மாணவன் சொன்னான்.சார் எனக்கு இந்த காலேஜில் படிக்கணும் என்று தான் ஆசை மத்தபடி நீங்க எந்த படிப்பு கொடுத்தாலும் அதில் என்னால் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கு.

பதிலுக்கு இன்னொரு சிம்மம் கர்ஜிப்பது போலவே இருந்தது. 

சில பேப்பரை வாங்கி கையெழுத்திட்டார். 

இப்பவே பேங்க்ல 1,250 ரூ பணம் கட்டி சேர்ந்துடுங்க..

அப்பாவும் மகனும் விழிபிதுங்கி நின்றனர்.

கேண்டீன் ஓனர் கல்லாவின் பணத்தை எண்ணிவிட்டு 1,000 ரூ தான் இருக்கு என்றார்.

இந்த முறை பிரின்ஸிபால்.. புரியாமல் விழித்தார்.

சார் அவங்க கிட்ட பஜ்ஜி சாப்பிடவே காசு கம்மியா தான் இருந்துச்சு...

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மூன்று ஆயிரம் ருபாய் தாளை எடுத்து குமரேசனிடம் கொடுத்தார்.. சார் நீங்க போயி இவங்களுக்கு வேண்டிய உதவியை செய்யுங்க.. இதையாவது ஓழுங்கா செய்வீங்க இல்ல அதுக்கும் நான் தான் வரணுமா.

குமரேசன் முகத்தில் வியர்வை தாண்டவமாடியது..சரியா செய்வேன் சார்.


பில் கட்டி இந்த பையனுக்கு அவனோட கிளாஸ்ஸ போய் காட்டுங்க. பிறகு வந்து என்னை பாருங்க புரியுதா.கேண்டீன் தாண்டியும் அவரின் சத்தம் பலமாக கேட்டது.

ஐயா உங்க பையனுக்கு முதல் குரூப்பில் இடம் கொடுத்து இருக்கேன் நல்லா படிக்க சொல்லுங்க.. இந்த முறை அவரின் பேச்சு பக்கத்தில் இருப்பவருக்கு கூட கேட்க மறுத்தது.

நீங்க சாமி மாதிரி என்றவரை வாரியணைத்தார்.. இப்படித்தான் நான் காலேஜ் சேரும் போது எங்க அப்பா எனக்கு பஜ்ஜி ஊட்டினார்.. முகத்தில் புன்னகை மின்ன பேசியவர்..

ஏதோவது ஸ்வீட் இருக்கா என்றவுடன்.

சார் ரவாகேசரி இருக்கு சார் காலையில் பத்து மணிக்கு சூடா போட்டது..

மூணு பிளேட் கொண்டு வாங்க.. வழக்கத்திற்கு அதிகமாகவே தட்டு நிறைய நிரம்பி வழிந்து ரவா கேசரி.

ஓர் பிளேட்டை எடுத்து அப்பாவின் வாயில் ஊட்டினார்..இது உங்களோட உண்மைய மட்டும் பேசுற வெளந்தியான குணத்துக்கு நான் தரும் ஸ்வீட்.. அவரின் கண்கள் கலங்கியது..

ம்ம் அழக்கூடாது கூடிய சீக்கிரத்தில் உங்க பையனும் என்னை மாதிரி வரணும் புரியுதா சொல்லி விட்டு காலேஜ் கட்டிடம் நோக்கி நடந்தார்.

கிழிந்த மஞ்சள் பையில், நீ விரும்பும் வரங்களை தருவாள் விஷ்ணு துர்க்கை என்ற வரியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் தமிழ் பேராசிரியர் குமரேசன்.

அவரின் மனதிற்குள்ளேயும் கேட்டது அப்பாவின் அறிவுரை

"சிவாஜி ரசிகர்கள் எல்லோருமே உணர்ச்சிவசப்பட்டவங்க தான் ஆனால் எங்களுக்கு வாழ்கையில் நடிக்க தெரியாதுப்பா"

 


அன்பே

 அன்பு கேட்டதை கொடுத்து விட்டு அமைதியாக இருக்கும்.ஆனால் ஆர்பாட்டமோ தேவையற்ற ஓன்றை கைகளில் திணித்து விட்டு வெற்று கூச்சல் இடும் 


இங்கே உண்மையான அன்பு போலிய

அப்பாவின் பாசம்

 எனக்குன்னு யாருமே இல்லை...ஏதோ நானும் வாழ்கையில் பிடிப்பே இல்லாம தான் வாழுறேன்.. இந்த நிமிஷமே நான் செத்தா கூட எனக்காக யாருமே  அழமாட்டாங்க .என் பொண்டாட்டி புள்ள கூட என்னை ஓர் பொருட்டா மதிக்கிறது இல்லை.

அவங்க தலை மயிருக்கு குடுக்கிற மரியாதை கூட என்னோட வீட்டுல எனக்ஙு இல்லை என்றே கல்யாண வீட்டு வாசலில் கண்ணீர் மல்க பேசிய அந்த பெரியவர் 

அட விடுப்பா,...எல்லோரும் வாழ்க்கையிலும் இப்படி ஓர் கட்டம் வரத்தான் செய்யும்.

கடவுள் உன்மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ரொம்ப பாசமான ஓர் உறவை சீக்கிரமா காட்டுவார்.

அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கையே அவங்க மட்டும் தான் என்று நீ வாழுவே.. அவங்களும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க

குழந்தை தனக்கு பிடித்தவர்களிடம் தனது ஆசையை சொல்லும். அதை அவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால்.

பிறகு அது தன் ஆசைகளை யாரிடமும் சொல்லாது.

அப்படி யாரிடமும் தனது உள்ளகிடங்கை சொல்ல இயலாத குழந்தைகள்.

வருங்காலத்தில் முரட்டு சுபாவத்துடன் கோபக்காரனா தான் வளர்கிறார்கள்.

உண்மையே பேச வேண்டும் என்று சொல்லி தாய் தந்தை கொடுத்த விஷயத்தை கடைபிடிக்கும் மனிதர்கள் பலர்.

ஆனால் அவர்கள் ஏமாற்றப்படும் போது.

விலகிச் சொல்கின்றனர்.

அதன் பின்னர் எத்தனை நல்லவர்கள் கிடைத்தாலும் பட்ட அடியும் வேதனையும் யாரிடமும் சொல்வதும் இல்லை.

எந்த ஓர் மனிதனை நம்புவதும் இல்லை.

சில நாட்களுக்கு பிறகு பார்த்த தன் சித்தி அத்தை/தாத்தா/ பெரியப்பா என்று யாரோ எனக்கு உன்னை தேடுச்சு என்று கல்யாண வீட்டில் சுற்றி இருக்கும் கூட்டத்தை பற்றி கவலை படாமல் மனதில் இருந்ததை வெளிபடையாக பேசியது குழந்தை.

பத்து நிமிஷத்து முன்னால் எனக்கு யாருமே இல்லை என்று பேசிய அந்த பெரியவர்..

வயிறு நிறைய மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு, நேரம் போகாமல் போலியாக பக்கத்தில் இருந்த சொந்தம் நட்புடன் தன்னை மிகவும் உண்மையானவர் நான் ஓருவரே என்பது போல் பேசி அமர்ந்திருந்த கூட்டத்தை ஏளனமாக சிரித்த படி கூப்பிட்டார்..


மச்சான் இங்கே வாங்க.. மாப்பிள்ளை இங்கே வாங்க..சித்தி..மதினி எல்லோரும் வாங்க.. அரசியல் மாநாட்டிற்கு கூட்டம் சேர்ப்பது போல் கூட்டினார்..


அனைவரின் முன்னரும் குழந்தை நீ என்கிட்ட சொன்னதை திரும்ப சொல்லு..அந்த கள்ளமில்லா குழந்தை. வெளந்தியாக சொன்னது எனக்கு உன்னை ரொம்பவே தேடுச்சு உன்னை நினைச்சு நான் அழுதேன் தெரியுமா..

அதுவரையில் போலியாகவே வாழந்து பழகிய கூட்டம் அத்தனையும் வாயடைத்து விக்கித்து போனது.

அதில் இருந்த காலேஜ் படிக்கும் ஓருத்தி மாமா எனக்கு கேட்கலை இன்னொரு தடவை சொல்ல சொல்லுங்க என்றாள்

ஏன்டீ, குழந்தை எவ்வளவு அழகா மழலை மாறாம சொல்லுது அதை ஏன்டீ துன்பபடுத்துற...

பாட்டி அவளுக்கு அவ லவ்வர் நினைவு வந்திருச்சு அதான் திரும்ப சொல்ல சொல்லுறா.. அவளின் முகத்தில் வெட்கம் படர்ந்தது..ஏலே நீ சும்மா கிட தன் தம்பியை அடக்கினாள்..

அந்த பெரியவரின் முகத்தில் பெருமிதம் தென்பட்டது.குழந்தை நீ இன்னொரு தடவை சொல்லு.

சுதுவாது தெரியாத அந்த குழந்தை மீண்டும் சொன்னது..


கல்யாண மண்டபமே கத்தி கூச்சலிட்டனர்.. ஏய் இந்த வயசுலையே என்ன தைரியமா மனசுல இருக்கிறதை பேசுறான் பாருங்க..


மணமக்கள் இருவரையும் அழைத்து வரச் சொல்லி பேசினாள் பாட்டி..


