இனி ஓர் விதி செய்வோம்

 

தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரத்தை கடவுள் மனிதருக்கு கொடுக்க வில்லை என்றே பல மதங்களிலும் செவி வழி கதைகள் ஏராளம்.


அப்படியென்றால் தற்கொலை என்ற விஷயம். உலகளாவிய எல்லா நாடுகளிலும் இருந்ததாகவும் அதிலிருந்து மீள மதங்கள் மனிதரை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததும் புலப்படுகிறது.


மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்ததே சண்டையும் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் அதீதமான பாசத்தின் தேடலும் எல்லா நாட்டிலும் வீட்டிலும் தொடர்கிறது.


உலகில் பிறந்த எல்லா மனிதனும், தனது சில வருட வாழ்நாளில் உலகிற்கு ஏதாவது ஓர் விஷயத்தை செய்துவிட்டு போகவே முயற்சி செய்கிறான்.

இங்கே முன்னேறியவர்களை விட முன்னேற துடிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு.

முன்னேறிய சில மனிதரை மனதார பாராட்டும் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் வெற்றியடைய முடியவில்லையே என்ற வேதனை இருக்கிறது.


ஆட்சியில் இருப்பவரும், ஆட்சியில் இருந்தவர்களும்...மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் இலவச உணவு போன்ற திட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஓர் சிறு பகுதியை, அவர்களின் உளவியல் சார்ந்த விஷயங்களுக்கும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் 

இன்றைய காலகட்டத்தில் பள்ளி குழந்தைகளின்  படிப்பு மற்றும் பிற சூழ்நிலைகளில் அவர்களின் மனநலம் சார்ந்த பாதிப்பை கவனிக்க இயலாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவிக்கின்றனர்.

கணிணியின் பயன்பாட்டால் நித்தமும் மன அழுத்தம்  அதிகரிக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

மனிதர்களுடன் போட்டியிட்ட நாம், தற்போது கணினியுடன் போராட வேண்டிய அவசர கதியில் இருக்கிறோம்..


ஆன்லைன் வகுப்பறை பயிற்சி, ஆன்லைன் தேர்வு என்று குழந்தைகள் அழுத்தமாக மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கல்வி என்பது மிகவும் முக்கியமான விஷயம் அதே சமயம் மனநலமும் உடல்நலமும் அதை விடவும் அவசியமாகும்

இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து, அரசும் பள்ளி நிர்வாகங்களும் செயல்பட்டால் மிகவும் நல்லது.

வென்றவர்கள் அனைவரும் முதன் முறையாக தோற்றவர்கள் தான்.

தோல்வியே  வெற்றியின் படிக்கட்டு என்பதை ஆசிரியர்கள் மாணவ மாணவியரின் மனதில் மீண்டும் மீண்டும் பதிய வைப்பது அவசியம்.

மாணவ மாணவியரின் மனம் சார்ந்த பயத்தை தவிர்ப்போம்.

தற்கொலை எண்ணமே தேவையற்ற சிந்தனை.. ஓர் துறையில் தோற்றவர், தனது தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் வெற்றி எளிதாகும் 

தற்கொலை ஏன் நடந்தது எப்படி நடந்தது என்பதை விமர்சனம் செய்து நேரத்தை வீணடிக்கும் ஊடகங்களே.

ஏற்கனவே இழப்பால் வாடும் குடும்பத்தின் வீட்டு வாசலில் நின்று கொண்டு, மைக் கையில் இருக்கும் ஓரே காரணத்தால் கேள்வி கணை தொடுத்து பிறரின் மனதை நோகடிக்க வேண்டாம்.


இனி எந்த ஓர் குழந்தையின் மனதிலும் தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல என்பதை உணர வைப்போம் அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் ஆறுதல் மொழியாக அமையட்டும் 

வாழ்வில் சின்ன சின்ன தோல்விகளை  சந்தித்த பல மனிதர்கள் தான் வரலாற்றின் பக்கத்தில் பரிமளிக்கின்றனர் என்பதை ஓவ்வொரு மாணவ மாணவியர்களின் மனதிலும் ஏற்படுத்துவோம்..


வருங்காலத்தில் எல்லா பள்ளி கல்லூரிகளிலும் மனநலம் சார்ந்த உளவியல் கல்வியை ஏற்படுத்துவோம்


இனி ஓர் விதி செய்வோம்..



No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...