அன்பே சிவம்

 



புரிந்தவர்களிடம்
பேச வேண்டியதில்லை.
புரியாதவர்களிடம்
பேசியும் பிரயோஜனம்
இல்லை..என்னை
தேடி வந்தவருக்கு
அவர்களின் ஊழ்வினை
அழித்து அன்பை
காட்டினேன்
அவர்களோ
என்னை வாயார
புகழ்ந்து விட்டு
எண்ணிலடங்கா
பணத்தையும்
பொருளையும்
வேண்டி நின்றனர்
அள்ளிக் கொடுத்து விட்டு

அமர்ந்தேன்...
அமைதியான மனதில்

ஏகாந்தமாக நித்தமும்
பூஜை செய்கிறாள்
தேவியவள்... 

அவளுக்கும் கூட

பல நேரங்களில்

என்மீதான காதலை

காட்ட துடிக்கிறாள் 

உங்களுக்கு எப்போதுமே

அவள் தானே உசத்தியென்றே

சிணுங்குனுங்கிறாள்

தலையில் இருக்கும்

கங்கையோ பிறருக்கு

உதவ வேண்டிய

கடமையில் பூமியில்

விரைந்து செல்கிறாள்.

சிவனின் மனைவியென்ற

தைரியத்தில் ஆக்ரோஷமான

பாய்ச்சலில் வெள்ளமாக 

இருவரும் அன்பை 

நன்றாகவே
புரிந்து கொண்டு தவிக்கிறார்கள்...
இருவருக்கும் புரிந்தது
விஷயம் 

மிகவும் எளிமையானக

அன்பே சிவம்..
சிவத்தை அறிந்தவன்
பேசுவதில்லை பிறரை
உணர வைக்கிறான்
அன்பே சிவம்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...