உங்க பாட்டி உங்க இரண்டு பேரையும் கூட்டிகிட்டு வர சொன்னாங்க..


ஏன் ஏதாவது விஷயமா கேட்ட மாப்பிள்ளை.

நீங்க ஓண்ணு எங்க பாட்டிக்கு இதே வேலையா போச்சு.. யாரையும் நிம்மதியா சிரிக்கவே விடாது.. இன்னிக்கு நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல

ஏதாவது பேசி சண்டை இழுக்கும் இதே ரோதனை தான்.


எதுக்கு இந்த மாதிரி கிழடு கட்டையெல்லாம் இனி நமக்கு மணமகன் சொல்லவும் பின்தொடர்ந்தாள்.

என் கல்யாணம் ஆகுறதுக்காக தான் அப்பா பொறுமையா இருந்தாரூ..அதை அடுத்த வாரம் முதியோர் இல்லத்தில் போய் சேர்க்க போறோம்.

அவங்களுக்கு இது தெரியுமா.

தெரிஞ்சா தானே.. கல்யாணத்துக்கு சாப்பாடு போடுற மாதிரி போய் அவங்களை அங்கே விட்டு வர வேண்டியது தானே.


ஓர் வேளை அந்த நேரத்தில் சண்டை போட்டா அதுக்கு தானே 2 லட்சம் டொனேஷன் கொடுக்கிறோமே..

அங்க உள்ளவங்க, இது அழுதா நம்ம கண்ணு முன்னாடியே இரண்டு அறை அறைச்சுடுவாங்க..

அட இது பாவம் இல்லையா.


என்னங்க நீ பாவம் புண்ணியம் பார்த்தா இந்த கிழவி நம்ம கூட ஹனிமூன் வரும் என்பா அதுக்கு நீ சம்மதிப்பீங்களா..

மணமகனுக்கு தூக்கி வாரிப்போட்டது.


ஏன்டீ உமா சீக்கிரமா வாடீ...கிழவி மணமகளை கூப்பிட்டால் அதற்குள் அந்த குழந்தை பத்தாவது முறை சொல்லி இருந்தது.


மணமகனும் மணமகளும் வந்தவுடன்.. பாட்டி கம்பீரமாக சொன்னாள்.


யோவ் பெரியவரே இன்னொரு தடவை சொல்ல சொல்லுங்க..


இந்த முறை குழந்தை சண்டித்தனம் செய்தது.. எல்லோரும் தன்னை வைத்து விளையாடுகிறார்கள் என்று புரிந்து நான் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது.

ஏலே சொல்ல போறீயா. உன் முதுகு தோலை உரிக்கவா அப்பா தன் அதிகாரத்தை அங்கே நிலை நாட்டினார்..


அது வரை அமைதியாக இருந்த குழந்தை.. கண்கலங்கி கண்ணீர் விட்டு அழுதது..

இதுவரை சிரித்த படி இருந்த அனைவரின் மனதிலும் சோகம் கொண்டது..


எதுக்கு குழந்தையை திட்டுறீங்க.. எல்லோரும் குழந்தையின் தகப்பனை வசை பாடினர்.குழந்கனதை எப்படி கள்ளமில்லாம பேசுது.

எல்லா அவ ஆத்தா வழி ஆளுங்க மாதிரி மனசுல உள்ளதை எல்லாம் பேசி நம்ம உசிரை வாங்குது..


ஓர் நாளாவது நிம்மதியா வாழு விடுவாங்களா.. வீட்டின் சண்டை கல்யாண மண்டபத்தில் ஒலித்தது.

கூட்டத்தின் நடுவே அழுக்கு புடவையில் ஏதோ வேலைக்காரி போல் இருந்தவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.


அப்போது மண்டபத்தின் நடுநாயகமாக இருந்தவன். ஓடிச்சென்று அந்த பெண்மணியை கட்டிப்பிடித்தான்.


அம்மா நீ அழாதே அம்மா..நீ அழுதா நானும் அழுவேன்..ப்ளீஸ் அம்மா..எனக்காக நீ அழாதே.

அவளின் கண்ணிலோ மேலும் கண்ணீர் பெருகியது. சிறு வயதில் அப்பனை இழந்து மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்து என்ன பிரயோஜனம்.

தனக்கு பிறகு பிறந்த தம்பி அம்மா ஓர் நாள் திட்டியதால் கோபித்து கொண்டு கல்யாணமாகி போன அக்கா வீட்டுக்கு சென்றான்..

எந்த படிப்பும் படிக்காமல் ஊர் சுற்றி எல்லா கெட்ட பழக்கமும் உண்டானது..

விதி வலியது அல்லவா..அவனை நல்லவன் என்று நம்பி ஓர் குடும்பத்தில் பெண் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால் அவர்கள் சொன்ன விஷயம் உங்க அக்காவை சீக்கிரமா வீட்டை விட்டு நகட்டு பிறகு தான் என் பொண்ணை கொடுப்பேன் என்றனர்.


அவசர கதியில் ஓரே வாரத்தில் நாளையோ இன்றோ செத்து விடும் நிலையில் இருந்த ஓர் குடிகாரனுக்கு அவளை கட்டி வைத்தனர்.அதை நினைத்து நினைத்து அவள் தினமும் அழுதாள்..


அம்மா ப்ளீஸ்மா... அவளின் கண்ணீரை தன் பிஞ்சு கைகளால் துடைத்த படி பேசினான் அந்த நாலு வயது கூட நிரம்பாத மழலை


நான் நல்லா படிச்சு பெரியவனா ஆகி அம்மா, பெரியம்மா... அப்பா உங்க எல்லாரையும்  நல்லா பெரிய பங்களாவுல வாழ வைப்பேன்.

அதுவரை கோபமான முகத்தில் இருந்த அப்பா.. ஏனோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

கல்யாண மண்டபமே அடுத்து அடுத்து நிகழ்ந்த உணர்ச்சி மிகுந்த காட்சியை கண்டு அமைதியாக இருந்தனர்.

ஓவ்வொரின் மனதிலும் ச்சே இந்த வீட்டுல நாம பிறந்திருந்தா எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதந்தனர்.

கோபத்தை குறைத்து, தன் பாசத்தை வார்த்தையில் காட்டினார் அப்பா.

மெலிதான குரலில் டேய் நீ இன்னொரு தடவை அதை சொல்லி காட்டு..

மண்டபத்தில் யாருமே இல்லை என்பது போல் குழந்தை அப்பாவை நோக்கி...கட்டளை போல் பேசியது


நீ அம்மாவ அடிக்கடி திட்ட மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு. அப்போ தான் சொல்லுவேன்.

தன் கெளரவத்தை குழந்தையின் மழலை குலைப்பதாஇ எண்ணி பக்கத்தில் நின்றவரின் கையில் இருந்த மர விசிறியை வாங்கி குழந்தைய தாறுமாறாக அடித்தார்

அம்மா ஓடி வந்து குழந்தையை வாரியணைத்து எதுக்கு இப்போ புள்ளைய போட்டு அடிக்கிறீங்க என்றாள்.


இப்படி செல்லம் கொடுந்து தான்டீ இவன் இப்படி வளர்கிறான்..


மண்டபத்தில் மமான அமைதி நிலவியது..

அப்போது மனோகரா வசனம் அங்கே இருந்த தொலைக்காட்சி பெட்டியில் ஓடியது..

இது எங்களின் குடும்ப விஷயம் இதில யாரும் தலையிட வேண்டாம்.

இது குடும்ப லிஷயமென்றால் கொலு மண்டபத்திற்கு வருவானேன்..

தான் ஓர் சிவாஜி ரசிகர் என்பதையும் மறந்து அவர் கத்தினார்.‌ஏலே .யாருலே அங்கே.. அந்த டி.லி நிறுத்த போறீயா இல்லாட்டியும் தூக்கிப் போட்டு உடைக்கவா..

டி.லியும் அமைதியது.. அப்போது எல்லோரின் மனதிலும் ஓர் கேள்வி ஓடியது இவ்வளவு கோபக்ஙாரனை எப்படித்தான் சமாளிக்கிறாளோ...

அந்த உணர்ச்சிவசமான தருணத்தை குழந்தையின் தாய் மாற்ற நினைத்தாள்..

டேய் செல்லம் நீ இன்னும் ஓரே ஓர் தடவை அதை திரும்ப சொல்லுடா...

குழந்தை அப்பாவின் முகத்தை பார்ததது.எதுக்குடா என் மூஞ்சிய பார்க்குறே..

அப்பா நீ கொஞ்சம் சிரி அப்போ தான் நான் பேசுவேன்..இத்தனை அடியும் ஏச்சுக்களும் வாங்கிய பிறகும் அந்த குழந்தை தன் தகப்பனை சிரிக்க சொன்னூஉ ஏனோ அனைவர் மனதையும் நெகிழ வைத்தது..

அது வரைக்கும் பெரியவரை நோக்கி பேசிய குழந்தை இந்த முறை தன் தகப்பனை நோக்கி பேசியது..


எந்த பெரியவரை நோக்கி உணர்ச்சி பூர்வமாக சொன்ன வார்த்தைகள் இப்போது சொல்லும் போது உணர்ச்சியற்ற நிலையில் இருந்தது..


