787 - பணம் என்று குதிரையா... உடல்நலம் என்னும் ஆமையா....

 சார் இந்த மாசம் நீங்க பத்து லட்சம் பண்ணிட்டீங்க..அருமை. அடுத்த மாதம் இருபது லட்சம் பண்ணுறோம்..பாரீன் டிரீப் போறாம்..சந்தோஷமா இருங்க சார்.. காசுக்கு காசும் ஆச்சு.. கம்பெனி செலவுல ஊர் சுத்தின மாதிரியும் ஆச்சு 


பக்கத்து வீட்டுக்காரர் எதிர் வீட்டில் இருப்பவர்.. சொந்தக்காரங்க நண்பர்கள்.. அரசியலில் அடுத்த முதல்வர் யார் என்று இவங்க என்ன செய்யுறாங்க ஏது செய்யுறாங்க ஆராய்ச்சி பண்ணுற நேரத்தில் நீங்க சில நிமிடங்கள் ஆரோக்கியமான  இயற்கை வழி உணவுமுறை பற்றி தெரிஞ்சுக்கிட்டா...உங்க வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அது பெரிய உதவியா இருக்கும்..ஆபிஸ்ல மாதம் பத்து லட்சம் டார்கெட் என்று ஓடி உழைக்கும் நீங்க உங்களின் சொந்த உடல்நிலை மீதும் அக்கறை கொள்ளுங்கள்.. கார் பங்களா பேங்க் பேலன்ஸ் இதையெல்லாம் விட பெரிய சொத்து உடல் ஆரோக்கியம்.. 

786 -பாராட்டுக்கள் அவசியமானதா ??????பகட்டானதா ??????

 பாராட்டுக்கள் என்பது மிகவும் சிறிய விஷயம் தான் ஆனால் நாம் ஒருவரை மனதார பாராட்டும் போது இரண்டு விஷயங்கள் நடக்கிறது.. எந்த ஓர் நல்ல மனிதனுக்கும் நாம் சரியான செயலை தான் செய்கிறோமா அல்லது தவறாக செய்கிறோமா என்ற மனக்குழப்பம் வரும்.. அவர் செய்கிற நல்ல செயல் பாராட்டப்படும் போது. அந்த மனிதர் தான் சரியான செயலை தான் செய்கிறோம் என்ற தன்னம்பிக்கை ஏற்படவும் மீண்டும் அந்த நல்ல செயலை செய்வார்..பாராட்டுபவர் பாராட்டை பெறுபவர் இருவர்க்குஏ நன்கு தெரியும் இந்த உலகில் நல்ல செயலை அங்கீகாரம் செய்பவர்கள் சிலரே என்று ..வலிகளை உணர்ந்தவர்களால் தான் பிறரின் வாழ்வில் வலிமையை கொடுக்க இயலும் 

785 - .நினைவு சின்னங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்

 அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாட்டை ஆள்பவர்களே..பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நுழைவாயில் மற்றும் பாரம்பரியமிக்க வரலாற்று பொக்கிஷங்களை நீங்கள் வளர்ச்சி என்ற பெயரில் இடித்து தள்ளினால்..நாளை உங்களுக்கு பின்பு ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் நீங்கள் பொக்கிஷமாக நினைத்து கட்டிய கட்டிங்களை மக்களுக்கு இடையூறு என்பதாகவோ அல்லது மக்களின் வளர்ச்சி திட்டம் என்ற பெயரிலோ செயல்படுவர்... அரசாங்கத்தில் இருக்கும் ஆட்சியாளர்களே இதை தெனாலிராமன் என்ற ஓர் எழுத்தாளராக பதிவு செய்கிறேன்.. மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டிங்களை பாதுகாப்பதும் அரசின் கடமையே....நினைவு சின்னங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்

784 - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

எனது குலத்தில் நீ உதித்தாயா 

அல்லது உன் குலத்தில் நான் உதித்தேனா 

ஓன்றுமே புரியவில்லையே கண்ணா...

பரந்தாமன் நீ என்பதை அறிய இயலாத 

ஏழை பாமரன் நான்அன்றோ

மதுசூதனா....

பகவத் கீதையும் பாகவதம் படிக்கும் 

அறிவற்ற ஏழை குழந்தை நான்அன்றோ 

மாயக்கூத்தாடும் மோகினி வடிவான

நீ மாயவன் என்பதை அறியாமல் 

உன்னை தன்பசிக்கு வெண்ணெய் 

திருடச்சொன்ன முன்னோர்களின் 

பிழையை பொறுக்கொள் ஜெகன்நாதா..

உன்னை நித்தமும் காணவரும் 

பல்லாயிரக்கணக்கான பக்தர் கூட்டம் 

ஓர் ஓரமாய் நின்றபடி உன்னையே 

கதியென்று தாள் பணிகின்றேன். கிருஷ்ணா 

ராதைக்கும் மீராவுக்கும்..

குசேலனுக்கும் கர்ணனுக்கும் காட்சி தந்த 

கருணைகடலான கண்ணபரந்தாமா...

உன்னை போலவே உலகத்தை 

காத்திடவே கோவர்தனகிரியை தாங்கும் 

வல்லமையை எனக்கில்லை ...

ஆர்ப்பாட்டமக வாழ்ந்து விடவும் ஆசையில்லை..

அமைதியாய் நித்தமும் 

உன் நாமத்தை சொல்லுகின்ற 

வரத்தை கொடுத்துவிடு பெருமாளே ..

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே 

எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றே 


783 - பணமா...பதவியா...

 அவசர யுகத்தில் 

அனைவருக்கும் 

வேகவேகமாக ஓட்டம் 

பணத்தை தேடி ஆனால் 

அவனோ பணத்தை 

அடைந்து விட்ட பின்னும் 

ஓடுகிறான் பதவியை தேடி.

பணத்தை பாதுகாக்க 

பதவியின் தேவையை 

பல ஆண்டுகளுக்கு பிறகாவது 

புரிந்து கொண்டானே என்ற 

நிம்மதிப் பெருமூச்சில் 

அவனின் அப்பா 

முதியோர் இல்லத்தில்..

முதியோர் சங்கத் தலைவர் 

என்ற உயரிய பட்டத்துக்கு 

உரியவராக.... பாவம் 

பிழைக்க தெரியாத 

நல்ல உள்ளங்கள் 

குறைந்த 

782 - இயற்கையை காப்பாற்ற ஒரு சிறிய செயல்

 

பணத்திற்குப் பின்னால் ஓடுவது பாவம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் நமது இயற்கையைப் பாதுகாக்கவும், ஆறு, சாலையோரம், பொது இடம் அல்லது வேறு எந்த ஆன்மீக புனித இடங்களையும் சுத்தம் செய்வதன் மூலம் சில நல்ல செயல்களைச் செய்யவும் நம்மால் முடிந்த சில நிமிடங்களைச் செய்தால், அடுத்த தலைமுறையும் அதையே செய்யத் தொடங்கும்.



இன்று நிலச்சரிவு பற்றி பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் சில மாநிலங்களில் சில மலைப்பகுதிகளில் இன்னும் சில இடங்களில் நிலச்சரிவுகள் நடந்து வருகின்றன. ஆனால் செய்தித்தாள்கள் அல்லது வார இதழ்கள் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.

அவர்கள் கிரிக்கெட் சினிமாவுக்கும், சில மலிவான உணர்ச்சிகரமான செய்திகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தயவுசெய்து நண்பர்களே விழித்தெழுந்து இயற்கையைக் காப்பாற்றுங்கள். இயற்கை நம்மை அழிக்கும்போது அதை எதிர்த்து நிற்க முடியாது.

இந்த உலகம் முழுவதையும் என்னால் மாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் யாராவது என் எழுத்துக்களைப் படித்து இயற்கையைக் காப்பாற்ற பாடுபடத் தொடங்கினால். அவர் தனது வீட்டின் முன் ஒரு சிறிய மரக்கன்று நட்டாலும் கூட. அது அரசாங்கத்தையும் அதன் அதிகாரியையும் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, இயற்கையைக் காப்பாற்றுவதற்கான ஒரு சிறந்த செயலாக இருக்கும். நமது இயற்கையைப் பாதுகாக்க ஒரு சிறிய படியை எடுப்போம்.

781 - சிறு குடுகு

முதன்முறையாக

பெற்ற மாத சம்பளத்தில் 

அவளின் முதல் செலவு 

அம்மாவிடம் அடிக்கடி 

ஏச்சும் பேச்சும் வாங்கிய பிறகும்

தன்னலமற்ற அப்பாவி 

தந்தைக்கென்று அவள்

வாங்கிய கைக்கடிகாரம்

அதை அணிந்து கொண்டவரின் 

முகத்தில் தான் எத்தனை 

பெருமிதமும் சந்தோஷமும் 

அப்பா மகளின் அன்பான 

பாசத்தின் முன்பு கடலும்

கூட ஓர் சிறு கடுகு 

 


780 - இளவரசன்

அக்காவின் 

வீட்டில் என்றுமே 

அவளின் அன்பு தம்பி 

இளவரசன்  தான் 

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...