அன்பே சிவம்

 பல வருடங்களாக 

பேசிக்கொள்ளாத

அக்காவின் வீடு தேடி

சென்று பழசையெல்லாம்

மறக்க சொன்னான் அவளின்

அருமை தம்பி ..

உங்க அம்மாதான்

எல்லாத்துக்கும் காரணம்

ஏதேதோ கோபத்தில்

பேசியவளை சமாதானம்

செய்தான் அவளுக்கு

நீதானே முதல் குழந்தை

நொடியில் பாசத்தில்

கரைந்தாள் ஆனாலும்

தாய்மை கேள்விகேட்டது

என் பொண்ணு வாழ்க்கை..

அவனோ சிரித்தபடி

பதில் சொன்னா நீ சரியென்றால்

நானே அவளை கட்டிகிறேன்

உங்கம்மா பல லட்சம்

வரதட்சணை கேட்கிறாளே...

நகை புடவை சீர்வரிசை

ஐந்து லட்சம் தருவதாக சொல்லு....

என்னிடம் இப்போதைக்கு என்றவளிடம்

எல்லாமே கேள்விப்பட்டேன் 

இதுவும் உன் பணம் தான் கையில் கொடுத்தான்... சமையலறையில்

இருப்பவளை திட்டும் அம்மா..

அவளுக்கு எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்... சொந்த தாய்மாமனை 

கட்டிக்க ஐந்து லட்சம் கொடுத்திருக்காளே.. அவளுக்கு 

ஏதுடா அவ்வளவு பணம் வந்துச்சு 

சிறு வயசுல இருந்தே என்னை நினைச்சு சேர்த்தாளாம் அவளே தான் சொன்னா

இத்தனை ஏச்சுகளை வாங்கிய பிறகும்

அத்தை இந்தா ஹார்லிக்ஸ் என்றே தயங்கியபடி நின்றாள்..

என்னங்க உங்களுக்கு ஏதாவது என்றவளிடம்...

அமைதியாக சிரித்தான்.. அவளுக்கு புரிந்தது வீட்டின் அமைதியை விட காசு பெரிதல்ல என்று உண்மை

வாசலில் அவனின் அக்கா..அவளை வரவேற்றது அவன் வண்ணத்தால் வரைந்த ஓவியத்தின் ஊடே வசனம் அன்பே சிவம் 



கழுதையின் காதல் - இரு கழுதைகள்

 முதல் காதலின் ரணங்கள் ஆறுவதற்கு முன்னரே மயிலிறாக வந்தவள்.

அவனின் காதல் காயங்களை நன்கு உணர்ந்த காரணத்தால் அபரிமிதமான தன் காதலை பாறையாக இருந்தவனின் மனதில் மலரச்செய்தாள்.

அன்பெனும் பாசத்தை மழை தூவானமாக தெளித்து..

பேசினால் தான் காதல் வளரும் என்று காசை வாங்கிட்டு கேமரா முன்னால் மட்டும் ஹீரோ கட்டி புடிச்சு காதல் வசனம் பேசி ஆடி விட்டு..

அந்த ஹீரோ ஷெடில் இல்லாத போது...

இவன் எல்லாம் ஓர் மனுஷனா, அவனும் அவன் மூஞ்சியும் என்ன செய்யுறது இந்த பீல்டுக்கு வந்தாச்சு.

நாய் வேஷம் போட்டா குலைச்சு தானே ஆகணும் என்று உண்மையை கூட பேச இயலாத நடிகை போல் முகத்தில் ஒன்றும் முதுகில் ஒன்றும் பேசும் திரைப்பட காதலி போல் அல்லவே அவள்.

நீங்க என் கூட இருந்தாலே போதுமென்று வாழ்வில் வசந்தமாக வந்தவள்.. உனக்கு தருவதற்கு எதுவுமே இல்லையடி என்னிடமென்றே அவளை தள்ளி விட்டேன் 

காதல் என்பது எதிர்பார்த்து வருவதில்லை. காதல் பதிலுக்கு காதலை மட்டுமே எதிர்ப்பார்க்கும் என்று தத்துவம் மழை பொழிந்தாள்.

என்னை கட்டிகிட்டு வாழ்வதும், கழுதையை கட்டிட்டு வாழ்வதும் ஒண்ணுதான்...

எங்களுக்கு கோபம் வந்தா ஊரே அதிரும் படி கத்துவதை தவிர வேறு எதுவுமே தெரியாது என்றேன்.

தான் அணிந்த பகட்டான ஆடைகளை வியர்வை அழுக்கு என்று தள்ளி வைக்கும் மனிதர் நீங்களும் கழுதையும் அல்லவே..

நீ சொல்வது எனக்கு எதுவுமே புரியவில்லை


ஆனால் நீங்க சொல்லாதது கூட எனக்கு புரிஞ்ச காரணத்தால் பேசுறேன்.

எத்தனையோ மனிதரின் வியர்வை நாற்றமும் அசிங்கமான ஆடைகளையும் எந்த வித முககோணலும் இல்லாமல் சுமந்து செல்வது கழுதை தானே என்றாள்.

உனக்கு என்மேலே ஏதோ கிறுக்கு பிடிச்சு இருக்கு, அதான் இப்படி பேசுறே.அல்லது யாராவது ஓருத்தன் உன்னை காதலிச்ச ஏமாத்தி இருக்கணும்.

அதான் தத்துவ ஞானி மாதிரி பேசுறே.நானே இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தெரியலை.

ஏன் இப்படி விரக்தியா பேசுறீங்க

ஏன்னா தினமும் நியூஸ் பார்க்கிறேன் தானே, நல்லா குடிச்சு வண்டி ஓட்டிக்கொண்டு பைபாஸ்ல போறாங்க தன் ஆயுள் முழுவதும் சாராய கடை பக்கமே போகாத  ஓருத்தன் மேல தானே வண்டி போய் ஆக்சிடென்ட் பண்ணுது

 தயவுசெய்து நம்பிக்கையா ஏதாவது பேசுங்க 

அப்படியா, நல்லாகேட்டுக்கோ என்னை விட ரொம்ப நல்லங்க எத்தனையோ பேர் இருக்காங்க, நீ அவங்கிட்ட போய் உன் மனப்பாடம் பண்ணின இந்த காதல் வசனத்தை பேசு.

