கள்ளமில்லாத அன்புக் குழந்த.

வெட்கமின்றி தைரியமாக எனக்கு உன்னை தேடுது என்று சொன்ன போது நீ எங்க வீட்டுக்கே வந்திடுவேன் என்று சொன்ன குழத்தையை கேலி பேசி .சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் கல்யாண வீட்டில்....இன்றோ  அதே குழந்தை வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறான்.. எனக்கு உங்க கூட எல்லாம் பேச நேரமில்லை.. ஏன் பேசு பேசுன்னு சொல்லி உசுரை எடுக்குறீங்க...

அன்று சிரித்தவர்கள் தேடுகின்றனர் அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அடிக்கடி மனம் நினைத்து பார்க்கிறது கள்ளமில்லாத குழந்தையாக இருந்தவன் இன்று எப்படி மாறிவிட்டான்.. அல்ல நாம் தான் அந்த குழத்தையை அப்படி மாற்றி விட்டோம்..

அன்று கள்ளமில்லாமல் பேசிய குழந்தையை உதாசீனம் செய்தவர்..இன்றோ ஜன்னலோரத்தில் நின்று கொண்டு வீதியில் செல்லும் தாத்தா பேத்தி..பாட்டி பேரன்.கணவன் மனைவி... உனக்கென்ன தெரியும் நான் சொல்லுறதை கேளூ என்று உடனிருப்பவருக்கு அறிவுரை கூறி சாலையில் செல்லும் சிறு குழந்தைகள்..

இந்த உலகில் பணத்தை தேடி ஓடி ஆடி ஓயந்த பின்னரே தேடுகிறோம் உண்மை அன்பை.....அன்பாக இருந்த கள்ளமில்லாத நபர்களை உதாசீனம் செய்த அனைவருமே தேடுகின்றனர்..அதே கள்ளமில்லாத அன்பை சுற்றி இருக்கும் அனைவரிடமும்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...