சிகப்பு பேனா

 சிகப்பு பேனா.

.

.


சாப்பிட மறந்தியா... ஹோம் ஓர்க் செய்யலை.. பென்சில் டப்பா மறந்து வீட்டில் வைச்சுட்டு வந்துடுட்டேன்... இந்த காலாண்டு பரீட்சையில் மட்டும் தான் நீ  எல்லாம் பாடத்திலும் பாஸ், அதுவும் 45% தான். என்னவோ பள்ளிக்கூடத்தில் பர்ஸ்ட் ரேங்க் எடுத்த மாதிரி திரியாதே... 

.

நீயெல்லாம் எதுக்குடா பள்ளிகூடத்துக்கு வரணும்... 2ம் வகுப்பு டீச்சர் எல்லோருக்கும் முன்னால் திட்டினார்கள்....

.

போடா போ... போய் வாசலில் முட்டி போட்டு நில்லு..நாலு பேரு உன் பார்த்து சிரிச்சா தான் புத்தி வரும்... அடைமழை போல சொல்லி முடித்தாள் இங்கிலீஷ் டீச்சர் விஜி மேடம்...

இல்லை மேடம், ஏதோ அவசரத்தில் மறந்து விட்டேன்...

டீச்சர், "என்கிட்ட இரண்டு பேனா இருக்கு'.. சொல்லிக்கொண்டே டீச்சரின் அனுமதியை கூட எதிர்பாராமல், ராம் நீ வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்...

.

.

இதை கவனித்த டீச்சருக்கு இன்னும் கோபம் அதிகமானது...முளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள நீயெல்லாம் குரூப் சேர்க்க அரம்பிச்சுட்டே...உன்னை எல்லாம் சீர்திருத்த பள்ளிகூடத்திலே கொண்டு சேர்க்கணும்... என் உயிரை வாங்கணும் வந்து சேர்ந்த மாதிரி இருக்கு...

.

கவிதா நீயெல்லாம் இவன் கூட சேராதே... இவனுக்கு இரக்கமே காட்டக்கூடாது...

.

போடா, போ...

..


மெதுவாக அந்த பள்ளியில் நடுவே அமைந்த ப்ரேயர் இடத்தில் சென்று முட்டிக்கால் போட்டு நின்றான்....

.

.

.பாடத்தை நடத்த தொடங்கிய டீச்சர்....

.

.

வெயிலில் மண்டை காய்ந்து தலைசுற்றுவது போல இருந்தது... சொன்னால் நல்லா நடிக்கிறேன்னு சொல்லுவாங்க...

.

.

ஜன்னல் ஓரத்தில் இருந்து கவிதா செய்கை காட்டினாள்..

அந்த குரோட்டஸ் இலையை பிச்சு அது மேல் முட்டி போட்டு நில்லு.கால் வலிக்காது.. நான் உனக்கும் எழுதி தருகிறேன்.

.

சற்று நேரம் கழித்து அந்த வழியாக பள்ளிக்கூடத்தின். ஆயா பேச்சியம்மா வந்தாள்

செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவது போல நின்று கொண்டு மெதுவான குரலில் கேட்டாள்....


.

விஷயத்தை சொன்னான். லஞ்ச் பாக்ஸ் கூட மறந்து வைச்சுட்டு வந்துட்டேன் பேச்சிம்மா...


.

கவலைப்படாதே கண்ணா... நான் வேணா  மதிய சாப்பாட்டு  கொண்டு வரவா..ஆனால பழையது தான் இருக்கு. ???

.


வேண்டாம், பேச்சிம்மா...... ஓரு நாள் பட்டினி கிடந்தால் பரவாயில்லை.. எனக்கு பழக்கம் தான்... வயதான கிழவன் போல பேசினான்.

.

.

பேச்சிம்மா, அவன் கன்னத்தை தடவியபடி சொன்னாள்.. "உனக்கு எல்லாம் புரியுது... சின்ன வயசுல உனக்கு ஏன் தான் இத்தனை பெரிய கவலை...பேசுடா செல்லக்குட்டி....இந்த உலகத்துல பேசுற பிள்ளை தான் பிழைக்கும்"...

சொல்லி விட்டு போனாள்...


.

பெல் அடித்தவுடன் விஜி டீச்சர் அடுத்த க்ளாஸ் போகும் போது எதோ சண்டைக்காரனை முறைப்பது போல சென்றார்....

.

.

வேகமாக ஓடி வந்த கவிதா கேட்டாள்.. ஏண்டா ரொம்ப வலிக்குது தா...

.

.

ம்ம்ம்....

.

.

இந்தா, பேனா...எங்க அப்பா எனக்கு இரண்டு பேனா கொடுக்குறதே.அடுத்தவங்களுக்கு கொடுக்கத்தான்...

.

.

அடுத்த இரண்டு க்ளாஸ் அமைதியாக போனது...

.


மதிய வேளையில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்....

.

.

தனியாக ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு, வேப்பமரத்தின் மீது விளையாடும் அணில்கள் பார்த்து சிரித்தபடி இருந்தான்.


.

