ஈரோடு ஓர் சரித்திரமா சாதனையா...

 ஈரோடு நகரத்தில் ஸ்ட்ரைக்சர் எடுத்து வர தாமதம் ஆனதோ அல்லது வேறு எதுவும் காரணமாக என்பதை நானறியேன்.. ஆனால் தனது வயதான ஏழை  தாயை தூக்கி செல்லும் மகளின் பாசம் தான் இந்த கட்டுரை எழுத காரணம்.

சினிமா நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதிகளை கொண்டாடும் நாம் சில நிமிடங்களுக்கு இந்த பெண்ணின் வலியை கடந்த வலிமையை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது மட்டுமல்ல...


சந்திரனில் சென்று தண்ணீரை தேடும் நாம் இயற்கை படைத்த அன்பான வாழ்வை விட்டு விலகி செல்ல வைத்த இயந்திரதனத்தை மறந்து...

இந்த அன்பையும் பாசத்தையும் கொண்டாட வேண்டியது கட்டாய தேவை.

பல குடும்பங்களில் இன்று கோடி கோடியாக ரூபாய் இருந்தும் பாசமில்லாத நிலை இருக்கிறது.. ஆனால் இந்த இருவரிடமும் இருக்கும் பாசபான பிணைப்பிற்கு ஈடுஇணையில்

லை 


அவள் ஏழையா...பணக்காரியா



எல்லாரும் பணத்தை தேட அலையும் உலகில் இதோ இங்கே ஒருவள் தனது தாயை தூக்கி கொண்டு செல்கிறாள்.


இவள் என்ன ஜாதி மதம் என்று கூட ஆலோசனையும் மனிதர்களும். இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அவர்களுக்கு தெரியாதே. உலகில் பத்து மாதம் சுமந்து பெற்றவளை ஸ்ட்ரகசர் இல்லை என்பதை பொருட்டு படுத்தாமல் அவளை அந்த வயதானவளுக்கு தாயாக மாறிவிட்டாள்..


ஆம் பத்து மாதம் சுமந்து பெற்றவளகன் வலியை விட மிகவும் கொடியது தான் இந்த வலி..


அந்த தாயை தூக்கி செல்லும் போதும்..மிகவும் தைரியசாலியை போலவே தூக்கி செல்கிறாள் அந்த சகோதரி.


பெண் விடுதலை பெண்ணியம் புதுமை பெண் என ஆயிரம் பேசி அதிகாரத்தை கையிலெடுத்தாலும்...பெண்ணின் பலமே அவளின் பாசம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபணம் செய்து விட்டாள் இந்த சகோதரி 


ஆம்...இந்த நேரத்தில் உடனிருந்து உதவ ஆண் மகன் இல்லையே.. அம்மா.. என்னை பெற்ற போது நீ எத்தனை வலிகளை சுமந்தாயோ தெரியாது ஆனால் உன்னை சில நொடிகள் சுமந்து சென்றால் நான் ஓன்று குறைந்து விட மாட்டேன்...


என்னை போற்றி வளர்த்த உன்னை தள்ளாத வயதில் தாங்கிப் பிடிக்கிறேன்..என்ற படி மகள் தாயாகி நிற்கிறாள்..


கோடி கோடியாக பணம் சேர்த்த பிறகும் இன்னும் இன்னும் என கோடிகளை சுருட்டிக் கொண்டு வாழும் மனிதரில் இவள் மிகவும் உயர்ந்தவள் தான்.


மனிதன் படைத்த பணத்தை விட தன்னை படைத்த தாய்மையின் வயிற்றிலும் தாய் மிகவும் புண்ணியவதி நெஞ்சிலும் வலியை தாண்டிய சந்தோஷம் வந்திருக்கும்...


பெண்ணே உன்னை போல் மகளை பெற்ற

தாய் மிகவும் புண்ணியவதி..


என்ன தவம் செய்தாளோ உன்னை போன்ற ஓர் பாசக்கார பெண்ணை பெற்ற தாய் 

நாய்குட்டியும் நானும்

 யாருமற்ற தனிமையை தேடி படகில் கடலில் சற்று தூரம் சென்றேன்..

அழகான ஓர் கவிதை புனைந்திட வேண்டி பல மணி நேரம் யோசித்த போதும் மனதில் ஏதோவொரு நெருடல்... அமைதியான மனதிலும் ஓர் இனம் புரியாத கவலை.. படகின் மேல்தளத்தில் இருந்து கீழ்தளம் நோக்கி வந்தபோது அந்த மாடிப்படியில் அருகில் ஓர் அழகான நாய்க்குட்டி இருந்தது..

யோசித்துப் பார்த்தால் பக்கத்து வீட்டு சிறுவன்.. நாம இரண்டுக்கும் பேருக்கு கடவுள் துணை இருப்பார் என்று புலம்பிக் கொண்டே சென்றது நினைவு வந்தது.

கவிதை எழுத வந்த கவிதையை முற்றிலும் மறந்து. அந்த சிறுவனின் நாய்குட்டி மீதான காதல் என்னுள் பரவியது.

எனது பெரும் உணவில் சிறு பகுதியை கூட அதிகம் என்பது போல் சிறிதான அளவே சாப்பிட்டது.. இரண்டு நாட்கள் கடலுக்கு நடுவே இருக்கிறோம் என்ற நினைவே இன்றி சந்தோஷமாக இருந்தது..படகை கரைக்கு செலுத்தினேன்.

அந்த சிறுவன் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து எனக்கு மட்டும் கேட்பது போல் பேசினான்.. அந்த நாய்க்குட்டியை நீங்க கடல்ல தூக்கி வீச மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.

ஏதோ  படகின் முதலாளி போல் உள்ளே சென்றவனின் காலடி சத்தம் கேட்டு வாலை ஆட்டிய படி வாஞ்சையுடன் வந்தது நாய்க்குட்டி..

வீட்டிற்குள் நுழைந்த போது மனைவி கேட்டாள்.. என்னங்க ஏதோ கவிதை எழுவதாக சொல்லிட்டு போனீங்களே..எழுதி கிழிச்சாச்சா...பக்கத்து வீட்டு பொடியன், எதுக்கு உங்களை அவ்வளவு கரிசனமா அடிக்கடி விசாரிச்சான்... இரண்டு நாளா எதோ பொக்கிஷத்தை தொலைச்ச மாதிரியே திரிஞ்சான்..

மேஜையில் வந்தமர்ந்து எழுத 

தொடங்கினேன் கவிதை அல்ல ஓர் சிறு கதை அதன் தலைப்பு  நாய்க்குட்டியும் நானும் 

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...