கண்ணில் வரும் கண்ணீரை சிரிப்பாக மாற்றும் தன்மை சிலருக்கு மிகவும் கை வந்த கலை.உலகம் அவனை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று புகழ்கிறது.ஏனோ யாருமே அவனின் கவலைகள் காது கொடுத்து கேட்கவில்லை, இருந்தாலும் தொடர்ந்து தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைக்கிறான். தன்னை பற்றிய சிந்தனை இல்லாமல் உதட்டில் சிரித்து உள்ளத்தின் காயங்களை மறைக்கும் உன்னத நடிகன் அவன்.
உண்மையான நட்பு.
உண்மையான நட்பு என்றால் கண்ணீரை துடைப்பது மட்டுமல்ல.
ஓர் முறை தெரியாமல் மனத்தை காயப்படுத்தி அழ வைத்து விட்டோம் என்று நினைத்து மீண்டும் பல முறை நண்பன் எத்தனையோ கேலி கிண்டல் வம்பு செய்தாலும் பொறுமையாக இருப்பது... மீண்டும் கோபமாக பேசி அவன் கண்ணீர் விட கூடாது என நினைப்பது தான்.. உண்மையான நட்பு...
நட்பு என்பது விட்டுக் கொடுப்பது, தனது நண்பனின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் கொள்வது. தனது நண்பன் தவறான முடிவு எடுக்கும் போது, அதை அவனுக்கு புரியும் படி சொல்லி நல்வழிப்படுத்த முயற்சி செய்வது.
நட்பின் இலக்கணம் என்பது திருவள்ளுவர் சொல்வது போல,
உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
ஏனோ இவை இப்போது எல்லாம் மேடை பேச்சுக்களுடன் முடிந்து போகிறது, சில மேல் தட்டு வர்க்கத்தினர் மத்தியில்.
பாராட்டு விழா மேடையில் உடன் இருப்பவரை, வானளாவிய புகழை அடைந்தது போல பேசி முடித்து விட்டு காரில் வரும் போது. தனக்கு நெருக்கமானவர்களிடம் இவனுக என்னத்தை சாதிச்சு விட்டான் தெரியலை. அவன் கையில் காசு இருக்கிறதாலே பத்து பேர் புகழ்ந்து பேசுறானுங்க.
ஜயா, உங்க கையிலும் நாலு காசு இருந்தா, இப்படி பத்து பேரு மேடை ஏறி பேசுவாங்க. கலிகாலம் என்ன செய்ய சொல்லுறீங்க ஜயா.உண்மையை சொன்னா, உங்களுக்கு தான் இந்த பட்டம் கொடுக்கணும். நேத்து வந்த சின்னப்பையனுக்கு மாலை மரியாதை கிடைப்பது பார்த்தால் எனக்கே கோபம் கோபமாக வருது. நான் இப்படி நியாயம் பேசுவதால் தான், ஜயா என்னை யாரும் உடன் சேர்ப்பதே இல்லை.. என்கிறார் காரில் உடன் வந்தவர்.
இதே போல ஓர் நிகழ்வு எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் நடந்தது. தன் நண்பரை தவறாக பேசியவர்களை காரில் இருந்து இறங்கி விட்டார்.அதற்கு காரணம், ஒருத்தர் இல்லாத போது அவரை குறை சொல்பவர்கள் தவறு என்ற சிந்தனை.
இப்படி பல உதாரணங்கள் நண்பர்கள் வாழ்வில் ஏராளம்.
நட்பிற்காக சுயநலம் இல்லாமல் பழகும் மனிதர்கள் உலகில் உண்டு.ஆனால் உலகம் பொதுவாக அவர்களை இளிச்சவாயன் என்றே அழைக்கிறது.
நட்பில் வெறுப்பு, எரிச்சல் வருவதில்லை, ஆனால் அதில் அக்கறை அதிகமுண்டு எனவேதான் நண்பர்களுக்கு இடையே சச்சரவு வருகிறது, ஆனால் அது சண்டையாக மாறாமல் பாசமாக மாறுகிறது.
"நான் சொல்வது போல் கேளு", என்ற அன்பின் அதிகாரம் நட்பின் பலத்தை அசைத்து பார்க்கிறது.
ஆயினும் நட்பே வெல்கிறது...
சமர்ப்பணம்
மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட ஓன்று, ஆனால் அது என்று நிகழும் என்பது தெரியாத காரணத்தால் மனிதன் ஆணவத்தில் அலைகிறான்.
மனிதனின் ஆயுள் தெரிந்து விட்டால், வாழ்வின் சுவாரசியமானது, மிகவும் குறைந்து போகும்.
