எது சொர்க்கம்..

 ஹீரோ வில்லன் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்

வில்லன் ஹீரோவ முன்னோற விடாம தடுத்து கிட்டே தான் இருப்பான்.

ஹீரோவும் பொறுமையா தான் இருப்பான் மீண்டும் மீண்டும் அவனை வளர விடாமல் செய்யும் வில்லனை வேற வழியே இல்லை என்று ஓர் சிறு அடி அடித்தவுடன் அந்த வில்லன் கதையே முடிச்சு போயிடும்..

நீங்க கேட்கலாம் இவ்வளவு டம்மி பீஸ் வில்லனை எதுக்கு ஹீரோ பொறுத்து பொறுத்து போனார் என்று.

ஏன்னா ஹீரோ யாரையும் தண்டிக்கவோ மாத்தவோ விருப்பவலை..சில நேரங்களில் கடவுள் ஹீரோ சில நேரங்களில் மனிதன் ஹீரோ..அவன் பாட்டுக்கு வாழ்ந்துகிட்டு இருக்கான்..நம்ம வில்லன் அவனை எப்படி விடாமல் என்று வலிய சென்று வம்பிழுப்பார் அப்போ தான் கிளைமாக்ஸ் வரும்.. வில்லன் சொத்து பத்து வாகனம் வசதி எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு போயிடுவாரூ.. 

அவனுக்கு நல்ல வேணும் என்னா ஆட்டம் போட்டான் என்று சிலர் சொல்லுவாங்க.

அப்படி சொல்லுறவங்க எல்லோருமே வில்லன் கூடவே இருந்து, ஹீரோ அப்படி அடிங்க..இப்படி அடிங்க என்று உசுப்பேத்தி விட்ட.அதே வில்லனின் அடி பொடிகள் தான்.


என்ன கொஞ்சம் குழப்பமாக இருக்குதா.. வில்லனை கீழே தள்ளிய ஹீரோவை விட. வில்லனின் பழைய கூட்டாளிகள் ஏன் சந்தோஷபடுறாங்க என்று தானே உங்களுக்கு சந்தேகம்.

அது ஓண்ணு பெரிய விஷயமில்லை.வில்லன் ஹீரோவை அடிக்கும் போது எல்லாம், அவர் கொடுத்த காசுக்காக தான் ஜால்ரா தட்டினாங்க.ஓர் கட்டத்தில் வில்லனின் கூட்டாளிகளுக்கு, வில்லனுக்கு ஆகும் செலவைக் விட ரொம்பவே அதிகமாகவே செலவு செய்ய வேண்டிய கட்டாயம்.

அதன் காரணமாக வில்லன்கிட்ட விலைவாசி ஏறிப்போச்சு. அதனால் எங்களுக்கு இன்னும் நிறைய பணம் தேவை என்ற போது. நீங்க வெட்டி முறிக்கிற வேலை எதுவுமே கிடையாது.

சும்மா எனக்கு ஜால்ரா போடுறதுக்கு நான் இப்போ கொடுக்கிற காசே அதிகம்..என்று மிகவும் மனசு நோகும் படி பேசி அவங்களை இவ்வளவு நாளா சோம்பேறியாக வாழ வைத்த வில்லன் சொன்னவுடன் தங்களின் தவறை உணர்ந்து திருந்தினர்


பிறகு எல்லா மக்களுடன் சேர்ந்து ஹீரோவ நீங்க அப்படி இப்படி என்று வானளாவ புகழுவாங்க ..அப்போது அவன் என்னை இப்படி வாழ விடுங்க மக்களோட மக்காளாவே வாழுறேன்னு சொல்லிட்டு அவன் வழியில் போயிடுவான்.


ஆனால் அதுவரையில் வில்லனின் அடிபொடிகளில் ஓருவனாக இருந்தவன்,‌திரும்பவும் இன்னொரு வில்லனாக மாறுவான்.


இந்த கால சக்கரம் தொடரந்து கொண்டே தான் இருக்கும்.

இதில் ஹீரோ என்பது பொருளாதார சுதந்திரம்/ .மனிதனின் பேராசை என்ற பேங்க் கடன் தான் வில்லன்.


ஆசைகளை குறைத்து கடன் வாங்காமல் வாழுங்க என்று தான் எல்லா மத நூல்களும் சொல்கின்றனர்.

ஆயினும் மனிதனின் பேராசை தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கி கஷ்டப்பட வைக்கிறது.


நன்றாக யோசித்து பாருங்கள்

வரவை மீறி செலவு வந்து, அதை போக்க கடன் வாங்கினா. அந்த கடனை எப்படி அடைக்க முடியும்.

அத்தியாவசிய அவசரகால தேவைக்கு கடன் வாங்குவது தவறே அல்ல.

ஏன்னா நாம எல்லோருமே மனிதர்கள் தான் நம்மை மீறி ஏதோவொரு வகையில் எதிர்பாராத செலவு வரத்தான் செய்யும்.

.உங்களின் வரவுக்குள் செலவு அமைத்தால் அது தான் சொர்க்கம் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...