748 - ஸ்கூல் லீவு விட்டாச்சு...

வணக்கம் நண்பர்களே,

கடவுள் உங்களுக்கு எவ்வளவு அன்பான கணவன் மனைவி குழந்தைகள் இவற்றை கொடுத்து இருக்கார் என்று யோசித்து பாருங்கள். உங்களுக்காகவே வாழும் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான் இந்த உலகின் உன்னதமான சொத்து. அவங்களை விட இந்த உலகில் சிறந்த மனிதர்கள் யாருமே கிடையாது இது தான் உண்மை.

நான் எழுதும் காதல் கதைகளோ கவிதைகளோ அல்லது சிறு கதையோ ரொம்பவே ஆளை மயக்குற மாதிரியே இருக்கும். ஆனால் இந்த கதையெல்லாமும் முழுக்க முழுக்க போலியான கற்பனை கதைகளே.

ஓவ்வொரு எழுத்தாளனும் இந்த உலகில் ஏதாவது ஓர் சிறு மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறான்.அப்படித்தான் நானும்.

ஓர் நாள் தற்செயலாக மார்க்கெட் வழியாக போகும் போது. என்னோட வந்த ஓருவர் தம்பி அந்த கடையில் டீயும் உருளைகிழங்கு போண்டாலும் அருமையா இருக்கும்.நாம போக வேண்டிய இடம் எப்படியும் போக இன்னும் மூணு மணி நேரம் ஆகும் அதனால் இதை சாப்பிட்டு விட்டு போனா பசிக்காது வாங்க போகலாம் என்றார் 

மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் ஓர் வயதான தாத்தா தன்னால் சுமக்க கூட இயலாது என்பதை கூட அறியாமல் ஓர் பை நிறைய புத்தம் புதிதான காய்கறிகளும் இன்னொரு பையில் சிறந்த பழவகைகள் விதவிதமான பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் சில பண்டங்கள் சகிதமாக வந்து நாங்கள் நின்ற கடையில் அருகில் நின்றார்.

என்ன தாத்தா நம்ம கடையில் டீ குடிக்க வாங்க சொன்னா கூட  வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி பேசுவீங்க.. இன்னிக்கு என்ன முகத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது.

இந்த வயதில் கூட தலைக்கு தொப்பியோ குடையோ இல்லாம வெயிலில் எங்கே இருந்து வாறீங்க என்ற கடைக்காரன்.

அட அடுத்த வாரம் என்னோட மருமகள் பேரன் பேத்தியை கூட்டிக்கொண்டு இங்கே வரப்போறா அதான் அவங்களுக்காக வாங்கிட்டு போறேன்.

சரி சரி சூடா இஞ்சி டீ போடுப்பா.. சாப்பிட ஏதாவது இருக்கா...எகத்தாளமாக கேட்டார்.இரண்டு உளுந்தவடையும் கார சட்னியும் பார்சல் பண்ணு ‌.ரொம்ப நாளைக்கு பிறகு பேரன் பேத்தி வரப்போறாங்க என்ற சந்தோஷத்தில் கிழவி வீட்டில் இருக்கும் எல்லா பாத்திரம் வீடுன்னு சுத்தம் பண்ணிட்டு கிடக்குது.. சரியான லூசூ பிடிச்சவ.

நாற்பது வருஷமா கூடவே இருக்கிறேன் நான் எதாவது கேள்வி கேட்டா கூட சமயத்தில் மதிச்சு பேசவே மாட்டாள்.


அரை மணி நேரம் கழிச்சு நீங்க எதாவது கேட்டீங்களான்னு நம்மகிட்ட கேள்வி கேட்டு உயிரை எடுப்பா.

நமக்கோ வயசாகி போச்சு.நினைச்ச விஷயத்தை உடனே பேச வேண்டி இருக்கு இல்லாட்டி பத்து நிமிஷம் கழிச்சு நான் எதையோ கேட்க நினைச்சேனே அப்படின்னு இரண்டு நாளாக யோசிக்க வேண்டியதா இருக்கு.

என்ன செய்யுறது கிழவி ஏற்கனவே மரமண்டை கேலியாகவும் சத்தமாக தனது மனைவியை இளக்காரமாக பேசி சிரித்தார்.

எப்போதும் அப்படி கேலி பேசாத மனிதன் தனது பேரன் பேத்தி பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் அப்படி சிரித்து பேசினார்..

சில நிமிடங்கள் கழித்து சரிப்பா நான் நாளைக்கு வருகிறேன் என்றபடி கிளம்பினார்.


தாத்தா இவ்வளவு சுமையை தனியா தூக்கிட்டு போறீங்களே.ஆட்டோ அமர்த்தி விடவா.

நீ வேற பிறகு வீட்டுக்கு போன கூட.. யோவ் கிழவா உனக்கு ரூபாய் கொழுத்து போய் கிடக்குதா... பென்ஷன் வாங்கி தான் சாப்பிடுறோம் நினைவுல இருக்கட்டும் என்று திட்டுவா.. அதுக்கு நான் நடந்தே போகிறேன் என்றே சென்றார்.