உனக்கும் ஓருத்தன் கிடைப்பான், அவனை கல்யாணம் கட்டிகிட்டு பார்க் பீச்சு சினிமா தியேட்டர் ஷாப்பிங் மால் சொந்தகாரங்க கல்யாண வீடு என்று நீ சந்தோஷமா வாழு.

ஏன் நான் உங்களை கட்டிக்க கூடாதா...

ஏன்டீ நீ என்ன லூசூ. எனக்கு மத்தவங்க மாதிரி காதல் வசனம் பேச தெரியாது.

முன்பின் தெரியாத யாராவது ஓர் பொம்பள வந்து உதவி கேட்டா கூட செய்வேன்.. அவங்க பெயர் முகவரி கேட்காம உதவி செய்வேன். அதுக்காக டீ வடைன்னு காசு செலவழிக்க மாட்டேன்.

தம்பி இந்த மூட்டை தூக்கி தலை வையு..இந்த பஸ் எங்க போகுது.இப்படி சின்ன சின்ன உதவிதான் செய்வேன்..

பத்து பைசா கூட யாருக்கும் அனாவசியமாக செலவழிக்க மாட்டேன்.. ஏன்னா உதவி செய்ய மனசு இருந்தாலும் நூறு ரூபாய் காசை கூட பட்ஜெட் போட்டு வாழுற சாதாரண மத்திய வர்க்கம் தானே 

அதுவுமில்லாம ஓருத்தங்க கிட்ட பேசுனா தான் உறவு வளரும் அப்படின்னு சொல்லுறாங்க.

எனக்கு யாரிடமும் பேசவே பிடிக்காது அதிக பட்சமாக இரண்டு வார்த்தை அதுக்கு மேல பேச எனக்கே எரிச்சலா இருக்கும்.


எங்கேயாவது காடு மலை அப்படின்னு தனியா போய் உட்கார்ந்து கிட்டு, வானத்தை வெறிச்சு பார்த்துவிட்டு இந்த மேகங்களை போலத்தானே மனுஷ வாழ்க்கை.

இந்த 80 வருட வாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்லி மனுஷன் பொழைக்கிறான்.. தன் கீழே இருப்பவர் பொய் சொல்ல கூடாது என்று நினைப்பவன் ஏனோ அதிகமா பொய் சொல்லுறான்.

சம்பளம் கூடுதலா கேட்டா கம்பெனியே நஷ்டத்துல தான் ஓடுது நீ வேற கம்பெனி வேணா போ என்கிறார் முதலாளி.

இந்த மாதிரி உலகத்தில் பிறந்தது தப்புன்னு நினைச்சு சிரிக்கிற ஆளூ நான்..

எனக்கு எல்லாம் குடும்பம் குழந்தை என்று  வாழ்வும் தெரியாது.. அப்படி ஓர் ஆசையும் என் மனசுல இல்லே.. வயசான அப்பா அம்மா இருக்கிற வரை இருப்பேன்.

அதுக்கு அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க..

எங்கேயாவது மனம் போன போக்கில் போக வேண்டியது தானே

உங்களுக்கு ஓர் வாழ்க்கை வேண்டாமா..அப்போ உங்க பூர்வீக சொத்து.


அட நீ வேற அவங்க சேர்த்து வைச்ச சொத்தை அவங்களே கொண்டு போக முடியலை. அதை நான் ஏன் தூக்கிட்டு சுமக்கணும்.  என்னோட சொத்தை ஆட்டைய போட என்னோட சொந்த்காரங்களே இருக்காங்க.

அவங்களுக்கு தெரியாதே, என் சொத்தை ஏமாத்தி வாங்க பார்க்கிறாங்க.

தேவைன்னு கேட்டா நானே தூக்கி கொடுத்துவேன்.ஏன்னா பாசத்தை விட சொத்து எனக்கு பெரிசுல்ல.

ஆனா அவங்களுக்கு என்னோட சொத்து மட்டுமே தான் பெருசா தெரியுது‌.என்னோட பாசத்தை புரிஞ்சுக்க யாராலும் முடியாது. 

ஏனோ சொல்லும் போது அவனின் கண்களில் கண்ணீர் திரண்டது.

தள்ளி நின்று ரோட்டை வெறித்து பார்த்த படி...

உங்க அன்பு எனக்கு புரியுது, நான் உங்களை கட்டிகிட்டு ரொம்ப சந்தோஷமா வாழ வைப்பேன் என்றபடி அவனின் தோளில் சாய்ந்தாள்.


முதன்முறையாக ஓர் பெண்ணின் ஸ்பரிசம், எத்தனையோ நாட்கள் எதிர்பாராமல் அவளின் உடல் அவனை உரசி சென்ற நாட்கள் உண்டு.. அந்த நாட்களில் எல்லாம் எரிந்து விழுந்தான்

ஏன் இப்படி உரசிட்டு போறே, உனக்கு அறிவு இல்லையா

இரண்டு அடி தள்ளிப்போ..என்ற போதும் நான் உங்களை கடத்திட்டு போயிடல அவசரத்துல ஏதோ தெரியாம பட்டுவிட்டது.

இதோட நாலாவது தடவை நீ என் மேல உரசுறது, எனக்கு யாரும் என் கிட்ட வந்தாலே பிடிக்காது.

பிறகு கோபத்துல எதாவது சொல்லிட்டா கண்ணீர் விட்டு அழுவே தயவுசெய்து என பக்கதுலே ஏன் வர்றே என்று பேசியவனின் தோளில் அவள்.


ஏனோ எதிர்த்து பேச மனமில்லாமல் அமைதியான்.


ம்ம்ம் ஏதாவது பேசுங்க என்றாள்.. என்ன பேசுறது என்றவனிடம் ஏதாவது இப்போ உங்க மனசுல உள்ளதை பேசுங்க என்றாள்.

பக்கத்து வீட்டு பாட்டி பாத்ரூம்ல கீழே விழுந்ததுடுச்சு.. அவங்க மகனும் மகளும் பாரின்-ல இருக்காங்க பாவம் பாட்டி தனியா கஷ்ட படுது

ஏன் நீங்க போயி உதவ வேண்டி தானே.

