நாய்குட்டியும் நானும்

 யாருமற்ற தனிமையை தேடி படகில் கடலில் சற்று தூரம் சென்றேன்..

அழகான ஓர் கவிதை புனைந்திட வேண்டி பல மணி நேரம் யோசித்த போதும் மனதில் ஏதோவொரு நெருடல்... அமைதியான மனதிலும் ஓர் இனம் புரியாத கவலை.. படகின் மேல்தளத்தில் இருந்து கீழ்தளம் நோக்கி வந்தபோது அந்த மாடிப்படியில் அருகில் ஓர் அழகான நாய்க்குட்டி இருந்தது..

யோசித்துப் பார்த்தால் பக்கத்து வீட்டு சிறுவன்.. நாம இரண்டுக்கும் பேருக்கு கடவுள் துணை இருப்பார் என்று புலம்பிக் கொண்டே சென்றது நினைவு வந்தது.

கவிதை எழுத வந்த கவிதையை முற்றிலும் மறந்து. அந்த சிறுவனின் நாய்குட்டி மீதான காதல் என்னுள் பரவியது.

எனது பெரும் உணவில் சிறு பகுதியை கூட அதிகம் என்பது போல் சிறிதான அளவே சாப்பிட்டது.. இரண்டு நாட்கள் கடலுக்கு நடுவே இருக்கிறோம் என்ற நினைவே இன்றி சந்தோஷமாக இருந்தது..படகை கரைக்கு செலுத்தினேன்.

அந்த சிறுவன் என்னை நோக்கி வேகமாக ஓடி வந்து எனக்கு மட்டும் கேட்பது போல் பேசினான்.. அந்த நாய்க்குட்டியை நீங்க கடல்ல தூக்கி வீச மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.

ஏதோ  படகின் முதலாளி போல் உள்ளே சென்றவனின் காலடி சத்தம் கேட்டு வாலை ஆட்டிய படி வாஞ்சையுடன் வந்தது நாய்க்குட்டி..

வீட்டிற்குள் நுழைந்த போது மனைவி கேட்டாள்.. என்னங்க ஏதோ கவிதை எழுவதாக சொல்லிட்டு போனீங்களே..எழுதி கிழிச்சாச்சா...பக்கத்து வீட்டு பொடியன், எதுக்கு உங்களை அவ்வளவு கரிசனமா அடிக்கடி விசாரிச்சான்... இரண்டு நாளா எதோ பொக்கிஷத்தை தொலைச்ச மாதிரியே திரிஞ்சான்..

மேஜையில் வந்தமர்ந்து எழுத 

தொடங்கினேன் கவிதை அல்ல ஓர் சிறு கதை அதன் தலைப்பு  நாய்க்குட்டியும் நானும் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...