பணக்கார திமிர்

 

ஒருத்தன் தன்னோட கஷ்டமான காலத்தில்*அம்மா தாயே பிச்சை போடுங்க* என்பதை போல தெரு தெருவா அலைச்சு உதவி கேட்டானாம்....யாருமே கவனிக்கலையாம்.

ஏன்ப்பா உங்க அப்பா அம்மாவே உன்னை நம்பி உதவி செய்யாத போது நாங்க உனக்கு செய்யணும் என்று தலையெழுத்தா...

தயவுசெய்து உதவி கேட்டு இனி எங்க வீட்டு பக்கம் வந்துறாதே..பிறகு இவ்வளவு நாளாக நான் காப்பாத்தி வைத்திருக்கும் இமேஜ் உன்னால உடைஞ்சுட வேண்டாம்..


அப்போது படித்து கொண்டிருந்த தங்கை முறை ஓடி வங்து சொன்னாள்..

அண்ணா, உங்களுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு என்னிடம் பணமில்லை தான்.ஆனா உங்க சிந்தனை முயற்சி எல்லாமே ரொம்பவே புதுசா இருக்கு.

இவங்க பேசுற மாதிரி தான் எல்லோரும் பேசுவாங்க. நீங்க எதை பத்தியும் கவலைபடாம தொடர்ந்து உங்க வேலையை செய்யுங்க.ஆண்டவன் நிச்சயமாக நல்லவழி காட்டுவான்

ஓர் வேளை உங்களால் ஜெயிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை..

இன்னும் 5 வருஷம் தான், நான் நல்ல படியா படிச்சு வேலை போன பிறகும் நீங்க இதே நிலையில் இருந்தா நானே உங்களை தேடி வந்து உதவி செய்வேன்


வேண்டாம் பாப்பா, நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு செய் அதுதான் எனக்கு மகிழ்ச்சி

இந்த நல்ல மனசு தான் அண்ணா உங்களுக்கு கொடுக்கணும் என்று தோணுது...

என்னே பெத்தவங்க கூட அவங்க புள்ளையா பொறந்த காரணமாக தான் என்னை கொண்டாடுறாங்க..

ஆனா நீங்க  கையில் கிடைச்ச சிறு தொகையை கூட அன்று ஓர் ஏழைபசி போக்குவதற்காக கொடுத்து விட்டு வெயிலோட நடந்து போனீங்க நினைவுஇருக்கா என்றவளை கட்டியணைத்து முத்தமிட்டான்

ஏண்டீ மூதேவி இங்க வந்து பாருடீ.. உன் சீமந்த புத்திரியோட பாசமலர் படத்தை


அடுப்பங்கரையில் இருந்து வேகமாக வந்தவள்,ஏன்டா உனக்கு எல்லாம் சூடு சொரணையே கிடையாதா..

தன் கையில் இருந்த கரண்டியால் தன் மகளிள் தலையில் அடித்தாள்..

ஏண்டீ அவன் தான் புத்திகெட்டு அலையுறான்.இதுல நீ வேற படிச்சு முடிச்சிட்டு போய் உதவ போறீயாக்கும்.

செருப்பு பிஞ்சுரும் நாயே... படிச்சு வேலைக்கு போனாலும் சம்பள கவரை உடைக்காம எங்க கையில் தான் கொடுக்கணும்..


அண்ணே ஆட்டுக்குட்டி அப்படின்னு ஏதாவது சொன்னே உன் கல்யாண செலவை நாங்க ஏத்துக்க மாட்டோம்.. பக்கத்து வீட்டு பரிமளா கதை தெரியும் தானே...பார்த்து நடந்துக்கோ.


ஏன்டா நீ எல்லா வீட்டுக்கும் போறதே அந்த வீட்டில உள்ள நண்டு நாழிகளை மயக்குறதுக்கு தானா..

பெத்தவங்க என் சொல்ல விட உன்னை தான் ரொம்ப பெரிசு தான் நம்ப வைக்கிறீயே.

நீயெல்லாம் விளங்கவே மாட்ட.நடுத்தெருவுல தான் போய் நிக்கணும் அப்போ தான் என் மனசு ஆறும் என்று கொந்தளித்தாள் அம்மா வழி உறவுக்கார பெண்.

ப்ளீஸ் எதையும் கண்டுக்காதீங்க.. நீங்க எப்பவும் போலவே நல்ல இதயத்தோட நல்லவனாவே இருந்திடுங்க. என்றே சாடை காட்டிய தங்கை


 சில வருடங்கள் கழிச்சு அதே மனுஷன் ஆடம்பரமான காரில் வந்து இறங்கிய போது தெருவில் இருந்த அனைவரும் வந்து மாலை மரியாதையோடு வரவேற்றனர்...

இவர் யார் தெரியுமா எங்களுக்கு நெருங்கின சொந்தம் என்ற சிலர்.

இவர் எங்க வீட்டுல தான் எப்பவுமே சாப்பிடுவார், ( அந்த மனிதர் தான் போடா... பிச்சைக்கார நாயே.. என்று ரொம்பவே உதாசீனமாக பேசியவர்)

ஆம் இன்று பணக்காரனாக இருக்கும் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இதே போன்றதொரு அவமானம் கதை இருக்கிறது.

தனது பெருந்தன்மையான குணத்தின் காரணமாக அவர்கள் அதை வெளியே சொல்லுவதில்லை.


மாறாக பண்கார திமிர் என்ற போலி முகத்திரை முகத்தில் அணிந்து தன்னை தானே பாதுகாத்து கொள்கின்றனர்.

பல சுயநல புலிகளிடம் இருந்து, தன்னை போலவே வாழ்வில் முன்னேற துடிக்கும் பசுவின் குணம் கொண்ட மனிதரை தேடி.


 ஏன்னா இந்த உலகம் கடவுள் படைத்த உண்மையான இதயத்தை விட மனுஷன் படைச்ச காகித பணத்துக்கு தான் மதிப்பு மரியாதை எல்லாம் தரும்.இதை புரிந்து கொண்டவன்.. தன்னை அவமதித்தவரை அதே போலவே அவமதிக்காதீர்..ஆனா பணக்கார திமிர் என பேசுபவன் தான் அன்று அவனை முதலாவதாக உதாசீனம் செய்தவன்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...