733 - தங்கமான பையனாமே 🤣🤣🤣

 என்னங்க நம்மை பையனை பார்க்க வந்தவங்ககிட்ட என் பையன் தங்கம் என்று சொன்னீங்களாமே உண்மையா..ஆமான்டீ....அவன் என்னை மாதிரியே இன்னொரு தங்கம் என்று சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..

சரியா போச்சு பொண்ணோட அப்பா பேங்க் மேனேஜர் போல தெரியுது உங்களையும் உங்க பையனையும் சுத்தமான தங்கம் தான் என்று உரசிப் பார்க்க Gold Appraiser -ஐ கூட்டிக் கிட்டு வந்திருக்காரூ 🤣🤣🤣🤣..

அட கவலை மறந்து சிரிங்க நண்பர்களே.. இந்த உலகம் தங்கத்தை தான் அடிக்கடி உரசிப் பார்க்கும்....தகரத்தை உரசிப் பார்க்காது.... இந்த உலகம் எப்பவுமே இப்படித்தான் 😇🤔🤔🤔


732 - இந்தியாவின் தலைவர் நேதாஜி

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க மிதவாதம் சரிவராது என்றே முழக்கமிட்டனர்.


காந்தி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக போட்டி போட்டது மட்டுமல்லாமல், தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால் ஆறே மாதத்தில் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

வெறும் தலையாட்டி பொம்மையாக இருக்க எனக்கு துளியும் விருப்பமில்லை.

எனவே எனது வழியில் நான் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடுவேன் என்று தனியாக களம் கண்டு, மாபெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஓர் மாநில கட்சியில் பதவி கிடைக்க வில்லை என்ற ஆத்திரத்தில் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்றே சிலர் புதிய புதிய அரிதாரம் பூசி.. கட்சியின் பெயரால் 

காசு பணம் தலைவர் பதவி என அலைந்த போது.

தன்னிகரற்ற இந்திய தலைவராக உருவானவர்.


இவரின் வரலாற்றை எழுதும் போது அத்தோடு தமிழரின் வரலாறும் சேர்ந்தே இருக்கும்.


தமிழை சரியாக மேடையில் பேசவே தெரியாமல் " தமிழ் காட்டுமிராண்டி பாஷை" என பிதற்றிக் கொண்டு இருந்த சமயத்தில்..

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைப்பு செய்தவர்.

எனக்கு இன்னொரு பிறவி இருக்குமென்றால். அப்போது நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை இந்நிய அரங்கில் மட்டுமல்ல.

உலக அரங்கிலும் தமிழுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர்.

 தேசிய ராணுவத்திற்கு லட்சுமி பாய் என்பவரை நியமித்து பெண்களை வீராங்கனையாக உலகிற்கு அறிமுக செய்து வைத்தார்.


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுதந்திர கொடியை பட்டொளி வீசி பறக்க விட்ட தைரியசாலி.


இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பலருக்கும் இவரின் வீரம் செறிந்த கதை நன்கு மனப்பாடம் 

இந்தியாவின் நலனே முக்கியம் என்ற இவரின் கோட்பாடு வீரமிக்க வரலாறு 

"தேசியமும் தெய்வீகம் எனது இரு கண்கள்" என்றவரை தனது நண்பராக கொண்டவர் இந்த வங்கத்தின் சிங்கம்..


