தேர்தல் என்பது

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் விளையாட்டு மைதானம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் வாழ்வாதாரம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் வியாபாரக் கணக்கு 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் புரியாத புதிர் 

சிலருக்கு தேர்தல் என்பது 

அலுப்பு தரும் வேலை 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் இடத்தில் இருப்பவனை 

சம்பந்தமே இல்லாத இன்னொரு 

இடத்திற்கு வலுக்கட்டாயமாக 

கால்பந்தாட்ட பந்து போல 

சில நாட்கள் தேர்தல் வேலையென்ற பெயரில் ஏற்படுத்தும் வேலைப்பளூ

சிலருக்கு தேர்தல் என்பது 

காசு புழங்கும் திருவிழா நாட்கள் 

சிலருக்கு தேர்தல் என்பது 

படிப்புக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் 

ஸ்பீக்கர் சத்தங்கள் 

சிலருக்கு தேர்தல் என்பது 

அரசியல் கெளரவம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

கூட்டணிக்கணக்கு 

சிலருக்கு தேர்தல் என்பது 

ஓர் போராட்ட களம் 

சிலருக்கு தேர்தல் என்பது 

 தனது பலத்தை தலைமைக்கு 

காட்டும் விஷப்பரீட்சை... 


அன்பே சிவம்

சிவனை அறிந்திடவே 

சினத்தை தவிர்த்து

சிந்தையில் சிவனை 

நினைத்து சிவத்தை 

அறிந்தவனும் 

சிவனத்தை 

அறிந்நிட துடிப்பவனும் 

பணத்தை ஓர் பொருட்டாகவே 

எந்நாளும் நினைப்பதில்லை..

நினைத்ததுமில்லை... மாறாக.

பணத்தை மாத்திரமே 

நினைப்பவன் சிவனை

அறிவதே இல்லை...

பொய் விளம்பரங்களே 

உண்மையை அறியவைக்கிறது 

அன்பே சிவமென்று

சீண்டுவதில்லை

ஏழையாக இருப்பவன்

பணக்காரனாக துடிக்கிறான்.. ஆனால்
பணக்காரனாக
இருப்பவனோ தன்னை
ஏழையாகவே காண்பித்து
கொள்கிறான்...பணமென்ற
வண்ணக் காகிதங்கள் என்றுமே
பித்தனை போன்றே அடிக்கடி
இடமாறும் என்பதை அறிந்தே
ஏழையை போலவே நடிக்கிறான்...
பணத்தை பிரதானமாக
நினைப்பவன் நிம்மதியை
துறக்கிறான்...இறைவனை
படைத்த அன்பை மாத்திரமே
பிரதானமாக நினைவன்..
சிவனை போலவே
மெளனத்தில் தன்னை
அறிந்து அமைதியாகிறான்...
உலகின் கோமாளி கூத்துக்கள்
அவனை சீண்டுவதில்லை

உண்மைத்தொண்டன்..

 

நேற்று ஓர் கட்சியுடன் கூட்டணி 

என்ற போதும் அமைதியாக இருந்தான் 

இன்று வேறு ஓர் கட்சியுடன் கூட்டணி 

என்ற போதும் அமைதியாக இருக்கிறான் 

நாளை இன்னொரு கட்சியுடன் கூட்டணி 

என்ற போதும் அமைதியாக இருப்பான்... 

ஏனெனில் தனது தலைவனைப் போல 

அடிக்கடி மனதையும் கொள்கையும் 

மாற்றிக் கொள்ள விரும்பாத உண்மைத்தொண்டன்

அவனின் மனதில் ஆழப் பதிந்து விட்ட 

ஓரே ஓர் கொள்கை எந்த நேரத்திலும்

எனது தலைவன்  ஒருவனே

 

நேதாஜி புகழ் மேன்மேலும் இந்தியாவில் பரவும்

 விடுதலை என்ற பெயரை வைத்து காசு சேர்க்க தெரியவில்லை. மாறாக சேனையை சேர்க்க தெரிந்தது.


பெண் விடுதலை பெண் விடுதலை என்று வெற்று கோஷத்தை மேடையில் பேசவதற்கு எடைக்கு எடையாக ஏழை குடியானவனின் உழைப்பை உறிஞ்சவில்லை.

