அரசியல் ஓர் குருஷேத்திரம்

 


அரசியல் என்பது ஓர் மாபெரும் விளையாட்டு. 


ஏதோ சின்னஞ்சிறு சிறுவன் கோலி விளையாடுவது போலவும்.. வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்தாச்சு இதிலும் கொஞ்சம் இறங்கித் தான் பார்ப்போமே என்பதல்ல அரசியல்.


அரசியலில் சாதித்தவர்களை விட உடனிருப்பவர்கள் செய்த சோதனைகளால் சோகத்தை மனதில் மறைத்த படி தாங்கியே அரசியலில் இருந்து விடுபட்டு அமைதியை தேடி சென்றவர்கள் தான் ஏராளம்.


அரசியல் அனைவருக்கும் வசப்படாது.

பல நேரங்களில் தலைவர் பதவிக்கே ஆசைபடாத தொண்டனாக வாழந்தவனை பதவியில் அமர வைத்து, அவரின் கண்ணீர் கதைகளை வெளியே தெரியாத வண்ணம் பதவி பட்டங்களால் பூசி மொழுகி பின்பு அவரையும் ஓர் அச்சாணியில் சுழல வைப்பதே அரசியல்.

அரசியலில் பதவி பெற்று தரணியாள நினைப்பவர்கள் முதலில்,மக்களின் வலிகளை உணர்ந்தவராக இருக்க வேண்டும்


கட்சியையும் பதவியையும் காப்பாற்ற முடியும் என்பவரை தான் தலைமைப் பதவியில் அமர வைக்க வேண்டும்.

தனது இஷ்டத்துக்கு சிறுபிள்ளை தனமாகவும்

கார்ப்பரேட் போலவும் கட்சியை நடத்தினால் தொண்டர்கள் விலகிப் போய் விடுவார்கள்.


தலைவர்களால் தொண்டர்கள் தேர்ந்தெடுக்க படவில்லை.

தொண்டர்களால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.

அப்படி உருவான தலைவர்களும் கடைசி வரை தனது தொண்டர்களுக்காக வாழ்ந்தால் மாத்திரமே, தொண்டர்கள் தொடர்ந்து பின்வருவார்கள்


சுயநலமென்ற அசுரன் தலைவனின் மனதில் புகுந்து விட்டால் கட்சியும் ஆட்சி கட்டிலும் எட்டாத கனவாகவே மாறிப்போகும்.

இது உலக வரலாற்றின் உன்னதமான பாடம்.


தனக்கு முன்னால் இருந்து சாதித்தவர்களை பற்றி படிப்பது மிகவும் நல்லது.


அதைவிட முக்கியம் அவர் பட்ட கஷ்டமும் அவமானமும் பதவியை தக்க வைக்க அவர் செய்த சாதனைகளும் ன, தாண்டி வந்த சோதனைகளும் புரிவது முக்கியம்.

படித்தும் புரியவில்லை என்றால் பேரரசரின் கடைகண் அசைவில் குறுநில மன்னராக கூட அல்ல.அரசியலில் இருந்து துடைத்து ஏறிந்து விடுவார்கள்

தற்போதைய சூழலுக்கு ஏற்ப தகவமைத்து செல்ல வேண்டிய கட்டாயம்.


இங்கே அரசியலில் பணத்தை சம்பாதித்தை விட அரசியலில் தாக்கு பிடிக்க வேண்டி, தன்மானத்தை காக்கவும் சொத்துக்களை பாதுகாக்கவும் அரசியலில் நுழைபவர்களை பக்கத்தில் வைத்தால் அது மிகவும் ஆபத்தான விஷயம்

நாளைக்கு ஓர் வேளை பதவியும் கட்சியும் கரைந்தால் உடனிருக்கும் தலையாட்டி பொம்மைகள் வேறு இடத்திற்கு சென்று விடுவர்.


அப்படிபட்டவர்களுக்கு அரசியல் கூட ஓர் வியாபார கணக்கு தான்.ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது.

அரசியலில் வியாபாரம் செய்தால் நாளை அந்த அரசியலில் நீங்களும் ஓர் வியாபார பொருளாக மாறிவிட நேரலாம்.


தனக்காக வாழாமல் முகம் தெரியாத எத்தனையோ பேருக்காக வாழ்வது தான் அரசியல்.


குடும்பத்தை பாதூகாக்க வேண்டும், குடும்ப சொத்தை பாதுகாக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர்களும் வருபவய்களும் ஓர் குறிப்பிட்ட எல்லையை தாட்ட முடியாமல் சிக்கி திணறுகின்றனர்


அரசியலில் ஈடுபட பணமோ, படைபலமோ, ரசிகர் பட்டாளமோ தேவையில்லை நீங்கள் நீங்களாக இருந்தாலே போதும்.

ஆனால் பிறருக்காக நீங்கள் வாழ்வது இயல்பானதாக உங்களின் வாழ்வியலாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அரசியல் என்னும் அச்சு ஆளையே விழுங்கி விடும்.


