அரசு அதிகாரிகளின் வலிகள்

நல்ல பெயர் கிடைத்தால் அதற்கு முழு முதற்காரணம் நானே எனது ஆட்சி செய்யும் திறமையே என்று மார்தட்டிக் கொள்வதும்.

எங்காவது ஓர் பிரச்சினை என்றால், நாங்கள் பல முறை எச்சரிக்கை செய்த பிறகும் அரசு அதிகாரிகள் எங்களின் பேச்சை கேட்கவே இல்லை என்று வீண் பழியை அவர்களின் மீது போடுவதும்.

இன்றைய காலகட்டத்தில் சில சுயநல மனிதர்கள் பேசும் பேச்சுக்கள்.

அரசு அதிகாரிகளின் அதிகாரமும் அதை செயல்படுத்தும் விதமும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இங்கே பல நேரங்களில் அரசு அதிகாரிகளின் கைகளை கண்ணுக்கு தெரியாத சில அதிகார பசிமிக்க மனிதர்களால் கட்டி போடப்படுகிறது என்பதே நிதர்சனம்.

அரசு அலுவலகத்தில் இருக்கும் எல்லோருமே கையூட்டு பெறுவதாகவும் அவர்கள் ஏகபோக வாழ்க்கை வாழ்வது போலவும் சித்தரிக்கும் அநாகரிகமான செயலை பலர் திட்டமிட்டே செய்கின்றனர்.


அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் கையூட்டு பெறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது மாபெரும் பிழையாகவே இருக்கும்.

ஏனெனில் அரசு லஞ்சம் ஒழிப்பு துறை என்ற ஓன்றை ஏற்படுத்தியதே.. சிலர் செய்யும் செய்கையால் ஓட்டு மொத்தமாக நிர்வாகத்தின் மீது ஏற்படும் அவப்பெயரை நீக்கவே .. அதனால் தான் மக்களுக்கு அரசின் மீதும் அரசியல் சாசனத்தின் மீதும் இன்னும் அதிகமாகவே நம்பிக்கை உள்ளது 



சென்ற மாதம் வரை எதிர்கட்சிகள் எல்லாமும் சேர்ந்த வாக்கு பதிவு இயந்திரமே போலியானது.தேர்தல் ஆணையம் ஓர் கட்சி சார்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.அதை நாங்கள் நம்பவே மாட்டோம்.. எங்களுக்கு மீண்டும் பழையபடி ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்தவே விருப்பம் என்பது போல் பேசினர்.

ஆட்சியில் இருப்பவர்கள், தங்களின் எல்லா விளங்களை கொடுத்த பிறகும் சிலர் தங்களின் பழைய பல்லவியை பாடினர்.

ஆனால் முற்றிலும் தோற்றுப் போவோம் என்ற பயத்தில் புலம்பிய கட்சிஙள் சில அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டனர். இதன் பிறகாவது வாக்கு பதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் சிறப்பாக செயல்பட்டு உள்ளது.. எங்களின் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும் என்று அந்த கட்சிகளை ஓர் வார்த்தை கூட பேசவில்லை 

மாறாக நாங்கள் வென்று விட்டோம்... எங்களின் வெற்றி என மார்தட்டி பேசுகின்றனர்.

அரசும் அரசு இயந்திரமும் சிறப்பாகவே செயல்படும், சில சுயநலவாதிகள் தங்களின் போலி அதிகாரத்தை காட்டி பண்ணும் பம்மாத்துகளை புறந்தள்ளுங்கள்.

இன்றும் தான் வாங்கும் சில ஆயிரம் சம்பளத்திற்காகவும், தனது மனசாட்சிக்கு பயந்து நடக்கும் நேர்மையான மனிதர்களும் அரசாங்கத்தின் ஊழியராகவே இருக்கின்றனர்.

தயவுசெய்து சுயநலவாதிகள் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு அரசு அதிகாரிகள் என்ன செய்ய முடியும்


புரிந்து கொள்ளுங்கள் நேர்மையான அரசு அதிகாரிகளின் வலிகளையும், ஓவ்வொரு நாளும் அவர்கள் சந்திக்கும் வலியான வாழ்வையும்.


அரசு அதிகாரியின் பணி என்பது சுலபமானது அல்ல.அது முள்ளின் மீது இருக்கும் ஆசனம். 

திறமையான மனிதரை சுதந்திரமாகவும் தைரியமாகவும் செயல்பட அனுமதித்தால் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலக நாடுகளும் உற்று நோக்கும் வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை 

ஜெய்ஹிந்த் 

இந்திய தேசியக்கொடி

வாக்குபதிவு எந்திரத்தை குறை பேசிய வாய்கள், வாயடைத்துப் போய் அமைதியாக மாறிவிட்டது.

