தாத்தாவும் பேத்தியும்

அப்பாவுக்கும்

தாத்தாவுக்கும்

வார்த்தை விளையாட்டில்

வீணானது காலை நேரம்

அம்மாவும் ஆச்சியும்

சமையலறையில்

அடுத்த வாரம்  போக

வேண்டிய கல்யாணவீட்டிற்கு 

கூட்டணி அமைத்து

ஆலோசனையில் 

ஆரவாரித்தனர் 

"அம்மா பசிக்கது" என்ற

மகளின் கையில்

பத்து ரூபாய் பிஸ்கட்

திணித்து விட்டாள்

போடீ போய் சிந்தாம சாப்பிடு 

தனது தங்கச்சியை காட்டிலும்

அதிக நகை அணிந்து போகும்

கனவில் மிதக்கிறாள் ---.தனது

பசியை நினைத்து

விழியோர கண்ணீருடன்

சாய்வு நாற்காலியில்

தள்ளாடியபடி தாத்தா அருகில்

வந்த குட்டி தேவதை தான்

கடித்து தின்ற எச்சில்

பிஸ்கட்டை அவரின்

வாயில் திணித்தே கேலியில்

சிரித்தாள் நீயும் நானும்

ஓண்ணும் நமக்கு இன்னிக்கு

கிடைச்சது பிஸ்கட்  பதிலுக்கு

அவளின் கன்னத்தில் அன்புடன் 

எச்சிலை தூவிட்டார் தாத்தா..

ஏமாந்தவனா..ஏமாற்றியவனா... யார் புத்திசாலி..

 


ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு விதமாக ஏதோவொரு விஷயத்தில் அதீதமான நம்பிக்கையில் மனிதர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏமாந்த பிறகே உணர்கின்றனர்... அவர்கள் நமக்காக நாம் எதிர்பார்த்த விஷயத்தை செய்வார்கள் என நம்பியது தவறே.கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்... உன்னை ஏமாற்றியவர்களும் என்றாவது ஓர் நாள் இன்னொரு விஷயத்தில் ஏமாந்து போகும் போது உணர்வார்கள்.குழந்தைகள் அதிகமாகவே ஏமாறும்.ஆனால் அதன் நம்பிக்கை குறைவதில்லை..நம்மை போல் யாராவது இருப்பாங்க என்ற தேடலை வாழ்வில் தொடங்கும்.ஆனால்  ஏமாற்றியவரோ..நம்மள மாதிரி தானே எல்லாவனும் என்று பயந்து பயந்தே வாழ்வான்..

தங்கமா..தகரமா..

கடவுளே....என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க என்றே கவலைபடாதே நண்பா.. 

இந்த உலகம் எப்போதுமே தங்கத்தை மட்டுமே தான் வாங்கும் போதும் விற்கும் போதும்.. அடமானம் வைக்கும் போது உரசிப் பார்க்கும்.

தகரக்தை யாரும் நல்ல தகரமா என்று உரசிப் பார்க்கவே மாட்டார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தகரத்தை உரசினால் அது உரசிப் பார்ப்பவரின் கைகளையும் பதம் பார்த்து விடும்.

ஆனால் அதன் பயன்பாடு மிகவும் சொற்பமான நாட்களே. தங்கத்தின் மதிப்போ நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

பொறுமையாக இருந்தால்


நீயும் கூட தங்கம் தான் என்பதை உலகம் புரிந்து கொள்ளும் 

எது உலகம்.

 


உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

நான் கருப்பா சிவப்பாக குள்ளமான நெட்டையா ஊனமா நல்லவனா குற்றவாளியா தேசபக்தனா தீவிரவாதியா ஏழையா பணக்காரனா அன்பானவனா அனபற்றவனா.

சாந்தமானவனா கோபக்காரனா என்று எதுவுமே தெரியாமல்

அன்பும் ஆசையும் மனதில் மறைத்து வைத்து

பத்து மாதம் பட்டினியும் பரிதவிப்பும் கலந்தே வயிற்றில் சுமந்தவள்.

