அன்பே சிவம்

 பல வருடங்களாக 

பேசிக்கொள்ளாத

அக்காவின் வீடு தேடி

சென்று பழசையெல்லாம்

மறக்க சொன்னான் அவளின்

அருமை தம்பி ..

உங்க அம்மாதான்

எல்லாத்துக்கும் காரணம்

ஏதேதோ கோபத்தில்

பேசியவளை சமாதானம்

செய்தான் அவளுக்கு

நீதானே முதல் குழந்தை

நொடியில் பாசத்தில்

கரைந்தாள் ஆனாலும்

தாய்மை கேள்விகேட்டது

என் பொண்ணு வாழ்க்கை..

அவனோ சிரித்தபடி

பதில் சொன்னா நீ சரியென்றால்

நானே அவளை கட்டிகிறேன்

உங்கம்மா பல லட்சம்

வரதட்சணை கேட்கிறாளே...

நகை புடவை சீர்வரிசை

ஐந்து லட்சம் தருவதாக சொல்லு....

என்னிடம் இப்போதைக்கு என்றவளிடம்

எல்லாமே கேள்விப்பட்டேன் 

இதுவும் உன் பணம் தான் கையில் கொடுத்தான்... சமையலறையில்

இருப்பவளை திட்டும் அம்மா..

அவளுக்கு எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்... சொந்த தாய்மாமனை 

கட்டிக்க ஐந்து லட்சம் கொடுத்திருக்காளே.. அவளுக்கு 

ஏதுடா அவ்வளவு பணம் வந்துச்சு 

சிறு வயசுல இருந்தே என்னை நினைச்சு சேர்த்தாளாம் அவளே தான் சொன்னா

இத்தனை ஏச்சுகளை வாங்கிய பிறகும்

அத்தை இந்தா ஹார்லிக்ஸ் என்றே தயங்கியபடி நின்றாள்..

என்னங்க உங்களுக்கு ஏதாவது என்றவளிடம்...

அமைதியாக சிரித்தான்.. அவளுக்கு புரிந்தது வீட்டின் அமைதியை விட காசு பெரிதல்ல என்று உண்மை

வாசலில் அவனின் அக்கா..அவளை வரவேற்றது அவன் வண்ணத்தால் வரைந்த ஓவியத்தின் ஊடே வசனம் அன்பே சிவம் 



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...