பசியை போக்க..

 


.

உலகில்
பல விதங்களில்
மனிதர்கள் - அதில்
சிலருக்கு தன்
உழைப்பை
மாத்திரமே
விற்க தெரிகிறது
சிலருக்கு தன்
புத்தியை
விற்க தெரிகிறது
சிலருக்கு தன்
உதவியை
விற்க தெரிகிறது
சிலருக்கு தன்
தெய்வத்தை
விற்க தெரிகிறது
சிலருக்கு தன்
எழுத்துக்களை
விற்க தெரிகிறது
இது எதுவுமே
தெரியவில்லையே
என்ற பேதமையில்
மற்றவர்களை மாத்திரமே
புத்திசாலி போல்
எண்ணிக்கொண்டு
தாழ்மை மனப்பான்மையில்
உழன்று கொண்டு
தேசிய கொடி
வாங்குவதா
வேண்டாமா
என்ற குழப்பத்தில்
கடைக்கு சென்றவனின்
கைகளை சுரண்டி
அண்ணே சாப்பிட்டு
இரண்டு நாளாச்சு
பரட்டை தலையுடன்
தம்பியை சுமந்தபடி
ஓர் சிறுமி கொரோனாவையும்
மீறி சேர்த்து வைத்த அந்த
சில்லறை காசுகளை
கொடுத்துவிட்ட பிறகும்
மனத்தில் போராட்டம்
கொடுத்தது சரியா
தவறா என்ற மனக்குழப்பம்
திருப்பி பார்த்தபோது
புரிந்து கொண்டேன்
அவனின் உண்மை குணத்தை
பக்கத்தில் நின்றவரின்
சட்டைப் பையில்
சிரித்த படியே
காந்தி -ஏனோ
அவரை கடந்து படியே
எதுவுமே கேட்காமல்
தாண்டி சென்று
மீண்டும் தேடுகிறான்
சில்லறை காசுகளை
தன்னை நம்பியவர்களின்
பசியை போக்க

 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...