ஊழல்.... போலீஸ்....துறவி... (பாகம்-1)

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.இக்கதையில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை...



       

L.கேசவன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல வருடங்கள் முடிந்து விட்டது..

யாரிடமும் L.கேசவன் லஞ்சம் வாங்கியதில்லை..
அவரை வேலை வாங்கும் மேலதிகாரிகளுக்கு கூட ஓர் விதத்தில் அச்சம்..

ஆமாம், தன் சம்பளம் தவிர வேறு எதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதவர்...

கைதிகளை கோர்ட் அழைத்து செல்லும் போது, சில நேரங்களில் சார் பசிக்குது டீ குடித்து விட்டு போலாமா? என்ற உடன் வந்த காவல்காரர் கேட்பார்..

கோர்ட் வாசல் எதிராக உள்ள டீக்கடை ...
அப்போது கூட பத்து அடி தள்ளி நிற்பார்.. அந்த சமயத்தில் கைதியாக அழைத்து வரப்பட்டவர்..
சார், நீங்கள் எதாவது சாப்பிடுறீங்களா, என் மச்சான் காசு கொடுப்பான்

இல்லை தம்பி நீங்க சாப்பிடுங்க... எனக்கு பசியில்லை... இப்படி அவரின் நேர்மைக்கு பல சான்றுகள்....
கைதிகளை கூட மனித தன்மையுடன் பார்த்து பேசும் மனிதர்...

என்ன மிஸ்டர் கேசவன், நீங்க கொண்டு வர கைதிகள் கூட உங்களை பத்தி ரொம்ப நல்ல விதமாக தான் சொல்றாங்க... என்ன சிதம்பர ரகசியம் சொல்லுங்க என்றார்... நீதிபதி சந்தோஷ்...

அது வந்து சார்..பேச முடியாமல் தடுமாறினார்....

ஜட்ஜ் அய்யா, மத்தவங்க கோர்ட்க்கு வரும் போது சில பேரு எங்க சொந்தக்காரங்க செலவுல சாப்பிடுவாங்க...ஆனா பத்து காசு கூட எங்க கிட்ட வாங்க மாட்டாருங்க, அதாங்க விஷயம்... நீங்கள் கொடுக்கிறது இரும்பு விலங்கு, ஆனால் இவருக்கு பூ மனசு... சொன்னான் சுப்பிரமணி..
கேசவன் தோளில் கை வைத்து சொன்னார்... என்னை போலத்தான் நீங்களும் போல...

தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வார்,
சிவாஜி கணேசன் சார் நடித்த தங்கப்பதக்கம், போலீஸ் மாதிரி நேர்மையான அதிகாரி அப்படின்னு பேர் எடுக்கணும் அதை விட பெரிய ஆசை எனக்கு எதுவுமில்லை...

காக்கிச்சட்டை தனது உயிருக்கு மேலாக நேசித்த மனிதர்..
சில நேரங்களில் உடன் இருப்பவரின் தேவைக்கு தன்னலம் கருதாமல் உதவி செய்பவர்...

தனது வேலையின் போது இடையூறு செய்பவரை கண்டால் கோப்படுவது.. அந்த கோபத்தை தவிர...குறை என்று எதுவுமே சொல்லாமல் முடியாது...

யாருக்கு தீமை செய்யாத மனிதரை சோதித்து விளையாடும் இறைவன், இவரையும் விட்டுவைக்கவில்லை...

இதை விதி என்பதா.. மனிதர்கள் என்பதா.. இறைவனின் பரீட்சை என்பதா... எப்படி சொன்னாலும் பொருந்தும்...

இரவு நேர டூட்டி முடிந்து டிபன் சாப்பிட கடைக்கு சென்றார்...

பணத்தை கொடுத்து விட்டு மீதி சில்லறை வாங்கும் போது, ஏதோ நெருடலாக உணர்ந்தார்...

சில நிமிடங்களில் அவரை சுற்றிக்கொண்ட அதிகாரிகள்..

கையூட்டு பெற்றதாகவும், அவரிடம் இருந்த பணத்தின் எண்ணிக்கை மற்றும் எண்கள் சரியாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது....

இரண்டு நாள் கழித்து விசாரணைக்கு வரும் படியும்,  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டார்.

தான் தவறு செய்யவில்லை, நேர்மையான வேலைக்கு கிடைத்த பலன். தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை எப்படி போக்குவது...
பணத்தை கடைக்காரர் கொடுத்த பாவனை யோசித்து பார்த்தார்...

