பணக்கார திமிர்

 

ஒருத்தன் தன்னோட கஷ்டமான காலத்தில்*அம்மா தாயே பிச்சை போடுங்க* என்பதை போல தெரு தெருவா அலைச்சு உதவி கேட்டானாம்....யாருமே கவனிக்கலையாம்.

ஏன்ப்பா உங்க அப்பா அம்மாவே உன்னை நம்பி உதவி செய்யாத போது நாங்க உனக்கு செய்யணும் என்று தலையெழுத்தா...

தயவுசெய்து உதவி கேட்டு இனி எங்க வீட்டு பக்கம் வந்துறாதே..பிறகு இவ்வளவு நாளாக நான் காப்பாத்தி வைத்திருக்கும் இமேஜ் உன்னால உடைஞ்சுட வேண்டாம்..


அப்போது படித்து கொண்டிருந்த தங்கை முறை ஓடி வங்து சொன்னாள்..

அண்ணா, உங்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு என்னிடம் பணமில்லை தான்.ஆனா உங்க சிந்தனை முயற்சி எல்லாமே ரொம்பவே புதுசா இருக்கு.

இவங்க பேசுற மாதிரி தான் எல்லோரும் பேசுவாங்க. நீங்க எதை பத்தியும் கவலைபடாம தொடர்ந்து உங்க வேலையை செய்யுங்க.ஆண்டவன் நிச்சயமாக நல்லவழி காட்டுவான்

ஓர் வேளை உங்களால் ஜெயிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை..

இன்னும் 5 வருஷம் தான், நான் நல்ல படியா படிச்சு வேலை போன பிறகும் நீங்க இதே நிலையில் இருந்தா நானே உங்களை தேடி வந்து உதவி செய்வேன்


வேண்டாம் பாப்பா, நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு செய் அதுதான் எனக்கு மகிழ்ச்சி

இந்த நல்ல மனசு தான் அண்ணா உங்களுக்கு கொடுக்கணும் என்று தோணுது...

என்னே பெத்தவங்க கூட அவங்க புள்ளையா பொறந்த காரணமாக தான் என்னை கொண்டாடுறாங்க..

ஆனா நீங்க  கையில் கிடைச்ச சிறு தொகையை கூட அன்று ஓர் ஏழைபசி போக்குவதற்காக கொடுத்து விட்டு வெயிலோட நடந்து போனீங்க நினைவுஇருக்கா என்றவளை கட்டியணைத்து முத்தமிட்டான்

ஏண்டீ மூதேவி இங்க வந்து பாருடீ.. உன் சீமந்த புத்திரியோட பாசமலர் படத்தை


அடுப்பங்கரையில் இருந்து வேகமாக வந்தவள்,ஏன்டா உனக்கு எல்லாம் சூடு சொரணையே கிடையாதா..

தன் கையில் இருந்த கரண்டியால் தன் மகளிள் தலையில் அடித்தாள்..

ஏண்டீ அவன் தான் புத்திகெட்டு அலையுறான்.இதுல நீ வேற படிச்சு முடிச்சிட்டு போய் உதவ போறீயாக்கும்.

செருப்பு பிஞ்சுரும் நாயே... படிச்சு வேலைக்கு போனாலும் சம்பள கவரை உடைக்காம எங்க கையில் தான் கொடுக்கணும்..


அண்ணே ஆட்டுக்குட்டி அப்படின்னு ஏதாவது சொன்னே உன் கல்யாண செலவை நாங்க ஏத்துக்க மாட்டோம்.. பக்கத்து வீட்டு பரிமளா கதை தெரியும் தானே...பார்த்து நடந்துக்கோ.


ஏன்டா நீ எல்லா வீட்டுக்கும் போறதே அந்த வீட்டில உள்ள நண்டு நாழிகளை மயக்குறதுக்கு தானா..

பெத்தவங்க என் சொல்ல விட உன்னை தான் ரொம்ப பெரிசு தான் நம்ப வைக்கிறீயே.

நீயெல்லாம் விளங்கவே மாட்ட.நடுத்தெருவுல தான் போய் நிக்கணும் அப்போ தான் என் மனசு ஆறும் என்று கொந்தளித்தாள் அம்மா வழி உறவுக்கார பெண்.

ப்ளீஸ் எதையும் கண்டுக்காதீங்க.. நீங்க எப்பவும் போலவே நல்ல இதயத்தோட நல்லவனாவே இருந்திடுங்க. என்றே சாடை காட்டிய தங்கை


 சில வருடங்கள் கழிச்சு அதே மனுஷன் ஆடம்பரமான காரில் வந்து இறங்கிய போது தெருவில் இருந்த அனைவரும் வந்து மாலை மரியாதையோடு வரவேற்றனர்...

இவர் யார் தெரியுமா எங்களுக்கு நெருங்கின சொந்தம் என்ற சிலர்.

இவர் எங்க வீட்டுல தான் எப்பவுமே சாப்பிடுவார், ( அந்த மனிதர் தான் போடா... பிச்சைக்கார நாயே.. என்று ரொம்பவே உதாசீனமாக பேசியவர்)

ஆம் இன்று பணக்காரனாக இருக்கும் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இதே போன்றதொரு அவமானம் கதை இருக்கிறது.

தனது பெருந்தன்மையான குணத்தின் காரணமாக அவர்கள் அதை வெளியே சொல்லுவதில்லை.