இறைவன் இருக்கிறாரா? இல்லையா என்ற விவாதம் தாண்டி யோசித்தால் புரியும்.
கடவுளை விழுந்து விழுந்து கூப்பிட்டவரும், இறைவனே இல்லை என்று வாதிட்டவரும் மரணத்திற்கு பின் என்ன நிகழும். அதிகமாக பேசவில்லை.
விடை இல்லா கேள்வி இது.
பூமியின் மடியில் வாழும் சில வருட வாழ்வில், முடிந்தால் நன்மை செய்யுங்கள். முடியாவிட்டால் அடுத்தவரை சாதி மத இனத்தின் பெயரால் உதாசீனம் செய்யாதே என்பதே பலரின் உணர்வுகள்.
நிலையற்ற உலகில் நிலையான இடம் ஓரு சிலருக்கு மாத்திரமே கிடைக்கிறது.
ஏனென்றால் அவர்கள் தனக்காக வாழவில்லை, தன்னை சார்ந்த மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.
அவர்கள் இறைவனை பார்த்தார்களா? பேசினார்களா?
அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
ஆயினும் ஏழைகளின் முகத்தில் இறைவனை காண வேண்டி, அவர்கள் செய்த தவம். இன்று மனிதனை மனிதனாக மதிக்கும் நிலை உருவானது.
தனக்காக எதுவுமே பணம் சேர்க்காமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்.
நிச்சயமாக இப்படி பொது நலனுக்காக வாழ்க்கை வாழ்ந்த காரணம்.
இயற்கை வழி வரும் மரணம்.
உலகில் பிறந்து விட்டோம், என்பதற்காக வாழாமல். குறுகிய காலத்தில் மனித உயிரை உலகுக்கு தந்து விட்டு சென்ற அவர்கள். இன்றும் அவர்கள் மரணத்தை தாண்டியும் வாழ அவர்கள் செய்த அளப்பரிய பணியே காரணம்..
மரணத்தை பற்றிய சிந்தனை தான், மனிதனை சாதிக்க வைக்கின்றது.
ஓட்டம் என்று நிற்கும் என தெரியாத நிலையில், ஓவ்வொரு நாளும் நன்மை செய்ய தூண்டுகோலாக அமைந்தது.
நீர்க்குமிழி வாழ்வு, வாழும் நாளில் பிறருக்காக வாழும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்
மகனும் மருமகளும்
மகனும் மருமகளும்..
.
குண்டு பாப்பா என்று சொல்லி அவளின் கன்னங்களில்
முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தும்
பாட்டி.
சில நிமிடங்களில் குழந்தை போல மாறி விடுகிறாள்.
பேத்தியின் பிள்ளைத்தனமான செல்லமான செயலை கண்டு..
ஏய் குண்டம்மா, என்ற சொல்லை பாசமுடன் ரசிக்கும் குண்டு பாட்டி..
பாட்டி பேத்தி உறவில் கூட தினமும் சண்டைகள் உண்டு.ஆனாலும் யாரும் கோவித்து கொண்டு, தனது அம்மாவிடம் குறை சொல்வதில்லை..
உடன் படிக்கும் நட்பை போலத்தான் இந்த உறவுகள்...
கோவிலுக்கு போனவள் திருப்பி வர தாமதமாகும் நாட்களில், ஏன் கிழத்தை தனியா அனுப்பின..நீ சும்மா தானே வீட்டில் இருக்கே கூட போனா, உனக்கு பவிசு குறைச்சா போகும்...
உன் மாமியார் கூட போக வேண்டியது தானே...ஏன்தான் என்உசுர வாங்குறே..
இவள் எங்கேயாவது கீழே விழுந்து தொலைச்சா, நம்ம எல்லாருக்கும் தானே கஷ்டம், அப்பாவுக்கு தலைவலி அதிகமாகும்..
.
அவளுக்கு எவ்வளவு சொன்னாலும் அறிவே இல்லை... இந்த மழை நேரத்தில் கோவிலுக்கு போக வேண்டிய கட்டாயமா???
.
வீட்டிற்குள் பாட்டி நுழையும் போது, பேச்சை மாற்றினாள்... நீ வயசான காலத்துல வீட்டில் அடங்கி ஒடுங்கி கிடக்க வேண்டியது தானே...
பாரு உன்னால அம்மாவுக்கு எவ்வளவு மனசு கஷ்டம் என்று அம்மாவின் மீது பழி போடுவாள்..
.
.
பேத்தி கல்லூரியில் இருந்து வர நேரமானாலும் பாட்டியின் பாடு திண்டாட்டம்...
இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது..
எல்லாம் என் மகனைத் தான் சொல்லுறேன்...
அப்படி இவ என்ன பொல்லாத படிப்பு படிக்குறா???
ஈஸ்வரா, ஏன்ப்பா என் வயித்துல புளியை கரைக்காதே..அவளை சீக்கிரம் வீட்டில் கொண்டு வந்து விடு.இந்த முறை உனக்கு பிரதோஷத்துக்கு பால் அபிஷேகம் பண்ணுறேன்..
ஊர் உலகம் எப்படி இருக்கும்...
எதுக்கு இப்போ ஸ்பெஷல் க்ளாஸ்...
வீட்டில் இருந்து படிச்சா, படிப்பு மண்டையில் ஏறாதா???
என் கவலை இங்கே யாருக்கு புரியுது...
வராண்டாவில் அவள் வரும் வரை வாசல் படியில் அமர்ந்து கொண்டு இருக்கும் பாட்டி...
.
.
.
ஏய், குண்டு நேரத்துக்கு மாத்திரை மருந்து சாப்பிட்டு விட்டு படுத்து தூங்க வேண்டிதான்...
வரும் போதே சீண்டுவாள்..
.
.
மழைகாலத்தில் எதிர்பாராமல் வந்த காய்ச்சல், இரண்டு நாள் ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்ட பாட்டி...
வெளியே எங்கேயும் செல்லாமல் கட்டில் கிழவி தூங்குவதை பார்த்தபடி கவலையுடன் ...
.
.
கண்விழித்து பாட்டியின் அருகே சென்று காதோரமாக சொன்னாள்...
உனக்கு நல்லபடியா காய்ச்சல் சரியான பிறகு, நீ நினைச்ச மாதிரியே அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்... சொல்லும் போது வார்த்தை உடைபட்டது...
.
.
ஏய் லூசு, நான் நல்லா தான்டி, இருக்கேன்...
உன் கல்யாணத்தை பார்க்காமல் போக மாட்டேன்.கவலைபடாதே.என்றாள் குண்டு பாட்டி..
.
.
ஜன்னலோரமாக நின்ற படி இதை பார்த்து ரசித்தனர் பாட்டியம்மாவின் மகனும் மருமகளும்...
Sorry Daddy
கல்யாண வீட்டிற்கு
போய்விட்ட அம்மா...
போவதற்கு முன்பாக
எச்சரிக்கை மணியை
அப்பாவின் தலையில்
அடிக்காத குறையாக
சொல்லிவிட்டு போனாள்...
வயசுப் பொண்ணு...
நீங்க எதுவும் லூசுதனமா
"படம் பார்க்காதீங்க".
பெண் பிள்ளைகள்
பெரிசு ஆயிருச்சு.......
அதுங்களுக்கு இப்போ
எல்லோமே புரியும்..
கல்லூரியில் இந்தமுறை
இறுதியாண்டு தேர்வு..
அக்கறையாக கட்டில்
படுத்த படி ஆடை கலைந்து
படித்துக்கொண்டு
இருந்தவளுக்கு
காபி கலந்து வந்தவர்...
ஏண்டி அம்மா சொல்லுற
மாதிரி நீ இன்னும் குழந்தை தான்....
வீட்டிற்குள் கூட ஒழுங்காக
இருந்து பழகு என்றபடி
அவளின் சுடிதாரை தாண்டி
வந்த உள்ளாடையை
சரி செய்தார்... அதில்
காமம் இல்லை...
தன் குழந்தையின்
அறியாமை நினைத்த
கவலை தெரிந்தது...
அப்பாவை கட்டியணைத்தாள்
"Sorry Daddy" என்ற
அவளின் விரல்களோ
தன் தோழி அனுப்பிய
"அந்த ஜோக்" அழித்தது...
சத்தியமா இனி படிப்பில்
மட்டும் கவனம் செலுத்துவேன்
இனி ஒழுங்கா இருப்பேன்...
தோளில் அவள்
சிந்திய கண்ணீருக்கு
காரணம் அவள்
மட்டுமே அறிவாள்...
உன்னையே நீ அறிவாய்..
தியானத்தை பற்றியும், ஆன்மீகத்தின் சில விஷயத்தையும் சொல்லும் போதும் பலர் கேட்க தயாராக இல்லை.
காதல் கதைகளையும், கவிதைகளையும் காமத்தின் பொடி தூவி எழுதும் போது ஏனோ அனைவருக்கும் பிடித்துப்போகிறது..