விஜய், அந்த கடையில் வேலை செய்யும் ஓர் ஏழை வீட்டு பையன்... பணத்தை கொடுத்த போது அவன் நடவடிக்கையில் மாற்றமில்லை.. இயல்பாகவே வேலை செய்தான்.
அப்படியென்றால் அவனுக்கு இது பற்றி எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை

விடை கிடைக்காமல் தவித்தார்... வீட்டு வாசலில் இரண்டு பேர் வேண்டுமென்றே நின்று சிக்ரெட் பிடித்த படி.. சத்தமாக பேசி சிரித்தனர்...

மச்சான், இன்னிக்கு நைட்டு சரக்கு அடிக்க போறோம் வர்றீயா....

இந்த வார்த்தைகள் தன்னை சீண்டி பார்க்கும் வார்த்தைகள் என்பதை அவர் உணராமல் இல்லை..

சார், நான் தான் கல்லாவுல இருந்தேன், அவசரமா வீட்டில் இருந்து போன்.. அதான்...நம்ம விஜய்க்கிட்ட கான்ஸ்டபிள் வந்தா பத்து ரூபாய் நோட்டு சில்லறை கொடுக்காதே.. நேத்து கோபமாக இப்படி சில்லறை கொடுத்தா எப்படி இருபது ரூபாயா மாத்தி வைக்க கூடாது என்றார்...நினைவா இருபது ரூபாய் சில்லறை கொடு...

கூப்பிடுங்க அந்த கேஷியர் பரந்தாமனை...

என்னய்யா, கேஷியர் நீ....எவ்வளவு பெரிய தவறு நடந்து போச்சு... நீங்க ஏதோ சின்ன தப்பு மாதிரி பேசிக்கிட்டு.. நான் நேரில் போய் கேசவன் சாரை பார்த்து விஷயம் சொன்னா தான் சரிவரும்.. ஆக்ரோஷமாக கிளம்பி போனார்..முதலாளி தினேஷ்...

எதிரில் வந்த விஜய் கிட்ட, நல்ல காரியம் செஞ்சுட்ட... எரிச்சலாக சொன்னார்...

எதுவும் புரியாமல், பரந்தாமன் சார்... என்னாச்சு அப்பாவியாக கேட்டான்....
 (தொடரும்....

பால்காரர்

யார் இந்த கடவுள்...

இன்றும் நாம் மிகப்பெரிய வரலாற்று பிழை செய்கிறோம்.
உண்மையான தன்னலமற்ற பலரின் உழைப்பை போற்றுவோம்...


தினமும் இரு வேளை காபியும் டீயும் வேலை இல்லாமல் இருந்தாலும் தவிர்க்க இயலாத விஷயங்கள்

இன்றும் கூட காலை மாலை வாழ்வியல் பழக்கம்.. மாற்ற முடியவில்லை

ஓர் வேளை கூட நேரம் தவறாமல் வரும் பால்காரர்..
அவரை கூட விசாரித்தார்களாம்....

பல வீடுகளில் பால் கணக்கு பாக்கி இந்த மாதமும் இருந்தாலும் தனது பழகிய மக்களுக்கு இந்த இக்கட்டான வேளையில் பால் கொண்டு வந்து தரும் அவரை யாரும் பேசுவதேயில்லை..‌
ஏன் ஊடகங்கள் இவர்களின் சேவையினை புறந்தள்ளி விட்டது போலும்...

வாழத்தி வணங்குகிறேன் அவரின் சேவை தொடரட்டும் ...
எனது கண்களுக்கு அவர் எல்லோருக்கும் உதவும்
பால்காரர் மட்டுமல்ல
ஓர் கடவுளே...

பெண்ணே

உன்னை நீ தெரிந்து கொள்...

படத்தில் கதாநாயகனை கட்டிப்பிடித்து முத்தமிடுவது அல்ல பெண்களின் குணம்...
போலியாக அப்படி சித்தரிக்கப்படுகிறது...
பெண் ஆண்களை கண்டு கற்பனை செய்வதாக கதை பேசப்படுகிறது.

உண்மையில் எப்பொழுதும் தனது தாய் தந்தை உடன்பிறப்புக்களின் வாழ்க்கை பற்றியே அதிகம் யோசிக்கிறாள். சுயநலம் அவளிடம் குறைவு, பொது நலமாகவே செயல்படுகிறாள்...