மாறாக பண்கார திமிர் என்ற போலி முகத்திரை முகத்தில் அணிந்து தன்னை தானே பாதுகாத்து கொள்கின்றனர்.

பல சுயநல புலிகளிடம் இருந்து, தன்னை போலவே வாழ்வில் முன்னேற துடிக்கும் பசுவின் குணம் கொண்ட மனிதரை தேடி.


 ஏன்னா இந்த உலகம் கடவுள் படைத்த உண்மையான இதயத்தை விட மனுஷன் படைச்ச காகித பணத்துக்கு தான் மதிப்பு மரியாதை எல்லாம் தரும்.இதை புரிந்து கொண்டவன்.. தன்னை அவமதித்தவரை அதே போலவே அவமதிக்காதீர்..ஆனா பணக்கார திமிர் என பேசுபவன் தான் அன்று அவனை முதலாவதாக உதாசீனம் செய்தவன்

அவர்களும் மனிதர்கள் தான்

 சிறைச்சாலையில் இருக்கும் பலர்..

உணர்ச்சி வசப்பட்டு தன் நிலை மறந்து வருங்காலத்தை பற்றிய ஆழ்ந்த சிந்தனை செய்ய மனமின்றி தவறு செய்தவர்களே.

  உலகில் உள்ள பல கோடி மக்களில் யாராவது ஓர் சிலர் அவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தியிருந்தால்

கற்பனையே சுகமாக தான் இருக்கிறது..

ஏனோ இந்த சமூகத்தில் பணமும் பதவியும் பட்டமும் அதிகார தோரணையும் தான் மதிக்கப்படுகிறது பாராட்டப்படுகிறது. ( அடுத்த வருடம் அந்த பதவிக்கு யார் வருகிறார்களோ அவர்களுக்கு தான் மரியாதை)

இந்த உண்மையை உணர்ந்து பதவியை வெறுத்து இயல்பாகவே வாழ நினைத்த மனிதருக்கு தானே வலிகள் புரியும் 

இந்த போலியான வாழ்க்கையை வெறுத்து உண்மை அன்பு தேடிய மனிதரில் பலரை சமூகம் சிறைச்சாலையில் தான் தள்ளி விடுகிறது.(சிலர் மீது சுமத்தப்பட்டது உண்மையானதா போலியானதா என்பதே இன்னும் பலருக்கு புரியவில்லை)...

அவன்/ள் அவ்வளவு தான்..பணமில்லாவன் கிட்ட நமக்கென்ன பேச்சு என்றே புறந்தள்ளி விட்டது.


காலையில் இருந்து மாலை வரை உடனிருந்தவனுக்கு டீ கூட வாங்கி கொடுக்காதவனை கூட கேலியோ நணையாண்டியோ செய்யாமல்

வாழ்ந்த அப்பாவி மனிதர்கள் அவர்கள் 

தன்னை ஏமாற்றியவரை தண்டிக்க இயலாமல், உலகின் செயல்படாடுகளில் இருந்து விலகியே வாழ்ந்தனர்

ஆயினும்  சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய கோபத்தின் பிரதிபலிப்பே சண்டையும் சச்சரவும் தேவையற்ற வீண் வாத பிரதிவாமமுமே சிக்கலை உண்டாக்கியது 

அவர்களின் உறவினரோ நண்பரோ பக்கத்து வீட்டு நபர்களில் யாராவது ஓர் உண்மையான அன்பை தந்திருந்தால் குற்றவாளியாக உருவாகி இருக்கமாட்டார்கள்.


நண்பர்களே நீங்கள் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைக்காதீர்கள்.உங்களை சுற்றி இருப்பவரும் அவர்களின் குடும்பத்தாரும் கூட சிறப்பாக வாழ உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

ஏனெனில் ஓவ்வொரு கோபகாரின் மனதிலும் ஆற்ற முடியாத காய வடுக்கள் நிறையவே இருக்கிறது.

மனிதனை மனிதனாக மதித்து விட்டு ஆண்டவன் இருப்பதாக சொல்லும் இடத்தை தேடுங்கள்.

கடவுள் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பாய் இரக்கமாய், கள்ளமில்லாத குழந்தை மனம் உடையவனாக இருக்கிறான்.

மீண்டும் ஓர் முறை யோசித்து பாருங்கள் சிறைச்சாலைகள் ஏன் .. அவர்களும் மனிதர்கள் தான்.


பல மாபெரும் தலைவர்களை உருவாக்கியதும் அதே சிறைச்சாலைகள் தான்.


ஓர் வேளை அந்த முறை ஆட்சி செய்தவர்கள், அவர்களை சிறையில் அடைந்த காரணத்தால் காலம் அவர்கள் புடம் போட்டு தலைவராக மாற்றி விடுகிறது.


மனம் என்னும் மலரே நீ வாடாதே

 யார் எப்படி போனால் என்ன 

நான் நல்லா இருக்கணும் என 

நினைத்து வாழும் சுயநல மனிதர்கள் மத்தியிலும்.

சில நல்ல மனிதர்கள் வாழத்தான் செய்கின்றனர். 

தனக்கு கிடைக்கும் சில நூறு ரூபாய்காக 

தோட்ட வேலை செய்யும் அந்த வயதான முதியவர்.

பொண்ணு பையனை நல்ல விதமா கட்டி கொடுத்தாச்சு... 

உடலில் தெம்பு இருக்கும் வரை உழைச்சு சாப்பிடணும் 

வெயில் அடித்தால் செடிகள் வாடும்..

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...