விற்கும் பொருளை கடையாக விரிப்பது தான் புத்திசாலிதனம்..
அந்த பித்து பிடித்த பரதேசி சாமியார் , சொன்னதை நினைத்து சிரிக்கிறேன்....
சிற்றின்ப உலகில் நொடிப் பொழுது ஆனந்தம் அதற்கு திருப்தி அடைவது தான், மனிதரின் மனப்பாங்கு.....
நிலையற்ற உலகில் நிலையான இன்பம் தேடுபவன் பைத்தியக்காரன்..
இந்த பைத்தியக்காரனுக்கு உள்ளே நடக்கும் வித்தையும் வினோதமும்.. வார்த்தைகளில் சொல்லிப் புரியாது...
ஏகாந்தம் ஓன்றே ...
பரமானந்தம்...
தன்னை நன்கு உணர்ந்த பின்னர் யாரும் ஆன்மீகம் பேசுவதில்லை...
உடல் நலத்தை மறந்து பணத்தை மாத்திரமே இயந்திரதனமாய் அல்லும் பகலும் தேடி ஓடி பணத்தை சம்பாதிக்க நினைக்கும் மக்கள் கூட்டத்திற்கு தியானம் ஓர் அலுப்பு தரும் விஷயம்.
தியானத்தை உலகிற்கு சொன்னால் புரியாது வாழ்ந்து காட்டு..உன்னை பின்பற்ற ஆயிரம் பேர் வருவார்கள்.ஆன்மீகம் காசுக்கு கிடைப்பதில்லை.. ஆனால் காசின் மீதான பற்று விலகும் போது, ஆன்மீகம் உன்னுள் அதன் வேலலயை தொடங்கும். எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஓர் அணு துகளே நான் என்ற நினைப்பே அகங்காரம் அழித்து அமைதியில் அமரும்.
இயற்கையை வணங்குவதும் இறைவனை வணங்குவதும் ஓன்றே
எளிதாக சொன்னால் திருமண வீட்டில் மணமக்கள் பற்றி மற்றவர்கள் தான் அதிகம் பேசுபவர்..அவர்களோ எந்த கவலையும் இல்லாமல் வருங்கால கனவில் மிதப்பது போல...
... எண்ணற்ற ஜீவராசிகளில் நான்.. நான் என்று அலையும் அதிகார ஆணவத்தின் திமிர் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரை தானே.ஆண்டவனை பற்றி அறியாமல் ஆண்டவனை ஓவ்வொரு மதமும் தனக்கானது என அற்ப அலப்பறை செய்யும் குழந்தைத்தனமான அட்டகாசங்கள் அத்தனையும் வீண் ஜம்பமே..
கண்களை மூடி.. தனிமையில் அமர்ந்தால்.. அது தரும் அமைதி... பிரபஞ்சத்தின் உள்ளுணர்வு வருங்காலத்தின் நடைமுறைகள்
உணர்ந்து பார்..
உன்னையே நீ அறிவாய்..
பெற்றவருக்கு பெருமை.....
தான் பெற்ற பரிசுகளும் பட்டங்களும் தந்த இன்பத்தை விட அதிகமாக தனது குழந்தைகளின் வெற்றி தரும் சந்தோஷம் வார்த்தைகளில் விவரிப்பது இயலாத காரியம்.... தாயும் தந்தையும் பட்ட பல சிரமங்களை மறந்து முகத்திலும் மனதிலும் அவை ஏற்படுத்தும் அமைதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா....
அவர்கள் மேடை ஏறி பரிசுகள் வாங்கும் போது
தன்னையறியாமல் உணர்ச்சியின் வேகத்தில் சிறு துளிகள் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு..
அன்று அவை ஏற்படும் எண்ணங்கள் வலிமையானது
இன்னும் இன்னும் இவர்களுக்காக
உழைக்க வேண்டும் என்று உயர்ந்த சிந்தனை தந்து....
பெற்றவர்களையும் மேன்மையின் பாதைக்கு இட்டுச் செல்கின்றது.... பிள்ளைகளின் வெற்றியால் பெற்றவருக்கு பெருமை...
Communication
Communication is more important..
In today's culture most of the people have opportunities to learn more languages.
Learning more languages are truly good. At the same time, we have to be very clear. Are we capable in good communication even at normal situations.
Language were born at different places over the world according to civilization.
It should be used as a medium to convey our thoughts clearly without hurting other's feeling. Whereas some people using it, to divide peoples. Because of that entire human harmony is facing threads.
Every natural beings communicate in their way, even in jungles.
Science has proven that elephants transfer their signals from far distance too..