டேய், சாப்பிட வா... என்னுடைய லஞ்ச் பாக்ஸ் நம்ம ஷேர் பண்ணி சாப்பிடலாம்... இன்னிக்கு எங்க அம்மா இடியாப்பம் செஞ்சாங்க.. ரொம்பவே நல்லா இருக்கும்..


.

இல்லை கவிதா..நீ போய் சாப்பிடு..

.

நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்... பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்..

.

நேத்து உங்க வீட்டில் பெரியவங்க சண்டைய???


.

ஆமாம்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.. இரண்டு பேரில் ஒருத்தனை நான் வளர்த்துக்கிறேன்.. நீ அவனை கூட்டிக்கொண்டு உன் அம்மா வீட்டுக்கு போ..அப்போ தான் அறிவு வரும்..எது பேசுனாலும். எதிர்த்து எதிர்த்து பேசுறே... அப்படின்னு அப்பா சொன்னார்..எதற்காக சண்டை என்றே தெரியலை... நான் தான் பாஸ் பண்ணிடேனே.பிறகு எதுக்கு அவங்க சண்டை போட்டாங்க..  

.

பெரிய மணுஷி போல கதை கேட்டவள் பதில் இன்றி இருந்தாள்..



அந்த அணில் எவ்வளவு வேகமாக போகுது பாரு... என்று சந்தோஷமாக சொன்னான்..

.

எப்படி இவ்வளவு கஷ்டத்தில் சிரிக்க முடியுது...

எப்போதும் வீட்டை பத்தி நினைச்சு தான் உனக்கு படிப்பு வரலையா??

.

அது எல்லாம் தெரியாது..... எனக்கு படிப்பே  வேண்டாம் கவிதா... படிச்சவங்க தான் சண்டை போடுறாங்க...படிக்காதவங்க சண்டை போடாம சந்தோஷமாக இருக்காங்க... எங்க அம்மாவும் அப்பாவும் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கணும்... எனக்கு அதுவே போதும்... ஆனா நான் என்ன செய்யணும்..அது தான் தெரியலை...


கேட் வாசலில், அவனின் பெரியம்மா லஞ்ச் பாக்ஸ் மற்றும் பென்சில் பாக்ஸ் சகிதம் வந்து நின்றாள்..

.

நீ எதுக்கு இப்படி கஷ்டப்படுறே.. நீ வீட்டில் படுற கஷ்டம் போதாதா.. எரிச்சலாக..


.

நீ கூட என்மேல் கோபப்படுறே.... உனக்கு பிடிக்கலை என்றால் சொல்லு அம்மா...செத்து போறேன்...வர வர யாருக்கும் என்னை பிடிக்கவில்லை... விஷம் வாங்க கூட அப்பா காசு தரமாட்டார்... உனக்கு தெரியாதா??.

கை வேற கரண்ட் பட்டு நொண்டியா போச்சு...

என்ன செய்ய, என் வயித்துலஎதுவுமே பிள்ளை பிறக்கவில்லை.. நான் செஞ்ச பாவம்... புலம்பினாள்..


.

நீ செத்து போனா, எல்லாரும் என்னை அடிப்பாங்க.நீ எங்கேயும் போகாதே...

.

வாணியம்மா கைகளில் முத்தமிட்டான்.. இந்த கையை குறை சொல்லாதே வாணிம்மா......இது தான் கேசவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கு...

அப்பா என்ன திட்டினாலும் பொறுத்துக்கோ.... நேத்து தான் கதை சொல்லை.. இன்னிக்கு ராத்திரி நீ அந்த யானை கதை எனக்கு சொல்லுவியா...

.

நான் உயிரோடு இருக்கிறதே, உன் அன்புக்கு தானே கேசவ குட்டி...

.

சரி, நீ பத்திரமாக வீட்டிக்கு போ...ரோட்டுல நிறைய பஸ்ஸு போகும்...


.

லஞ்ச் பாக்ஸ் திறந்து பார்த்தால், வெண்டைக்காய் பொரியல்... புளிக்குழம்பு... கொஞ்சம் கூழுவத்தல்...இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.... தெரியுமா உனக்கு???

.

கவிதா கேட்டாள்... இப்போது வந்துட்டு போறது யாரு ராம்...

.

எங்க அம்மா...

.

அப்போ போன வாரம் வந்தது...

.

அதுவும் எங்க அம்மா தான்...

.

உனக்கு எத்தனை அம்மா... 

.

எனக்கு இரண்டு அம்மா.. அவங்களுக்கு நான் என்ன பெயர் வைச்சு இருக்கேன் தெரியுமா???.

.

உதடுகளை பிதுங்கி தெரியாது என்றாள்.

.

ஓரு அம்மா சிகப்பு ருக்மணி...

இன்னொரு அம்மா கருப்பு ருக்மணி...

எங்க அப்பா தான் கிருஷ்ண பகவான்.....

.

ஜன்னல் வழியாக இதை வேடிக்கை பார்த்த  விஜி மேடம்.அவன் அருகே வந்து அவனிடம் கொடுத்தாள் தனது சிகப்பு பேனா....

.

.

இதில் இருந்த வாசகம் "HERO"

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...