நீ எழுது....

 


.
.

கண்ணுக்கு தெரியாத
கடவுளையும் காதலையும்
நடைமுறை வாழ்வின்
சிக்கல்களையும்
எழுத்துக்களில் எழுத
முயல்கிறேன்....
ஏனென்றால்
எனது வாழ்வின் தேடல்
என்னை எழுத்தாளராக
மாற்றியது ....
காலம் மிகவும்
விசித்திரமானது...
சில காலமே வாழும்
மனிதரில் தான்
எத்தனையோ போட்டியும்
பொறாமையும்
பலவகை மனிதரில்
ஓவ்வொருவரும் ஓர் வகை
இங்கே சிலருக்கு
பணத்தேடல்...
சிலருக்கு
பதவியின் தேடல்
சிலருக்கு
பொருளாதார தேடல்
சிலருக்கு
பாசத்தின் தேடல்
சிலருக்கு
உண்மையின் தேடல்...
சிலருக்கு ஆதாயத்தேடல்...
இந்த உலகில்
ஓர் வகை மனிதருக்கு
ஆகாயத்தின் அளவிற்கு
அளவற்ற தேடல்...
அதனால் தான்
மரத்தடியில்
அமர்ந்து கொண்டு
ஆகாயத்தில்
ஆண்டவனை தேடுகிறார்...
அவரை பைத்தியக்காரன்
என்றே ஒதுக்கி வைத்த
உலகம் ...
யாரிடம் சொல்லி
புரிய வைப்பேன்...
மாபெரும் அரசியல்வாதியும்
மாபெரும் வியாபாரிகளையும்
உதாசீனம் செய்து விட்டு
அந்த ஊரின்
ஏழையான சிறுவனின்
அன்பிற்கு மாத்திரம்
செவிசாய்த்து ஆடு மேய்க்கும்
போது அவனை தொடரும்
ஓர் மெளன மனிதர்
மிகவும் அரிதான
சிலரிடமே பேசும்
அவர் தந்த ஓர்
மொழியே "நீ எழுது" என்றது

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...