பல லட்சக்களை சம்பாதிக்கும் என் வயது நண்பர்களில் இருந்து மாறுபட்டு.. ..ஏன்னா என்னை படைத்தவள் தான் எனக்கு பிரம்மா கடவுள் எல்லாமே..

அம்மா-வ  பாரத்துக்கோடா என்று நோயுற்ற போதும் தனக்கு பிறகு அவளை நல்லபடியா தன்னை மாதிரியே பாரத்துகிடணும் என்ற நினைப்பில் பேசிய வாரத்தைகளில் உஷ்ணம் வைத்து உள்ளத்தில் மலரை விட மெல்லிய காதலை தாங்கி வாழந்த கோபக்கார அப்பா..

எது பேசினாலும் எதிர்த்து பேசினேன்..இன்றோ அவரைப் போலவே வாழ்கிறேன்..அப்பனையும் அதிகமாக நேசித்த காரணமாகவே இன்றும் கூட ...நீ எதுக்கு அடிக்கடி என் மேல கோபமா பேசுறே என்றே கேள்விகளால் அவளை குடைந்து எடுக்கிறேன்.

அவளுக்கு எப்படி புரியவைப்பேன் 15 வருஷமா நோயுடன் போராடிய தகப்பனை கண்ணும் கருத்துமா பார்த்தகிட்டவளை..சில வருஷமா தானே பார்த்துக்கிறேன்.அதுவும் அவளின் தேவையை என்னவென்று தெரியாமல் எனக்கு தெரிஞ்சதை செய்கிறேன்....

..அவளுக்கு எப்படி புரியவைப்பேன்..

இந்த உலகத்துல டைர்வர்ஸ் வாங்க முடியாத ஓரே உறவுமுறை அம்மாவும் அப்பாவும்..உடன் பிறந்தவங்களோ மாமன் மச்சானோ பிடிக்கலை என்றால் பேசாம விலகிப்போயிடலாம்.மனசும் அவங்களை தேடாது..ஆனா அம்மா அப்பா எதிர்பார்ப்பே இல்லாம வாழந்த வாழுற ஜீவன்.அவங்களை விட பெரிய சாமி உலகத்துல ஏதவுமே இல்லை...

உன்னோட அன்பே போதும் உன்னை விட இந்த உலகத்துல எதுவும் சொந்தமில்ல.

ஏன்னா அம்மாவின் வலியை யாராலும் புரிஞ்சுக்க முடியாது..நானே இன்னும் புரிஞ்சுக்கலையே....

பணமுடையா.. பணமூட்டையா

பொண்டாட்டின்னா சொன்ன படியே கேட்க மாட்டான்னு பெரியவங்க சொன்னது சரியா போச்சு.

ஆமா நீ அப்படி என்னதான் சொன்னே உன் பொண்டாட்டி கேட்க மாட்டேன்ங்குற..

அது ஓண்ணுமில்லா.. எனக்கு வியாபாரத்துல கொஞ்சம் கடனாகி பணமுடை ஆயிடுச்சு.உங்க அப்பன் தான் பணமூட்டை கட்டி வைச்சிருக்கானே அதிலே இருந்து இரண்டு மூட்டை வாங்கிட்டுவான்னு சொன்னேன்

😳😳😳😳அதுக்கு அவ என்ன செஞ்சா....

அதை ஏன் கேக்குறீங்க.. அவங்க அப்பன் காலையிலேயே வந்து மாப்பிள்ளை நீங்க ஆசையா கேட்ட  இரண்டு கோழி முட்டைன்னு எரிச்சலை கிளம்பிட்டு போறாரூ..

இவ என்னடான்னா..அப்பா இவருக்கு எதுக்கு இரண்டு முட்டை ஓரு கூமுட்டை கொடுத்ததே அதிகம்ன்னு தெருவில் நின்னு கத்துறா மச்சான்..

அவன மனதுக்குள் நல்ல குடும்பன்டா சாமி என்று நினைத்த படி வீட்டுக்கு கிளம்பினான் 

அரசியல் ஓர் குருஷேத்திரம்

பல நேரங்களில் தலைவர் பதவிக்கே ஆசைபடாத தொண்டனாக வாழந்தவனை பதவியில் அமர வைத்துஅவரின் கண்ணீர் கதைகளை வெளியே தெரியாத வண்ணம் பதவி பட்டங்களால் பூசி மொழுகி பின்பு அவரையும் ஓர் அச்சாணியில் சுழல வைப்பதே அரசியல்.


