அந்த பேருந்து நெரிசலில் அந்த கல்லூரி பெண்ணை
இடித்து விட்டதாக பலருக்கு சேர்த்து ஓர் வயதான முதியவரை
அடித்து துவைத்தனர்.
கூட்டத்தில் ஓருவன் சத்தமாக சொன்னான்,
வயசான காலத்தில் காலேஜ் பொண்ணுகளை இடிப்பதற்கே
கருப்பு கண்ணாடி போட்டு கிட்டு
வருதுங்க.. இந்த
கிழட்டு ஜென்மங்கள்.
ஏனோ ஒருவரும் கூட அவரை தவறாக
பேசாதீங்க என்று சொல்லவில்லை.
தங்களின் வீட்டுகளில் இருக்கும் பெரியவர்களின் கோபத்தை அவரின் மீது
காட்டி பழிதீர்க்க நினைத்த சிலர் அந்த
கூட்டத்தில் இருந்தனர் போல.... வயதானவர் மட்டுமே
தவறு செய்வது போல தாளம்
போட்டனர்..
அந்த வயதான கிழவர் ஏதோ
தட்டு தடுமாறிக் கொண்டு இருப்பவர் போல
உணரந்த காரணத்தால் அருகில் சென்று அவருக்கு
உதவி செய்ய நினைத்து தூக்கி
விட்டேன்.
ஏன் சார், இந்த மாதிரி
கிழட்டு பயலுக்கு உதவி செய்யுறீங்க....
வீட்டில் தன் பெத்த பிள்ளைகளை
மதிச்சு நடக்க தெரியாத ஜென்மங்கள்.
தன் வீட்டு கவலையை பகிரங்கமாக
சொல்லி தனது மனவேதனையை குறைத்து
கொண்ட ஓர் நடுத்தர வயது
மனிதன்
நன்றி அண்ணே, உங்களுக்காவது இவருக்கு
உதவி செய்ய மனசு வந்துச்சே...
அத்தனை அடியிலும் தன் கருப்பு கண்ணாடியை
கழன்று விடாமல் இருக்க பிடித்து
படி இருந்தார்..
பாட்டி இறந்த துக்கம் தாளாமல்
விஷத்தை குடிச்சுட்டாரூ... எப்படியோ கஷ்டப்பட்டு கதாப்பாத்திட்டோம்...
ஆனாலும் விஷத்தின் தீவிரமான காரணமாக கண்பார்வையை போயிருச்சு.
.
பல கோடிக்கணக்கான சொத்து சேர்த்து வைச்சிருந்தாரூ....
இவர் இப்படி பண்ணியதால புத்தி
சுவாதீனம் இல்லை என்று பெத்த
பிள்ளைகளே சொத்தை அவங்க பெயருக்கு
மாத்திட்டாங்க... இவரும் பாட்டி போன
பிறகு சொத்து எதுக்கு என்று
அவங்க காட்டிய எல்லா பத்திரத்திலும்
கைநாட்டு வைச்சுட்டாரூ
பேச்சு கூட திக்கி திக்கி
தான் பேசமுடியும் இவரால் என்றே பேசி
முடித்தவளின்...
தோளில் கையை வைப்பதாக நினைத்து...
அவள் பெண்மையின் மென்மையான பாகத்தில் பட்ட கையை , தாத்தா
இப்படி பிடிங்க என்று தன்
தோள் கொடுத்தாள் வயதான தாத்தாவின் தோழியாகவே
மாறிவிட்ட அன்பு பேத்தி...
நீ தான் பக்கதில் இருக்கேன்
நினைச்சு என்றவருக்கு தொண்டை அடைத்தது.... விம்மி
விம்மி அழுதார்.சிறு குழந்தையை
போல்..ஆறு வருஷத்தில் நான்
வாங்குற மூணாவது தர்ம அடி
இது...
என் உசுரை காப்பாத்துறா நினைச்சு
எல்லாரும் என்னை ஏன் இப்படி
தண்டனை கொடுத்தீங்களோ...
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்ற கேட்ட அடுத்த
நிமிடமே தாமதிக்காமல் சொன்னார்..
இதை தான் தம்பி நானும்
சொல்லுறேன்...இவ எதுக்குமே பிடி
கொடுக்காம இருக்கிறா....
என்னை ஏதாவது ஓர் அனாதை
ஆசிரமத்தில் சேர்த்து விட்டா அவங்க என்னை
நல்லா பார்த்துப்பாங்க என்று சொன்னாலும் கேட்கவே
மாட்டேன் என்கிறா....
எனக்கு கல்யாணம் ஆயிட்டா தாத்தா-வ
யார் பாரத்துப்பாங்க...
நீ யாரையாவது காதலிக்கிறதா இருந்தா சொல்லு பாப்பா,
நான் வேணா போயி பேசுறேன்
என்றே அதீதமாக உரிமை எடுத்து
பேசிவிட்டோமோ என்றே பயந்தேன்..
இல்ல அண்ணே, உங்களுக்கு அந்த
சிரமம் வேண்டாம் என்றாள்...
இந்தா பாரு பாப்பா.. தாத்தா
காலத்துக்கு அப்புறம் உனக்கு துணை வேணும்
தானே....
துணை என்பது உதவி செய்வதற்காக....
என் உதவியை வாங்குவதற்கா தைரியமா
நச்சு தெறித்தது போல கேட்டவளின் கேள்விக்கு
பதில் தெரியாமல் தவித்தேன்.
மேலும் அவளே தொடர்ந்தாள், கல்யாணம்
என்பது வெறும் சடங்கு அல்ல..அது ஓர் புரிதல்,
பிறருக்காக வாழ்வது...
ஏனோ திருமணமான பலரில் சிலர் மட்டுமே
ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்காங்க..பாதிக்கு மேல் அடுத்தவரின் உழைப்பை
உறிஞ்சி தன் சுயநலத்திற்காக குடும்பஸ்தன்
போல காட்டி கொள்ளுறாங்க
(தொடரும்)
வயதான கிழவன்
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment