Raman Sankar-ன் எழுத்துக்கள்

 



எனது எழுத்துகள் எனது சிந்தனைகள். இதை ஏற்றுக் கொள்வதும், விமர்சனம் செய்வதும், அல்லது இது எல்லாம் ஓர் எழுத்தா என்று கடந்து செல்வதும் உங்களின் தனிப்பட்ட விருப்பங்கள்.

காதலிப்பவர்கள் மட்டுமே கவிதை எழுத வேண்டும் என்றோ.. இலக்கியம் நன்றாக அறிந்தவர் தான் இலக்கியம் பற்றி பேச வேண்டும் என்றோ எந்த விதியும் கிடையாது.

என் எழுத்துக்களை படிக்கும் முன்பின் தெரியாத நண்பர்களே.
நீங்கள் யார் எங்கிருந்து எனது எழுத்துக்களை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என எனக்கு தெரியாது.
சிறு வேலை செய்வதற்கு கூட பணத்தை அதிகமாக எதிர்பார்க்கும் இன்றைய உலகில், எழுத்துக்களை படிக்கும் உங்களிடம் நான் சல்லி பைசா கூட வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏனென்றால் மனிதன் படைத்த பணம் வெறும் வண்ணக் காகிதங்கள்.
அவற்றை கொண்டு உலகியலுக்கு தேவையான பொருட்களை தான் வாங்க முடியும்.

இன்று எழுதப்படும் எழுத்துக்கள் கூட எனது குருமார்கள் இட்ட பிச்சை தான்.
சந்தேகம் இருந்தால்..
யோகி ராம் சுரத்குமார், வல்லநாட்டு சித்தர் மற்றும் பிற பதிவுகளை படித்து பாருங்கள்.
கஷ்டத்தை உணர்ந்த காலத்தில், பரதேசி கோலத்தில் இருந்தவரை ஏழையாக நினைத்து , சாமி என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு. இந்தாங்க என்றபோது....
சிரித்து விட்டு, தம்பி என்னை காப்பாற்ற இறைசக்தி இருக்கு இது எதுக்கு என்ற சிலர்..

பேசத் தெரியாமல் சில போலி ஜோசியர்களை நம்பி வீட்டில் நடந்த குளறுபடிகள்.

ஆனால் என் எழுத்துக்களில் நான் பார்த்த உணர்ந்த விஷயங்களை எழுதுகிறேன்.
அவற்றில் சில மிகை படுத்தப்பட்ட கற்பனையாக கூட இருக்கலாம்.
இலக்கியம் என்பதே கற்பனை சார்ந்த விஷயம் தான்.
இயந்திரத்தனமாக வாழும் மனிதர்களின் மனதிலும் அன்பு பாசம் இரக்கம், அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை சொல்லுவது தவறில்லையே.
சுதந்திர இந்தியாவில் தன் கருத்துக்களை சொல்லும் அடிப்படை உரிமை அனைவருக்கும் உள்ளது.
எனவேதான் சாமானியரும் கூட சிலரின் மீது பொய்யாக அவதூறாக கருத்துக்களை சொல்லி விட்டு செல்கின்றனர்.
ஏதோ அரசியல், வியாபாரம் மற்றும் துறை சார்ந்த இடங்களில் மட்டும் தான் இது போன்ற நடக்கிறது என்று சொல்ல முடியாது.
சில நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்களே கடுமையான சொற்களால் உடனிருப்பவரை நிலைகுலைந்து போகும் அளவுக்கு பேசிவிட்டு கின்றனர்
.
.
.
(எழுத்து தொடரும்)
For more writings visit my blogger or my Aalamaram Facebook group.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...