752 - அட்சய திருதியை
751 - பத்மபூஷன் விருது அஜித்
சரியான நேரத்தில் சரியாக வந்து சேர்ந்து இருக்கிறது இந்த மதிப்பிற்குரிய விருது அஜித் அவர்களுக்கு .
சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதர் அஜித்
சினிமாவில் சேர்ந்த சில ஆண்டுகளில் அவரை ஓர் வார பத்திரிகை பேட்டி எடுத்து போதே சொன்னார். எனக்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அடையணும் அது தான் என்னோட ஆசை லட்சியம் என்று.
பத்திரிகை நடத்துபவர்களுக்கு தங்களின் வியாபாரத்தை சிறப்பாக செய்ய தெரியும் என்பதை அறியாமல் கள்ளமில்லாத மனதுடன் அவர் அன்று சொன்ன வார்த்தைகளை அவருக்கு எதிராக பேச வைத்தது சிலர்.
அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா..ஜம்பது படம் கூட முழுசா முடிக்கலை அதுக்குள்ள இவருக்கு சூப்பர் ஸ்டார் ஆகணும் என்று ஆசையா கேலியும் நய்யாண்டியும் பேசிய சிலர் .
அவர் மீண்டும் மீண்டும் தெளி படுத்தினார். பத்திரிகைகாரங்க பேட்டி எடுக்கும் போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேன்.. யாரா இருந்தாலும் தான் இருக்கும் துறையில் இருக்கும் உச்சபட்ச நிலையை அடைய நினைப்பது தவறா.. இங்கே எல்லோருக்கும் சூப்பர் ஸ்டார் கனவு இருக்கு. அதை வெளியே சொல்ல பயப்படுறாங்க
எனக்கு அந்த பயமில்லை அதனால் தைரியமாக சொல்லுறேன்.. நிச்சயமாக எனக்கு அந்த தகுதி இப்போ வேணா இல்லை என்று சிலர் விமர்சனம் பண்ணலாம் நிச்சயமாக என்னோட தகுதி திறமையை வளர்த்துக் கொண்டு நிச்சயமாக நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்றார்..
பல முறை இவரை தலை கனம் பிடித்தவர் இவருக்கு பேச தெரியாது என விமர்சகர்கள் வந்த போது..சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியே நின்றார்.. தனக்கு பிடித்தமான விமானங்கள் சார்ந்த விஷயத்தை பொழுது போக்காக செய்தார்..
இவரை இழித்தும் பழித்தும் பேசிய அதே மனிதர்கள் அஜித் ஏன் இப்போ படம் பண்ணுறதில்லை என்று யோசிக்க வைத்தார்.. சில ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டுகளாக மாறிப்போனது.
எந்த பத்திரிகை எல்லாம் அஜித் வாய் துடிக்கானவர் என எழுதியதோ அதே பத்திரிகைகள் அவரின் வீட்டு வாசலில் சென்று அவரை பேட்டி காண துடித்தன.ஆனால் மனிதர் தனது அமைதியும் புன்னகையும் பதிலாக தந்தார்.
இன்றும் கூட விமான நிலையத்திலும் சார் ஓரே ஓர் பேட்டி...என அவரை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து தங்களின் டி.ஆர்.பி எகிற வைக்க முயற்சி செய்யும் பல ஊடக நண்பர்கள்.. சிலர் செய்த தவறுகள் அவரின் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது என்பது தான் யதார்த்தமான உண்மை.
ஓர் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த அனைவருக்கும் இருக்கும் ஆர்வம் ஆசை இவைகளை அன்று அவர் சொன்னதை ஊடகங்கள் பேசி பிரச்சினையாக்கியது, விளைவு மனிதர் அமைதியாக விலகி நின்று தனது செயல்களால் உலகை திரும்பி பார்க்க வைக்கிறார்
இன்றோ மாபெரும் வெற்றியை பெற்று விட்டார்..இதை பற்றி பேட்டி எடுக்க பல பத்திரிகைகளில் போட்டி நடைபெறும்.. ஆனாலும் அஜித் எந்த ஓர் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுக்க மாட்டார் என்றே கோடிக்கணக்கான அஜித் அவர்களின் ரசிகர்களில் ஓருவனாக நினைக்கிறேன்.
