.
.
பதவிக்காக
பணத்துக்காக
சுகத்துக்காக
பெண்ணிற்காக
பொன்னிற்காக...
இன்னும் எத்தனையோ
.......காக.... நிலையற்ற
உலகில் சில நாட்கள்
ஆடும் ஆட்டத்தில்
விதவிதமான
காரணங்கள்
காரியங்கள்...
உலகின் எல்லா
பக்கத்திலும்
எழுதப்பட்ட சரித்திரங்கள்
கதாபாத்திரங்களின்
சிந்தனையில்
வாழ்க்கையிலும்
ஓரே ஓர் ஓற்றுமை
தன்னை மிகவும்
நல்லவராகவும்
வல்லவராகவும்
தோல்விகளுக்கு
அப்பாற்பட்ட தெய்வீக
பிறவியை போல
வாழந்த தலைவர்கள்
வாழ்வின்
கடைசி அத்தியாயம்...
கசப்பாகவே.... ஆனாலும்
பிறருக்கு முன்னால்
இன்முகம் காட்டி
தன்னுள்ளே
மறைக்கின்றனர்
தங்களின் தனிப்பட்ட
கஷ்டத்தை
யாருக்கும் தெரியாமல்
No comments:
Post a Comment