எனக்கு போயி உதவ ஆசை தான், ஆனா அந்த பாட்டியோட மகள்.அம்மா நீ யாரையும் இந்த காலத்துல நம்பாதே.எல்லோரும் நம்ம கிட்ட இருக்கிற பணத்தை புடுங்க தான் பேசுறாங்க அப்டின்னு சொல்லிட்டு போயிட்டாங்களா.

அதனால் உன் உதவி தேவையில்லை தம்பின்னு சொல்லுச்சு

சின்ன விஷயத்துக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பீங்களே.அந்த நேரத்தில் உங்களுக்கு கோபமே வரலையா

எதுக்கு அவங்க உண்மையை தானே சொல்லுறாங்க.

அப்போ நீங்க அவங்க சொத்துக்காக தான் போயி பேசுனீங்களா..

அவளின் கேள்வியில் பக்குவம் இருந்தது. இதுவரை அவன் கண்ட கோணங்களை மாற்றி யோசிக்க வைத்தது.

மெளனமாகவே மாறினான்.

ம்ம் பதில் சொல்லுங்க..

ப்ளீஸ் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை..

நீ சொல்வது கூட சரியா இருக்கலாம்...


நான் ஓர் விஷயம் கேட்டா பொய் சொல்லாம பதில் சொல்லுவீங்களா..

ம்ம் கேளூ... எனக்கு தெரிஞ்சா பதில் சொல்லுறேன்..

நீங்க யாரையாவது இதுக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கீங்களா..

நீ இன்னிக்கு கட்டி இருக்கிற பூப்போட்ட சேலை ரொம்பவே அழகா இருக்கு, ஏதாவது பங்ஷன் வீடா..

இதை  பல நாள் கட்டிகிட்டு ஆபிஸ் வந்திருக்கேன், ஓர் நாள் கூட உங்களுக்கு தெரியலையா..இப்போ தான் உங்க கண்ணுக்கு புதுசாதெரியுதா..

சில நிமிஷமா இந்த உலகமே எனக்கு ஏதோ புதுசா இருக்கிற மாதிரி தான் தோணுது.நீ முதல் நாளில்  இந்த சேலை கட்டிக்கொண்டு முல்லையும் கனகாம்பரமும் சேர்த்து கட்டிகிட்டு வந்த போதே. நீ இன்று பார்க்கிறது தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்லணுங போல தோணுச்சு.

பிறகு ஏன் சொல்லவில்லை, ஏன்னா அப்போ உரிமை இல்லை..

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, வேற ஏதோ பேசுறீங்க.

நான் உன்கிட்ட பொய் சொல்ல விரும்பலை. அதேபோல உண்மையை சொல்லி உன் மனசை காயப்படுத்தவும் விரும்பலை, எனக்கு தர்மசங்கடமான நிலையை உண்டு பண்ணாதே..

அன்னிக்கு உரிமை இல்லை என்றீங்க இன்னிக்கு என்னவாம் அதையாவது சொல்லுங்க

இப்போ ரொம்ப உரிமையும் இருக்கு,அதே சமயத்தில் உன் கேலியான பேச்சை ரசிக்கிற பொறுமையும் இருக்கு.. எனக்கு என்னை வித்தியாசம் பார்க்க தோணுது..


ஏன் அப்படி...

எனக்கு எதுவுமே சொல்ல தெரியலை..ஆனா ஏதோ மனசு அமைதியா இருக்கிற மாதிரி இருக்கு.

நீங்க கோப படமாட்டீங்கன்னா சொல்லுவேன், அப்புறம் நீங்க என்னை திட்ட கூடாது சரியா..

அவளின் நெற்றியில் விழுந்த ஓர் சிறு தூசியை தனது கைக்குட்டையால் துடைத்தான்.

ம்ம்ம் சொல்லு பார்க்கலாம்.

ஏன்னா இது கழுதையின் காதல் என்று அவனின் முகத்தை பார்த்தாள்.

அவனோ சிரித்தபடி சொன்னான்..இரு கழுதைகள்.

உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா.

அவனோ மேற்கொண்டு பேசாமல் அவளின் தோளை பற்றினான்.

சாலையில் மறுபுறத்தில் இரு கழுதைகள் செல்வதை பார்த்து இருவரும் சிரித்த படி சொன்னார்கள்

இரு கழுதைகள் 

அப்பா மகன் உறவுச்சிக்கல்

 யார் மனசுல தான் கவலை இல்லை.. எல்லோரின் மனதிலும் ஏதோ ஓர் விதமான கவலை இருக்கத்தான் செய்கிறது..

தன் கவலை சோகம் மற்றும் மனதின் வலிகளை மறைத்து தன்னையும் தன்னை சார்ந்தவரையும் காப்பாற்றுபவனே ஓர் சிறந்த மனிதன்.

ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்ற பெயரில் அந்த மனிதர் வாழ்கிறார்...

சிலருக்கு மட்டுமே அவரின் அருமை புரிகிறது.. எங்க அப்பா நல்லவர் ஆனா அவருக்கு என்னை புரிந்து கொள்ள தெரியவில்லை என்பது அதைவிட பெரிய வலி. மாமியார் மருமகள் சண்டை பற்றி எழுதும் எத்தனையோ எழுத்தாளர் இருக்கிறார்கள்.

ஏனோ இது வரையில் தந்தை மகன் இடையே நடக்கும் பாச போராட்டத்தை சரியான சொன்ன கதைகள் மிகவும் குறைவே

இலக்கியத்தை படியுங்கள்

கதை கவிதை கட்டுரை என்று இலக்கியங்களை தேடித் தேடி படியுங்கள் நண்பர்களே.

இந்த உலகில் மிகவும் மென்மையான காதலையும் வீரத்தையும் அன்பு இரக்கம் போன்ற கடவுள் படைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் இலக்கியத்தில் மட்டும் தான் இருக்கிறது.


தினமும் சீரியல் பார்த்து சீரியஸாக வாழும் மனிதர்களே, சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து உங்களின் உடனிருக்கும் சொந்த பந்தங்களுடன் நேசமுடன் வாழுங்கள் 

உங்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகள் வாழ்வில் நடைமுறை சிக்கல் அனைத்திலும்  மனிதர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.


