இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.

 


ஆற்றின் ஓர் கரையில் இருப்பவர் மற்றொரு கரையில் இருப்பவரை பார்த்து நாம் இருக்கும் இடத்தை விட அவர்கள் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது என நினைப்பதே மனித இயல்பு.


ஓர் வேளை நீங்கள் மறுகரைக்கு சென்றால் அங்கும் இதே போன்ற வாழ்வும் சூழலும் தான் இருக்கும். வெளிநாடு போனால் எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் போனவர்கள் சில நாட்களில் தனது சொந்த ஊரை சிறந்தது என நினைப்பது போன்றதே.

வாழ்வில் யாருக்கும் தான் பிரச்சினை இல்லை.இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் எப்படி சமாளிக்க முயற்சி செய்து வெற்றி பெறுவது என்பதே வாழ்க்கை.


உண்மையை சொன்னால் மனித வாழ்க்கை நீர் குமிழ் போன்றது.இதை அறியாத மனிதரே இது எனது அது உனது என பணத்திற்கும் வேலைக்கும் அடுத்தவன் முதுகில் குத்தி தன்னை முன் நிறுத்துகிறான்.

மனிதன் படைத்த பணத்திற்காக முயல் போல் ஓடும் மனிதன்,தனது ஓட்டத்தின் வேகத்தில் கடவுள் படைத்த அன்பு பாசம் சக உயிருக்கு உதவி செய்தல்... வயதான தனது பெற்றவரை கவனிப்பது தன் சார்ந்த சொந்த பந்தங்களை பேணுவது போன்ற உயர்ந்த மனித இயல்புகளை மறந்து விடுகிறான்.


இந்த உலகில் யாரும் 1,000 வருடங்களுக்கு வாழப் போவதில்லை.

அதிகபட்சம் 80 வயது வாழத்தாலே ஆச்சரியம்.


மனித வாழ்வில் கடவுள் உனக்கு தந்த சிறந்த விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

ஏன்னா உங்களுக்கு இறைவன் எல்வளவோ சிறந்த விஷயங்கள் தந்து இருக்கிறார்.அப்படி இருந்து நிம்மதியே இல்லாதது போல் நீங்கள் வாழும் போது.


உங்களிடம் இருப்பது கூட இல்லாத இன்னொரு மனிதர் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்.

உங்களிடம் இருக்கும் பணம் பங்களா பேங்க் பேலன்ஸ் அல்ல வாழ்க்கை.. வாழ்க்கை என்பது நிம்மதியா வாழ்வது.


மனிதன் படைத்த பணத்தை விட கடவுள் படைத்த பாசமே உயர்ந்தது.


வாழுங்கள் உங்களின் சொந்த பந்தங்களுடன் அன்பான பாசமான வாழ்வை..


ஏன்னா எல்லோரின் மனதிலும் தனக்கு கிடைத்த விஷயங்களை விட கிடைக்காத விஷயங்களின் மீதே ஈர்ப்பு இருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை..


இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள்.

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...