ஆம் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை, என்றுமே மாறாதது.

இது தனிமனித வெற்றியல்ல ஒட்டுமொத்த மக்கள் தங்களின் ஜனநாயகத்தை காப்பாற்ற செய்த செயல்.

பட்டொளி வீசி பறக்கட்டும் இந்த பாரதத்தின் மூவர்ண கொடி பாரெல்லாம் சிறக்கும் வண்ணம்.

இந்தியாவின் பெருமையும் வளர்ச்சியும் உலக பொருளாதாரத்தில் தவிர்க்கவே இயலாத மாபெரும் சக்தியாக பாரத தாய் உருவெடுக்கிறாள்.

இனி இந்தியாவே உலகத்தின் அச்சாணியாக செயல்படும் வகையில் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வெளிநாட்டில் போய் வேலை பாரப்பதை பெருமையாக நினைத்த காலெல்லாம் மலையேறிப் போகட்டும்.

உள்ளூரில் வேலை பார்ப்பதும். உள்ளூரில் விளையும் பொருள்களை தன்னிறைவு பெற்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லரசாக இந்தியா மாறட்டும்.

வாழ்க ஜனநாயகம் வாழ்க பாரதம் 

ஜெய்ஹிந்த்

ஜனநாயகத்தின் வெற்றி

 மக்கள் தங்களின் ஓட்டுக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தமையால் வெற்றி சாத்தியமானது 

கன்னியாகுமரியில் மோடி

 


நாளை முதல் கன்னியாகுமரிக்கு வரும் ஓவ்வொரு சுற்றுலா பயணிகளின் பார்வையும் மாறுபட்ட கோணத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.


சென்ற வருடம் வரை ஓவ்வொரு வருடமும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள்.சில நேரங்களில் விவேகானந்தா பாறை சென்று பார்க்காமலே சென்றதுண்டு.


ஆனால் சரித்திரத்தின் ஏடுகளை மாற்றி எழுதுவதில் மாபெரும் தீராத காதல் கொண்ட எண்ணற்ற மனிதரில் ஒருவராக செயல்படும் பலரில் இவரும் ஒருவர்.


அதனால்தான் என்னவோ விவேகானந்தர் தியானம் செய்த இடத்திற்கு போய் தியானம் செய்தார்.


இதுவரை எத்தனையோ நபர்கள் நாட்டை ஆண்டனர்.அவர்கள் தங்களையும் தங்களின் கட்சியையும் கல்லாவையும் எப்படியெல்லாம் வளப்படுத்த முடியும் என்றே செயல்பட்டனர்.


ஆனால் இந்த மனிதரோ தனது செயலால் நாட்டின் கல்லாபெட்டி வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்.


அவருக்கு இறையருள் கிடைத்தா அல்லது அவரின் தியானம் அனுபவம் என்னவென்வதை அவர் சொன்னால் தான் புரியும். ஆனால் அவரோ எதையும் பற்றிய பயமோ விமர்சனங்கள் பற்றிய கவலையோ சிறிதும் இல்லாமல், தனது எண்ணம் இந்த பாறையில் நரேன் இருந்த நிலையில் நானும் இருக்க முயல்கின்றேன். எனது முன்னேற்றத்தை விட நாட்டின் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது அவசியமானது.


உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயரச் செய்த விவேகானந்தர் போன்றே, வருங்கால இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்த வல்லமை தாருங்கள் என வேண்டி இருக்கலாம்.


இனி விவேகானந்தர் பாறையை பார்க்க செல்லும் அனைவரின் மனதிலும் நாமும் இங்கே தியானம் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற சிந்தனையில் சில நொடியாவது அந்த தியான மண்டபத்தில் அமர்வார் என்பது திண்ணம்.


அப்படி அமரும் ஓவ்வொரு மனிதனும் தன்னை ஓர் நரேன் போல் உணர்ந்து செயல்படுவது காலத்தில் ஆசை போலும்.


பொறுத்திருந்து பார்ப்போம்... உங்களைப் போலத்தான் நானும் இது வரைக்கும் விவேகானந்தர் பாறைக்கு சென்றதில்லை.ஆனால் இனிமேல் கன்னியாகுமரிக்கு சென்று அந்த தியான மண்டபத்தை கண்டால் நாமும் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என்பது மட்டும் நிச்சயம்.


God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...