மீண்டும் மண்டபமே அதிர கல்யாண கூட்டம் சிரித்தது.ஆனால் இந்த தடவை அனைவரும் போலியாக சிரித்தனர் என்பதை அவர்களின் மனசாட்சி சொல்லிற்று..

தகப்பன் மெதுவாக நடத்து மண்டபத்தின் வாசல் அருகே சென்றார்..சில நிமிடங்களுக்கு மீண்டும் அபைதி நிலவியது.

தனக்கு யாருமே இல்லை என்று வாசலில் அழுத பெரியவர் அந்த குழந்தையின் கையை பிடித்தார்..

அப்போது மீண்டும் மண்டபமே அதிர ஓர் சத்தம் கேட்டது.. ஆம் அது வரைக்கும் மலையில் அனைவரையும் மகிழ வைத்த குழந்தை கத்தியது

நீ என்னைய தொட்ட உன் உச்சி மண்டைய பிளந்துடுவேன்..

வேகமாக ஓடிச்சென்று மணவறையில் இருந்த தேங்காயை எடுத்து வந்து மிரட்டியது..



இப்படி ஓர் குழந்தை நமக்கு இல்லையே என்று வருந்தியவர்களின் மனதிலும் கூட அச்சம் மேலோங்கியது..


அங்கே யூனிபார்ம்ல இருந்த போலீஸ் ஏட்டு.. மிரட்டும் தொனியில் டேய் தம்பி கீழே போட்டுறு இல்லைன்னா ஜெயில்ல பிடிச்சு போட்டுறுவேன் என்றார்.

அப்போது மீண்டும் குழந்தை மழலை மொழியில் அவரை மிரட்டியது.யோவ் நீ தூர போயிரு நீ யாருன்னே எனக்கு தெரியாது.. பிறகு உன்னோட மண்டைய தான் முதல்ல பொழைப்பேன்..


டேய் அவரூ போலீஸ்டா..யாரோ கூட்டத்தின் மறைவில் இருந்து பேசினார்..

யாரா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா பேசுடா பொட்டை பயலே .. டேய் எங்க அப்பா எவ்வளவு பெரிய ஆளுன்னு உனக்கு தெரியுமா.

அதுவரை பக்கத்தில் இருந்த பெரியவர்..வாய் திறந்து பேசினார்..என்னை மன்னிச்சுடுப்பா.. நான் தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன்...

அடுத்த நொடி குழந்தை அதிகார தோரணையில் பேசியது..ஏலே ஏதோ உன்னை தேடுச்சுன்னா சொன்ன என்னை வைச்சு சிரிக்கவா செய்யுற..இனி எங்க வீட்டு பக்கமே வரக்ஙூடாது...

பெரிய ரெளடி போல் பேசியது குழந்தை.அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி இருந்த ஒருத்தி சொன்னாள்


ஏலே செவுட்ட பேத்துருவேன் தேங்காய கீழே போடுலே...கூட்டமே பயந்த படி நின்றது இதற்கு என்ன பதிலடி தருவானோ என்று பயந்தபடி நின்றது.

போலீஸ் கார் கூட தன் முகத்தில் வந்த வியர்வையை துடைத்தார்.

ஆனால் அந்த சிறவனோ தேங்காயை மீண்டும் அந்த தாம்பாளத்தில் வைத்து விட்டு மீண்டும் குழந்தை போல் ஓடிச்சென்று அவளின் காலை கட்டிக்கொண்டு சொன்னான்..


சச்சம்மா.., நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எடுத்த பொருளை எடுத்த இடத்துலையே வைச்சுட்டேன் பார்த்தீயா..

நீ நம்ம வீட்டு செல்ல கன்னுக்குட்டி, பாச மழையில் இருவரும் நனைவதை அவளின் அம்மா அங்கீகரிப்பது போல் மெளனமாக சிரித்தாள் 

ஏவே உங்க அப்பா எங்கேயோ போறாரூ நீ போய் அவரை கூப்பிடு.. சர்க்கஸ் மிருகம் சொல்லுவதை கேட்பது போல் அவனும் அதை செய்தான்..

இப்போது அனைவரும் மெளனமாக இருந்தனர்.

ஓடிச்சென்ற குழந்தை அப்பாவின் கைய பிடித்து இழுத்தது.அத்தோடு மேலும் சொன்னது.

அப்பா, சண்டை முடிச்சு போச்சு நீ வாப்பா நாம சாப்பிட போகலாம்..

வாசலில் ஐஸ்கிரீம் விற்ற படி போனவன் குழந்தை நிற்பதை பார்த்தவுடன் ஐஸ் ஐஸ் என்ற கத்தினான்..

கூட்டமே மிரண்டது இந்த ஐஸ்காரன் என்ன பாடு பட போறோனோ...

உனக்கு ஐஸ்  வேணுமாடா...

எனக்கு வேண்டாம்பா உன்கிட்ட காசு கம்மியா இருக்குன்னு நேத்து சொன்னீயே .


அந்த கூட்டத்தில் இருந்த ஓர் இளவயதுகாரி. மிகுந்த சிரமத்துடன் தைரியத்நை வளர்த்நு கொண்டு அந்த சிறுவனை நோக்கி கேட்டாள்.

தம்பீ இவ்வளவு பாசக்காரனாவும் கோபக்காரனாவும் இருக்கீயே உன் பெயர் என்னப்பா..

அவனோ அப்பாவின் முகத்தை நோக்கினான்.. கோபக்ஙாரனாக இருந்த அப்பா பாசக்காரனாக பேசினார்.


அப்பா நான் சொல்லுற மாதிரி சொல்லவா அல்லது நீ சொல்லுற மாதிரி சொல்லவா..

மீண்டும் உணர்ச்சியின் வேகத்தை அனைவரின் மனதிலும் கடத்தி ஸ்தம்பிக்க வைத்தான் அந்த சிறுவன்.


நீ ஸ்கூல்ல டீச்சர்கிட்ட சொல்லுற மாதிரி சொல்லு..


நீ என்ன லூசாப்பா.இது ஸ்கூல் இல்ல கல்யாண மண்டபம்.


எதிர்த்து பேசுவதால் மீண்டும் அடி வாங்க போகிறான் என்று எதிர்பார்த்த கூட்த்திறக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைத்தது.


அவனின் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னார் உன் இஷ்ட படியே சொல்லுடா...


ம்ம் என்று தலையாட்டி யவன தன் பெரியம்மாவை நோக்கி ஓடிச்சென்ற அவளை கட்டி பிடித்து கொண்டு மண்டபம் அதிர பேசினான்.


பெரியம்மா சொல்லுற மாதிரி தான் சொல்லுவேன்..


அனைவரின் முகத்திலும் மீண்டும் ஆச்சரியம் பரவியது..

அவன் உரக்கவே சொன்னான்.

அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில் எனக்கு எதை கண்டும் பயமில்லையே.. என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்..அப்பா எனக்கு தந்தது நாள் உனக்கு தந்திட்டேன்.வெடிச் சிரிப்பு சிரித்தாள்..


சுற்றி இருந்த அனைவரின் உதடுகளும் முணுமுணத்தது.

அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில்.

வயதானவளின் கையை பிடித்த படி இந்த சிறுவனின் முகச்சாயலில்  வந்தான்.

கூட்டத்திற்கு மேலும் வியப்பு கூடியது இரட்டை பசங்களா இவங்கநோ


தோரையாக அவனை நோக்கி சென்று அவனின் தோளை இறுக்கி பிடித்து சொன்னான் ‌இவன் என்னோட தம்பி லட்சுமணன்

கூட்டமே பக்தி பரவசத்தில் இருப்பது போல் மீண்டும் முணுமுணத்தது

அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில் 

.






யானைகள் காப்போம்

 வணக்கம் நண்பர்களே,


சமீப காலமாக தமிழகத்திலும் மற்றும் இன்ன பிற நாடுகளிலும் காட்டு யானைகள் பரிதாபமாக ரயிலில் அடிபட்டு இறப்பதும்.

மின் வேலிகளில் அடிபட்டு இறப்பதும் வாடிக்கையான நிகழ்வு போல் மாறிப்போனது.


யானைகளின் இறப்பு செய்தி பெரும்பாலும் ஓர் சிறு பெட்டி செய்தியாக அதாவது 6'4, என்ற அளவில் பத்திரிகையின் ஓரத்தில் தான் வருகிறது.

அதே சமயம் கோவில் யானை நோய் பட்டு இறந்து போனால் தலைப்பு செய்தியாக நாளிதழின் முன் பக்கத்தில் இடம்பெறுகின்றன.

அதற்காக உள்ளூர் அரசியல்வாதி முதல் சமூக ஆர்வலர் சிலர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.


காட்டு யானை கொம்பன் ஊருக்குள் புகுந்தது என்றும் பெரிய அளவில் செய்திகள் எழுதப்படுகின்றன



யானைகளை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

யானை தன்னுடைய வழிதடத்தை மாற்றுவதே இல்லை.


இதனை யானை வலசை என்று கூறுவர்.

அதாவது ஓவ்வொரு மனிதனுக்கும் எப்படி ஓர் வரலாறு இருக்கிறதோ.

அதைப்போலவே யானை கூட்டங்களும் தனக்கான பாதையில் தான் வழி செல்கிறது. பல நெடும் ஆண்டுகளாக அவை செல்லும் பாதையில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளில் நடுவே வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை செல்லும் வழிகளில் மின்வேலி அமைத்து.