அரசியலில் சாதித்தவர்களை விட உடனிருப்பவர்கள் செய்த சோதனைகளால் சோகத்தை மனதில் மறைத்த படி தாங்கியே அரசியலில் இருந்து விடுபட்டு அமைதியை தேடி சென்றவர்கள் தான் ஏராளம்.


அரசியல் அனைவருக்கும் வசப்படாதுஅரசியலில் பதவி பெற்று தரணியாள நினைப்பவர்கள் முதலில்,மக்களின் வலிகளை உணர்ந்தவராக இருக்க வேண்டும்

 

கட்சியையும் பதவியையும் காப்பாற்ற முடியும் என்பவரை தான் தலைமைப் பதவியில் அமர வைக்க வேண்டும்.

 

தேர்தலுக்கு முன்பு உங்களை மக்களின் மீட்பராகக் காட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அரசியலில் சரியான நடவடிக்கைகளை எடுக்க அனைத்துக் கட்சிகளின் மற்றும் கட்சித் தலைவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் தனக்குத் தேவை என்று நீங்கள் நடந்துகொண்டால், நாங்கள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்?

 

நீங்கள் சென்று மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களையும் திருப்திப்படுத்த முயல்கிறீர்கள் என்றால், உங்களுக்கு வாக்களித்த மக்களை நீங்கள் முட்டாள்களாகவும் அறிவிலிகளாகவும் கருதுகிறீர்களா? அரசியலிலிருந்து பழைய கட்சிகளை அகற்றுவேன் என்று கூறித்தானே நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்; அதைச் செயலில் காட்டுங்கள்.

 

நீங்கள் சென்று அவர்களைத் திருப்திப்படுத்த முயல்கிறீர்கள் என்றால், உங்கள் எதிர்கால அரசியலை நீங்கள் மறந்துவிட வேண்டியதுதான். இன்று அரசாங்கத்தை அமைப்பதற்காக நீங்கள் அவர்களின் ஆதரவையும் வழிகாட்டுதலையும் கோரலாம்; ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இது அரசியல் களம். ஒவ்வொரு கட்சியிலும் உள்ள ஒவ்வொருவருக்கும், தலைமைப் பதவியில் தனித்து அமர வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வெளிப்படையாக அவர் உங்களைத் தலைவராக ஏற்றுப் பேசலாம்; ஆனால் அவரது ஆழ்மனதில், தலைவராக வேண்டும் என்ற தீ எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். இயேசு, புத்தர் அல்லது முருகப்பெருமான் (அசுரனிடம் "இன்று சென்று நாளை போருக்கு வா" என்று கூறியவர்) ஆகியோரைப் போல, அனைவரிடமும் பணிவாக நடந்துகொள்ளவும் அனைவரையும் மன்னிக்கவும் கூடிய ஆன்மீகப் பாதையில் அவர் பயணிக்கவில்லை.

 

நீங்கள் தலைவர்களின் தயவைப் பெற முயல்கிறீர்கள் என்றால், வாக்காளர்களைப் பற்றி மறந்துவிடுங்கள். அடுத்த முறை அவர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில், உங்கள் அனைவரையும் விட வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள்தனது இஷ்டத்துக்கு சிறுபிள்ளை தனமாகவும்

கார்ப்பரேட் போலவும் கட்சியை நடத்தினால் தொண்டர்கள் விலகிப் போய் விடுவார்கள்.

 

தலைவர்களால் தொண்டர்கள் தேர்ந்தெடுக்க படவில்லை.

தொண்டர்களால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.

அப்படி உருவான தலைவர்களும் கடைசி வரை தனது தொண்டர்களுக்காக வாழ்ந்தால் மாத்திரமேதொண்டர்கள் தொடர்ந்து பின்வருவார்கள்

 

சுயநலமென்ற அசுரன் தலைவனின் மனதில் புகுந்து விட்டால் கட்சியும் ஆட்சி கட்டிலும் எட்டாத கனவாகவே மாறிப்போகும்.