உடனிருக்கும் யாருக்கும் எந்த தீங்கு வராமல் பார்த்துக் கொள்ளவும்.. முடிந்த வரை தன்னாலான உதவிகளை செய்யவுமே எல்லோரும் நினைக்கின்றனர்.

ஏனென்றால் நீர் குமிழி வாழ்க்கை என்பதை உணர்ந்தவன் எல்லோரும் நன்மை செய்யவே முற்படுகிறான்.

.கடவுளை கண்டவனை விட கடவுளை காட்டுவதாக சொல்லி கல்லா கட்டி தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்துபவரே பலர்.

சில உண்மை நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கண்ணுக்கே தெரியாத கடவுளுக்கு அஞ்சி எந்த தவறுமே செய்யாமல்.. மிகவும் ஒழுக்கமாக வாழும் நபர்கள்‌அவர்கள்.

அவர்கள் இறைவனின் பெயரால் ஏழைகளுக்கு உதவுகின்றனர்..

உலர்ந்த மலர்கள்

மனிதர்களில் பலர் புதிய மலர்களை விரும்புகின்றனர் அதன் அழகிற்காக மட்டுமே.. அதன் பயன்பாடு முடிந்தவுடன் தூக்கி குப்பையில் ஏறிகின்றனர்.. ஓர் ஏழை அந்த காய்ந்த மலர்களை சேகரித்து பதப்படுத்தி வாசனை மிகுந்த திரவியமாகவும்.. மற்றும் கடவுளுக்கு படைக்கும் வாசனை மிகுந்த அகர்பத்தியாகவும் மாற்றுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா 

இந்த மலர் காய்ந்து விட்டது, இதற்கு மேல் இங்கு இருந்தால் நமக்கு இடைஞ்சல் குப்பையா தெரியும் என்று தூக்கி குப்பையில் வீசப்படும் மலர்கள்.
மன்னிக்கவும் நன்றாக உபயோகப்படுத்திய சுயநல மனிதர்களின் பார்வையில் அது குப்பை.
ஆனால் அந்த குப்பையில் கூட சிறந்த பொருளை காணும் சில அற்புதமான மனிதர்களை கடவுள் படைத்திருக்கிறான்.

ஏனென்றால் உபயோகமற்ற பொருளில் தான் கடவுளுக்கு படைக்கும் பொருட்கள் செய்யப்படுகின்றன.

ஆமாம், மூலப்பொருளை வாங்க கூட காசில்லாத சிலர் அந்த காய்ந்த மலர்களை மிகவும் கவனமாக சேகரித்து, தொட்டாலே தூள் தூளாக போகும் பலனின்றி இருக்கும். அதை சிரமப்பட்டு அதிக அக்கறை எடுத்து மிகுந்த கவனமாக அதில் தங்களின் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து அதிலிருந்து 
இருந்து வாசனை மிகுந்த திரவியம் மற்றும் அகர்பத்திகளை செய்கின்றனர்.

என்ன Ram, உனக்கு என்ன பைத்தியமா இப்படி எல்லாம் ஏன் எழுதுற என்று நீங்கள் கேட்கலாம்.

என் மனதில் தோன்றிய சிந்தனை ஓன்றே ஓன்று தான்.
இந்த உலகில் பல திறமையானவர்கள், சில திறமையற்ற மனிதர்களால் உதாசீனம் செய்யப்படுகின்றனர் என்பதே யதார்த்தம்.

தங்களின் தேவையோ கோரிக்கையோ முடிந்த பிறகு, அந்த மனிதரை மிகவும் கேவலமாகவும் ஓர் அற்புதமான புழுவை போலவும் நடத்துகின்றனர். 

சில சுயநலவாதிகள் பல திறமையானவர்களை களிமண், மரமண்டை, மக்கு, பேசத் தெரியாதவன், முன் கோபி, பணக்கார புத்தி, படிச்ச திமிர், பரம்பரை குணம்,  அரசாங்க சம்பளம் வாங்குற நினைப்பு என்று இன்னும் எப்படி எல்லாமோ கேலியும் நக்கலும் செய்து திறமையானவர்களை திறமையற்றவர் போல நடத்துகின்றனர்.

அப்படிப்பட்ட சில அல்ல பல மனிதர்களை தினமும் வாழ்க்கையில் சந்திப்பதால் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் இறந்து போன அந்த உயர் போலீஸ் அதிகாரியை பற்றிய கருத்துக்கள் கூட அவர் திறமையானவர் நேர்மையானவர், ஆனால் இந்த முடிவு அவர் எடுத்ததை நினைத்து மனம் மிகவும் வேதனைப்படுகிறேன் என மற்றொருவர் சொன்னதை கேட்ட போது, ஏனோ மனம் வலிக்கவே செய்தது.


என் சிறு வயதில் எனது அப்பா தனது அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் "சில நேரங்களில் நான் பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டா" என்ன அப்படின்னு தோணுது என்று பேசிய பேச்சுக்கள் நினைவு வருகிறது.



ஆனால் குழந்தைகளை நினைச்சு அவங்களுக்காவது நாம வாழும் என்று சொன்னதும் நினைவு வருகிறது 

அரசு அதிகாரியாக நேர்மையான, இருக்கிறதும், வேலையை விட்டு வெளியே வரும் போதும் அதே நல்ல பெயருடன் வெளியே வரணும் அவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள்.

அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போன தருணங்கள் உண்டு.

மீண்டும் ஓர் விஷயத்தை அழுத்தமாகவும் அதே சமயம் மிகுந்த யோசனைக்கு பிறகுமே இதை எழுதுகிறேன்
சிலரால் தூக்கி வீசும் குப்பையில், இருந்து பொருட்களை சேகரித்து வாழும் மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்.
ஆம் திறமையற்றவர் என முத்திரை சுமத்தும் சோம்பேறிகளை கண்டு அஞ்சாதீர்கள்
தூக்கி வீசப்பட்ட மனிதர்களின் அருமையான உழைக்கும் குணமும் அர்பணிப்புடன் வேலை பார்க்கும் தன்மையும், கண்ணுக்கே தெரியாத கடவுளுக்கு பயந்து வாழும் நல்ல குணமும், உடனிருப்பவருக்காக அவர்கள் வாழும் தன்னலமற்ற உணர்வு அறிந்தவர்கள் மிகவும் சிலரே.