We have the capacity to learn more languages, our human brain has it's power.
Anyhow communication is more important than language.
Even at home, in some times, we are not ready to convey our thoughts properly.
Because we have already created an image about ourselves.
From which we are not supposed to came out..
We aren't willing to express our normal feelings or thought process to kith and kin.
They may also facing same issues..Sit with them and chat, so you will came to know.
They are not against you. Only against your way of approach.
Parents always dream more about their children.
Whether you will fulfill them or not? But still their wishes has greater heights.
Sometimes their emotions may burst in words.
Try to understand the emotional bonding, which they are expecting more, like you the same.
Communication should be very clear, it should convey our thoughts correctly in proper manner.
Spoken words are only taken in to account, not about your imaginations...
Imagination can drive you to inventions.
Whereas all human relationships are based on emotions.
For example.
If a person invite your for a marriage or any other function.It might be simply a courtesy call.
Thinking that he/ she might remember you as good friend, so he is waving his hands...
Your past experience, may make you aware of situations..
One invitation but thought process are many...
Why he / she is calling...
What is the purpose of calling me...
Is he / she trying to get benefits out of me...
Are they want me to help them...
Are they expecting any monetary benefits...
Is he / she irritating me....
Is he / she willing business proposal.......
And many more unwanted thoughts may filled up in mind..
There's always different aspects at every circumstances. He may think you as a good friend..
If you say anything as philosophy...
Your philosophy thoughts may be right..
World has different kinds of people with different cultural backgrounds.. They may always be, same like you.
_Same feathers flock together".
There's is well known word, most of the people are aware of it.
"She is a girl, so she is my friend"
" I have a good friend, but she is a girl"
Not everyone can understand above said words correctly.
Because imagination and communication has it's own dimension.
Learning more languages are best. But communication is more important than language
Mind
Mind always travels towards happiness.
It's searching all possibilities to be happy.
Happiness may differ from person to person...
It depends on particular person wish...
For achieving happiness, hard work and stress is put in place..
When everyone is running towards a place, with more enthusiasm.
It was filled by......
Whereas without any efforts and hardwork, someone has been raised from bottom to greater heights by others.
Because pure hearts are blessed by God.
விநாயகர்
மிகப்பெரிய வயிறு...
கைகளில் சிறு இனிப்பு...
யானையின் முகம்...
குழந்தையின் குணம்...
எளிமையான வழிபாடு..
பல நல்ல தொடக்கத்தின்
தலைவன் ....
அமைதியின் உருவகம்...
அன்பின் வெளிப்பாடு...
ஆசைகள் ஏதுமின்றி
இருந்தவனை கல்யாணம்
செய்யச் சொல்லி
வற்புறுத்திய சொந்த பந்தங்கள்
சில சந்தர்ப்பங்களில்
அதிகமாகவே கோபம்
காட்டும் அப்பா... அவரின்
மென்மையான மனதும்.
கேட்டதை விட அதிகமாக
அள்ளிக் கொடுக்கும் தன்மையும்
அனைவருக்கும் தெரியாது...
பித்தன் என்று கேலி பேசும்
அவரின் நிலை புரியாத பலர்
பணத்தை கேட்ட குபேரனிடம்
தனது எல்லா செல்வத்தையும்
எடுத்துக் கொடுத்து விட்டு
தியானத்தில் அமர்ந்தவர்
அந்த பணத்தைத் தான்
பிற்காலத்தில்
திருப்பதியில் கோவில்
கொண்ட பெருமாளுக்கே
வட்டிக்கு கொடுத்தான்
சிலருக்கே புரியும்...
அம்மாவும் அப்பாவும்...
தான் இவருக்கு எல்லாமும்......
மயில் மீதேறி உலகை
நொடியில் வலம் வரும்....
வள்ளி தெய்வானையின்
மணவாளன்
மருதமலை முருகனின்
பாசக்கார அண்ணன்..
கல்யாணத்தின் தேவை அறிந்து
மரத்தடியில் அமர்ந்தவன்...
ஆற்றின் கரையிலும்...
அரச மர நிழலிலும்
அன்பிலும் பண்பிலும்
சிறந்த தனது
அம்மாவை போலவே
பெண்ணை தேடியதாக
என்றுமே பாட்டி சொல்லும்
கதைகளின் கதாநாயகன்...
ஒளவையின் இஷ்டதெய்வம்...
வியாசரிடம் போட்டியிட்டு
தனது தந்தம் ஓடித்து...
எழுதிய மகாபாரதம்...
அத்தனைக்கும்
சொந்தக்காரன்
இந்த விநாயகர்
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...