இது உலக வரலாற்றின் உன்னதமான பாடம்.

 

தனக்கு முன்னால் இருந்து சாதித்தவர்களை பற்றி படிப்பது மிகவும் நல்லது.



அதைவிட முக்கியம் அவர் பட்ட கஷ்டமும் அவமானமும் பதவியை தக்க வைக்க அவர் செய்த சாதனைகளும் , தாண்டி வந்த சோதனைகளும் புரிவது முக்கியம்.

படித்தும் புரியவில்லை என்றால் பேரரசரின் கடைகண் அசைவில் குறுநில மன்னராக கூட அல்ல.அரசியலில் இருந்து துடைத்து ஏறிந்து விடுவார்கள்

தற்போதைய சூழலுக்கு ஏற்ப தகவமைத்து செல்ல வேண்டிய கட்டாயம்.



இங்கே அரசியலில் பணத்தை சம்பாதித்தை விட அரசியலில் தாக்கு பிடிக்க வேண்டிதன்மானத்தை காக்கவும் சொத்துக்களை பாதுகாக்கவும் அரசியலில் நுழைபவர்களை பக்கத்தில் வைத்தால் அது மிகவும் ஆபத்தான விஷயம்

நாளைக்கு ஓர் வேளை பதவியும் கட்சியும் கரைந்தால் உடனிருக்கும் தலையாட்டி பொம்மைகள் வேறு இடத்திற்கு சென்று விடுவர்.



அப்படிபட்டவர்களுக்கு அரசியல் கூட ஓர் வியாபார கணக்கு தான்.ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது.

அரசியலில் வியாபாரம் செய்தால் நாளை அந்த அரசியலில் நீங்களும் ஓர் வியாபார பொருளாக மாறிவிட நேரலாம்.



தனக்காக வாழாமல் முகம் தெரியாத எத்தனையோ பேருக்காக வாழ்வது தான் அரசியல்.



குடும்பத்தை பாதூகாக்க வேண்டும்குடும்ப சொத்தை பாதுகாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்களும் வருபவர்களும் ஓர் குறிப்பிட்ட எல்லையை தாட்ட முடியாமல் சிக்கி திணறுகின்றனர்



அரசியலில் ஈடுபட பணமோபடைபலமோரசிகர் பட்டாளமோ தேவையில்லை நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

ஆனால் பிறருக்காக நீங்கள் வாழ்வது இயல்பானதாக உங்களின் வாழ்வியலாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அரசியல் என்னும் அச்சு ஆளையே விழுங்கி விடும்.



இங்கே வெற்றி பெற்ற இலக்கியவாதிகளாக வலம் வரும் பலர்தங்களின் ஆரம்ப காலத்தில் அரசியல் ஆசையில் நிம்மதி இழந்து தவித்த பின்னரே புரிந்து கொண்டனர்



அரசியல் நமது களமல்லஅது பூப்பாதையல்ல பூபாளம் வாசிக்கஅது அசந்தால் நீங்கள் சேர்த்து வைத்த பணம் பொருளை மட்டுமல்லாமல் உங்களின் நற்பெயரை கூட புகுந்து விளையாடி விடும்.



எதற்கும தயார் எது வந்தாலும் தாங்கிக் கொள்வேன் என்பவரை தான் அரசியல் விரும்புறது.

ஓர் வேளை அப்படி எந்த விதமான அடிப்படை தகுதி இல்லாதவரை கூட காலம் புடம் போட்டு ஆட்சியில் கட்டிலில் ஏற்றிவைத்து அழகு பார்க்கும்.



பெற்றவரும் முப்பாட்டனும் வந்த வழியில் வந்து ஆட்சி கட்டிலில் அமர வைக்க இது ஒன்றும் வாரிசுரிமை பதவியல்ல.