ஆணாதிக்க சமுதாய கூட்டம், அவளை கட்டுக்குள் கொண்டு வர ஆயிரம் உத்திகளை பயன்படுத்தி அடிமையாக்குகிறது.‌‌

 மாயிம்மா..‌அமிர்தானந்நா மயி.....
கேரளத்தின் மிகப்பெரிய சமுதாய பணியாற்றி வரும் அம்மாவின் செயல்பாடுகள் ஊடகம் சொல்வதில்லை...

இந்தியாவில் இருக்கும் எண்ணற்ற துறவிகளில் பெண்கள் பலர்... மறைக்கப்படுகிறது வரலாறு...
சற்றே சிந்தியுங்கள், கல்யாண வீட்டில் பெண்கள் தான் விளக்கு ஏற்றுகிறார்கள்..
அதாவது சமுதாயம் மறைமுகமாக ஓத்துக்கொள்கிறது... நன்மைக்கு காரணம் பெண்கள்...
ஆனால் பெண்ணின் தெய்வீக ஆற்றல் பெற தடை வித்திக்கிறது...
சோறு பொங்குவது மற்றும் வீட்டை சுத்தமாக வைப்பதிலேயே அவள் அமைதி கொள்கிறாள்..
தனக்கு என்று எதுவும் கேட்காமல் தன் குடும்பத்திற்காக பிராத்தனை செய்ய பெண் பழக்கப்படுத்திய சமுதாயம்...

அவளுக்கு சித்துக்கள் செய்வதை தடுக்க துடித்து, ஆன்மீக துறையில் கட்டிப்போடுகிறது...
நுனிநாக்கு ஆங்கிலம்.உடலை மறைக்கும் மேற்கத்திய ஆடை இத்துடன் முடிவதில்லை பெண்களின் உலகம்..
சாதிக்க பிறந்தவர் என கல்பனா சாவ்லா போற்றப்படுகிறார்...
என்ன காரணம் என்று யாரும் கேட்க வில்லை... பெண் சாமியார்கள் பற்றி ஊடகங்களில் அதிக அளவில் செய்திகள் வருவதில்லை...
"ஔவையார்" இது தத்துவம் பேசும் பெண்களுக்கு உலகம் சூட்டும் பெயர்.. ஆனால் தமிழ் இலக்கியத்தில் முதல் பெண் விடுதலை பெற்றவர்

கம்பராமாயணம் பாடிய கம்பனுக்கு நிகரானவர்..
புலவர்களில் இறைவனுடன் பேசியதாக சொல்லப்படுபவர்....

ஆண் புலவர்கள் அரசனை பாடி பரிசில் பெற்ற போது, உலகம் உயர்வு பெற ஆத்திச்சூடி தந்தவர்.

பணம் என்பது காகிதம், நாட்டிற்கு நாடு வேறுபடும், ஆனால் ஆன்மீக உலகில் பொதுவானது அன்பு மாத்திரமே...

மனதினை அடங்கும் கலை ஆண்களை விட பெண்ணிற்கு இயல்பாகவே உண்டு.. இதனால் தான் உயிரை பாதுகாத்து உயிர்ப்பிக்கும் கலை பெண்ணிற்கு கொடுத்தது இயற்கை...

பெண்களே உங்களை நீங்கள் உணருங்கள்...
உங்களின் எண்ணம் வலுவாகட்டும்...
எட்டு சித்துக்கள் படியுங்கள், உங்களுக்கு அது வசப்படும்...

வியாபாரம்

கடவுளும்
காதலும்
கண்ணுக்கு
தெரிவதில்லை
ஆயினும்
இவர்களை
வைத்துத்தான்
உலகத்தில்
இயங்குகிறது
வியாபாரம்...

நரி

குள்ள நரியின்
ஆட்டத்திற்கு
பயப்படுகிறது...
ஆட்டுக்கிடையில்
வளர்ந்த
சிங்கம்...
அதற்கு தான்
சிம்மம் என்பது
மறந்து போனது.


சீட்டுக் கம்பெனி -2

இக்கதையில் இன்னும் சில தினத்தில் இரண்டாம் பாகம் எழுதப்படும்....
முதல் பாகத்தின் கதை நன்றாக இருந்தாக சொன்ன நண்பருக்கு நன்றி..

