தாசில்தார் இசக்கி

 

சார்.. சார் வேண்டாம் சார் அவரை ஓண்ணு பண்ணிடாதீங்க சார்..

கெஞ்சி கூத்தாடிய ஓர் இளவயது பெண் கல்லூரி படிக்கும் வயது இருக்கும்..

என்ன டீ நடிக்கிறே..உன்னை மாதிரி எத்தனை பிராடுகளை பார்த்து இருப்பேன்.. ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவிட்டு போ..

இல்லாட்டி போக்சோ கேஸ் போட்டா நீயும் உங்க தாத்தாவும் களியும் சோறும் தான் திங்க வேண்டிவரும்..


நீ மட்டும் தானா இல்ல கூட்டத்துல வேற யாரும் இருக்காங்களா

சார் இந்த ஓர் தடவை எனக்காக மன்னிச்சு விட்டுங்க சார்..இதுல அவர் தப்பு எதுவுமே இல்லை எல்லா தப்பும் என் மேல தான் தண்ணீர் தாகமா இருக்குன்னு தாத்தா சொன்னாரூ.. இந்த பாவி மட்டை வாட்டர் கேன் எடுத்து வைக்க மறந்துட்டேன்...

 பஸ் எப்படியும் பத்து நிமிஷம் கழிச்சு தானே கிளம்பும் என்று தண்ணீர் பாட்டில் வாங்க போனேன் அதுக்குள்ள இவ்வளவு கூத்தும் நடந்து முடிச்சிடுச்சு..

ஏய்...தே.....மு.....ஆபாசமான வார்த்தை சற்று சத்தமாகவே வந்தது இப்படி பேசியது இன்ஸ்பெக்டர் இல்ல அருகில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் பெண்..


என்னடீ இன்ஸ்பெக்டர் என்கிற மரியாதை கூட இல்லாம ஏதோ கதை பேசுற அவர்கிட்ட எல்லாம் நீ பேச கூடாது.எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுடீ...

அக்கா, நான் பேசுறதெல்லாம் நீங்களும் கேட்டு கிட்டு தானே இருந்தீங்க இப்படி சொன அடுத்த நொடி அவளின் கன்னத்தில் சிவப்பு கோடுகள் தெரித்தது


இவ பெரிய மகாராணி ஓர் தடவை சொன்னதை திரும்ப சொல்ல மாட்டீங்களோ..

தன் பேத்திக்கு அடிவிழுகிறது என்றவுடன் அந்த பஸ் ஸ்டாண்டே அதிரும் படி அந்த தாத்தா ஓலமிட்டார்...


ஏய் பேச்சியம்மா இந்த கண்றாவிய எல்லாம் கேட்குற மாதிரி வைச்சுட்டீயே.

உனக்கும் கண் தெரியலையா அவர் எற்படுத்திய சத்தம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது...


அதுவரை பொறுமையின் சிகரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சப்-இன்ஸபெக்டர் ஏதோ வெறி வந்தவர் போல ஆனார்.

சொல்லிகிட்டே இருக்கிறோம்..வயதானவரை‌ பிடித்து தள்ளி விட்டார்..

கொத்த வேலைக்கு போகும் நபர்கள் அருகில் இருந்த இரும்பு சாமான் மீது போய் விழ இருந்தவரை தடுத்தது ஓர் கை..

ஆமாம் அப்போது கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் பஸ் ஏற வந்தவரின் மீது மோதியதால் இரும்பு கம்பியின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற பட்ட முதியவர்.

அந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபம் அவர் மீது திரும்பியது.. யோவ் நீ யாருய்யா அவரை காப்பாத்த 

ஜீப்பில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் அலறினார்.. யோவ் யோவ் எதுவும் பேசினாறாதய்யா...


சார், பையன் ஸ்டேஷனுக்கு புதுசு அதான் உங்களை அவனுக்கு அடையாளம் தெரியல..


ம்ம் நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.ஏழைகள் மீது உங்க கோபத்தை காட்டாதீங்க அது எப்பவுமே ஆபத்து..

இல்ல சார் அது வந்து இந்த வயசானவரு தன் பக்கத்துல வந்து உட்கார்ந்த பொண்ணு தோளில் கைவைக்கிற மாதிரி ..அப்படியே அது படக்கூடாத இடத்துல பட்டதால அந்த பொண்ணு தான் புகார் கொடுத்தது...

ஏம்மா, இங்கிட்டு வா... அந்த பெண் இன்ஸ்பெக்டரிடம் கேட்டாள்..

இது யாரு சார்.பார்க்க சாதாரணமாக இருக்காரு இவருக்கு போய் இவ்வளவு மரியாதை கொடுக்குறீங்க..

அட நீ சும்மா இரும்மா.. நேரம் கெட்ட  நேரத்துல பெரிய மேலதிகாரி மாதிரி வியாக்கியானம் பேசிக்கொண்டு.


சப்-இன்ஸ்பெக்டரை தடுத்து நிறுத்தியதை பார்த்து மொத்த கூட்டமும் வெறித்து பார்த்தது

தொடரும்...

(Story work in progress)

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...