யானைகளின் வழியை மறைப்பதோடு மட்டுமல்லாமல்.வலியையும் அல்லவா செய்கிறோம்.


அப்படி அதன் வழித்தடம் தடுக்கப்படும் போது, அந்த யானை கூட்டம் தனக்கான புதிய வழித்தடத்தை தேடி நகர்கின்றன.


அந்த சமயத்தில் தான் யானை மனிதன் இடையூறு ஏற்படுகின்றன.


யானைகள் தான் காட்டின் அரசன். பன்னெடுங்காலமாக சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்று புனையப்பட்ட கதைகளை நாம் நம்பியது அறியாமை.


சிங்கத்தின் கர்ஜனை பெரியது, ஆனால் யானைகள் தனது உணவுகளுக்காக செய்யும் செயல்களே காட்டில் சமநிலையை ஏற்படுத்துகிறது.


நண்பர்களே நம்மால் நமது முன்னோர்களைப போல் யானை கட்டி போர் அடித்த விவசாயம்.


அவ்வளவு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த யானைகள் இன்று காடுகளில் மட்டுமே சுதந்திரமாக சுற்றி வருகிறது.


யானைகளையும் அதன் வழிதடங்களையும் பாதுகாப்பதே நாம் நமது அடுத்த தலைமுறை இயற்கையுடன் முரணபடால் வாழ வழிகாட்டும்.

நண்பர்களே இந்த கட்டுரையை உங்களால் முடிந்த வரை பிறருக்கும் பகிருங்கள்.

யானைகளை பற்றிய புரிதலும் அக்கறையும் தான் இன்றைய காலகட்டத்தில் யானைகளை காப்பாற்ற தனி மனிதர்களாக நாம் இயற்கைக்கு செய்யும் மாபெரும் உதவியாக இருக்கும்.



இந்த கட்டுரையில் ஏதாவது பிழை இருப்பின் தயங்காமல் கூறுங்கள் நண்பர்களே..ஏன்னனெனில் என்னை விடவும் யானைகளை பற்றிய அதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதை உங்களுடன் கைகோர்த்து உலகுக்கு சொல்ல காத்திருக்கிறேன்.


நன்றி

ராமன் ஷங்கர்


பஸ்ஸாண்டு காதல்

 பஸ் நிலையத்தில் தடுமாறி விழுந்த பாட்டியை தனியொருவனாக தாங்கிப் பிடத்தான்.. ஏன்ப்பா உனக்கும் யாருமே இல்லையா என்ற பாட்டியின் வரி சம்மடியாக மனதில் இறங்கியது.. எனக்கு அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க..

அப்படி இருந்து அவங்களால உன்னை புரிஞ்சுக்க முடியலை அப்படித்தானே.

மீண்டும் வார்த்தையால் அடித்தாள் உடலில் சற்றும் வலுவில்லாதவள். 

மெளனமே பதிலானது.

எனக்கு தெரியும் தம்பி.. வீட்டுல உன்னை நல்லா புரிஞ்சு இருந்தா நீ எனக்கு உதவியே இருக்க மாட்டே..

அடுத்தவங்க வலியை உணரும் மனிதனுக்கு மனதில் ஆயிரம் வலி இருக்கும்

தத்துவம் வெறுத்தது சரி பாட்டி நான் வருகிறேன் 

நட்பு

 வென்ற பிறகு உன்னை கொண்டாடி அதில் குளிர்காயும் மனிதர்களை விட.

உனது வெற்றிக்கு முன்னர் உன்னை மதிப்பு போற்றிய நட்பும் சொந்தமும் தான் உண்மையான மகிழ்ச்சி.


அவர்கள் உன்னை கேலி பேசி சிரிக்கலாம், எரிச்சல் படலாம்.

உன்னை மிகவும் தரக்குறைவாக கூட, முகத்திற்கு நேராக வசை பாடி இருக்கலாம்.

ஆனால் அவர்கள் உன்னிடம் நடிக்க வில்லை என்பதை உணர்ந்து கொள் நண்பா..


போலியாக சிரித்து பழகும் ஆயிரம் நண்பர்களை விட நீ செய்யும் தவறுகளையும் நன்மைகளையும் சீர் தூக்கிப் பேசியவரை மறந்து விடாதே..

முகவர் முகுந்தன்

வணக்கம் நண்பர்களே,

இதுவரையில் நீங்கள் எனது எழுத்துகளுக்கு வழங்கிய அன்பும் ஆதரவும் மிகவும் சிறப்பானது.

சிறந்த கதை மற்றும் பல உண்மைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே

முகவர் முகுந்தன்

என்னும் கதை.

அவனுக்கு என்னப்பா இன்சூரன்ஸ் ஏஜெண்ட் கமிஷன் நிறைய வரும் என்று பலர் கனவு காண்கின்றனர்.

சிலர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆகிவிட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைக்கு மயங்கி, இன்சூரன்ஸ் ஏஜென்சி எடுக்கின்றனர்.

இந்த துறையில் நடக்கும் உண்மையை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதே இந்த கதையின் நோக்கம்.

வருடம் முழுவதும் வெயில் மழை என்று பாராமல் தன்னை சந்திக்கும் ஓவ்வொரு மனிதரிடமும் இன்சூரன்ஸ் என்பதை பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசி புரிய வைத்து பாலிசி எடுக்க வேண்டி, எல்லா தரவுகளையும் அவர் வாங்கி வருகிறார்.

அதை தன் மனைவி பெயரில் எடுத்து வைத்திருக்கும் ஏஜெண்ட் Code -மூலமாக எப்படி பாலிசி எடுக்க வைக்கிறார் என்பது பற்றியும்.

உழைக்கும் இன்சூரன்ஸ் முகவர்களை உற்சாக படுத்த கம்பெனி தரும் சிறு சிறு ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்களை எப்படி அவர் திருடி தன் சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார் என்பது பற்றியும் இன்னும் பல சுவாரஸ்யமான உண்மை தகவலுடன் எழுதப்படும் ஓர் புதினம்.


இன்சூரன்ஸ் துறையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.



Some sorry Tit-Bits as follows 

என்னப்பா வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சு நீ இன்னும் ஓர் பாலிசி கூட பிடிக்கலையே.இப்படியே போனா என்ன செய்யுறது.. நீ என்ன செய்வீயோ தெரியாது.இன்னிக்கு சாயங்காலத்துக்கள்ள எனக்கு ஓர் லட்சம் பாலிசி செக் வேண்டும்

சார் அது வந்து, நேத்து கூட ஓருத்தரை போய் பார்த்து பேசிட்டு தான் வந்திருக்கேன்.அவர் அடுத்த வாரம் 50,000 பண்ணுறதா சொல்லி இருக்கார்.

தனக்கு எதிராக அதுவும் புதிதாக வேலைக்கு சேர்ந்த முத்துகுமார் பேசுவதை நல்லசிவம் பொறுக்க இயலாமல் தவித்தார். பெயரில் மட்டும் தான் நல்லது இருந்ததே தவிர உடலும் மனமும் முழுவதும் விஷம் என்பதை அவருடன் பழகியவரால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தன்னை ஓவ்வொரு செயலிலும் நல்லவனை போவவே காட்டிக்கொண்டு இருந்தார் நல்லசிவம் 

அலுவலகத்தில் இருந்த பிறர் நல்ல வேளை நம்மளை கேள்வி கேட்கலை என்ற நிம்மதியில் இருந்தனர்.


அந்த சமயத்தில் நல்லசிவம் செய்த மறைமுக சமிக்கையை துல்லியமாக கணித்தது பழனி ஓருவரே.

பிறகு இருக்காதா, எட்டு வருஷமா எந்த பாலிசியுமே பண்ணாம அடுத்தவன் எடுத்து வந்த பாலிசியை நல்லசிவம் உதவியுடன் தன் மனைவி பெயரில் இருக்கும் டம்மி Code -மூலமாக பாலிசி செய்வதே அவரின் வேலை.

அதில் வரும் கமிஷனை மிக துல்லியமாக பிரித்து கொண்டு அலுவலகத்தில் செயல்பட்டனர் இந்த இருவரும். 


சரி கதைக்கு வருவோம்...

பேச்சி லலிதா ஐயப்பன் சுந்தர் அனைவரும் அமைதியாக இருக்கும் போது சீறிப் பேசியது பழனி ஓருவரே.பிறகு வாங்குறே காசு இந்த ஓர் வேலை தானே பார்க்கிறார் ..

ஏதோ மாதம் தோறும் 5 பாலிசி கொடுப்பது போலவும், அலுவலகத்தின் சிறந்தவர் போல் காட்டிக் கொள்ளும் பழனி பேசினார்.

என்னப்பா முத்து நான் இந்த கம்பெனியில் 8 வருஷமா வேலை செய்யுறேன்.

இதுவரை ஓர் தடவை கூட நம்ம மேனேஜரை எதிர்த்து பேசியதில்லை.நீ என்னப்பா இரண்டு மாசத்துல அவரையே எதிர்த்து பேசுற அளவுக்கு வளர்த்துட்டீயா...

மேடம் பேச்சியம்மா, லலிதா நீங்க கூட சும்மா உட்கார்ந்து இருக்கீங்க..

புதுசா வந்த பையன் இப்படி பேசுறான் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க..

முத்து பதறியே போனான்..பேச்சி..லலிதா இருவரும் கூட மிரண்டு தான் போயினர்.