விரைவில் இரண்டாம் பாகம் எழுதப்படும்...
உங்களை காக்க வைப்பதற்கு மன்னிக்க... நீங்கள் எதிர்பார்ப்பது போலவே மிகவும் நல்ல கதை களமாக அது அமையும்.




கடவுளா..மனிதனா...



மனிதனாக வந்து
அற்புதங்கள்
நிகழ்த்திய கடவுள்...
கடவுளாகவே தன்னை
நினைக்கும்
மனிதன் ... சிந்தனை
தொடங்கிய
இடத்தில் தான்
உருவானது சிக்கல்...
பெரியவர் யார்...
கடவுளா...‌ மனிதனா.....

நண்பன்

காடாறு 
நாடாறு
மாதம்
முன்னோர்
வகுத்த வழி.
இன்றும்
கடைபிடிக்கும்
என்பது நண்பன்..

வேட்டை நாய்

ஏய் கிழவி
நீ இப்போ
சுனான்னுட்டு
இருக்க மாட்ட
இன்னும் ஒரு
மாசந்தே.... வெளியூர்
போன உன்னய
எரிச்சலாக
சொன்ன
வார்த்தைகள்...
ஏலே இந்தா
கம்பங்கஞ்சி
உடம்புக்கு
நல்லதுலே குடி...
குச்சி ஒன்றே
நம்பிக்கையாக
வைத்து இருக்கும்
அப்பத்தா.... போக
இருந்தவளை
இழுத்து திண்ணையில்
உட்கார வைத்தேன்
மடியில் தலை வைத்தேன்...
அம்மாவின் நினைவில்...
ஏலே சுட்டி நீ நல்லா
இருப்படா... நம்ம
குல சாமி
ஜக்கம்மா நீ என்னய
விட்டு போக மாட்டேன்
சொன்னாளே....
இப்போவாவது
நம்புடா.... சாமி
இருக்குடா...
ராசா உனக்கு
அவள் நிச்சயம்
துணையிருப்பாடா...
வாசலில் எதையோ
பார்த்து குலைத்தது
வேட்டை நாய்........

பித்தன் வேலை..

யாரிடமும்
பேசாமல்
கோவிலில்
மறைவான
இடத்தில் அமர்ந்து
கோபுரத்தை
வெறித்துப் பார்த்தபடி..
நெஞ்சு பல நொடிகளுக்கு
ஓர் முறை விம்மியது...
யாரிடம் நியாயம் கேட்பது
கல்லாய் இருக்கும் சாமியா...
நீ பெரிய மயிராண்டி...
உனக்கு எதுக்குடா
மரியாதை பண்ணாட பயலே..
மனதில் கோபமில்லை
எரிச்சல் மேலாங்கியது....
தவறான பழிச்சொல்
தேவையா இது...
கண்ணீர் முட்டிய விழிகளில்
வழியும் நீரை துடைத்து
விட்டு கட்டியணைத்தான்...
விதிடா மகனே விதி..
எல்லாம் சரியாகவே
நடந்தது இனியும்
நடக்கும் கலங்காதே...
பலநாள் குளிக்காத மேனியில்
ஜவ்வாது வாசனை
மனதின் கவலை பறந்து
விவரிக்க இயலாத
சந்தோஷம்... பயத்துடனே
கேட்டேன் சாமி...
பதிலுரைத்தார்....
மந்தகாச புன்னகையுடன்
நான்... நான்..வந்து..
பித்தன்.. கிறுக்கன்...
இல்லை.. இல்லை..
ஓர் மயிராண்டி..
ஓரு பண்ணாடை
மனதிற்குள் திட்டிய
வார்த்தைகளை
சிரிப்புடன் சொல்கிறார்...
சிறிதும் கள்ளமின்ற
விம்மி விம்மி
அழுதேன்..... டேய்
கல்லு நினைச்சா கல்
சாமி நினைச்சா சாமி...
திசை தெரியாமல்
தவிஞ்சு வர்ற
உண்மையானவர்க்கு
பதில் சொல்வதுதான்
இந்த பித்தன்
வேலை.....

யோக்கியன்..

அழுக்கு வேஷ்டி
சடையுண்ட தலைமுடி
சவரம் செய்யப்படாத
தாடி முகம் அதிலும்
நேற்று சாப்பிட்ட
சோற்றுக் கஞ்சியின்
எச்சங்கள்... பக்கத்தில்
செல்லும் விலையுயர்ந்த
கார் வெறுப்புடன்
நோக்கும் விழிகளில்
ஆணவத்தின் சாயல்..
பெருவிரலும் ஆள்காட்டி
விரல் சேர்த்து
தூக்கி வீசிய கட்டை
பீடித்துண்டு...‌
அருகே செல்ல பயப்படும்
யோக்கியர்கள்....