ஓர் வேளை அவர் தனது மெளனத்தை விடுத்து மீண்டும் பேட்டி கொடுத்தால், அதனால் மிகப்பெரிய சந்தோஷம் அடையும் ஓர் சாதாரண அஜித் ரசிகன் நான்.
ஆமாம் ஓர் வேளை அவர் எதாவது பேசினால் அது கூட மிகவும் தன்னம்பிக்கை தரும் உற்சாகமாக சொற்களாகவே. இருக்கும்.
நிச்சயமாக அதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கவே இருக்காது.. ஆனால் அதை பிற ஊடகங்கள் அரசியலாக ஆக்காமல் இருக்க வேண்டுமே என்ற அச்சமும் இருக்கிறது..
ஏனெனில் அஜித் என்ற பெயரை வைத்து தான் இங்கே பலர் கோலி விளையாட நினைக்கின்றனர் ஆனால் அவரோ யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் தர நினைக்காமல் தான் உண்டு தனது வேலையுண்டு என்றே தனித்த சுதந்திரமான வழியில் வாழும் ஓர் அற்புதமான மனிதர்
750 - புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
வயதான தாத்தா ரோட்டில் விழுந்து கிடந்தார்.. கிழட்டு மனுஷ வீட்டுல சொல்லாம வந்நிருப்பாரூ என எக்காளம் செய்து சென்ற சிலர்... ஓர் சிறுவன் ஓடிப் போய் அவரை கை பிடித்து தூங்கிவிட்டான்...நீ நல்லா இருக்கணும் தம்பி என்றுவுடன் தாத்தா நீங்க சாப்பிட்டீங்களா என்ற போது அவரின் கண்கள் கலங்கியது கொஞ்சம் பொறுங்க...சில ஐம்பது ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தான்... டேய் இது விளையாட்டு போட்டிக்கு நீ சேர சொல்லி கொடுத்தது... எனக்கு தெரியும் நீ சும்மா இரு நண்பனை கட்டுபடுத்தினான்...தம்பி உனக்கு என தாத்தா கேட்டார்.. என்கிட்ட சேமிப்பு பணம் கொஞ்சம் இருக்கு.. அதை எடுத்து பணத்தை கட்டி விடுவேன்.. நீங்க போய் சாப்பிடுங்க தாத்தா...தெருவில்
சுற்றி இருந்த அனைவரும் உதவி செய்யாத போதும் சிறுவன் உதவி செய்தார்...ஏன்டா நீ இப்படி பண்ணிணே என நண்பன் கேட்டதற்கு டேய் என்னோட தாத்தா மாதிரியே இருந்தாரூ டா அதான் என பேசிய படி இருவர் சென்றனர்.
.. தூரத்தில் பாட்டு சத்தம் கேட்டது... புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக
749 - எனக்கு நீங்க கடவுளை காட்டுவீங்களா..