ம்ம்ம் சரியாக சொன்ன வேலையை செய்து வீட்டீர் என்பது போல் மேனேஜர் நல்ல சிவம் 

...



இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க ஓர் முகவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்..
கஷ்டப்பட்டு தரும் தகவலை பிற கம்பெனிகளுக்கு *ஓர் போன் நம்பர் 100 ரூ*
விற்பனை செய்து இன்னொரு சம்பாதிக்கிறார்.. நிறுவனத்திற்காக நேர்மையாக உழைக்கும் ஓர் குழு மேனேஜர்..

எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவனை வேலை செய்ய விடாமல் இன்னொரு குழு தலைவர்.

 மனைவியின் பெயர் டம்மி I.D மூலமாக 

எந்த வேலையும் செய்யாமல் என்ற பெயரில் என்பதே கதை களம்.

நேர்மையாகவும் உண்மையாகவும் உழைக்கும் இன்சூரன்ஸ் முகவர்

தேவையை   உண்மையை அம்பலப்படுத்தும் கதை தான் *முகவர் முகுந்தன்*


தலைவர் பதவி

 


தலைவர் பதவியில் இருப்பவர்கள் அந்த பதவியில் இருக்கும் வரை தான் சுற்றி இருப்பவர்கள் மதிப்பார்கள்.

உலகம் எல்லாம் வரலாறு சொல்லும் மறுக்க முடியாது உண்மை தான். இன்று  அவர்களுடன் நின்று டீ சாப்பிடுவது போலவும் அவருக்கு அறிவுரை கூறுவது போலவும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பலர் அவரின் பதவி முடிந்தால் அவர் இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்

வாழ்க்கை

 கிடைத்த பொருளை விட கிடைக்காத விஷயங்களை நினைத்து அதற்காக கற்பனையில் ஆசைபடுவதும் அதை பெறவும் முயல்வதே.இங்கு பலரின் வாழ்க்கை.

ஓர் சிலரால் மட்டுமே இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ முடிகிறது 

இனி ஓர் விதி செய்வோம்

 

தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரத்தை கடவுள் மனிதருக்கு கொடுக்க வில்லை என்றே பல மதங்களிலும் செவி வழி கதைகள் ஏராளம்.


அப்படியென்றால் தற்கொலை என்ற விஷயம். உலகளாவிய எல்லா நாடுகளிலும் இருந்ததாகவும் அதிலிருந்து மீள மதங்கள் மனிதரை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததும் புலப்படுகிறது.


மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்ததே சண்டையும் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் அதீதமான பாசத்தின் தேடலும் எல்லா நாட்டிலும் வீட்டிலும் தொடர்கிறது.


உலகில் பிறந்த எல்லா மனிதனும், தனது சில வருட வாழ்நாளில் உலகிற்கு ஏதாவது ஓர் விஷயத்தை செய்துவிட்டு போகவே முயற்சி செய்கிறான்.

இங்கே முன்னேறியவர்களை விட முன்னேற துடிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு.

முன்னேறிய சில மனிதரை மனதார பாராட்டும் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் வெற்றியடைய முடியவில்லையே என்ற வேதனை இருக்கிறது.


ஆட்சியில் இருப்பவரும், ஆட்சியில் இருந்தவர்களும்...மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் இலவச உணவு போன்ற திட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஓர் சிறு பகுதியை, அவர்களின் உளவியல் சார்ந்த விஷயங்களுக்கும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் 

இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகளின்  படிப்பு மற்றும் பிற சூழ்நிலைகளில் அவர்களின் மனநலம் சார்ந்த பாதிப்பை கவனிக்க இயலாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவிக்கின்றனர்.

கணிணியின் பயன்பாட்டால் நித்தமும் மன அழுத்தம்  அதிகரிக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

மனிதர்களுடன் போட்டியிட்ட நாம், தற்போது கணினியுடன் போராட வேண்டிய அவசர கதியில் இருக்கிறோம்..


ஆன்லைன் வகுப்பறை பயிற்சி, ஆன்லைன் தேர்வு என்று குழந்தைகள் அழுத்தமாக மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கல்வி என்பது மிகவும் முக்கியமான விஷயம் அதே சமயம் மனநலமும் உடல்நலமும் அதை விடவும் அவசியமாகும்

இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, அரசும் பள்ளி நிர்வாகங்களும் செயல்பட்டால் மிகவும் நல்லது.

வென்றவர்கள் அனைவரும் முதன் முறையாக தோற்றவர்கள் தான்.

தோல்வியே  வெற்றியின் படிக்கட்டு என்பதை ஆசிரியர்கள் மாணவ மாணவியரின் மனதில் மீண்டும் மீண்டும் பதிய வைப்பது அவசியம்.

மாணவ மாணவியரின் மனம் சார்ந்த பயத்தை தவிர்ப்போம்.

தற்கொலை எண்ணமே தேவையற்ற சிந்தனை.. ஓர் துறையில் தோற்றவர், தனது தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் வெற்றி எளிதாகும் 

தற்கொலை ஏன் நடந்தது எப்படி நடந்தது என்பதை விமர்சனம் செய்து நேரத்தை வீணடிக்கும் ஊடகங்களே.

ஏற்கனவே இழப்பால் வாடும் குடும்பத்தின் வீட்டு வாசலில் நின்று கொண்டு, மைக் கையில் இருக்கும் ஓரே காரணத்தால் கேள்வி கணை தொடுத்து பிறரின் மனதை நோகடிக்க வேண்டாம்.


இனி எந்த ஓர் குழந்தையின் மனதிலும் தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்பதை உணர வைப்போம் அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் ஆறுதல் மொழியாக அமையட்டும் 

வாழ்வில் சின்ன சின்ன தோல்விகளை  சந்தித்த பல மனிதர்கள் தான் வரலாற்றின் பக்கத்தில் பரிமளிக்கின்றனர் என்பதை ஓவ்வொரு மாணவ மாணவியர்களின் மனதிலும் ஏற்படுத்துவோம்..


வருங்காலத்தில் எல்லா பள்ளி கல்லூரிகளிலும் மனநலம் சார்ந்த உளவியல் கல்வியை ஏற்படுத்துவோம்


இனி ஓர் விதி செய்வோம்..



அண்ணனின் ரகசிய டைரி குறிப்பு அன்பு தங்கைக்கு

 அன்பு தங்கைகே...


அண்ணை பார்க்க வேண்டும்..அண்ணனிடம் பேச வேண்டும் என்று ஆசை தங்கையாக பிறந்த அனைவருக்கும் உண்டு.


பாதி நாள் அம்மா வீட்டுக்கு நீ வந்து போவதால்..

அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருப்பது போல், தங்களை காட்டிக் கொள்கிறார்கள்..

நீ வீட்டுக்கு போனவுடன்.. நம்ம மாப்பிள்ளை அவளை ரொம்ப கொடுமைப்படுத்துறார் போல அதான் அடிக்கடி அவளுக்கு நம்மை தேடுது என்று அப்பா சொல்லும் போது அவரின் கண்கள் கலங்கியதை நீ பார்த்திருக்க நியாயமில்லை 

ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீ வந்து போன பிறகு தனிமையில் ஈஸி சேரில் அப்பா ஆகாயத்தை பார்த்த படி ஏதோ புலம்புவது உனக்கு தெரிய நியாயமில்லை தான்.


எங்களுக்கும் கூட நீ நம்முடன் இருந்த காலத்தில் நீ காட்டிய பாசத்தை நினைத்து நினைத்து பார்த்து ரசிக்கிறோம்.


ஏன் தெரியுமா கள்ளமில்லா குழந்தையாக நீ வாழ்ந்த காலத்தை இன்று நீ வாழும் காலத்துடன் ஒப்பிட்டு ரசிக்கிறோம்.

நேற்று கூட நீ

வீட்டுக்கு கிளம்பும் போது அப்பா உன் கையில் திணித்த 500 ரூபாய் பணம் .

இந்தாம்மா பஸ் செலவுக்கு வச்சுக்கோ என தந்த போது நீ மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாயே.


வீட்டில் நானும் அம்மாவும் அப்பாவும் அண்ணியும் தனித்தனியாக யாருக்கும் தரியாதது போல உனக்கு பணத்தை கொடுக்கிறோம்


அண்ணே எனக்கு எதுக்கு அண்ணே பணம் அதான் உன் மச்சான் என்னை நல்லா பார்த்துக்கிறாரே..நீ சொல்லிய வார்த்தைகள் காதில் ரீங்காரமிடுகிறது.. ஆனால் உன் கைகளோ பணத்நை வாங்கி எண்ணியதை பார்த்து உள்ளம் அழுகிறதடீ.

நீ ரொம்பவே மாறித்தான் போயிட்டே..

நீ வேணா மறந்து போயிருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் மறைக்கலையே எனது அன்பு தங்கையே...

ஃபுட்பால் விளையாட்டு விட்டு வந்து ஸ்பெஷல் க்ளாஸ் நடந்துச்சு என்று சொன்ன போது..

யப்பா நம்பாதேப்பா.அண்ணே கிரவுண்ட்-ல விளையாடுவதை நான் பார்த்தேன்

. பக்கத்து தெரு சூர்யாவ தள்ளி விட்டு அவன் கையில் சிராய்ப்பு வரவே நம்ம அண்ணன் தாம்ப்பா காரணம்..