வைரஸ்.



பத்து வீட்டு
வாடகை பணம்...
250 தென்னை
விளைச்சல் தொகை..
சில பல நன்செய்
புன்செய் நிலங்கள்
பங்குச்சந்தை
டிவிடெண்ட் பண்ட்
கடும் நெருக்கடியிலும்
தக்க வைத்த
அரசியல் பதவி..
அனைத்தும்
பெற்ற போது
கிடைத்த மகிழ்ச்சி....
வீட்டில் அடைத்துவிட்ட
சின்னஞ்சிறு
வைரஸ்...

For read more visit Aalamaram in Facebook or
https://anmaai.blogspot.com

CORANA

Jai Ho India...

Who am I  to Judge  pleople.. Forgive them...

Once upon a time, he was a great robbery.
But later nature transformed him as Saint, what we read today as holy book Ramayan was wrote by him..
A great warrior who wished for kamadhenu..
Became viswamitra...
There are multiple number of stories like same in our traditional books..

Because of today's wrong doing it doesn't means he will be forever in same kind...
People who show their attitude, courage, fighting nature... should be handled very carefully. Because first we have to understand situations.. Why they are reacting..
Try to approach issues from their prospects. Create awareness about Corona virus.. They also have family.

Creating agitation might be easy,but making things towards peace and control are very difficult.
Their own pains which none of us bothered some politician used themfor their growth. This is not time to discuss who went wrong and which is correct.

Awareness is the only option which can uplift a person from agitation to  peace.

Entire world is proud of us for trying our best to tame Corona.
 Remember Mahatma Gandhi as our ICON who strongly believe in ahimsha.

Do not underestimate anyone.. because nature created like that. Only god knows his wish., in that Crowd there may be a great writer, musician,  actor, civil engineer , doctor..

Let's join our hands together..
Jai Ho India.

If you like this article, please share. In this time we need awareness in all aspects..

அடங்காத பிடாரி...

மஞ்சத்திற்கு
வர சொன்னால்
குலப் பெருமை
பேசினாள்....
தனது ஆசை
அடங்காத
ஆத்திரத்தில்
அதிகார வர்க்கம்
கட்டவிழ்த்து பொய்கள்
ஏராளம்.. அதில்
அவளுக்கு
கொடுத்த பட்டம்
அடங்காத பிடாரி...

For  read on Aalamaram at Facebook other
https://anmaai.blogspot.com

சந்தோஷத்திற்காக...



ஆண்களின்
மீது சிறிதும்
வேட்கையின்றி
இயல்பாக பழகும்
சகோதரியின்
மீது வீசப்பட்டது
சந்தேகப்பார்வை
சில தரங்கேட்ட
கோமாளிகளின்
சந்தோஷத்திற்காக..

குள்ள நரி...

காடுகளில்
மட்டுமே
வாழ்வதில்லை
குள்ள நரிகள்...
தப்பி வந்த சில
நாட்டிற்குள்
மனிதனின்
போர்வைக்குள்...
அலுவலகத்தில்
ஆயிரம் உண்டு...
சில பொறாமை
மேனேஜர்கள்...
திறமையான.
ஆடுகளை
இரை செய்வதுண்டு
அதிகார பசியுடன்....

ஆசை ஏதுமில்லை.....



காதலும்
காமமும்
இரட்டை பிள்ளை
அடையாளம்
காண்பதில்.
சிக்கல்கள் பல...
சிலருக்கே  புரிகிறது....
தூரத்தில் இருந்து.
ஆசை தூண்டும்
ஆண் யானைகளின்
காமத்தை விட...
பாகனின்
தள்ளி நில் என்ற
ஒன்றை வார்த்தைக்கு
கட்டுப்பட்டு நிற்கும்
அன்பெனும்
கோவில் யானை....
தன்னை காணவரும்
குழந்தைகளை
மகிழ்விப்பதை விட
அதற்கு ஆசைகள்
ஏதுமில்லை...