மாறாக ஓர் மாபெரும் அரசை நிரமாணிக்க வீறு கொண்டு நடை பழகினார்.

இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் என்றவர். தேசமும் தெய்வீகமும் இருக்ண்கள் என்றே ஆங்கில அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய #பசும்பொன் அவர்களின் ஆத்ம நண்பர் , பசும்பொன் அவர்களை இனிமேல் இவர் பேசினால் நமக்கு தான் ஆபத்து என்றே ஆட்சியாளர்கள் அரண்டு மிரண்டு கிடந்த போது , #நேதாஜி உயிருடன் இருக்கிறார் என முழங்கியவர்...ஏனோ இவர்களையெல்லாம தனது தாத்தா என்று சொல்ல மனம் வரவில்லை போலும்..
இவரை தனது படத்திற்கு மட்டும் பயன்படுத்தியவரை, உங்களின் பாராளுமன்ற மன்ற உரையில் புறக்கணிப்பது ஏனோ...


இந்தியாவின் அசைக்க இயலாத மாபெரும் சக்நியாக உருவெடுத்தவர்... இனிமேல் இந்தியா முழுவதும் இவரின் புகழ் மேன்மேலும் பரவும்

பாராளுமன்றத்தில் பட்டினத்தார்

 


தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற பட்டினத்தாரின் சிறந்த வாய்மொழியை பாராளுமன்றத்தில் பேசியதற்கு மிக்க நன்றி திரு #கமலஹாசன் அவர்களே.


என்ன தான் நீங்கள் அவர் எனக்கு  இவர் எனக்கு முன்னோடி என்றெல்லாம் சொன்னாலும்..

உங்களின் ஆழ்மனதின் தேடல் இறைவனையும் இறையை பற்றிய தேடலும் உள்ளதையும், அதன் காரணமாகவே நீங்கள் பட்டினத்தார் பற்றி படித்து அவரின் இந்த சாகாவரம் பெற்ற தத்துவத்தை தமிழில் பேசி... தமிழ் மொழி இறைவனோடு பேசும் சர்வ சக்திவாய்ந்த மொழி என்பதை நீருபணம் செய்தமைக்கு நன்றி.


பழந்தமிழரின் வாழ்வில் குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் பாலை என்ற ஐந்து வகையான வெவ்வேறான வாழ்வில் கலாச்சாரமும், காலத்தின் ஓட்டத்தில் தமிழ் என்ற ஓர் குடையில் கீழ் தமிழர் என்ற அடையாளம் கண்டது.


உங்களின் எல்லா படங்களிலும் வரிகளிலும் மிகத்தெளிவாக இந்தியாவின் இறையாண்மை என்றுமே சிறக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியது விக்ரம், தொடங்கி கைதியின் டைரி,கருதிபுனல், புன்னகை மன்னன் , தசாவதாரம் உத்தமவில்லன் படம் வரையில்... நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஓற்றுமையை சொல்லுவது புரிகிறது...


உங்களின் சினிமா வரலாற்றில் நேதாஜி என்ற தலைவருடன் நீங்கள் இருப்பது போல்  காட்டீர்கள்.


உங்களுக்கு ஓர் எழுத்தாளனாக ஓர் சிறு விண்ணப்பம்.. பெண்களை படைப்பிரிவின் தலைவராக மாற்றி பெண்களை பாரதத்தை பாதுகாக்கும் ஓப்பற்ற சகத்தியாக மாற்றிக் காட்டிய நேதாஜி பற்றியும் பேசுங்கள் 


வாழ்க தமிழ் வளர்க தமிழ் 

வாழ்க இந்தியா வளர்க்க இந்தியர்களின் ஓற்றுமை 


வேற்றுமையிலும்  ஒற்றுமை காண்பதே இந்தியா.

ஜெய்ஹிந்த்பாராளுமன்றத்தில் பட்டினத்தார்.