ஏன்டா சின்ன வயசுலேயே ஆயிரம் பொய் பேசுறீயே . அப்பாவின் பெல்டால் முதுகை முத்தமிட்டது..

அம்மா விளையாட போனதா சொன்னா அப்பா அடிக்கும்ன்னு தானே பொய் சொன்னேன் எதுக்ம்மா இந்த குட்டி நாயீக்கு என் மேல இவ்வளவு கோபம்.


அன்று அம்மா சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவு இருக்கு.

அட நீ வருத்தப்படாதே கண்ணா.. நாளைக்கு அவ புருஷன் வீட்டுக்கு போன பிறகு அடிக்கடி நம்ம வீட்டுல வந்து,அவ பொய் சொல்லும் போது நீ காட்டிக்கொடுக்காதே அது தான் நீ அவளுக்கு தரும் தண்டனை


அம்மாவுக்கு இருக்கும் சமயோசித புத்தியும் அன்பான மனசும் யாருக்கும் வராது‌..

உன்னிடம் நேரடியாக சொல்லும் தைரியம் எனக்கு இருந்தும் சொல்ல முடியாமல் தவிக்கிறேனே... 

ஆமாம் ஓர் நாள் உன்னிடம் முகத்துக்கு நேராக பேச காந்த் இருக்கிறேன் என்னவென்று தெரியுமா....உன் புருஷன் கம்மியா தான் சம்பாதிக்கிறான் ஆனா அவனால தன் தகுதியை மீறி சம்பாதிப்பது அவனுக்கு உன் மீது உள்ள காதலும் பாசமும்.. அதை நீ எப்போ புரிச்சுக்க போறே என்று தெரியவில்லை..

உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னால்.. அவன் வீட்டுல ஓர் கிளாஸ் தண்ணீர் எடுத்து கூட குடிக்க மாட்டான்.

அது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்.உன்னை நாங்க எப்படி செல்லமா வளர்த்தோமோ, அதைப் போலத்தானே அவங்க அம்மாவும் அப்பாவும் அவனையும் வளரத்தாங்க..

நீ அடிக்கடி எங்களை நினைச்சு மனசுல சந்தோஷபடுறதும், எங்களை உயர்வா நினைப்பதும் நல்லா தான் இருக்கு.

ஆனா எங்களை விடவும் உன் கணவன் உன்னை எவ்வளவு நல்லா வைத்து கொள்ள சிரம படுறான் என்பதை நினைச்சு பார்த்தாலே. உனக்கு அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது...

நீ அதிகமாக நம்ம வீட்டுக்கு வருவதை எதிர்க்கவும் முடியாமல்..என்ன இன்னிக்கும் உன் தங்கச்சி வீட்டுக்கு வந்தாளா என்று கேலியாக கேட்ட பக்கத்து வீட்டு பாட்டியிடம் பதில் சொல்ல இயலாமல் தவித்த அம்மாவின் வலியை உணர்த்தும் வெளியே சிரித்து படி இருந்த உனது அன்பு அண்ணன்.

மேற்கண்ட விஷயத்தை எல்லாம் உன்னிடம் சொல்ல பிரியப் பட்டாலும்.. ஓர் வேளை சொல்லிவிட்டால் உன் மனது கஷ்டப்படுமே என்று உன்னிடம் நேரடியாக சொல்ல பயந்து யாருக்கும் தெரியாமல் எழுதி பீரோவில் மறைத்து வைக்கிறேன்..

அப்பாவை போலவே உன்னிடமிருந்து மீது அதிக பாசத்தை பெற்று அதை திரும்பி செலுத்த இயலாமல் தவிக்கும் ஓர் சகோதரன்..


உன் கணவன் மீதான பாசத்தை நீ புரிச்சுக்கோ இனிமே அடிக்கடி அம்மா வீட்டுக்கு வராதே..

ஏன்னா அடிக்கடி என் பொண்டாட்டி கேட்கும் கேள்வி..

ஏங்க உங்க தங்கச்சி வீட்டில் எதாவது பிரச்சனையா, ஓவ்வொரு முறை கேட்கும் போது அவளிடம் எறிந்து விழுகிறேன்..

ஏன்டீ உன்னை மாதிரி ஆசாபாசமால்லாத குடும்பம் எங்களோடது இல்லை..அவளை நாங்க எவ்வளவு பாசமா வளர்த்தோம்.

அதில் லட்சத்துல ஓர் பங்கு கூட உங்க உதவாகர அப்பன், உங்களை வளர்க்கலையே... உதடுகளில் அவளின் மனதை காயப்படுத்தி விட்டாலும் எனது மாமனார் வரும் ஓவ்வொரு முறையும் மனதிற்குள் புழுங்குகிறேன்..

ஓர் நல்ல மனுஷனை எவ்வளவு கேவலமான பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி விட்டாயே தங்கச்சி..

தயவுசெய்து செல்லக்குட்டி 

உன் குடும்பத்தை நீ நல்லா பார்த்துக்கோ செல்லம்மா.. உன் புருஷன் கொஞ்சமில்லை நிறையவே சோம்பேறி தான்..ஆனா அவனுக்கு நீ மட்டும் தானே உலகமே...உங்க தங்கச்சி ரொம்ப நல்ல திறமையானவ என்ற ஓரே ஓர் வார்த்தை காதுகளில் கேட்டா கூட போதுமே அதை விட பெரிய சொத்து சுகம் உலகத்துல என்ன வேண்டி கிடக்கு..


இப்போதும் கூட இந்த கடிதம் உன் கையில் கிடைத்து விடக்கூடாது என்று மறைத்து வைக்கிறேன்..

என் அன்பு தங்கச்சியின் மனதை புண்படுத்த விரும்பாத உனது அன்பு அண்ணன்..


அன்பை விதைப்போம்

 தயவுசெய்து அனாதை ஆசிரமத்து போய் உதவுறதா சொல்லி அந்த குழந்தைகிட்ட அன்பா பேசாதீங்க.

ஏன்னா நீங்க உங்களோட ஏதோ ஓர் கஷ்டத்தை போக்குவதற்காக.

யாரோ ஓருத்தர் சொல்லி அனாதை ஆசிரமத்துக்கு போய் ஓர் நாள் முழுவதும் அவங்க கூட இருந்து சாப்பாடு போட்டா கஷ்டம் போகும் என்று சொன்னதை நம்பி போறீங்க.

இது வரைக்கும் நீங்க செய்வது எல்லாமே சரிதான்.

ஆனால் அங்கே போனவுடனே, அவங்களை ஏதோ உங்க உடன் பிறந்தவங்க சொந்தகாரங்கிட்ட பேசுற மாதிரி.

சில மணி நேரம் இருந்து பேசிட்டு போயிடுவீங்க.

பிறகு எத்தனை வருஷம் கழிச்சு நீங்க அதே ஆசிரமத்துக்கு வருவீங்க என்பது உங்களுக்கே தெரியாது.


அங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடியே கூட நீங்க அந்த குழந்தைகளுடன் சிரித்து பேசியதை எல்லாம் மறந்துட்டு, உங்களோட தினசரி வேலையில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.


எல்லோரும் செய்யுற மிகப்பெரிய தவறு இது தான்.


நீங்க கொஞ்சம் நேரம் உங்களின் கஷ்டத்தை போக்குவதற்காக செய்யும் புண்ணியம் போன்ற செயல்.


அந்த செயலை உங்களோட ஏதோ ஓர் எதிர்பார்ப்புக்காக தான் நீங்கள் செஞ்சீங்க.


அந்த ஆசிரமத்தில் வாழும் குழந்தைகள் சிலர் மேடம் அந்த அக்கா, அண்ணன் எல்லாம் மீண்டும் எப்போ வந்த பார்க்க வருவாங்க என்று கேட்கும் கேள்வியில் இருக்கும் பாசத்தின் வலியை உங்களால் உணர முடியுமா...


நீங்கள் வந்து விட்டு போன பிறகு நீங்கள் காட்டிய சில நிமிட பாசத்தை நினைத்து நினைத்து அந்த அனாதை குழந்தைகள் எவ்வளவு தூரம் பாசத்துக்காக ஏங்குவாங்க தெரியுமா..

இதே மாதிரி தான் வயதான இல்லத்தில் வாழும் வயதானவர்களின் நிலையும்.


பாட்டி அடுத்த வாரமும் உங்களை வந்து பார்த்துவிட்டு போறேன். என்னை உங்க பேரன் மாதிரி நினைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்லிட்டு போயிடுவாங்க.


பலர் அதை மறந்து வாழ பழகினாலும்.

சில வயதான அன்பு உள்ளங்கள், நினைச்சு நினைச்சு கண்ணீர் விடும்.

புதுசா போன வாரம் வந்தவன் கூட நம்ம பயலை போலத்தானே.

ச்சே எல்லோரும் ஏதோ ஓர் விதத்தில் சுயநல வாதிகள் தான் என மீதி இருக்கும் வாழ்க்கையில் யாரிடம் பேசவும் பிடிக்காமல்.

அதே சமயம் ஆயிரம் பாசத்தையும் நேசத்தையும் மனதில் சுமந்த படி வாழும் வாழ்க்கை எவ்வளவு ரணமானது தெரியுமா.


நான் சென்ற ஆசிரமத்தில் ஓருவர் சொன்ன தன் மனதின் வலிகள் தான் எத்தனை எத்தனையோ.


