புத்தர் சிரிக்கிறார்..

 


.

அன்பை மாத்திரமே
விதைத்த அன்பான
புத்தரை தேடி
நடந்தேன்..
புத்தருக்கு
ஞானம் வந்த இடம்
போக நினைத்து
ரயில் நிலையம்
சென்றேன்....
பிளாட்பாரத்தின்
வழியோரம்
விழியின்றி
தவிக்கும் மனிதரை
கண்ட பிறகு
பித்து பிடித்தவனை
போலவே அமர்ந்து விட்டேன்.
கடவுள் கருணையே
உருவகமாக சொன்னது
காதுகளில் ரீங்காரம்
திரும்பி பார்த்தேன்...
நம்பிக்கை இல்லாமல்
வாழும் மனிதர்களுக்கு
நம்பிக்கையுடன்
வாழ பாடும் அவர்கள்...
அதில் ஒருவரின்
முன்பாக புகைப்படமாக
புத்தர் சிரிக்கிறார்...
நானோ சிந்தனையின்றி
தவிக்கிறேன்....
விழியோரம்
கண்ணீர் விலக்க
மனமின்றி...
இயந்திரமாக
வாழ்ந்தவனின்
இதயத்தில்
இயற்கை தேட
தொடங்கிய
நிமிடமது

 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...