ராம் ஏன் புகழப்படுகிறார்...

பல்லாயிரக்கணக்கான

வருடங்களுக்கான

வரலாற்றை தன்னகத்தே கொண்டது

பாரத நாடு.. இந்த நாட்டை எத்தனை எத்தனையோ

அரசர்ள் ஆண்டுவிட்டனர்.

ஆயினும் அத்தனை அரசர்களையும்

வரலாறு தன்னுள் சேர்த்து வைக்கவில்லை.

மிகச் சில அரசர்களையும்

மக்களின் தேவையை புரிந்து மக்களுக்காகவே 

வாழ்ந்த அரசர்களையும்

வரலாறு மறக்காமல் தன்னுள் பத்திரப்படுத்திக் கொண்டது.

அப்படிப்பட்ட அரசர்களில் ஒருவர் தான் இந்த ராம்.

கடவுளின் அவதாரமாக அனைவரும் கொண்டாடினாலும் 

தனது வாழ்நாளில் தனது எந்த விதமான ஆன்மீக சக்திகளையும்

சாமானிய மனிதரிடம் கூட காட்டிக்கொள்ளாமல்

யதார்த்தமான மனிதராக தசரதனின் புதல்வனாக பிறந்து

சாதாரண மனிதனின் வாழ்நாளில் சந்திக்கும்

எல்லா இன்ப துன்பங்களையும்

கடந்து மக்களின் மனதில் மன்னராக உயர்ந்து நின்ற தசரதராமன்.

 இந்த நேரத்தில் எல்லோரின் மனதில் எழும் 

ஓர் சாதாரணமான கேள்வி தான் இது..

தம்பி பரதன்,

அண்ணா, "நீயே நாட்டை ஆள தகுதியானவன் "

என்று அரியணையை தந்த போதும்..

தந்தைக்கு தாய் கொடுத்த வாக்கை

காப்பாற்ற கானகம் சென்று பஞ்சவடியில்

தங்கியவன்.....ராம்...ராம்...ராம்...

இந்த  ராம் ஏன் புகழப்படுகிறார் ... ???

இதை யோசித்துப்

பார்த்தால் உண்மை புரியும்..

அரசின் தலைமை பீடம் தேடி வந்த போதும்..

ஆட்சி அதிகாரத்தை,

பதவியை விரும்பாதவர்....

தன்னை விட பிறரால் சிறந்த

ஆட்சியை கொடுக்க முடியும் 

என்று வாழ்ந்து காட்டியவர்...

அனைவரும் அழைத்தாலும்

14 வருடங்களுக்கு காட்டில் வாழ்ந்தவர்...

ஆடம்பரத்தை துறந்தவர்....

தந்தை கொடுத்த வாக்குறுதியை

காப்பாற்றியவர்....

காடுகளில் சென்று கஷ்டத்தை அனுபவித்தவர்...

கஷ்டத்தை கூட சுகமாக நினைத்தவர்..

தன் மனைவியை தவிர பிறர்

பெண்களை ஏறிட்டு பார்க்காதவர்...

ஜனகனின் மகள் ஜானகியை

மணந்த தசரத புதல்வன்

காதலில் மயங்கும் ஓவ்வொரு

மனிதரின் மனதிற்குள்...

வெளியே சொல்லாத எதிர்பார்ப்பு...

ராமனும் சீதையும்...

 

 

 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...