தயவுசெய்து நீங்கள் நீங்களாகவே இருங்க.


அன்பை விதைப்போம் 


செய்யும் தொழிலே தெய்வம்

 

அலுவலகத்திலோ..வியாபாரத்திலோ ஓரே எண்ண அலைவரிசை உடையவர்களுடன் வேலை பார்க்கும் போது தான், சிறப்பாக வேலை செய்ய இயலும்.

ஒருவரின் தவறுகளை மற்றொருவர் சுட்டி காட்டுவார்.அவர் செய்யும் தவறுகளை இவர் சுட்டி காட்டுவார்.

மேலும் நம்முடன் பழகிய திறமையான மனிதருடன் சேர்ந்து வேலை பார்க்கும் போது களைப்பு வராது.

இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கும்

 

இசை நிகழ்ச்சிகள், மேடை அலங்காரம் செய்பவர்கள், உணவு பதார்த்தம் செய்பவர். கணிணி வேலை பார்க்கும் மனிதர்கள்.

இப்படி பல துறைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓன்றாக வேலை பார்த்த இடத்தில், நம்முடன் சேர்ந்து பணியாற்ற பணியாளர்

அப்படி நாம் வேலை பார்த்த நிறுவனத்தில் நன்கு வேலை பார்த்த  பணியாளர்கள் .

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஓன்றாக இணைந்து பணியாற்றும் போது வெற்றி எளிதாக கிடைக்கும்.

வியாபாரத்தில் சிறந்த சிறந்த பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்.

 

செய்யும் தொழிலே தெய்வம்

எல்லாம் பணம் படுத்துற பாடு

பல நாட்களாக வேலைக்கு போகாதவன்..

ஏதோ அதிசயமாக இரண்டு நாளாக நல்ல பிள்ளை போல வேலைக்கு போய் வந்தான்..

ஆனாலும் அந்த குடியை விட வில்லை


இன்று மாலையும் சாராயம் குடித்து விட்டு வீட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு புலம்பிய படி இருந்தவனை வாஞ்சையுடன் அழைத்தால் அவனின் காதல் மனைவி

மனைவி - என்னங்க வீட்டுக்கு வாங்க தயவுசெய்து தண்ணியடிக்காதீங்க

கணவன் - வந்தா என்னடீ தருவே .அதே காய்ஞ்ச தோசை பழைய குழம்பு தானே

அவனின் தாய் - டேய் உன் பொண்டாட்டிய எதிர்த்து பேசாதடா அவகிட்ட ஆயிரம் ரூ பணமிருக்கு.

ரொம்ப பேசுனா அந்த பணத்தை அவங்க அப்பன் வீட்டுல தனகொடுத்துவாடா..

கணவன் - ஏன்ம்மா என் பொண்டாட்டிய இப்படி கரிச்சு கொட்டுற‌..அவளே தினமும் நம்ம வீட்டுக்கு எவ்வளவு உழைக்கிறா..

அம்மா- அடேய் எடுபட்ட பயலை இதை தானடா. அவ கல்யாணம் ஆன நாளில் இருந்து சொல்லுறேன்..அவ தான் உழைக்கிறா..நீ அவளோட உழைப்பை உறிஞ்சு திங்கற

பக்கத்தில் இருந்த பழைய பேப்பரை எடுத்து அம்மா மீது வீசினான்..

ஏய் கிழவி வயசான காலத்துல புருஷன் பொண்டாட்டி இடையே சண்டையா மூட்டுற

தாய் மனதிற்குள் .. அந்த பணம் கிடைக்கிற வரைக்கும் அவளை கொஞ்சி கொஞ்சி பேசுவான் இந்த லூசூம் பணத்தை எல்லாம் அவன்கிட்ட கொடுத்துட்டு.. பிறகு நம்மகிட்ட வந்து கத்தும் நீ புள்ளைய சரியான தண்ணி வண்டியா பெத்து வைச்சு இருக்கீங்கன்னு.. எல்லாம் பணம் படுத்துற பாடு

Ram நீங்க ஏன் இன்னும் தூங்கலை

 Ram நீங்க இன்னும் தூங்கலையா..என்று வக்கனையா கேள்வி மட்டும் நல்லா கேக்குறாங்க..

எப்படி நண்பா எனக்கு தூக்கம் வரும்.

50,000  அல்லது 60,000 அல்லது 5 லட்சமே சம்பளம் வாங்குங்க அதை பத்தி கவலை இல்லை ஆனால் அதில் எவ்வளவு இதுவரை சேர்த்து இருக்கீங்க அதை நினைச்சு பாருங்க 

வீடு வீடாக வந்து 10 ரூ வாங்குற கூர்க்கா நேபாளத்துக்கு மாதம் தோறும் 3,000 ரூ மணியார்டர் அனுப்புறாரூ...ஆனா நாம 

இந்த கேள்வி பலர் என்கிட்ட கேட்டு விட்டார்கள்..

ஆமாம் என்னால நிம்மதியா தூங்க முடியலை தான்.

ஏன்னா சில ஆயிரம் சம்பாதிக்கும் கொத்தனார் ஆடு மாடு கோழி என்று குறைந்த சம்பளத்தில் தன்னால் முடிந்த சில மூதலீடுகளை செய்கிறார்.

ஆனா 50,000 அல்லது 60,000+ சம்பளம் வாங்கும் பலர் சில நூறு ரூபாயை கூட சேமிக்க தெரியாமல் இருக்காங்களே அவங்களை நினைச்சு தான் தூங்கமே வர மாட்டேங்குது.


இன்னும் தெளிவா சொன்னா.

படிப்பறிவே இல்லாதவங்களுக்கு கூட சேமிப்பின் அவசியம் புரிகிறது. ஆனால் 

நல்ல படிச்சவங்களுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை சேமிக்க வழி தெரியாம.

20-ம் தேதிக்கு மேல் கடன் தான் வாங்குறாங்க.

இப்போ புரியுதா Ram -க்கு ஏன் தூக்கம் வரலை என்று.

இதை பத்தி நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பேசாம நான் சொல்லுற மாதிரி ,சொல்லுற திட்டத்துல சேமிப்பை தொடங்குங்க.

நிம்மதியா தூங்குங்க.

சரி தானா.

சனாதனம் பற்றிய சர்ச்சை இப்போது தேவையா

சித்தர் வழிபாடு கடல் என்றால் உருவ வழிபாடு நிலத்தில் வாழ்வது போன்றது..

கடவுளே இல்லை உருவ வழிபாடு பொய் என்று சொல்லி விட்டு வருடம் தோறும் குறிப்பிட்ட நாளில் சிலைக்கு மாலை இடுவதும், அதற்காக ஊரையே கூட்டி ஆர்பாட்டம் செய்வதும் கூட ஓர் வழிபாடு என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்களோ அப்போது தான் மதம் சார்ந்த வழிபாடு பற்றிய புரிதல் உங்களுக்குள்ளே நிகழும்.


மனிதனை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் சில சடங்குளை பாமர மக்கள் தொடர்ந்து செய்வதும் வழி வழியாக வரும் சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஓர் வாழ்வியல் சார்ந்த நிகழ்வு.

சாதாரண மனிதனின் கண்ணுக்கு தெரியாத கடவுளை அறிய முயலும்  முயற்சியே உருவ வழிபாடு என்பதை உணரமுடியும்.


கடவுளே இல்லை என்ற பரிகாசம் செய்யும் அறிவு ஜீவிகள்.


நடுநிசி இரவில் தனியே போக பயப்படுவது ஏனோ..கடவுளே இல்லையென்று தைரியமாக சொல்லும் உங்களால் ஆவிகளை பற்றி பேச தைரியமில்லையா.அல்லது அப்படி பேசினால் ஓர் மதத்தின் ஓட்டுக்களை இழந்து விடுவோம் என்ற பயமா..


கடலில் நின்று கொண்டு ஆகாயத்தை பற்றி பேசுவதும் நினைப்பதும். நிலத்தில் இருக்கும் போது கடலை பற்றி புகழ்வதும். நிலத்தில் இருப்பவரை பரிகசிப்பதும். மேன் மேலும் குழப்பத்தை தான் தரும்.. நாடாள துடிக்கும் மனிதர்களே..

முதலில் நீங்கள் தெளிவாகுங்கள். ஓர் விஷயத்தை தேர்வு செய்யுங்கள்.. அதில் குழப்பம் இல்லாமல் அந்த விஷயத்தை தொடருங்கள்.

திருக்குறள் என்ற நூலில் உட்பகை அரண் போன்ற விஷயங்களை படித்து தெளிவாகுங்கள்.

உங்களை புகழ்பவரும் உடனிருப்பவரும் நண்பர் தானா என்பதை சீர் தூக்கிப் பாருங்கள்.

ஓர் மதம் சார்ந்த சில அரசியல்வாதிகளின் பேச்சுக்களால் கைதட்டலும் சில நிமிட சந்தோஷம் தான் நிகழும். 

இங்கே கடவுளை வணங்கவும் நேரமின்றி உழைத்து, தன் குடும்ப வறுமையை போக்கி பணக்காரனாக மாறிய பிறகு.

 இறைவனை நினைத்து பல தான தர்மங்களை செய்யும் மனிதர்கள் பலர் எல்லா மதத்திலும் உண்டு


ஏழை மக்களுக்கான நல்ல செயல்களை செய்யும் பல மனிதர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு கவுன்சிலர்  பதவியை அடைய வேண்டும் என்ற எண்ணமில்லை.


