பித்தன் வேலை..

யாரிடமும்
பேசாமல்
கோவிலில்
மறைவான
இடத்தில் அமர்ந்து
கோபுரத்தை
வெறித்துப் பார்த்தபடி..
நெஞ்சு பல நொடிகளுக்கு
ஓர் முறை விம்மியது...
யாரிடம் நியாயம் கேட்பது
கல்லாய் இருக்கும் சாமியா...
நீ பெரிய மயிராண்டி...
உனக்கு எதுக்குடா
மரியாதை பண்ணாட பயலே..
மனதில் கோபமில்லை
எரிச்சல் மேலாங்கியது....
தவறான பழிச்சொல்
தேவையா இது...
கண்ணீர் முட்டிய விழிகளில்
வழியும் நீரை துடைத்து
விட்டு கட்டியணைத்தான்...
விதிடா மகனே விதி..
எல்லாம் சரியாகவே
நடந்தது இனியும்
நடக்கும் கலங்காதே...
பலநாள் குளிக்காத மேனியில்
ஜவ்வாது வாசனை
மனதின் கவலை பறந்து
விவரிக்க இயலாத
சந்தோஷம்... பயத்துடனே
கேட்டேன் சாமி...
பதிலுரைத்தார்....
மந்தகாச புன்னகையுடன்
நான்... நான்..வந்து..
பித்தன்.. கிறுக்கன்...
இல்லை.. இல்லை..
ஓர் மயிராண்டி..
ஓரு பண்ணாடை
மனதிற்குள் திட்டிய
வார்த்தைகளை
சிரிப்புடன் சொல்கிறார்...
சிறிதும் கள்ளமின்ற
விம்மி விம்மி
அழுதேன்..... டேய்
கல்லு நினைச்சா கல்
சாமி நினைச்சா சாமி...
திசை தெரியாமல்
தவிஞ்சு வர்ற
உண்மையானவர்க்கு
பதில் சொல்வதுதான்
இந்த பித்தன்
வேலை.....

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...