பழனிமலை முருகய்யா

 



அம்மாவுக்கும்
அப்பாவுக்கும்
சண்டை என்பதால்
தனிமையை நாடும்
குழந்தைகள் பலர்...
அவனும் கூட
அப்படித்தான் ஓர்
சிறு விஷயத்தை
புரிந்து கொள்ளாத
பெற்றவரின் மனநிலை...
யாரிடம் சென்று சொல்லுவது
தெரியவில்லை.....

பெற்றவர்களின்
அன்பையும் பெற
முடியாமல் பிறரின்
அன்பையும் ஏற்கவும்
மனமின்றி தனிமை
தேடி மலைமீது சென்று
ஏகாந்தமாய் இருந்தவனை
தேடி இன்று பலரும்...
அவனுக்கோ பணத்திலும்
அதிகாரத்திலும் நாட்டமில்லை
இனிய தமிழை தேடி
அகத்தியருக்கு
தொல்காப்பியம் தந்து
தேனும் திணைமாவும்
விரும்பி ஏற்பவன்...
எளிமையையும்
உண்மையையும்
அன்பும் இரக்கமும்
அள்ளிக் கொடுப்பதில்
தந்தையையும் மிஞ்சிய
தனையன் எங்களின்
இந்த குறிஞ்சி
நிலத்து தலைவன்
எதுவுமே வேண்டாமென்றே
ஆண்டி கோலத்தில்
ஆசையின்றி நின்றவனே
தாழ் பணிந்து
வணங்குகிறேன்
ஆண்டியாய்
நின்றாலும் அண்டியவரை
கண்போலவே காக்கும்
கருணையின் உருவமே
சித்தம் தொட்ட முருகனே
துணை வருவாய்
தூயவனே மாதவனின்
மருமகனே...
பழனிமலை முருகைய்யா...

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...