பிறரின் விமர்சனம் மற்றும் உங்களை பற்றி கருத்துகளால் மாறுபடாமல் உங்களின் விருப்பமான தெய்வத்தை வணங்குங்கள். அல்லது கடவுளே இல்லை என்ற கோட்பாடில் தொடர்ந்து செல்லுங்கள்.

அதற்காக ஆட்சி பீடத்தில் இருப்பதால் நீங்கள் சொல்வது தான் சரியென்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்.

கோவிலுக்கு யார் யாரெல்லாம் வந்து போகிறார்கள் என்பதை கடவுள் கண்காக்கிறாரோ இல்லையோ.

ஆனால் சாமானிய மனிதர்கள் நன்கு அறிவார்கள்.

இப்படித்தான் சாமி கிடையாது சாத்திரம் கிடையாது என்று சொல்லிக் விட்டு அவங்க நல்லா சாமி கூப்பிடுவாங்க..

அதனால் தான் அவங்க முன்னேறுதாங்க.நாம அவங்க பேச்சை கேட்டு அப்பன் ஆத்தாவ எதிர்த்து பேசிக்கொண்டு திரியுறோம்..என்ற புரிதல் இன்றைய இளைஞர்களின் மனதில் உருவாக தொடங்கி விட்டது 

ஆன்மீகத்தை விமர்சனம் செய்வதில் தவறில்லை ஆனால் ஓர் குறிப்பிட்ட மதம் சார்ந்த விமர்சனத்தை மாத்திரம் மீண்டும் மீண்டும் செய்வது தான் பலரை எரிச்சலடைய வைக்கிறது.

நீங்கள் இன்னும் சனாதனம் எதிர்ப்பு என்பதை பற்றி பேசிக்கொண்டே இருந்தால், மக்கள் உங்களின் கட்சியை விட்டு விலகி செல்ல அதுவே காரணமாக மாறிவிடக் கூடும்.

ஆன்மீகம் வேறு அரசியல் வேறு.எண்ணெய் தண்ணீர் போல் இரண்டும் வேறுபட்ட தளங்கள்.

ஆன்மீகவாதியாக மாறியவர் அரசியலுக்கு வருவதில்லை.

ஆனால் அரசியலில் தோற்ற பலர் ஆன்மீகத்தை தேடித்தேடி‌ கடைசியில் அலைகின்றனர்.

இறைவன் ஓருவனே என்பதில் எங்களுக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இல்லை.

ஆனால் ஓர் குறிப்பிட்ட கடவுளை பல உருவங்களை கொடுத்து வணங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதால் பல உருவ வழிபாடு தோன்றியது.

கடவுளை அடைய, அவரை வழிபடும் மார்க்கம் தான் பல‌ என்பது ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் தெளிந்த கருத்து.

சில பணம் பிடுங்கும் பேய்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூட பழக்கவழக்கங்களை தவிர்த்து மனிதனாக வாழ பழகுங்கள்.

மனிதர்களின் மன உணர்ச்சிகளில் விளையாடுவதை தவிர்த்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

கடவுளின் வழிபடும் இடமே கோவில் அங்கே உயர் தாழ்வுகள் தேவையற்றது.

ஏனெனில் சிலரின் குழப்பமான செயலால்  கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாவது அந்த மனிதர்கள் அல்ல.அவர்கள் சார்ந்த இனமும் மதமும் என்பது புரிந்தால், தேவையற்ற வார்த்தை விளையாடல்களை தவிர்க்கலாம்..

எல்லா மதங்களிலும் கடவுளை நோக்கிய பயணமே வழிபாடு.‌எல்லா மதத்திலும் புல்லுருவிகளும் உண்டு உண்மை பக்தர்களும் உண்டு.

ஒருவருக்கு உகந்தது மற்றவருக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை

கடவுள் ஓருவரே அவர் யார் எப்படி இருக்கிறார் என்ற வாத பிரதிவாதங்களை கடந்து மனிதனாக வாழ்வோம்.

மேற்கண்ட பதிவு சில நிகழ்வுகள் ஏற்படுத்திய மனதின் தாக்கத்தை வெளிப்படும் ஓர் சிறு முயற்சியே

இதை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்களின் சொந்த விருப்பம் 

இது என் கருத்து அவ்வளவே ..

இறைவன் ஓருவனே...*கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்*என்பதே பழைய தமிழ் பாடலின் வரிகள் 

பாசக்கார பரந்தாமன்

கீழே கிடக்கும் 

சில ஆயிரம் 

நோட்டுகளை 

தாண்டி செல்லும் 

தைரியமுள்ளவனே 

எனது தோழன் 

அந்த கோபக்காரன்   

பிறர் பொருளுக்கு 

ஆசைப்பட்டதில்லை

சிலநேரங்களில் 

வரவுக்கு மீறிய

செலவு செய்து 

அந்த முகவரி தெரியாத

பெரியவர்களின்

முகத்தில் அன்பை

தேடும் அவனைப் போல்

இன்னொருவனை

இதுவரை பார்த்ததில்லை

உலகம் அவனை

அடிக்கடி அழைக்கும்

கேலிப் பெயர்

பாசக்கார பரந்தாமன் 

செல்வமகள்

 ஆயிரம்

கவலையுடன்

வீட்டிற்கு வந்தாலும்

செல்ல மகள் சின்னஞ்சிறு 

கையில் 

சுமந்து வரும்

தண்ணீர் போக்குகிறது 

பல மணிநேர அலைச்சல்

களைப்பை..

அன்பை காட்டுவதில் 

செல்லமகள் என்றுமே 

செல்வமகள் 


அப்பா நீயே என் உயிர்

அப்பா சேர்த்து வைத்த

பல கோடி ரூபாய் மதிப்புள்ள

சொத்துக்கள்.. அதை 

தட்டிப்பறிக்க அவரை

சூழ்ந்து நின்று பலவேஷம்

காட்டும் போலிக்கூட்டங்கள்..

தம்பிக்கு அறிவே இல்லை

என்று அவரிடமும்..

உங்க அப்பா ஊதாரியென்றே

என்னிடமும் நாடகமிடும்

வேடதாரிகள்.... தந்தை மகனிடையே

கொம்பு சீவி குளிர்காய்ந்த.

இன்னும் குளிர்காய துடிக்கும்

சில ஆசாமிகள்.

எப்படித்தான் 

புரிய வைப்பேன்.. அப்பனின்

ஆசையும் பாசமும் அன்பும் நேசமும்

அளவில்லாத கோபத்தையும் விட

விட பெரிய சொத்து

உலகில் ஏது.. எத்தனை முறை 

எறிந்து விழுந்தாலும்

நாலு பேர் அறிய திட்டினாலும் 

மறக்கவுமில்லை மறைக்கவுமில்லை 

சின்னஞ்சிறு வயதில்

என்பின்பே சைக்கிளை பிடித்த படி

ஓடிவந்த அந்த கள்ளமில்லா

தகப்பனை மனதார நேசிப்பதால்

தானே உண்மையான

பேசுகிறேன்..அவரோ நீ இப்படி 

நல்லவனாக இருந்தா உலகம்

ஏமாத்திடும் என்றே அழாமல்

புலம்புகிறான்... உங்க அப்பாவும்

இப்படித்தான்டா இருந்தார்

மதிய சோறு பரிமாறும் போது

அம்மா சொன்ன வார்த்தைகள்.சாப்பாட்டை விட்டு 

பாதியில் எழுந்தவனை பின்தொடர்ந்தது

ஓடி வருகிறாள் யாரிடமும் 

நடிக்க வேண்டிய அவசியமில்லாத 

கிராமத்து தாய்... அவளிடமும்

சொல்ல மனமில்லாமல்

தவிக்கிறேன் அப்பனை போலத்தான்

நானும்... அப்பா நீயே என் உயிர் 

ரேஷன் கடை அரிசி

 சார்,நானும் தான் கடல் மாதிரி வீடு கட்டி கப்பல் மாதிரி கார் வாங்கி.

பாரீன் வேலையில் லட்சக்கணக்கான மாச சம்பளம் வாங்கி....

அட பரவாயில்லையே, அப்போ நீங்களும் நம்மை மாதிரி தான் லட்ச கணக்கில் சம்பாதிக்குறீங்க போல..அப்போ இன்கம்டாக்ஸ் ரெய்டு வருமே 

அட  நீங்க வேற கனவுல கூடவா இன்கம்டாக்ஸ் டாக்ஸ் ரெய்டு.. கொஞ்ச நேரம் நிம்மதியா நான் கனவு கண்டா. அது கூட பொறுக்கலையா..


சார் நீங்க சொல்லுறது உண்மை தான் பல லட்சம் வாங்கும் ஆளுங்க தான் சில ஆயிரம் வாங்குபவரை நினைச்சு...

புரியுது தான் இதுக்கு மேல நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்.. நான் அப்படியே கிளம்புறேன்..

இப்போ எங்கே போறீங்க சார்

அட ரேஷன் கடையில் அரிசி வாங்க தான்..

கொஞ்சம் இருங்க சார் நானும் தான் ‌..

( அப்போ இவனும் நம்மை மாதிரியே தான் போல்.)

அட கொஞ்சம் கற்பனை தான்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...