731 - கருணை கடல் மகாவிஷ்ணு

அவனின் காதலி...
.
.
எனக்கு யாருமே இல்லை
அழுது புலம்பினாள்..
மெல்ல மெல்ல தன்னையே
அறியாமல் கண்ணனை காதலிக்க ஆரம்பித்தாள்...
கண்ணெதிரே அவன் வரவில்லை..
ஆண்டுகள் பல ஆனாலும் அவளின்
எதிர்பார்ப்பு குறையவில்லை...
கண்ணின் பெயரை கேட்பதிலும்
அவளுக்குள் எல்லையற்ற காதல்...
கண்ணன் குசேலனை ஆட்கொண்ட
கதை சொல்கிறார்கள் வருகிறாயா....
மனதில் ஆயிரம் ஆசையுடன்...
போய் அமர்ந்தாள்... கண்ணனை தேடி...
கதை ஆரம்பித்தது உபன்யாசர் சொன்னார்...
குசேலன் கண்ணனை பார்க்வில்லையே
நாளும் தவித்து அழுது புலம்பினான்...
ஓவ்வொரு நாளும் வேதனையில்
துவண்டாலும் கண்ணனை துதித்தான்.....
மாயவன் கிருஷ்ணன். எப்போதும் அந்த
ஏழையை தயவுடன் நோக்கினான்...
நாளை கோகுலாஷ்டமி..... அவன்
உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்று
கவலைப்படாதீர்கள் அவன் என்றுமே
நம்மை பார்க்கிறான்..... தன் நிலையற்று
கண்ணில் தாரை தாரையாக சாரல் மழை...
வீட்டிற்கு ஓடிவந்தாள் ..என்னை மன்னித்து விடு வேதங்கள் படிக்கவில்லையே...
நான் சாதாரண பேதை பெண்
என் குறைகளை பொறுத்துக்கோ
நீயே என் துணை...
நாளை உன்னை மன்னனாக அலங்கரிப்பேன்..
காலையில் எழுந்தாள் குளிக்கும் போது...
தன்னை யாரோ பார்ப்பது போல ஓர் உணர்வு..
பட்டாடைகளை உடுத்திய போது அதே உணர்வு.
பூஜையறை வந்து கண்ணின் விக்கிரகத்தை
மடியில் எடுத்து வைத்து கொஞ்சி விளையாடினாள்....
காதலை வெறுத்த தந்தை கூட கேலி செய்தார் உன் காதலனை வரச்சொல் அவனுக்கே...
உன்னை மணம் முடித்து வைக்கிறேன்...
முகத்தில் புன்னகை மலர்ந்தது வெண்ணெய்
எடுத்து ஊட்டினாள் வருவாயா மணமுடிக்க..
இரண்டாம் தாரமாக என்னை கேட்டு வரும்
பல நபர்கள் என்னை முதல் தரமாக
விம்மி விம்மி அழுதவள்..
சனியனே. காலையிலேயே ஆரம்பிச்சாச்சு...
தருதலை ஏண்டி என் வயித்துல பிறந்தே...
அம்மா ஏசுவது நடைமுறை நிகழ்வுதானே..
கருப்பாய் நொண்டியாய் குண்டான உடம்பு
படிப்போ சுத்தமாய் எழுதவும் தெரியாதே
என்னை நீ காதலிப்பாயா...... மதுசூதனனா
நீ பேசா விட்டால் என்ன உன்னை நான்
மனதார காதலிக்கிறேன்....
என் தலையெழுத்து எழுதியது நீயே கோவிந்தா
வாழ்வோ தாழ்வோ உன்தடிகளே என் சரணம்.
மெளனமாக இருந்தவன் கண்ணை கட்டி
காதலை வெளிப்படுத்தாள் ... சிரித்தாள்...
சிணுங்கினாள்..வா...வா... கண்ணா....
வந்த கண்ணும் அவளின் கண்களை கட்டி
விளையாடினான். மாயையில் மயங்கினாள்
ஆசைகளை துறக்க சொன்ன கேசவன்
அவளின் சின்னஞ்சிறு ஆசைக்கு
செவிசாய்தான்... ஏனென்றால் தனது
நெஞ்சமதில் மிதித்தவரையும்
காப்பாற்றும் கருணை கடல் மகாவிஷ்ணு..

. 

730 - ஈ...ரோடு போனால்

 ஈ...ரோடு போனால் 

பேனோடு தான் 

வரமுடியும்...தலையை 

சொறிய வைக்கும் 

ஈரை பற்றி பேசுவது 

வீண் வேலை.... தமிழ் 

காட்டு மிராண்டி

பாஷை அல்லவே 

கல்லும் மண்ணும் தோன்றும் 

முன்பே தோன்றிய மொழி 

தமிழரின் பாரம்பரியம்

பறைசாற்றும் ஐம்பெரும் 

காப்பியங்களுக்கு மீண்டும் 

புத்துயிர் கொடுப்போம்...

ஈரும் வேண்டாம்..

பேனும் வேண்டாம்..

