சனாதனம் பற்றிய சர்ச்சை ஏன்?


கடவுளே இல்லை உருவ வழிபாடு பொய் என்று சொல்லி விட்டு வருடம் தோறும் குறிப்பிட்ட நாளில் சிலைக்கு மாலை இடுவதும், அதற்காக ஊரையே கூட்டி ஆர்பாட்டம் செய்வதும் கூட ஓர் வழிபாடு என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்களோ அப்போது தான் மதம் சார்ந்த வழிபாடு பற்றிய புரிதல் உங்களுக்குள்ளே நிகழும்.


மனிதனை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் சில சடங்குளை பாமர மக்கள் தொடர்ந்து செய்வதும் வழி வழியாக வரும் சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஓர் வாழ்வியல் சார்ந்த நிகழ்வு.

சாதாரண மனிதனின் கண்ணுக்கு தெரியாத கடவுளை அறிய முயலும்  முயற்சியே உருவ வழிபாடு என்பதை உணரமுடியும்.

சித்தர் வழிபாடு கடல் என்றால் உருவ வழிபாடு நிலத்தில் வாழ்வது போன்றது..

கடவுளே இல்லை என்ற பரிகாசம் செய்யும் அறிவு ஜீவிகள்.


நடுநிசி இரவில் தனியே போக பயப்படுவது ஏனோ..கடவுளே இல்லையென்று தைரியமாக சொல்லும் உங்களால் ஆவிகளை பற்றி பேச தைரியமில்லையா.அல்லது அப்படி பேசினால் ஓர் மதத்தின் ஓட்டுக்களை இழந்து விடுவோம் என்ற பயமா..

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வோம்; சனாதனம் பற்றிய பேச்சை இப்போதைக்கு மறந்துவிடுவோம். அப்படியென்றால், உங்கள் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் சொந்த நலனுக்காகவே நீங்கள் ஏன் உங்கள் வீடுகளிலும் கோவில்களிலும் பூஜைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்?


தயவுசெய்து எங்கள் மத மரபுகளை மட்டும் கேலி செய்யாதீர்கள். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், மற்ற மதங்களைப் பற்றியும் பேசுங்கள். மற்ற மதங்கள் என்று வரும்போது, ​​உங்களால் ஒரு வார்த்தைகூடப் பேச முடிவதில்லை.

கடலில் நின்று கொண்டு ஆகாயத்தை பற்றி பேசுவதும் நினைப்பதும். நிலத்தில் இருக்கும் போது கடலை பற்றி புகழ்வதும். நிலத்தில் இருப்பவரை பரிகசிப்பதும். மேன் மேலும் குழப்பத்தை தான் தரும்.. நாடாள துடிக்கும் மனிதர்களே..

முதலில் நீங்கள் தெளிவாகுங்கள். ஓர் விஷயத்தை தேர்வு செய்யுங்கள்.. அதில் குழப்பம் இல்லாமல் அந்த விஷயத்தை தொடருங்கள்.

திருக்குறள் என்ற நூலில் உட்பகை அரண் போன்ற விஷயங்களை படித்து தெளிவாகுங்கள்.

உங்களை புகழ்பவரும் உடனிருப்பவரும் நண்பர் தானா என்பதை சீர் தூக்கிப் பாருங்கள். 

இன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியையோ திருப்திப்படுத்தும் நோக்கிலேயே சில வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்; இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிகாரப் பதவியிலிருந்து விலக நேர்ந்தால், தற்போது உங்கள் அருகிலேயே அமர்ந்திருக்கும் அந்த நபர்தான், புதிய முதலமைச்சரைப் புகழ்ந்து பேசும் முதல் நபராக இருப்பார். அவர் எப்போதும் தேர்தலில் வெற்றி பெற்றவருடனேயே துணை நிற்பாரே தவிர, தோல்வியடைந்தவருடன் நிற்க மாட்டார்.


நமது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் இந்த உண்மையை நன்கு உணர்ந்திருந்தார்; அதனாலேயே, அதிகாரத்தில் இருந்தபோது இந்த நபரைத் தன் அருகிலேயே நெருங்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.


வரும் காலங்களில், இந்த நபர்களின் உண்மையான முகத்தை காலம் உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

உங்களுக்கு நேரம் மற்றும் வாய்ப்பு கிடைத்தால், 'முரசொலி' இதழின் பழைய பிரதிகளைப் படித்துப் பாருங்கள்; அப்போதுதான் இந்த உண்மையை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள். திரு. கருணாநிதி அவர்கள், தனது இதழின் பல வெளியீடுகளில் 'தாடிவாலா' என்பவருக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஓர் மதம் சார்ந்த சில அரசியல்வாதிகளின் பேச்சுக்களால் கைதட்டலும் சில நிமிட சந்தோஷம் தான் நிகழும். 

