பெண்ணே

உன்னை நீ தெரிந்து கொள்...

படத்தில் கதாநாயகனை கட்டிப்பிடித்து முத்தமிடுவது அல்ல பெண்களின் குணம்...
போலியாக அப்படி சித்தரிக்கப்படுகிறது...
பெண் ஆண்களை கண்டு கற்பனை செய்வதாக கதை பேசப்படுகிறது.

உண்மையில் எப்பொழுதும் தனது தாய் தந்தை உடன்பிறப்புக்களின் வாழ்க்கை பற்றியே அதிகம் யோசிக்கிறாள். சுயநலம் அவளிடம் குறைவு, பொது நலமாகவே செயல்படுகிறாள்...

ஆணாதிக்க சமுதாய கூட்டம், அவளை கட்டுக்குள் கொண்டு வர ஆயிரம் உத்திகளை பயன்படுத்தி அடிமையாக்குகிறது.‌‌

 மாயிம்மா..‌அமிர்தானந்நா மயி.....
கேரளத்தின் மிகப்பெரிய சமுதாய பணியாற்றி வரும் அம்மாவின் செயல்பாடுகள் ஊடகம் சொல்வதில்லை...

இந்தியாவில் இருக்கும் எண்ணற்ற துறவிகளில் பெண்கள் பலர்... மறைக்கப்படுகிறது வரலாறு...
சற்றே சிந்தியுங்கள், கல்யாண வீட்டில் பெண்கள் தான் விளக்கு ஏற்றுகிறார்கள்..
அதாவது சமுதாயம் மறைமுகமாக ஓத்துக்கொள்கிறது... நன்மைக்கு காரணம் பெண்கள்...
ஆனால் பெண்ணின் தெய்வீக ஆற்றல் பெற தடை வித்திக்கிறது...
சோறு பொங்குவது மற்றும் வீட்டை சுத்தமாக வைப்பதிலேயே அவள் அமைதி கொள்கிறாள்..
தனக்கு என்று எதுவும் கேட்காமல் தன் குடும்பத்திற்காக பிராத்தனை செய்ய பெண் பழக்கப்படுத்திய சமுதாயம்...

அவளுக்கு சித்துக்கள் செய்வதை தடுக்க துடித்து, ஆன்மீக துறையில் கட்டிப்போடுகிறது...
நுனிநாக்கு ஆங்கிலம்.உடலை மறைக்கும் மேற்கத்திய ஆடை இத்துடன் முடிவதில்லை பெண்களின் உலகம்..
சாதிக்க பிறந்தவர் என கல்பனா சாவ்லா போற்றப்படுகிறார்...
என்ன காரணம் என்று யாரும் கேட்க வில்லை... பெண் சாமியார்கள் பற்றி ஊடகங்களில் அதிக அளவில் செய்திகள் வருவதில்லை...
"ஔவையார்" இது தத்துவம் பேசும் பெண்களுக்கு உலகம் சூட்டும் பெயர்.. ஆனால் தமிழ் இலக்கியத்தில் முதல் பெண் விடுதலை பெற்றவர்

கம்பராமாயணம் பாடிய கம்பனுக்கு நிகரானவர்..
புலவர்களில் இறைவனுடன் பேசியதாக சொல்லப்படுபவர்....

ஆண் புலவர்கள் அரசனை பாடி பரிசில் பெற்ற போது, உலகம் உயர்வு பெற ஆத்திச்சூடி தந்தவர்.

பணம் என்பது காகிதம், நாட்டிற்கு நாடு வேறுபடும், ஆனால் ஆன்மீக உலகில் பொதுவானது அன்பு மாத்திரமே...

மனதினை அடங்கும் கலை ஆண்களை விட பெண்ணிற்கு இயல்பாகவே உண்டு.. இதனால் தான் உயிரை பாதுகாத்து உயிர்ப்பிக்கும் கலை பெண்ணிற்கு கொடுத்தது இயற்கை...

பெண்களே உங்களை நீங்கள் உணருங்கள்...
உங்களின் எண்ணம் வலுவாகட்டும்...
எட்டு சித்துக்கள் படியுங்கள், உங்களுக்கு அது வசப்படும்...

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...