தமிழின் காப்பியங்களே 

தமிழரின் காவியங்கள்


729 - Karnan Vs Arjuna

 Please read Mahabharata fully and make your own conclusion 

Anyhow, if anyone have not read mahabharatam, so far. Then gohead, I'm not a philospher, but conveying my thought process. You may agree about my writings are give your valuable suggestion. 

Because mahabharatham is not only a story written by vyshar. It's our indian history which was documented, by our holy gurus and has been given from their younger generation. Still philosophy which has been stated was standing forever.


Here i'm posting a small intro to it.


Mahabharatham clearly stated in every aspect, good person will never believe in GOD. Eventhough GOD is standing aside withhim and trying to help his best by breaching the law of karma, for his betterment.

Whereas arrogant people will be like fool and stupid. But they always believe their friends and relatives than their own potential ( Dhuriyothana was son of king).

Always arjuna says krishna, please make us win. but he always doubt about krishna's doing.So Arjuna emphasis again and again "krishna whether we will win this battle". Whereas in another part Karna always remind his friend, who safeguard his goodwil infront of largre crowd. Hi Duriyodhana, beware Krishna is with them. he will make them win. Consider ...consider whether we want to fight. Even after knowing his birth secret Karna stand with duriyodhana, that's his faith and loyalty. Which made Lord Krishna bhagavan walk towards karnan, before his last breath. Even after karnan death, arjuna say i have killed him.. But Lord kanna make him understand, everything is created by his own illusion called Maya.. Reading Mahabaratha or Ramayana will not make you rich in money, but surely it give you tremendous courage to overcome your day to day life easily.

Money can only give you materlistic joy, whereas these stories can make you better towards all your actions in your life.


Read Mahabharatham or Ramayana, if you think so. Merely reading above said books can make you better goahead with your wish. 

If not just you can ignore, thats upto you.

 Jai Guru Dev.



728 - இந்திய ஜவான்

தம்பி நீ சாப்பிட்டா

என்று ஓவ்வொரு 

வேளையும் கேட்ட 

அம்மாவும் அக்காவும் 

ஆயிரம் ஆயிரம் 

கனவுகளை சுமந்து 

வாழும் அவனின் காதலி 

அத்தனையும் நினைக்கவும் 

நேரமின்றி கண்கொட்டாமல் 

வெயிலும் பனியும் கடந்தே 

துப்பாக்கியை தோளில் 

சுமந்தபடி எல்லையில்

எதிரிகளின் தொல்லை தீர்க்க 

தன்னுயிர் பற்றி 

பயமின்றி நெஞ்சத்தை 

நிமிர்த்தி காவல்காக்கிறான் எனதருமையான தோழன்...

கடமைமிக்க இந்திய ஜவான் 


727 - பட்டப்பெயர்கள்

பைத்தியக்காரன் 

இளிச்சவாயன்

பிழைக்க தெரியாதவன் 

கோபக்காரன் இவையெல்லாம் 

இன்று நேற்று அல்ல...

காலம் காலமாக 

உலகில் வெற்றி பெறுவதற்கு 

முன்னர் இழித்தும் பழித்தும் 

பேசி முன்னேற துடிப்பவனுக்கு

முதன்முதலாக உலகம் சூட்டி மகிழும் 

பட்டப்பெயர்கள்

726 - அரசியல் ஆட்டம்

எப்படியும் ஆட்சியை
தலைகுப்புற விழ வைக்க 
முயற்சி செய்யும் சிலர்...
ஆட்சியை இழந்தால் 
கட்சி கரைந்தே போகும் 
என்ற எச்சரிக்கை 
உணர்ந்தே ஆட்சியும் 
கட்சியும் காப்பாற்ற 
துடிக்கும் சிலர்..
எந்த விதமான 
கவலையும் இன்றி 
நாற்காலியில் அமரும் 
கனவுகளில் களநிலவரம்
புரியாமல் மிதக்கும் சிலர். 
அரசியல் புரியாதவர்களுக்கு 
எவ்வளவு சொன்னாலும் புரியாது 
அரசியலை பொழுபோக்காக 
பண்ண எவராலும் முடியாது.
ஓவ்வொரு நாளும் அரசியலை 
மூச்சாக நினைத்து வாழும் 
மனிதனுக்கே அரசியல் வசப்படும் 



100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...