உன்னையே நீ அறிவாய்..

தியானத்தை பற்றியும், ஆன்மீகத்தின் சில விஷயத்தையும் சொல்லும் போதும் பலர் கேட்க தயாராக இல்லை. 

காதல் கதைகளையும், கவிதைகளையும் காமத்தின் பொடி தூவி எழுதும் போது ஏனோ அனைவருக்கும் பிடித்துப்போகிறது..

விற்கும் பொருளை கடையாக விரிப்பது தான் புத்திசாலிதனம்..

அந்த பித்து பிடித்த பரதேசி சாமியார் , சொன்னதை நினைத்து சிரிக்கிறேன்....

சிற்றின்ப உலகில் நொடிப் பொழுது ஆனந்தம் அதற்கு திருப்தி அடைவது தான், மனிதரின் மனப்பாங்கு.....

நிலையற்ற உலகில் நிலையான இன்பம் தேடுபவன் பைத்தியக்காரன்..

இந்த பைத்தியக்காரனுக்கு உள்ளே நடக்கும் வித்தையும் வினோதமும்.. வார்த்தைகளில்  சொல்லிப் புரியாது...

ஏகாந்தம் ஓன்றே ...

பரமானந்தம்...

தன்னை நன்கு உணர்ந்த பின்னர் யாரும் ஆன்மீகம் பேசுவதில்லை...

உடல் நலத்தை மறந்து பணத்தை மாத்திரமே இயந்திரதனமாய் அல்லும் பகலும் தேடி ஓடி பணத்தை சம்பாதிக்க நினைக்கும் மக்கள் கூட்டத்திற்கு தியானம் ஓர் அலுப்பு தரும் விஷயம்.

தியானத்தை உலகிற்கு சொன்னால் புரியாது வாழ்ந்து காட்டு..உன்னை பின்பற்ற ஆயிரம் பேர் வருவார்கள்.ஆன்மீகம் காசுக்கு கிடைப்பதில்லை.. ஆனால் காசின் மீதான பற்று விலகும் போது, ஆன்மீகம் உன்னுள் அதன் வேலலயை தொடங்கும். எல்லையற்ற பிரபஞ்சத்தின் ஓர் அணு துகளே நான் என்ற நினைப்பே அகங்காரம் அழித்து அமைதியில் அமரும்.

இயற்கையை வணங்குவதும் இறைவனை வணங்குவதும் ஓன்றே 

எளிதாக சொன்னால் திருமண வீட்டில் மணமக்கள் பற்றி மற்றவர்கள் தான் அதிகம் பேசுபவர்..அவர்களோ எந்த கவலையும் இல்லாமல் வருங்கால கனவில் மிதப்பது போல...

... எண்ணற்ற ஜீவராசிகளில் நான்.. நான் என்று அலையும் அதிகார ஆணவத்தின் திமிர் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரை தானே.ஆண்டவனை பற்றி அறியாமல் ஆண்டவனை ஓவ்வொரு மதமும் தனக்கானது என அற்ப அலப்பறை செய்யும் குழந்தைத்தனமான அட்டகாசங்கள் அத்தனையும் வீண் ஜம்பமே..

கண்களை மூடி.. தனிமையில் அமர்ந்தால்.. அது தரும் அமைதி... பிரபஞ்சத்தின் உள்ளுணர்வு வருங்காலத்தின் நடைமுறைகள்

உணர்ந்து பார்..

உன்னையே நீ அறிவாய்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...