இங்கே கடவுளை வணங்கவும் நேரமின்றி உழைத்து, தன் குடும்ப வறுமையை போக்கி பணக்காரனாக மாறிய பிறகு.

 இறைவனை நினைத்து பல தான தர்மங்களை செய்யும் மனிதர்கள் பலர் எல்லா மதத்திலும் உண்டு


ஏழை மக்களுக்கான நல்ல செயல்களை செய்யும் பல மனிதர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு கவுன்சிலர்  பதவியை அடைய வேண்டும் என்ற எண்ணமில்லை.


பிறரின் விமர்சனம் மற்றும் உங்களை பற்றி கருத்துகளால் மாறுபடாமல் உங்களின் விருப்பமான தெய்வத்தை வணங்குங்கள். அல்லது கடவுளே இல்லை என்ற கோட்பாடில் தொடர்ந்து செல்லுங்கள்.

அதற்காக ஆட்சி பீடத்தில் இருப்பதால் நீங்கள் சொல்வது தான் சரியென்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்.

கோவிலுக்கு யார் யாரெல்லாம் வந்து போகிறார்கள் என்பதை கடவுள் கண்காக்கிறாரோ இல்லையோ.

ஆனால் சாமானிய மனிதர்கள் நன்கு அறிவார்கள்.

இப்படித்தான் சாமி கிடையாது சாத்திரம் கிடையாது என்று சொல்லிக் விட்டு அவங்க நல்லா சாமி கூப்பிடுவாங்க..

அதனால் தான் அவங்க முன்னேறுதாங்க.நாம அவங்க பேச்சை கேட்டு அப்பன் ஆத்தாவ எதிர்த்து பேசிக்கொண்டு திரியுறோம்..என்ற புரிதல் இன்றைய இளைஞர்களின் மனதில் உருவாக தொடங்கி விட்டது 

ஆன்மீகத்தை விமர்சனம் செய்வதில் தவறில்லை ஆனால் ஓர் குறிப்பிட்ட மதம் சார்ந்த விமர்சனத்தை மாத்திரம் மீண்டும் மீண்டும் செய்வது தான் பலரை எரிச்சலடைய வைக்கிறது.

நீங்கள் இன்னும் சனாதனம் எதிர்ப்பு என்பதை பற்றி பேசிக்கொண்டே இருந்தால், மக்கள் உங்களின் கட்சியை விட்டு விலகி செல்ல அதுவே காரணமாக மாறிவிடக் கூடும்.

ஆன்மீகம் வேறு அரசியல் வேறு.எண்ணெய் தண்ணீர் போல் இரண்டும் வேறுபட்ட தளங்கள்.

ஆன்மீகவாதியாக மாறியவர் அரசியலுக்கு வருவதில்லை.

ஆனால் அரசியலில் தோற்ற பலர் ஆன்மீகத்தை தேடித்தேடி‌ கடைசியில் அலைகின்றனர்.

இறைவன் ஓருவனே என்பதில் எங்களுக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இல்லை.

ஆனால் ஓர் குறிப்பிட்ட கடவுளை பல உருவங்களை கொடுத்து வணங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதால் பல உருவ வழிபாடு தோன்றியது.

கடவுளை அடைய, அவரை வழிபடும் மார்க்கம் தான் பல‌ என்பது ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் தெளிந்த கருத்து.

சில பணம் பிடுங்கும் பேய்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூட பழக்கவழக்கங்களை தவிர்த்து மனிதனாக வாழ பழகுங்கள்.

மனிதர்களின் மன உணர்ச்சிகளில் விளையாடுவதை தவிர்த்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

கடவுளின் வழிபடும் இடமே கோவில் அங்கே உயர் தாழ்வுகள் தேவையற்றது.

ஏனெனில் சிலரின் குழப்பமான செயலால்  கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாவது அந்த மனிதர்கள் அல்ல.அவர்கள் சார்ந்த இனமும் மதமும் என்பது புரிந்தால், தேவையற்ற வார்த்தை விளையாடல்களை தவிர்க்கலாம்..

எல்லா மதங்களிலும் கடவுளை நோக்கிய பயணமே வழிபாடு.‌எல்லா மதத்திலும் புல்லுருவிகளும் உண்டு உண்மை பக்தர்களும் உண்டு.

ஒருவருக்கு உகந்தது மற்றவருக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை

கடவுள் ஓருவரே அவர் யார் எப்படி இருக்கிறார் என்ற வாத பிரதிவாதங்களை கடந்து மனிதனாக வாழ்வோம்.

மேற்கண்ட பதிவு சில நிகழ்வுகள் ஏற்படுத்திய மனதின் தாக்கத்தை வெளிப்படும் ஓர் சிறு முயற்சியே

இதை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்களின் சொந்த விருப்பம் 

இது என் கருத்து அவ்வளவே ..

இறைவன் ஓருவனே...*கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்*என்பதே பழைய தமிழ் பாடலின் வரிகள் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...