"Same feather flock together ", என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
பிறரால் துன்பத்தை அனுபவித்த மனிதனால் தான் பிறருக்கு ஏற்படும் வலியும் வேதனையும் புரியும் தன்மை உண்டு.



உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் youtube-ல் வீடியோ பாருங்கள். ஓர் சில மனிதர்கள் குப்பையில் வீசப்பட்ட காய்ந்த மலர்களை சேகரித்து வாசனை மிகுந்த அகர்பத்தியாக செய்கின்றனர்


காய்ந்த மலர்களை அகர்பத்தியாக மாற்றும் விதத்தை அதில் காண முடியும்.
எந்த மனிதனும் திறமையற்றவர் கிடையாது.. நீங்கள் இருக்கும் இடத்தை பொருந்ததே சிலர் கடுமையான வார்த்தைகள்.

வாழுங்கள் மனிதர்களே, உங்களின் வலிகளையும் வேதனையும் யாருக்கும் தெரியாத வண்ணம்.

அதே சமயம் நீங்கள் வாழும் வாழ்க்கையை பிறர் பின்பற்றும் விதமாக பயனுள்ள வாழ்க்கையை வாழுங்கள்.

மனித வாழ்வு அதிக பட்சமாக 90 வருடங்கள் தான், வாழும் வரையும் வாழந்த பிறகும் உங்களின் செயல் பேசப்படும் அளவுக்கு.

காய்ந்த மலருக்கும் வாழ்வு உண்டு.

https://youtu.be/OLzQiw0sv5s

தாசில்தார் இசக்கி

 

சார்.. சார் வேண்டாம் சார் அவரை ஓண்ணு பண்ணிடாதீங்க சார்..

கெஞ்சி கூத்தாடிய ஓர் இளவயது பெண் கல்லூரி படிக்கும் வயது இருக்கும்..

என்ன டீ நடிக்கிறே..உன்னை மாதிரி எத்தனை பிராடுகளை பார்த்து இருப்பேன்.. ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவிட்டு போ..

இல்லாட்டி போக்சோ கேஸ் போட்டா நீயும் உங்க தாத்தாவும் களியும் சோறும் தான் திங்க வேண்டிவரும்..


நீ மட்டும் தானா இல்ல கூட்டத்துல வேற யாரும் இருக்காங்களா

சார் இந்த ஓர் தடவை எனக்காக மன்னிச்சு விட்டுங்க சார்..இதுல அவர் தப்பு எதுவுமே இல்லை எல்லா தப்பும் என் மேல தான் தண்ணீர் தாகமா இருக்குன்னு தாத்தா சொன்னாரூ.. இந்த பாவி மட்டை வாட்டர் கேன் எடுத்து வைக்க மறந்துட்டேன்...

 பஸ் எப்படியும் பத்து நிமிஷம் கழிச்சு தானே கிளம்பும் என்று தண்ணீர் பாட்டில் வாங்க போனேன் அதுக்குள்ள இவ்வளவு கூத்தும் நடந்து முடிச்சிடுச்சு..

ஏய்...தே.....மு.....ஆபாசமான வார்த்தை சற்று சத்தமாகவே வந்தது இப்படி பேசியது இன்ஸ்பெக்டர் இல்ல அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் பெண்..


என்னடீ இன்ஸ்பெக்டர் என்கிற மரியாதை கூட இல்லாம ஏதோ கதை பேசுற அவர்கிட்ட எல்லாம் நீ பேச கூடாது.எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுடீ...

அக்கா, நான் பேசுறதெல்லாம் நீங்களும் கேட்டு கிட்டு தானே இருந்தீங்க இப்படி சொன அடுத்த நொடி அவளின் கன்னத்தில் சிவப்பு கோடுகள் தெரித்தது


இவ பெரிய மகாராணி ஓர் தடவை சொன்னதை திரும்ப சொல்ல மாட்டீங்களோ..

தன் பேத்திக்கு அடிவிழுகிறது என்றவுடன் அந்த பஸ் ஸ்டாண்டே அதிரும் படி அந்த தாத்தா ஓலமிட்டார்...


ஏய் பேச்சியம்மா இந்த கண்றாவிய எல்லாம் கேட்குற மாதிரி வைச்சுட்டீயே.

உனக்கும் கண் தெரியலையா அவர் எற்படுத்திய சத்தம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது...


அதுவரை பொறுமையின் சிகரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சப்-இன்ஸபெக்டர் ஏதோ வெறி வந்தவர் போல ஆனார்.

சொல்லிகிட்டே இருக்கிறோம்..வயதானவரை‌ பிடித்து தள்ளி விட்டார்..

கொத்த வேலைக்கு போகும் நபர்கள் அருகில் இருந்த இரும்பு சாமான் மீது போய் விழ இருந்தவரை தடுத்தது ஓர் கை..

ஆமாம் அப்போது கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் பஸ் ஏற வந்தவரின் மீது மோதியதால் இரும்பு கம்பியின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற பட்ட முதியவர்.

அந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபம் அவர் மீது திரும்பியது.. யோவ் நீ யாருய்யா அவரை காப்பாத்த 

ஜீப்பில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் அலறினார்.. யோவ் யோவ் எதுவும் பேசினாறாதய்யா...


சார், பையன் ஸ்டேஷனுக்கு புதுசு அதான் உங்களை அவனுக்கு அடையாளம் தெரியல..


ம்ம் நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.ஏழைகள் மீது உங்க கோபத்தை காட்டாதீங்க அது எப்பவுமே ஆபத்து..

இல்ல சார் அது வந்து இந்த வயசானவரு தன் பக்கத்துல வந்து உட்கார்ந்த பொண்ணு தோளில் கைவைக்கிற மாதிரி ..அப்படியே அது படக்கூடாத இடத்துல பட்டதால அந்த பொண்ணு தான் புகார் கொடுத்தது...

ஏம்மா, இங்கிட்டு வா... அந்த பெண் இன்ஸ்பெக்டரிடம் கேட்டாள்..