இங்கே வெற்றி பெற்ற இலக்கியவாதிகளாக வலம் வரும் பலர், தங்களின் ஆரம்ப காலத்தில் அரசியல் ஆசையில் நிம்மதி இழந்து தவித்த பின்னரே புரிந்து கொண்டனர்


அரசியல் நமது களமல்ல, அது பூப்பாதையல்ல பூபாளம் வாசிக்க, அது அசந்தால் நீங்கள் சேர்த்து வைத்த பணம் பொருளை மட்டுமல்லாமல் உங்களின் நற்பெயரை கூட புகுந்து விளையாடி விடும்.


எதற்கும தயார் எது வந்தாலும் தாங்கிக் கொள்வேன் என்பவரை தான் அரசியல் விரும்புறது.

ஓர் வேளை அப்படி எந்த விதமான அடிப்படை தகுதி இல்லாதவரை கூட காலம் புடம் போட்டு ஆட்சியில் கட்டிலில் ஏற்றிவைத்து அழகு பார்க்கும்.


பெற்றவரும் முப்பாட்டனும் வந்த வழியில் வந்து ஆட்சி கட்டிலில் அமர வைக்க இது ஒன்றும் வாரிசுரிமை பதவியல்ல.


உங்களுக்கு ஆசையிருந்தால், சென்ற மாதம் பிறந்த கைக்குழந்தையை கூட அரசியல் மேடையில் அமர வைத்து அழகு பார்க்கலாம்.ஆனால் காலம் அந்த குழந்தையை கூட ஆட்சியாளராக மாற்றும் முன்னர் நீங்கள் சந்தித்த சவால்களை விட பெரிய சவால்களை சமாளிக்க வேண்டியது இருக்கும்.


ஜனநாயக முறையில் தான் பிறந்து

நாட்டில் யாரும் எங்கும் வேண்டுமானாலும் போட்டி இடலாம்.


அரசியலில் என்றுமே வெல்பவர்களை சுற்றித்தான் கூட்டம் இருக்கும்.


தோல்வியை சந்திப்பவரை நோக்கி யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

இந்த யதார்த்தமான உண்மையை புரிந்த அரசியல்வாதி.

ஓவ்வொரு நாளும் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள படும் பாடு 

நீங்கள் வெல்லும் பாடு அவனின் மனசாட்சிக்கு மாத்திரமே தெரிந்த சிதம்பர ரகசியம்


தோற்றவர்கள் வெல்வதும் வென்றவர்கள் தோற்பதும் அரசியலில் இயல்பான விஷயமே. ஆனால் தோல்வியில் இருந்த போது கற்ற பாடங்களை, சரியாக பயன்படுத்த தெரியாவிடில் அரசியல் எதிர்காலம் மாபெரும் கேள்விக்குறி.


பதவியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும் அல்லது காப்பாற்றுவார்கள் யார் காலை வாருபவர் யார் என்பதையாவது குறைந்த பட்சம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.


தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும், எனது குடும்ப உறுப்பினர் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டுமென நினைத்தால் சுற்றி இருப்பவர்களே உங்களை சுற்றிவிட்டு விடுவர்.



உங்களின் கட்சி கலைந்து போனால் பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.


அல்லது அரசியலே வேண்டாமென்று இலக்கியத்தை மட்டும் கையில் எடுத்து செயல்படுங்கள்.


அரசியலில் எதிர்கள் அதிகம், ஆனால் இலக்கிய துறையில் நண்பர்களே அதிகம்.

அவர்களின் வார்த்தையில் கேலியும் நய்யாண்டியும் தான் இருக்கும்.ஆயினும் கடைசி காலம் வரை நிம்மதிக்கான வாழ்வு உத்தரவாதம்.

ஆனால் அரசியலில் யார் எப்போது காலை வாரி விட்டு விட்டு உங்களின் பதவியை பிடிப்பான் என்பதை அறியும் போது அந்த பதவியை விட்டு விலகி நீங்க தூரமாக போய் இருப்பீர்கள்.

நிம்மதியா வாழ்வு தருவதல்ல அரசியலில்.அந்த சதுரங்கத்தில் ஆட்டம் ஆட தொடங்கினால் உங்கள் அடுத்த வேளை உணவை கூட நீங்கள் விரும்பிய நேரத்தில் சாப்பிட இயலாது.

பெயரும் புகழும் வேண்டுமென்றால் கிடைக்கலாம்.



கிருஷ்ணனை போன்ற தன்னலமற்ற ஓருனால் தான் ஆர்ஜீனனை வெல்ல வைக்க இயலும். படைப்பதும காப்பதும் அழிப்பதும் பரந்தாமன் கிருஷ்ணனின் செயலே.


கிருஷ்ணனை சொன்னதை எல்லாம் கேட்க முடியாது என்றால் பரவாயில்லை அவனை சரணைந்து விடுங்கள். உலகத்தையே காக்கும் மாயவன் கண்ணன் உங்களையும் காப்பான் 


அரசியல் என்பது பூபாளமல்ல,அது ஓர் பூகோள சரித்திரம் 


முடிவு செய்யுங்கள் சரனாகதியா சண்டையா...

அரசியல் ஒன்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.. அரசியல் ஓர் குருஷேத்திரம்.


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...