காங்கிரஸ் என்பது காந்தி மட்டுமல்ல

 


காந்தி தான் காங்கிரஸ்... காங்கிரஸ் தான் காந்தி என்ற இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கும் பலர்..ஏதோ காங்கிரஸில் இருந்த மிதவாத போக்கு பிடிக்காமல் இப்படியே இருந்தா.. இன்னும் பத்து தலைமுறைக்கும் விடுதலையை பார்க்க முடியாது என்றே தீவிரவாதத்தை கையில் எடுத்தனர்... அதில் ஆணித்தரமாக காந்தியை எதிர்த்து வென்றவர் நேதாஜி ஆனால் அவரை பணி செய்ய விடாமல் காந்தியின் காரிய கமிட்டி உறுப்பினர் சிலரின் நடவடிக்கையால் பதவியை துச்சமென துறந்தே INA -ஐ உருவாக்கினார்...
காந்தி என்பவர் காங்கிரஸில் இருந்த பல தலைவர்களில் ஒருவர்....அவரை விடவும் சிறந்த பலரின் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு உள்ளது.. ஆயினும் அரசு நூலகத்தில் கூட சில நூல்கள் இருக்கின்றது..அவைகளை படித்தால் காந்தியை விடவும் சிறப்பாக செயல்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரை அறிய முடியும்..

அருமருந்தே

 அன்பும் ஆக்கோரஷமும் 

இன்முகமும் ஈகையும் 

உவப்பும் ஊக்கமும் 

எண்ணிடலங்கா ஏற்றத்தை 

ஐயமின்றி ஒலிக்க செய்தது 

அவளின் சின்னச்சிறு 

சலங்கை ஓலி ...செல்ல மகளின் 

ஓவ்வொரு செயலும் 

கவலை போக்கும் அருமருந்தே 

கீதையின் நாயகனே

எனக்கு எதன் மீதும்

ஆசையே இல்லை 

அடிக்கடி அப்பாவும் 

அம்மாவும் சொல்லிக் 

கொண்டே இருக்கும் சொற்கள் ...

ஏனோ எதிர்த்து கேட்க 

தைரியமில்லை அப்போ 

 வீடு கார் பங்களா எல்லாமும் 

எதற்காக ...... யாருக்காக 

வாங்கியது.... படித்து முடித்து 

சேர்ந்த வேலையில் வாங்கிய 

சில ஆயிரம் சம்பளத்தில்

அம்மாவுக்கு பட்டு புடவையும் 

அப்பாவும் கைகடிகாரமும் 

வாங்கிக் கொடுத்தேன்....உனக்காக 

நீ எதுவும் வாங்கலையா என்றபோது 

எனக்கு எதன் மீதும் ஆசையே இல்லையே

என்றே சொல்ல ஆரம்பித்த போதே 

ஆயிரமாயிரம் ஆசைகளை 

மனதில் சுனாமியாக அலையடித்தது

கண்களை தழும்பியது. ... 

முகத்தை திரும்பிக் கொண்டே 

மீண்டும் ஒர்முறை அழுத்தம் 

திருத்தமாக சொன்னேன் 

"எனக்கு எதன் மீதும் ஆசையே இல்லை"

உதட்டில் உதிர்த்த வார்த்தைகள் 

மனதிலும் விடை அறியமுடியாத 

கேள்விகள் தொடங்கியது ஆழ்மனதில்...

இது என்னோட பையன் வாங்குன 

சேலை கலர் துணி எல்லாமே 

அருமை அருமை... அம்மாவின் சொற்கள்... 

இது அவன் வாங்கிட்டு 

வந்த வாட்ச் அதான் கழட்டவே 

மனசில்லை... தூங்கும் போதும் 

கைகளில் இருந்தது கை கடிகாரம்...

ஆசையே இல்லாதவர்களின் 

ஆசையை நிறைவேற்றிய 

நிமிடத்தில் இருந்து நானும் 

அடிக்கடி சொல்ல ஆரம்பித்த 

வார்த்தைகள் எனக்கு எதன் மீதும் 

ஆசையே இல்லையே.... தூரத்தில் 

எங்கோ பாடல் சத்தம் கேட்டது 

கேட்டதும் கொடுப்பவனே 

கிருஷ்ணா கிருஷ்ணா 

கீதையின் நாயகனே 

கிருஷ்ணா கிருஷ்ணா 




God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...