இது யாரு சார்.பார்க்க சாதாரணமாக இருக்காரு இவருக்கு போய் இவ்வளவு மரியாதை கொடுக்குறீங்க..

அட நீ சும்மா இரும்மா.. நேரம் கெட்ட  நேரத்துல பெரிய மேலதிகாரி மாதிரி வியாக்கியானம் பேசிக்கொண்டு.


சப்-இன்ஸ்பெக்டரை தடுத்து நிறுத்தியதை பார்த்து மொத்த கூட்டமும் வெறித்து பார்த்தது

தொடரும்...

(Story work in progress)

தக்காளி விலைவாசி - சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல

 சார் இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை

என்ன சார் ஊர் உலகத்துல எல்லோருமே கேட்கிறது தானே அவங்களும் கேட்குறாங்க


யோவ் கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கய்யா..


பத்து பவுன் நகை வரதட்சணை கேட்பாங்கன்னு பார்த்தா பத்து மூட்டை தக்காளி வரதட்சணையா கேட்குறாங்களேன்


விலை கணக்கு பார்த்தா பத்து பவுன் நகையை விட அதிகமா செலவு ஆகிடும் போலையே



கிணற்று தவளைகளே

 


.
.

எனக்கு எல்லாமும்
தெரியும் என்றே
பேசுபவர்களை
நினைத்தே அடிக்கடி
சிந்தனையுடன் சிரிக்கிறேன்
எல்லாமும் தெரிந்தவன்
என்று மார்தட்டி புகழும்
மனிதர்களில் பலர்
கிணற்று தவளைகளே...
கடற்கரையில் சலசலப்பு
ஆழ்கடலில் மெளனம்

அன்பெனும் காதலா...பாசமா... .

 


.
தவறு செய்பவரை
தண்டிக்கும்
நீதிமன்றங்களை விட
தவறே செய்யாத
அன்பானவரை
தண்டிக்கிறார்கள்...
அவர்களின் கையில்
ஆயுதம் இல்லை ஆயினும்
உதட்டில் தேன் கலந்து
வார்த்தை விளையாட்டுகள்
பாசமென்று சொல்லி
போட்ட வேஷம்...
அதற்கு அவர்கள்
சூட்டிய பெயர்
அன்பெனும் காதலா...
உறவு என்னும் பாசமா....
உணர்ந்தவனின் வலிகள்
உயிருள்ள வரை
மறக்காதே....

 

நீ எழுது....

 


.
.

கண்ணுக்கு தெரியாத
கடவுளையும் காதலையும்
நடைமுறை வாழ்வின்
சிக்கல்களையும்
எழுத்துக்களில் எழுத
முயல்கிறேன்....
ஏனென்றால்
எனது வாழ்வின் தேடல்
என்னை எழுத்தாளராக
மாற்றியது ....
காலம் மிகவும்
விசித்திரமானது...
சில காலமே வாழும்
மனிதரில் தான்
எத்தனையோ போட்டியும்
பொறாமையும்
பலவகை மனிதரில்
ஓவ்வொருவரும் ஓர் வகை
இங்கே சிலருக்கு
பணத்தேடல்...
சிலருக்கு
பதவியின் தேடல்
சிலருக்கு
பொருளாதார தேடல்
சிலருக்கு
பாசத்தின் தேடல்
சிலருக்கு
உண்மையின் தேடல்...
சிலருக்கு ஆதாயத்தேடல்...
இந்த உலகில்
ஓர் வகை மனிதருக்கு
ஆகாயத்தின் அளவிற்கு
அளவற்ற தேடல்...
அதனால் தான்
மரத்தடியில்
அமர்ந்து கொண்டு
ஆகாயத்தில்
ஆண்டவனை தேடுகிறார்...
அவரை பைத்தியக்காரன்
என்றே ஒதுக்கி வைத்த
உலகம் ...
யாரிடம் சொல்லி
புரிய வைப்பேன்...
மாபெரும் அரசியல்வாதியும்
மாபெரும் வியாபாரிகளையும்
உதாசீனம் செய்து விட்டு
அந்த ஊரின்
ஏழையான சிறுவனின்
அன்பிற்கு மாத்திரம்
செவிசாய்த்து ஆடு மேய்க்கும்
போது அவனை தொடரும்
ஓர் மெளன மனிதர்
மிகவும் அரிதான
சிலரிடமே பேசும்
அவர் தந்த ஓர்
மொழியே "நீ எழுது" என்றது

அன்பை விதைப்போம்... - போர் கவிதை


.

போர்களும் வேண்டாம்...
போர்களமும் வேண்டாம்...
போர்கள் ஏற்படுத்திய
வலிகளை சரித்திரம்
கண்டுவிட்டது....
மகாபாரதம் தொடங்கி...
கலிங்கம் தொண்டு....
சாம்ராஜ்யங்கள் சரிந்த
போர்க்களம் வேண்டாம்...
இன்று போய் நாளை வா
என்றே அசுரனின் மனதை
மாற்ற நினைத்த தமிழர்களின்
குறிஞ்சி நில கடவுளாம்
கந்தனைப் போல
பகையை வெறுப்போம்
பகைவரை அல்ல....
அசுரனின் குணத்தையும்
மாற்றி சேவலும்
மயிலுமாக அமர வைத்து
கடற்கரைக்கு அழகு சேர்த்த
குமரனைப் போலவே
அழகு பார்ப்போம்...
புத்தன் இயேசு வழியில்
அன்பின் வழியில்
அன்பை விதைப்போம்...

தமிழரின் வாழ்வியல்..

 

.
.
.
தமிழரின்
வாழ்வியலும்
அரசியலும்
வியாபார நுணக்கமும்
தமிழர் அல்லாத
பிறரால் புரிந்து
கொள்ள இயலாது...
அதையும் மீறி
புரிந்து கொள்ள
முயலும் போதே
தமிழராய் மாறியிருப்பார்...
பல ஆண்டு பகைமையும்
சில நொடிகளில் மறைந்து
நண்பராய் மாறுவதும்
விட்டுக்கொடுப்பதும்...
தட்டிக் கொடுத்து...
முன்னேற்றுவதும்...
தமிழரின் வாழ்வியல்..
வந்தாரை வாழ்விக்கும்...
தமிழகம்... வந்தவரெல்லாரையும்
தமிழராய் மாற்றிவிடும்.. ஆற்றல் கொண்டது..
தமிழ் மொழி.. மூலன்
உரை செய்த
மூவாயிரம் தமிழ்...