பாச உணர்ச்சி



சாதியும்
மதமும்
மொழியும்
ஊரும்
பேரும்
எதுவுமே தெரியாது
எங்கோ எதற்கோ
சென்றவன்
பார்வையில்..
நுழைந்த முகம்...
சற்றே உரசி
சென்ற
ஆட்டோவின்
உள்ளே அம்மாவின்
கைச்சிறைக்குள்
சிக்குண்ட மழலை..
காற்றில் கவிதை
வரைந்த கைகள்.
தெருவில்
அனாதை போல
சென்றவனின்
மேல்பட்டது....இது
காமமில்லை...
காதல்....அம்மா
இருந்திருந்தால்....
அன்பு புரிந்திருக்கும்..
ஏனோ குழந்தையின்
தொடுதல் தூண்டியது
பாச உணர்ச்சி.....


For more read on Aalamaram at Facebook other
https://anmaai.blogspot.com


டாக்டர் அறிவுரை...

பெற்ற குழந்தையை
யாரிடமும் அவள் 
காட்டவில்லை
கல்யாண வீட்டில்
அவளின் பெயரைத்தான்
பல்லாங்குழி போன்றே 
போட்டு உருட்டி
விளையாடினர்...
மலடிக்கு திமிர்
அதிகம் தாண்டி
பத்து வருஷம்...
கழித்து பிறந்ததுக்கே
எவ்வளவு திமிர் பார்த்தியா...
அவர்களுக்கு என்ன
சொன்னாலும்
புரியாது.... குழந்தைக்கு 
இன்ஃபெக்ஷன் ஆகாம 
பார்த்துக்கோங்க
டாக்டர் அறிவுரை...

மலடி

இனி இவள்
சரிப்பட மாட்டாள்...
அதான் டாக்டர்
சொல்லிட்டாரே.‌
அதிகார தோரணையில்
மாமனார் பேச...
சட்டுபுட்டுனு
முடிவு எடுங்க...
அவசரம் ஏற்றும்
மாமியார்.... அடுத்த
கல்யாணத்திற்கு
தயாராகும் மாப்பிள்ளை
லட்சத்தில் விலை
பேச ஆயிரம் பேர்....
வாசலில் கேட் சத்தம்
போ...போ.. போய் பாரு...
விடை மறைமுகமாக
உணர்த்திய கணவன்..
பக்கத்து வீட்டுக்கு புதிதாக
வந்த குழந்தை ....
வாஞ்சையுடன் கேட்டாள்...
என் கூட விளையாட
வருவீங்களா... திரும்பி
பார்க்க விரும்பாமல்
அவளுடன் சென்றேன்...
கள்ளமில்லாமல்
தெய்வம் குழந்தையாய்
பேசியது... உங்களுக்கு
தம்பி பாப்பா பிறந்தா...
அவனையும் என்கூட
விளையாட வீடுவீங்களா....
கண்ணில் நீர் புரண்டு
திரையிட்டு மறைக்க
முயன்றேன் பெற்ற
பட்டம் "மலடி"


தருணமல்ல

கொரானோ... விழிப்புணர்வு...


விடுமுறை
தினமல்ல... இது...
கூட்டமாய் சேர்த்து
கும்மியடிக்க....
வீட்டிற்குள்
முடக்குவது
வீரமா...
 எத்தனை
சொன்னாலும்
புரிந்து கொள்ளாது
கொரானா...
பறித்து விடும் உயிரை
சிகிச்சை தவறினால்...
ஓர் முறை
வந்துவிட்டால்....
அந்த பயங்கரம்
எதிரிக்கும்
வேண்டாம்...
ஊழல் செய்த
அரசியல்வாதிக்கு கூட
விசாரணை உண்டு...
இதற்கு நேரடி
தண்டனை தான்.....
யோசியுங்கள்...
இப்போது...
வீராப்பு பேசும்
தருணமல்ல.

செல்ஃபி கணவன்...



மாதத்திற்கு
ஓர் முறை
குடும்பத்துடன்
வெளியே சுற்றுலா
அழைத்து சென்ற
செல்பி எடுத்து
கொண்டாடிய
காதலின் மன்னன்...
கணவன் இன்று
வீட்டில் இருக்கும்
பொழுதில் அன்பாக
பேச முடியாமல்
உதட்டின்
வார்த்தையால்
ஈஸ்திரி செய்தார்
குடும்பத்து உறவுகளை.
இறந்து விட்ட
அப்பாவை கேலி பேசி
உஷ்ணம் தருகிறார்...
அனைவரின்
உண்மை
தோற்றத்தை
வெளிகாட்டி விட்டது
கொரானா...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...