யானையும் பாகனும்


யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது...

கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை... அதுவே அமைதியாக பாகனின் கட்டுப்பாட்டில் நிற்கும் போது அதிக மரியாதை... இறைவனை தனது முதுகில் சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு அதற்குத்தான்..

உலகில் முடி சூடிய அரசர்ளுக்கும் கூட கிடைக்காத பாக்கியம் யானைக்களுக்கே கிடைக்கிறது....

யானைக்கு வந்த வாழ்வு பார்த்தாயா??...கேலியாக சிரிக்கும் ஓர் மனிதர், கூட்டத்தின் ஓர் ஓரத்தில்...

அவருக்கு தெரியாது யாருக்கும் அடங்காமல் காட்டில் சுதந்திரமாக அது சுற்றிய நாட்கள் எத்தனையோ... 

வகைவகையான உணவுகள், ஆயினும் அது உணவு தேடவில்லை.பல நாட்கள் உணவை வெறுத்து பட்டினியில் கிடந்தது....உண்மை அன்பை தேடி மதம் கொண்டது... மலையும்,காடும், அருவிக்கரையும், ஆற்றின் ஓரங்களிலும் எத்தனை எத்தனையோ.....இடைஞ்சல்கள்

யானை தான் உண்ணும் தென்னை மட்டைகளை கூட பல முறை தரையில் தட்டும்.. ஏனென்றால் அதில் இருக்கும் எறும்புகளின் வேதனை கூட அறிந்து செயல்படும் ஓர் புத்திசாலி மிருகம் யானை...

பல கடினமான போராட்டங்களுடன் வாழ்ந்த அந்த மிருகம்.

கூட்டத்தில் இருந்து வெளியேறிய வெறியில்.. போகும் இடம் தெரியாமல் பல இடங்களில் தனிமையில் சுற்றி திரிந்தது. தன்னை போலவே அனாதையாக சுற்றி திரிந்து அன்பு தேடும் இன்னொரு யானை எங்கேயும் உள்ளதா என தேடியது..

அதன் அமைதியான தேடலை புரியாமல்... உனக்கு பசிக்குதா இந்தா பழம் சாப்பிடும் என்றே தனது கெட்ட எண்ணங்களை மனதில் மறைத்து வைத்து இனிமையான சொற்களை சொல்லி சாப்பிடும் பழத்தில் வெடி வைத்து விளையாடிய கயவர்கள் சிலர்.

யாரோ ஒருவர் செய்த செயலுக்காக மனித இனத்தை கண்டாலே கோபத்தில் கொப்பளித்து அந்த கொம்பன் யானை ரொம்ப பயங்கரமானவன் என்று பெயர் வாங்கியது 

அதை படைத்த இறைவனுக்கு மாத்திரமே புரிந்தது கொம்பன் கோபக்காரன் தான் ஆனால் அவனின் கோபம் கயவர்களின் மீது தானே தவிர நல்லவர்களின் மீது அல்லவே

யாருக்கும் தீங்கு செய்ய விரும்பாத அன்பே உருவான மிருகம்...ஏனோ மதம் பிடித்து காடுகளில் அலைந்த காலங்களில் தெரிந்து கொண்டது... தனக்கு துணையில்லை என்பது தான் பிரச்சினை என்று...பல விதமான கடினமான போராட்டங்களை கடந்து புரிந்து கொண்டது.. இந்த உலகில் எதிர்பார்ப்பே இல்லாமல் பழகும் மனிதர்கள் மிகவும் சிலரே..

அப்படிப்பட்ட சிலரை தேடி அலைந்தது.. ஆமாம் அதன் தேடலில் தனக்கு இணையான தன்னைப் போன்ற குணத்திலும் அன்பிலும் சிறந்த ஓருவனை கண்டது 

தனக்கு யாருமில்லை என்று தனித்து அலைந்த யானையின் அருகே இன்று நிற்கும் அதன் பாகன்.. 


யானை காட்டில் அலைந்து அன்பு தேடியது... 

பாகன் நாட்டில் அலைந்து மனிதரில் அன்பு தேடினான்...

இருவருக்கும் தேவை ஓன்று தான்.. .

அது அன்பு ...

எனவேதான் "அன்பே சிவம்" என்று எழுதப்பட்ட ஊரின் மிகப்பெரிய ஆலயத்தில் இருவரும் வாழ்கின்றனர் போலும்...

.

.

கொடுப்பதில் சிவனுக்கு நிகர் யார்..

"நாயிற் கிடையாய் கிடைந்த அடியாருக்கு தாயிற் சிறந்த தயவான தத்துவம் அவன்"...

.

.

அந்த பாகனுக்கும் யானை மட்டும் தான் சொந்தம்...

யானைக்கும் பாகன் மட்டுமே சொந்தம்...

ஆயிரம் பேர் வந்து அவர்களை பார்த்து விட்டு போனாலும் இருவரும் இடையே உருவான பந்தம் நிலையானது.... விசித்திரமான வரலாறும் கூட.......

.

.

.

யானையால் பாகனும், பாகனால் யானையும் அன்பில் ஒன்றுபட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை பரப்புகின்றனர்...

.

.

இருவரின் குணங்கள் கூட ஒன்றே...

.

என்றாவது ஓர் நாள் தனது கடந்த கால வலிகளை நினைத்து அவனையும் மீறி கண்கள் கலங்கும் போது, தனது தும்பிக்கையால் அது அவனிடம் விளையாடும்...

உனக்காக நான் இருக்கும் போது உனக்கு ஏன் கவலை என்பது போல... 

.

.


யானையும் கூட சில நேரங்களில் தனது கடந்த காலத்தை நினைத்து அழும் போதும்.. அதன் அருகே சென்று தும்பிக்கையை தடவிக் கொடுத்து அன்புடன் ஆறுதல் சொல்லுவான்...

.

யானை விநாயகரின் அன்பான உருவம்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...