புகைப்பட கலைஞன்..

 


.
.
போர் சூழலில்
துப்பாக்கிகளில்
தோட்டாக்களை
நிரப்பிவிட்டு
அதிகாரத்தில்
அனைத்தையும்
அடக்கி விட துடிக்கும்
மனிதர் போல் அல்லாமல்
துப்பாக்கியை விட
கனமான கேமிராக்களை
தோளில் சுமந்து
வனாந்திர காடுகளில்
சுற்றித் திரிந்து
கொடிய விலங்குகளையும்
அனைவரும் ரசிக்கும்
வகையில் அழகான
ஓவியம் போலவே
கேமிராவின் கண்களால்
சுட்டுத் தள்ளுகிறான் ‌‌
வண்ணமயமான
புகைப்படங்களாக....
வனவிலங்குகளும் கூட
பூனை குட்டிகள் போலவே
சமத்தாக அவனின்
கேமிரா கண்களில்...
மனிதர்கள் யாருக்கும் ஏன்
வனவிலங்கிற்கும் கூட
தீங்கு நினைக்காத
உன்னத தொழில் செய்யும்
எனது அருமை நண்பன் ஓர்
புகைப்பட கலைஞன்..

 

.மதத்தின் பெயரால் மானுடம் விலகுவது ஏன்

 

தலைப்பு - ..மதத்தின் பெயரால் மானுடம் விலகுவது ஏன்.....
காதலையும் கடவுளையும் சரியாக புரிந்து கொள்ள இயலாத வேடிக்கை மனிதர்கள்... கடவுள்களின் இடத்தில் பணத்தை அதிகமாகவே கொடுக்கிறார்கள்.
வாசலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் அந்த பெண்மணியையும், வயதான காலத்தில் தன் பெரும் சம்பாதித்தியத்தை மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு எழுதி வைத்த பிறகு தான். அவருக்கு புரிந்தது அவர்களின் உண்மையான முகம், தன்
சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டதை மறந்து, அடுத்த வேளை உணவிற்கு வழியின்றி கடவுள் இருப்பதாக சொல்லும் இடத்தில் காத்து கிடக்கிறார்‌.
கேட்காத கடவுளுக்கு பணத்தை வாரியிறைத்து விட்டு செல்லும் பணம் படைத்த கூட்டம் .
தங்கத்தில் அதை வாங்கி வையுங்க..இதை வாங்கி வையுங்க என்று சொல்லும் போலி ஆட்கள்...
கடவுள் மனிதன் படைத்த பணத்தை கேட்கவே இல்லை
மாறாக தான் படைத்த அன்பையும் அமைதியையும் மனிதனில் காணவே விழைகிறார். ‌.
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
உங்களின் தூய மனதையும் பக்தியும் மட்டுமே கேட்கிறார்.ஆனால் அந்த பக்தியை ஓர் குறிப்பிட்ட சாதி மக்களால் தான் செய்ய முடியும் என்று நம்ப வைத்துவிட்டனர்..
கண்ணப்பனும், திண்ணணும், மாணிக்கவாசகர்... போன்ற இன்னும் எண்ணற்ற இறை தொண்டர்கள் எல்லா ஜாதியும் மதமும் கடந்து.. மனிதர்களுள் ஓர் சராசரி மனிதாபிமாக வாழ்ந்தனர்.... பணத்தை விடுத்து இறைவன் படைத்த இயற்கை என்னும் பாசத்தை தேடி அவர் வாங்கி பட்டம்.
ஆனால் இந்த கணிணி முன்னேறிய காலத்திலும்.
தனது ஜாதியை மட்டுமே உயர்வாக சொல்லி, ஓர் சில குறிப்பிட்டவர்கள் பிற மக்களை புறக்கணிப்பது ஏன்...
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடங்களை நடத்தி விட்டு ஜாதிமத அடையாளங்களை இன்னும் உயர்த்தி பிடிப்பது எதற்காக
உலகம் ஏன்றுமே பொய்களைத் தான் அதிகமாக நம்புகின்றது...மாட்டு தொழுவத்தில் விளையாடிய கடவுளுக்கு ஏது தீட்டு.ஏது ஜாதி..ஏது. மதம்...
உலகின் பல மதங்களும் இறைவனை அன்பே வடிவானவன் என்று தானே சொல்கிறது...
இந்து, கிறித்தவம், இஸ்லாம், புத்த ஜைன மதங்களும் இப்படி தானே சொல்கிறது ‌..
கடவுள் ஒருவரே என்றால் ஏன் மற்றொரு மதத்தை உலகில் உருவாக்கி...வேற்றுமையை தான் படைத்த மனிதனின் மனதில் விதைக்க வேண்டும்...
அப்படி என்றால் கடவுள் குழப்பவாதியா... அல்லது தன்னை யார் அறிந்து கொள்கிறார் என்று போட்டி வைக்கும் போட்டியாளரா...
சில மதவாதிகள் செய்யும் அலப்பறைகள், உண்மையான இறை தேடல் உள்ள நபர்களை கூட கடவுள் என்பவரே இல்லை போல என்ற சிந்தனைக்கு தள்ளுகிறது
உண்மை உணருங்கள் மக்களே...
மதங்கள் மனிதன் மனிதனாக வாழ தோன்றிய நாகரீக வளர்ச்சி...
இறந்த பிறகு நான் எங்கே போவேன் என்று யாருக்கு தெரியும்...
..... போன்றவை கதையை நம்புவதை விடுத்து...
சக மனிதனை மனிதனாக மதித்து வாழவே மதங்களை தோன்றியது என்பதை உணருங்கள்...
நான் சில மத நூல்களை படித்து தெரிந்து கொண்டேன்....( என்று என்னை நானே உயர்வாக நினைத்து கொண்ட அறிவிலி செயல், கடவுளை அறியும் அறிவு எனக்கு ஏது..)
தன்னை வணங்காமல் தூற்றியே வாழும் மனிதனுக்கு கூட கடவுள் உணவு கொடுக்கிறார்கள்...
ஏனெனில் அந்த கடவுள் அந்த மனிதன் அவனின் அந்திம காலத்தில் படுத்த படுக்கையில் கிடக்கும் போது.. உடல் வலிமையில் பேசிய பேச்சுக்களை நினைத்து வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்பான் என்று கடவுளுக்கு தெரிந்து அவனை பாது காக்கிறான் என்று...
மதங்களை தெய்வத்தை உணரும் வழியாக பாருங்கள்.
மனிதனை மனிதனாக மதித்து நடக்கும் பண்பை போற்றுவோம்..
இறப்பிற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை மறந்து இயன்ற நல்லதை செய்வதில் அமைதியை தேடுவோம்.
மதத்தின் பெயரால் மானுடம் விலகாமல் ...

