731 - கருணை கடல் மகாவிஷ்ணு

அவனின் காதலி...
.
.
எனக்கு யாருமே இல்லை
அழுது புலம்பினாள்..
மெல்ல மெல்ல தன்னையே
அறியாமல் கண்ணனை காதலிக்க ஆரம்பித்தாள்...
கண்ணெதிரே அவன் வரவில்லை..
ஆண்டுகள் பல ஆனாலும் அவளின்
எதிர்பார்ப்பு குறையவில்லை...
கண்ணின் பெயரை கேட்பதிலும்
அவளுக்குள் எல்லையற்ற காதல்...
கண்ணன் குசேலனை ஆட்கொண்ட
கதை சொல்கிறார்கள் வருகிறாயா....
மனதில் ஆயிரம் ஆசையுடன்...
போய் அமர்ந்தாள்... கண்ணனை தேடி...
கதை ஆரம்பித்தது உபன்யாசர் சொன்னார்...
குசேலன் கண்ணனை பார்க்வில்லையே
நாளும் தவித்து அழுது புலம்பினான்...
ஓவ்வொரு நாளும் வேதனையில்
துவண்டாலும் கண்ணனை துதித்தான்.....
மாயவன் கிருஷ்ணன். எப்போதும் அந்த
ஏழையை தயவுடன் நோக்கினான்...
நாளை கோகுலாஷ்டமி..... அவன்
உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்று
கவலைப்படாதீர்கள் அவன் என்றுமே
நம்மை பார்க்கிறான்..... தன் நிலையற்று
கண்ணில் தாரை தாரையாக சாரல் மழை...
வீட்டிற்கு ஓடிவந்தாள் ..என்னை மன்னித்து விடு வேதங்கள் படிக்கவில்லையே...
நான் சாதாரண பேதை பெண்
என் குறைகளை பொறுத்துக்கோ
நீயே என் துணை...
நாளை உன்னை மன்னனாக அலங்கரிப்பேன்..
காலையில் எழுந்தாள் குளிக்கும் போது...
தன்னை யாரோ பார்ப்பது போல ஓர் உணர்வு..
பட்டாடைகளை உடுத்திய போது அதே உணர்வு.
பூஜையறை வந்து கண்ணின் விக்கிரகத்தை
மடியில் எடுத்து வைத்து கொஞ்சி விளையாடினாள்....
காதலை வெறுத்த தந்தை கூட கேலி செய்தார் உன் காதலனை வரச்சொல் அவனுக்கே...
உன்னை மணம் முடித்து வைக்கிறேன்...
முகத்தில் புன்னகை மலர்ந்தது வெண்ணெய்
எடுத்து ஊட்டினாள் வருவாயா மணமுடிக்க..
இரண்டாம் தாரமாக என்னை கேட்டு வரும்
பல நபர்கள் என்னை முதல் தரமாக
விம்மி விம்மி அழுதவள்..
சனியனே. காலையிலேயே ஆரம்பிச்சாச்சு...
தருதலை ஏண்டி என் வயித்துல பிறந்தே...
அம்மா ஏசுவது நடைமுறை நிகழ்வுதானே..
கருப்பாய் நொண்டியாய் குண்டான உடம்பு
படிப்போ சுத்தமாய் எழுதவும் தெரியாதே
என்னை நீ காதலிப்பாயா...... மதுசூதனனா
நீ பேசா விட்டால் என்ன உன்னை நான்
மனதார காதலிக்கிறேன்....
என் தலையெழுத்து எழுதியது நீயே கோவிந்தா
வாழ்வோ தாழ்வோ உன்தடிகளே என் சரணம்.
மெளனமாக இருந்தவன் கண்ணை கட்டி
காதலை வெளிப்படுத்தாள் ... சிரித்தாள்...
சிணுங்கினாள்..வா...வா... கண்ணா....
வந்த கண்ணும் அவளின் கண்களை கட்டி
விளையாடினான். மாயையில் மயங்கினாள்
ஆசைகளை துறக்க சொன்ன கேசவன்
அவளின் சின்னஞ்சிறு ஆசைக்கு
செவிசாய்தான்... ஏனென்றால் தனது
நெஞ்சமதில் மிதித்தவரையும்
காப்பாற்றும் கருணை கடல் மகாவிஷ்ணு..

. 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...