உனது நண்பன்

 

தலைவனாக மாறும் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் அதிகப்படியான அன்பும் ஆசைகள் பாசமும் எண்ணற்றதாக இருக்ககறது...அவற்றை சுற்றி இருப்பவர்கள் புரிந்தும் அவனுக்கு எதையுமே செய்து கொடுக்காத காரணமாக..பிறரை தண்டிக்க மனமின்றி தன்னை தானே தனிமைச்சிறை அடைத்து கொண்டான்.. அவனுக்கு காலம் தரும் பேர் தான் தலைவன்.


தலைவனாக மாறும் ஓவ்வொரு மனிதனும் மிகவும் இளகிய மனம் படைத்தவன். தனது பேச்சோ செயலோ பிறரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணரும் ஓவ்வொரு மனிதனும் அமைதியாகிறான் 

நீங்க ஏன் இப்படி நடந்து கிட்டே... நீங்க இப்படியெல்லாம் செய்வே என்று நாங்க நினைச்சு கூட பார்க்கலை என்று அந்த பெரிய மனுஷனை சுற்றி நின்று பேசுபவர்களுக்கு.. எப்படி சொல்லி புரிய வைப்பது.

இருவரின் வாழ்வில் அவர்களுக்குள் ஏற்பட்ட அன்பின் வெளிப்பாடு....

இவன் நமக்கு தருவான் என்று நம்பிக்கையில் கேட்கிறான்.ஆனால் தாமதமாக தான் புரிகிறது.

எவ்வளவோ நம்பிக்கையான வார்த்தைகளை எல்லாம் பேசியவர்கள் சுயநலவாதிகள் என்பது காலம் தானே காட்டுகிறது.


இந்த உலகில் பணம் மட்டும் தான் வாழ்க்கை.அந்த பணத்தை எப்படியெல்லாமோ சம்பாதிக்க துடிக்கும் அவசர கதி கூட்டம்..

அவசரகதி கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி... கஷ்டப்படுவது மனிதாபிமானமும் உண்மை அன்பும் தான்.

பணத்தை சம்பாதிக்க போலியாக சிரித்து போலியாக பேசி நடிக்கும் மனிதர்களின் மனதில் எதிராளியும் அப்படித்தானே என நினைக்கிறான்.

உண்மையான கள்ளமில்லாத அன்பும் பாசமும் நேசமும் தேடியவனோ, பிறரை தண்டிக்க மனமின்றி தன்னை தானே தனிமைச்சிறை அடைத்து கொள்கிறான்.


பல நேரங்களில் தனிமையில் தன்னை தானே அடைத்துக் கொண்டு உதட்டில் புன்னகையுடன் சிரிக்கிறான்...உனது அன்பை உண்மை என்று நம்பி ஏமாந்த உனது நண்பன்.


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...