 

 

வரதட்சணை உலகமிது.

 


.
.
பெண்ணின்
விரல்களை கூட
தொடாமல்
காதல் சொன்னவனை
அழித்து விட
துடிக்கும் பெரிய
மனிதர்கள்...
திருமணம் என்ற
பெயரில் வாங்கும்
பல லட்ச பணப்பரிமாற்றம்
சமூகத்தின் அவலம்...
உண்மை காதலை
காமம் என்று
உதாசீனம் செய்து விட்டு...
... துய்க்க
காசு வாங்குபவனை
வாய்நிறைய
அழைக்கிறது....
அவ்வளவு பணத்தையும்
வாங்கிய பிறகு...
இரண்டாவதாக
வரதட்சணை கேட்டு...

ஏண்டா உலகமிது

 

மனிதர்களாய்

 

மனிதர்களாய்
.
பணம்
என்பது
பல வண்ண நிற
காகிதம்....
ஆயினும் அந்த
காகிதம் செய்யும்
காரியமும் அதன்
காரணமும் தான்
உலகியல் வாழ்க்கை.
பணத்தை மதிக்கும்
பல உறவுகள்
இன்றும் சிலர்
மட்டுமே பாசத்தை
மனதில் சுமந்து
அலைகின்றனர்
மனிதர்களாய்

புத்தர் சிரிக்கிறார்..

 


.

அன்பை மாத்திரமே
விதைத்த அன்பான
புத்தரை தேடி
நடந்தேன்..
புத்தருக்கு
ஞானம் வந்த இடம்
போக நினைத்து
ரயில் நிலையம்
சென்றேன்....
பிளாட்பாரத்தின்
வழியோரம்
விழியின்றி
தவிக்கும் மனிதரை
கண்ட பிறகு
பித்து பிடித்தவனை
போலவே அமர்ந்து விட்டேன்.
கடவுள் கருணையே
உருவகமாக சொன்னது
காதுகளில் ரீங்காரம்
திரும்பி பார்த்தேன்...
நம்பிக்கை இல்லாமல்
வாழும் மனிதர்களுக்கு
நம்பிக்கையுடன்
வாழ பாடும் அவர்கள்...
அதில் ஒருவரின்
முன்பாக புகைப்படமாக
புத்தர் சிரிக்கிறார்...
நானோ சிந்தனையின்றி
தவிக்கிறேன்....
விழியோரம்
கண்ணீர் விலக்க
மனமின்றி...
இயந்திரமாக
வாழ்ந்தவனின்
இதயத்தில்
இயற்கை தேட
தொடங்கிய
நிமிடமது

 

யாருக்கும் தெரியாமல்...

 


.
.

பதவிக்காக
பணத்துக்காக
சுகத்துக்காக
பெண்ணிற்காக
பொன்னிற்காக...
இன்னும் எத்தனையோ
.......காக.... நிலையற்ற
உலகில் சில நாட்கள்
ஆடும் ஆட்டத்தில்
விதவிதமான
காரணங்கள்
காரியங்கள்...
உலகின் எல்லா
பக்கத்திலும்
எழுதப்பட்ட சரித்திரங்கள்
கதாபாத்திரங்களின்
சிந்தனையில்
வாழ்க்கையிலும்
ஓரே ஓர் ஓற்றுமை
தன்னை மிகவும்
நல்லவராகவும்
வல்லவராகவும்
தோல்விகளுக்கு
அப்பாற்பட்ட தெய்வீக
பிறவியை போல
வாழந்த தலைவர்கள்
வாழ்வின்
கடைசி அத்தியாயம்...
கசப்பாகவே.... ஆனாலும்
பிறருக்கு முன்னால்
இன்முகம் காட்டி
தன்னுள்ளே
மறைக்கின்றனர்
தங்களின் தனிப்பட்ட
கஷ்டத்தை
யாருக்கும் தெரியாமல்

கடவுளின் சந்தோஷம் .

 


.
மழையின்
துவானம்
வெறித்து சற்றே
மேகங்கள் விலகி
ஆதவனின் ஓளி
பூமியை தொட்டது
அலுவலகம் செல்ல
கிளம்பும் போது
அம்மாவின் சொல்லை
மறுத்து குடையை
வீட்டின் கதவில்
தவிக்க விட்டே வந்தேன்
சனிக்கிழமை என்றே
அலுவலகத்தில் அரைநாள்
வேலையை முடித்து
வெளியே வந்த போது
இருண்டு கொண்டு
கருமேகங்கள் வானில்
சூழந்தன சில நிமிடங்களில்
சாரல் மழை அடைமழையாய்
பொழிந்தது மழைக்கு
பயந்து ஓர் டீகடையின்
வாசலில் அடைக்கலமாக
நின்றேன்... சிறுவர்கள்
இருவர் மழையில்
நனைந்தே ஓடிவந்தனர்
பாதி நனைந்து
புத்தகப்பையும்
மழையில் ....
இன்னிக்கு ஏன்
சாயங்காலம் மழை
பெய்யுது தெரியுமாடா....
மற்றவன் விடையின்றி
விழித்தான்....
டேய் மச்சான் நமக்கு
பள்ளி கூடம்
திறந்தது பார்த்து
கடவுளுக்கு சந்தோஷமாயிட்டாரூ
அதான் மாலை மழை

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...