கிறிஸ்துமஸ்

தன்னை
சிலுவையில்
ஏற்றிய
மனிதரையும்
மன்னிக்கச் சொன்னவர்
பிறந்த நாள்
கிறிஸ்துமஸ்

உலகம்


Global warming - save nature

Knowingly or unknowningly we are facing this issue overall.
Just because we are not aware of it, nature doesn't forgive us.
Now nature is trying to balance the equation by way of heavy Storm, rainfall, sunlight heat level increase, snowfall,  and also ocean underwater changes.
Remedies are only with us.
please save nature.
Ponds, lakes and dams has to been taken care in duly manner.

Please share if you are interested in nature.

கடல்

கோபித்துக் கொண்டு
ஆவியாகி வானம்
சென்றது, அங்கும்
இருக்கப்பிடிக்காமல்
கண்ணீர் சிந்தியது
மழையாக
அணை போட்டாலும்
அங்கும் சிலநாள்
தங்கி விட்டு
ஆறாக பாய்ந்தது
அன்பை தேடி
பல ஊர்சுற்றி
விட்டு நமக்கு
சரியான இடம்
என தேடி ஓடி வந்து
மீண்டும்
அடைக்கலம் கேட்டது
ஆற்றின் குணம்
தெரிந்து அன்பால்
கட்டியணைத்து
தனதாக்கிக் கொண்டது
கடல்

முகவரி


தொடங்கியதா காதல்

ஆறுதல் மொழி பகர்வதா...
பிறர் மனம் புண்படாத 
வண்ணம் எண்ணத்தில் கூட 
தன்னை தானே தண்டித்து 
மகிழ்வதா... மனதிற்குள் 
இருப்பதை யாரும் 
சொல்லாமல் தவிப்பதா...
மனதிற்குள் மருகியே
அன்பை தேடி வாழ்வதா...
சாதி மதம் கடந்ததா... வயதான 
அப்பனையும் ஆத்தாவையும் 
விட எதுவுமே பெரிதல்ல 
என்றே அவர்களுக்காக
தன்னலமற்று வாழ்வதா..
கட்டியணைப்பதா...
விரகதாபத்தில 
முத்தங்களை தேடுவதா...
வியர்வைகளின் 
பரிமாற்றமா... 
வேதனையை பிறருக்கு தருவதா 
அல்லது வேதனையை தன்னுள்ளே 
சுமந்தபடி குடும்பத்தின் 
உறுப்பினர்களின் உள்ளத்திலும் 
முகத்திலும் பாசத்தையும் 
நேசத்தையும் விதைப்பதா...
கடற்கரையில் கைகளை 
கோர்த்து நடப்பதா...
அடுத்த தலைமுறைக்கு 
சந்ததியின் தேடலா...
பாசமும் பாதுகாப்பான 
அப்பாவை போன்ற தேடலா..
காதலெனும் பெயரில் ஊர் சுற்றி.
கணவன் மனைவியாகி 
காய்கறி மளிகைக்கு 
மல்லுகட்டுவதா....
போகத்தின் தேடலா...
அல்லது எதையுமே 
எதிர்ப்பாராமல் தந்தையும் 
தாயும் போல் ஊரெல்லாம் 
ஆடம்பரத்தில் ஆர்ப்பரித்து 
ஆர்ப்பாட்டம் செய்த போதும்.
நம்ம தகுதி இவ்வளவு 
கிடைச்சதே பெரிது என்றபடி 
ஓவ்வொரு நாளும் நோய் 
நொடியற்ற நிம்மதியான 
வாழ்வே தந்த கடவுளுக்கு 
நன்றி சொல்லி கடந்தகால 
கவவைகளை புறந்தள்ளி 
எதிர்காலத்தை நினைத்து 
நிகழ்காலத்தில் உழைக்கும் 
இந்த சாதாரண மனிதனாக 
வாழ்வதா...அன்பை தேடி 
அலைந்து கோவிலில் 
நுழைந்ததும் கண்பட்டதே 
வார்த்தை அன்பே சிவம்..
ஓர் வேளை இறைவனை 
வணங்கவே இல்லறம் 
தொடங்கியதா காதல் 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...