749 - எனக்கு நீங்க கடவுளை காட்டுவீங்களா..

 சாமியார் வேஷத்தில் தான் சந்திக்கும்  எல்லோரிடமும் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என விவேகானந்தர் கேட்பார்.. அதில் பலர் நானே கடவுள் என்றனர்.சிலர் கடவுளை எல்லாம் உடனே பார்க்க முடியாது அதற்கு பக்குவம் வரணும் நீ கொஞ்ச நாட்கள் என்னுடனே தங்கிஇருந்து எனக்கு சேவகம் செய்யணும் அப்படி செய்தால் தான் என்னால் உன்னை நன்கு புரிந்து கொண்ட பிறகே கடவுளை காட்டுவேன் என்ற சிலர்.. கடவுள் பார்க்கணும் என்றால் சில விஷேச பூஜைகள் செய்யணும் அதுக்கு செலவு ஆகும் பரவாயில்லையா என்ற சிலர்... இந்த கேள்வியை பலரிடம் கேட்ட விவேகானந்தர் இனிமே கடவுளை பார்க்கவே முடியாது என்று முடிவுக்கு வந்தார்.. ஆனாலும் கொல்கத்தாவின் கங்கை கரையில் ஓர் பிச்சைக்காரன் இருக்கான் சில நேரங்களில் தான் கடவுளை பார்த்ததாக புலம்புவது உண்டு என சிலர் சொல்ல கேட்டு கல்கத்தா சென்றார்.. எத்தனையோ நபரிடம் கேட்டு விட்டோம் ஆனாலும் இந்த கேள்விக்கு விடை கிடைக்கவே இல்லை என மனதிற்குள் நினைத்த நரேன்.எதற்கும் இவரிடமும் இந்த கேள்வியை கேட்டுப் பார்ப்போம் என்ற கேட்டார்.. சந்தித்து சில நொடிகளில் உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியுமா என கேட்டார் 


வழக்கமான பலர் பேசிய பொய்யான பசப்புரைகளோ அல்லது காசு கொடுத்தால் தான் பார்க்க முடியும் என்றோ அல்லது நீ எனக்கு கொஞ்ச காலம் சிஷ்யன் போல் அடிமையா இரு பிறகு கடவுளை உனக்கு காட்டுவதற்கு உனக்கு தகுதி இருக்கா என நான் தெரிஞ்சுகிறேன் என்றோ சொல்லாமல்.

மிகவும் யதார்த்தமான மந்தகாசமான புன்னகையில் சொன்னார் 

என்னால் தேவியை உனக்கு காட்டமுடியுமா என்று தெரியாது.. நான் வழக்கமாக பண்ணுற விஷயத்தை உனக்கு சொல்லி தருகிறேன். .. அதுக்கு பிறகு உன்னோட இஷ்டம் என சொன்னபடி தன்னருகே அமர வைத்து தியானத்தை சொல்லி கொடுத்தார்..சில நொடிகளில் தியானத்தின் பரவச நிலைக்கு சென்ற விவேகானந்தரின் உடலை தொட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திருப்பிய ராமகிருஷ்ண பரமஹம்சர்.


சாஷ்டாங்கமாக அவரின் காலில் விழுந்து வணங்கிய விவேகானந்தர்...என்னை எதுக்கு இப்போ சாதாரண நிலைக்கு கொண்டு வந்தீங்க..நான் மீண்டும் தியானம் செய்ய போகிறேன் என்றார்...

பரமஹம்சர் அனுமதியின்றி செய்த போது அவரால் மனதை கட்டுபடுத்த இயலவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தியானம் கைகூடாமல் தவித்தார்.

சாமி எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து கொடுங்கள் என்ற போது சிரித்தபடியே சொன்னார்.

நீ கடவுளை பார்க்கணும் என்று குழந்தை மாதிரி ஆசைப்பட்ட ஆனால் உனது உடலும் உள்ளமும் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை.


இனிமேல் கடவுளை யாரிடமும் எனக்கு உங்களால் கடவுளை காட்ட முடியுமா என்று கேட்க மாட்டே தானே மந்தகாசமாக சிரித்த ராமகிருஷ்ண பரமஹம்சர்.


தன்னை மிகப்பெரிய திறைமைசாலி போலவும் இந்த உலகத்தையே காப்பாற்ற வந்த கிருஷ்ண பரமாத்மா போலவும் சிறு வயதில் நினைத்த விஷயங்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்..


நீ தனியாக தியானம் செய்யாதே என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பிறகும். கடவுளை பார்க்கணும் என்ற தணியாத ஆசையில் பல முறை ராமகிருஷ்ணருக்கு தெரியாமல் பல முறை தியானம் செய்ய முயற்சி செய்து தியானம் கைகூடாமல் . அவரின் காலடியில் விழுந்த வணங்கினார்.


எனக்கு மீண்டும் ஓர் முறை தியானத்தை அமைத்து தாருங்கள் சாமி..

அவரோ மந்தகாசமாக சிரித்தார்.. விவேகானந்தா... உனக்கான வேலை உலகில் பல இருக்கிறதே...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...