உங்களுக்கு ஆசையிருந்தால்சென்ற மாதம் பிறந்த கைக்குழந்தையை கூட அரசியல் மேடையில் அமர வைத்து அழகு பார்க்கலாம்.ஆனால் காலம் அந்த குழந்தையை கூட ஆட்சியாளராக மாற்றும் முன்னர் நீங்கள் சந்தித்த சவால்களை விட பெரிய சவால்களை சமாளிக்க வேண்டியது இருக்கும்.



ஜனநாயக முறையில் தான் பிறந்து

நாட்டில் யாரும் எங்கும் வேண்டுமானாலும் போட்டி இடலாம்.



அரசியலில் என்றுமே வெல்பவர்களை சுற்றித்தான் கூட்டம் இருக்கும்.



தோல்வியை சந்திப்பவரை நோக்கி யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

இந்த யதார்த்தமான உண்மையை புரிந்த அரசியல்வாதி.

ஓவ்வொரு நாளும் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள படும் பாடு 

நீங்கள் வெல்லும் பாடு அவனின் மனசாட்சிக்கு மாத்திரமே தெரிந்த சிதம்பர ரகசியம்



தோற்றவர்கள் வெல்வதும் வென்றவர்கள் தோற்பதும் அரசியலில் இயல்பான விஷயமேஆனால் தோல்வியில் இருந்த போது கற்ற பாடங்களைசரியாக பயன்படுத்த தெரியாவிடில் அரசியல் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குறி.



பதவியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும் அல்லது காப்பாற்றுவார்கள் யார் காலை வாருபவர் யார் என்பதையாவது குறைந்த பட்சம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.



தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும்எனது குடும்ப உறுப்பினர் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டுமென நினைத்தால் சுற்றி இருப்பவர்களே உங்களை சுற்றிவிட்டு விடுவர்.




உங்களின் கட்சி கலைந்து போனால் பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.



அல்லது அரசியலே வேண்டாமென்று இலக்கியத்தை மட்டும் கையில் எடுத்து செயல்படுங்கள்.



அரசியலில் எதிர்கள் அதிகம்ஆனால் இலக்கிய துறையில் நண்பர்களே அதிகம்.

அவர்களின் வார்த்தையில் கேலியும் நய்யாண்டியும் தான் இருக்கும்.ஆயினும் கடைசி காலம் வரை நிம்மதிக்கான வாழ்வு உத்தரவாதம்.

ஆனால் அரசியலில் யார் எப்போது காலை வாரி விட்டு விட்டு உங்களின் பதவியை பிடிப்பான் என்பதை அறியும் போது அந்த பதவியை விட்டு விலகி நீங்க தூரமாக போய் இருப்பீர்கள்.

நிம்மதியா வாழ்வு தருவதல்ல அரசியலில்.அந்த சதுரங்கத்தில் ஆட்டம் ஆட தொடங்கினால் உங்கள் அடுத்த வேளை உணவை கூட நீங்கள் விரும்பிய நேரத்தில் சாப்பிட இயலாது.

பெயரும் புகழும் வேண்டுமென்றால் கிடைக்கலாம்.




கிருஷ்ணனை போன்ற தன்னலமற்ற ஓருனால் தான் ஆர்ஜீனனை வெல்ல வைக்க இயலும்படைப்பதும காப்பதும் அழிப்பதும் பரந்தாமன் கிருஷ்ணனின் செயலே.



கிருஷ்ணனை சொன்னதை எல்லாம் கேட்க முடியாது என்றால் பரவாயில்லை அவனை சரணைந்து விடுங்கள்உலகத்தையே காக்கும் மாயவன் கண்ணன் உங்களையும் காப்பான் 



அரசியல் என்பது பூபாளமல்ல,அது ஓர் பூகோள சரித்திரம் 



அரசியல் என்பது ஓர் மாபெரும் விளையாட்டு


ஏதோ சின்னஞ்சிறு சிறுவன் கோலி விளையாடுவது போலவும்.. வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்தாச்சு இதிலும் கொஞ்சம் இறங்கித் தான் பார்ப்போமே என்பதல்ல அரசியல்.

  

முடிவு செய்யுங்கள் சரனாகதியா சண்டையா...

அரசியல் ஒன்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.. அரசியல் ஓர் குருஷேத்திரம்.

 

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...