பணமுடையா.. பணமூட்டையா

பொண்டாட்டின்னா சொன்ன படியே கேட்க மாட்டான்னு பெரியவங்க சொன்னது சரியா போச்சு.

ஆமா நீ அப்படி என்னதான் சொன்னே உன் பொண்டாட்டி கேட்க மாட்டேன்ங்குற..

அது ஓண்ணுமில்லா.. எனக்கு வியாபாரத்துல கொஞ்சம் கடனாகி பணமுடை ஆயிடுச்சு.உங்க அப்பன் தான் பணமூட்டை கட்டி வைச்சிருக்கானே அதிலே இருந்து இரண்டு மூட்டை வாங்கிட்டுவான்னு சொன்னேன்

😳😳😳😳அதுக்கு அவ என்ன செஞ்சா....

அதை ஏன் கேக்குறீங்க.. அவங்க அப்பன் காலையிலேயே வந்து மாப்பிள்ளை நீங்க ஆசையா கேட்ட  இரண்டு கோழி முட்டைன்னு எரிச்சலை கிளம்பிட்டு போறாரூ..

இவ என்னடான்னா..அப்பா இவருக்கு எதுக்கு இரண்டு முட்டை ஓரு கூமுட்டை கொடுத்ததே அதிகம்ன்னு தெருவில் நின்னு கத்துறா மச்சான்..

அவன மனதுக்குள் நல்ல குடும்பன்டா சாமி என்று நினைத்த படி வீட்டுக்கு கிளம்பினான் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...