ஊழல்.... போலீஸ்....துறவி... (பாகம்-1)

கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.இக்கதையில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை...



       

L.கேசவன் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்து பல வருடங்கள் முடிந்து விட்டது..

யாரிடமும் L.கேசவன் லஞ்சம் வாங்கியதில்லை..
அவரை வேலை வாங்கும் மேலதிகாரிகளுக்கு கூட ஓர் விதத்தில் அச்சம்..

ஆமாம், தன் சம்பளம் தவிர வேறு எதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதவர்...

கைதிகளை கோர்ட் அழைத்து செல்லும் போது, சில நேரங்களில் சார் பசிக்குது டீ குடித்து விட்டு போலாமா? என்ற உடன் வந்த காவல்காரர் கேட்பார்..

கோர்ட் வாசல் எதிராக உள்ள டீக்கடை ...
அப்போது கூட பத்து அடி தள்ளி நிற்பார்.. அந்த சமயத்தில் கைதியாக அழைத்து வரப்பட்டவர்..
சார், நீங்கள் எதாவது சாப்பிடுறீங்களா, என் மச்சான் காசு கொடுப்பான்

இல்லை தம்பி நீங்க சாப்பிடுங்க... எனக்கு பசியில்லை... இப்படி அவரின் நேர்மைக்கு பல சான்றுகள்....
கைதிகளை கூட மனித தன்மையுடன் பார்த்து பேசும் மனிதர்...

என்ன மிஸ்டர் கேசவன், நீங்க கொண்டு வர கைதிகள் கூட உங்களை பத்தி ரொம்ப நல்ல விதமாக தான் சொல்றாங்க... என்ன சிதம்பர ரகசியம் சொல்லுங்க என்றார்... நீதிபதி சந்தோஷ்...

அது வந்து சார்..பேச முடியாமல் தடுமாறினார்....

ஜட்ஜ் அய்யா, மத்தவங்க கோர்ட்க்கு வரும் போது சில பேரு எங்க சொந்தக்காரங்க செலவுல சாப்பிடுவாங்க...ஆனா பத்து காசு கூட எங்க கிட்ட வாங்க மாட்டாருங்க, அதாங்க விஷயம்... நீங்கள் கொடுக்கிறது இரும்பு விலங்கு, ஆனால் இவருக்கு பூ மனசு... சொன்னான் சுப்பிரமணி..
கேசவன் தோளில் கை வைத்து சொன்னார்... என்னை போலத்தான் நீங்களும் போல...

தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வார்,
சிவாஜி கணேசன் சார் நடித்த தங்கப்பதக்கம், போலீஸ் மாதிரி நேர்மையான அதிகாரி அப்படின்னு பேர் எடுக்கணும் அதை விட பெரிய ஆசை எனக்கு எதுவுமில்லை...

காக்கிச்சட்டை தனது உயிருக்கு மேலாக நேசித்த மனிதர்..
சில நேரங்களில் உடன் இருப்பவரின் தேவைக்கு தன்னலம் கருதாமல் உதவி செய்பவர்...

தனது வேலையின் போது இடையூறு செய்பவரை கண்டால் கோப்படுவது.. அந்த கோபத்தை தவிர...குறை என்று எதுவுமே சொல்லாமல் முடியாது...

யாருக்கு தீமை செய்யாத மனிதரை சோதித்து விளையாடும் இறைவன், இவரையும் விட்டுவைக்கவில்லை...

இதை விதி என்பதா.. மனிதர்கள் என்பதா.. இறைவனின் பரீட்சை என்பதா... எப்படி சொன்னாலும் பொருந்தும்...

இரவு நேர டூட்டி முடிந்து டிபன் சாப்பிட கடைக்கு சென்றார்...

பணத்தை கொடுத்து விட்டு மீதி சில்லறை வாங்கும் போது, ஏதோ நெருடலாக உணர்ந்தார்...

சில நிமிடங்களில் அவரை சுற்றிக்கொண்ட அதிகாரிகள்..

கையூட்டு பெற்றதாகவும், அவரிடம் இருந்த பணத்தின் எண்ணிக்கை மற்றும் எண்கள் சரியாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது....

இரண்டு நாள் கழித்து விசாரணைக்கு வரும் படியும்,  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பப்பட்டார்.

தான் தவறு செய்யவில்லை, நேர்மையான வேலைக்கு கிடைத்த பலன். தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை எப்படி போக்குவது...
பணத்தை கடைக்காரர் கொடுத்த பாவனை யோசித்து பார்த்தார்...

விஜய், அந்த கடையில் வேலை செய்யும் ஓர் ஏழை வீட்டு பையன்... பணத்தை கொடுத்த போது அவன் நடவடிக்கையில் மாற்றமில்லை.. இயல்பாகவே வேலை செய்தான்.
அப்படியென்றால் அவனுக்கு இது பற்றி எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை

விடை கிடைக்காமல் தவித்தார்... வீட்டு வாசலில் இரண்டு பேர் வேண்டுமென்றே நின்று சிக்ரெட் பிடித்த படி.. சத்தமாக பேசி சிரித்தனர்...

மச்சான், இன்னிக்கு நைட்டு சரக்கு அடிக்க போறோம் வர்றீயா....

இந்த வார்த்தைகள் தன்னை சீண்டி பார்க்கும் வார்த்தைகள் என்பதை அவர் உணராமல் இல்லை..

சார், நான் தான் கல்லாவுல இருந்தேன், அவசரமா வீட்டில் இருந்து போன்.. அதான்...நம்ம விஜய்க்கிட்ட கான்ஸ்டபிள் வந்தா பத்து ரூபாய் நோட்டு சில்லறை கொடுக்காதே.. நேத்து கோபமாக இப்படி சில்லறை கொடுத்தா எப்படி இருபது ரூபாயா மாத்தி வைக்க கூடாது என்றார்...நினைவா இருபது ரூபாய் சில்லறை கொடு...

கூப்பிடுங்க அந்த கேஷியர் பரந்தாமனை...

என்னய்யா, கேஷியர் நீ....எவ்வளவு பெரிய தவறு நடந்து போச்சு... நீங்க ஏதோ சின்ன தப்பு மாதிரி பேசிக்கிட்டு.. நான் நேரில் போய் கேசவன் சாரை பார்த்து விஷயம் சொன்னா தான் சரிவரும்.. ஆக்ரோஷமாக கிளம்பி போனார்..முதலாளி தினேஷ்...

எதிரில் வந்த விஜய் கிட்ட, நல்ல காரியம் செஞ்சுட்ட... எரிச்சலாக சொன்னார்...

எதுவும் புரியாமல், பரந்தாமன் சார்... என்னாச்சு அப்பாவியாக கேட்டான்....
 (தொடரும்....

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...