சாமியார் வேஷத்தில் தான் சந்திக்கும் எல்லோரிடமும் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என விவேகானந்தர் கேட்பார்.. அதில் பலர் நானே கடவுள் என்றனர்.சிலர் கடவுளை எல்லாம் உடனே பார்க்க முடியாது அதற்கு பக்குவம் வரணும் நீ கொஞ்ச நாட்கள் என்னுடனே தங்கிஇருந்து எனக்கு சேவகம் செய்யணும் அப்படி செய்தால் தான் என்னால் உன்னை நன்கு புரிந்து கொண்ட பிறகே கடவுளை காட்டுவேன் என்ற சிலர்.. கடவுள் பார்க்கணும் என்றால் சில விஷேச பூஜைகள் செய்யணும் அதுக்கு செலவு ஆகும் பரவாயில்லையா என்ற சிலர்... இந்த கேள்வியை பலரிடம் கேட்ட விவேகானந்தர் இனிமே கடவுளை பார்க்கவே முடியாது என்று முடிவுக்கு வந்தார்.. ஆனாலும் கொல்கத்தாவின் கங்கை கரையில் ஓர் பிச்சைக்காரன் இருக்கான் சில நேரங்களில் தான் கடவுளை பார்த்ததாக புலம்புவது உண்டு என சிலர் சொல்ல கேட்டு கல்கத்தா சென்றார்.. எத்தனையோ நபரிடம் கேட்டு விட்டோம் ஆனாலும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவே இல்லை என மனதிற்குள் நினைத்த நரேன்.எதற்கும் இவரிடமும் இந்த கேள்வியை கேட்டுப் பார்ப்போம் என்ற கேட்டார்.. சந்தித்து சில நொடிகளில் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என கேட்டார்
வழக்கமான பலர் பேசிய பொய்யான பசப்புரைகளோ அல்லது காசு கொடுத்தால் தான் பார்க்க முடியும் என்றோ அல்லது நீ எனக்கு கொஞ்ச காலம் சிஷ்யன் போல் அடிமையா இரு பிறகு கடவுளை உனக்கு காட்டுவதற்கு உனக்கு தகுதி இருக்கா என நான் தெரிஞ்சுகிறேன் என்றோ சொல்லாமல்.
மிகவும் யதார்த்தமான மந்தகாசமான புன்னகையில் சொன்னார்
என்னால் தேவியை உனக்கு காட்டமுடியுமா என்று தெரியாது.. நான் வழக்கமாக பண்ணுற விஷயத்தை உனக்கு சொல்லி தருகிறேன். .. அதுக்கு பிறகு உன்னோட இஷ்டம் என சொன்னபடி தன்னருகே அமர வைத்து தியானத்தை சொல்லி கொடுத்தார்..சில நொடிகளில் தியானத்தின் பரவச நிலைக்கு சென்ற விவேகானந்தரின் உடலை தொட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திருப்பிய ராமகிருஷ்ண பரமஹம்சர்.
சாஷ்டாங்கமாக அவரின் காலில் விழுந்து வணங்கிய விவேகானந்தர்...என்னை எதுக்கு இப்போ சாதாரண நிலைக்கு கொண்டு வந்தீங்க..நான் மீண்டும் தியானம் செய்ய போகிறேன் என்றார்...
பரமஹம்சர் அனுமதியின்றி செய்த போது அவரால் மனதை கட்டுபடுத்த இயலவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தியானம் கைகூடாமல் தவித்தார்.
சாமி எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து கொடுங்கள் என்ற போது சிரித்தபடியே சொன்னார்.
நீ கடவுளை பார்க்கணும் என்று குழந்தை மாதிரி ஆசைப்பட்ட ஆனால் உனது உடலும் உள்ளமும் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை.
இனிமேல் கடவுளை யாரிடமும் எனக்கு உங்களால் கடவுளை காட்ட முடியுமா என்று கேட்க மாட்டே தானே மந்தகாசமாக சிரித்த ராமகிருஷ்ண பரமஹம்சர்.
தன்னை மிகப்பெரிய திறைமைசாலி போலவும் இந்த உலகத்தையே காப்பாற்ற வந்த கிருஷ்ண பரமாத்மா போலவும் சிறு வயதில் நினைத்த விஷயங்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்..
நீ தனியாக தியானம் செய்யாதே என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பிறகும். கடவுளை பார்க்கணும் என்ற தணியாத ஆசையில் பல முறை ராமகிருஷ்ணருக்கு தெரியாமல் பல முறை தியானம் செய்ய முயற்சி செய்து தியானம் கைகூடாமல் . அவரின் காலடியில் விழுந்த வணங்கினார்.
எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து தாருங்கள் சாமி..
அவரோ மந்தகாசமாக சிரித்தார்.. விவேகானந்தா... உனக்கான வேலை உலகில் பல இருக்கிறதே...
God Vs Currency Vs Politicians
God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...