இந்த நிகழ்வு எல்லா ஊரிலும் நடக்கும் ஓர் நிகழ்வு தான் ஆனால் வயதான காலத்தில் அந்த மனிதரின் முகத்திலும் மனதிலும் ஏற்பட்ட சந்தோஷம் தான் எவ்வளவு உன்னதமானது.

பக்கத்துல டீ கிளாஸ் கழுவிக்கொண்டு இருந்தவன் .. மெதுவாக முணுமுணுத்தான். எப்பவுமே காசு செலவு பண்ணாத பெருசு இன்னிக்கு எப்படி திமாரா பேசிட்டு போகுது பார்த்தீங்களா முதலாளி என்றான்.

டேய் விடுடா அவர் அரசாங்கத்தில் வேலை பார்த்த ரிடையர் ஆன மனுஷன் அவர் மட்டும் லஞ்சம் வாங்கி இருந்தா நம்ம தெருவில் பாதி தெருவை வாங்கி போட்டு இருக்கலாம் ஆனால் நீதி நியாயம் என்று பேசி பேசி கடைசி வரைக்கும் நல்லவராவே வாழ்ந்துட்டாரூ.

உனக்கு ஒண்ணு தெரியுமா இவர் வயசுல இருக்கிற பாதிக்கு மேல் வியாதி மருந்து ஆஸ்பத்திரி என்று தான் அலைஞ்சுட்டு இருக்காங்க ஆனா கடவுள் புண்ணியத்தில் இவருக்கும் இவரோட வீட்டு பாட்டிக்கும் எந்த நோயும் கடவுள் கொடுக்கலை. ஓர் லட்சம் சம்பளம் வாங்கின பிறகும் செலவு ஆகுது என்று கடன் வாங்கும் மக்கள் வாழும் இன்றைய காலகட்டத்தில் இவரோட பென்ஷன் மற்றும் சொந்த வீடு தான்.

 யாராவது கல்யாண பத்திரிக்கை கொடுத்தா கூட பாட்டியும் தாத்தாவும் ஓர் மணிநேரம் காத்திருந்து பஸ்ஸில் தான் போவாங்களே தவிர எனக்கு வயசாயிடுச்சு எனக்கு கார் அமர்த்தி விடுங்க அப்போ தான் கல்யாணத்துக்கு வருவேன் என்று மத்தவங்க மாதிரி வீம்பு பண்ண மாட்டாங்க.


இன்னொரு விஷயமும் கேளு இவங்க பையனும் பொண்ணும் வெளிநாட்டில் பெரிய கம்பெனியில் நிறைய சம்பாதிச்சாலும் அவங்ககிட்ட இதுவரைக்கும் ஓர் பைசா தாத்தா வாங்கலை தெரியுமா.

ஆமாம் நீங்க போய் பார்த்தீங்களாக்கும்.

டேய் முட்டா பயலே போன வாரம் நம்ம கடையில் வந்து இரண்டு மணிநேரம் உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு போனாறே ஓர் தாத்தா.

ஆமாம் அவர் கூட இவருஇஅகாக தானே அவ்வளவு நேரம் காத்துகிடந்தாரூ. வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னதா சொன்னாரே.


அடேய் இவரோட பாட்டி பகலில் தான் தூங்குவாங்க அதனால் தான்.

அப்போது அவர் தான் சொன்னாரூ இவரோட மகன் பெரிய இடத்தில் வேலை பார்த்தாலும் அதை காட்டி இவர் யாரிடமும் ஜம்பம் காட்ட மாட்டாரூ என்று 

அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டபோது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது 

நாங்கள் கிளம்ப இருந்த நேரத்தில் எதிரே அனாதை இல்லத்தை சார்ந்த ஓர் வேன் வந்து நின்றது அதில் இருந்து சில குழந்தைகள் இறங்கி கடைக்குள் சென்றனர்.

வண்டிக்கு பின்னால் ஓர் ஆடம்பரமான கார் வந்து நின்றது.. அதில் இருந்து ஓர் பணக்கார தோரணையில் ஓருவர் இறங்கி வந்தார். அவருடன் அவர் சார்ந்துள்ள மதகுரு போல் இன்னொருவர்.


இருவரும் பேசிக் கொண்டது காதில் விழுந்தது சார் நீங்க கவலையே படாதீங்க இந்த அனாதை குழந்தைகளுக்கு இன்று நீங்கள் வாங்கி கொடுக்க டீயும் வடையும் வாங்கி கொடுக்கிற புண்ணியம் உங்களை மட்டும் தான் சாரும்.


அவருக்கு பின்னால் இறங்கி வந்த ஓர் நடுத்தர வயது பெண் அவருக்கு அருகில் வயதான பெண்மணி ஒருத்தர்.

ஏன்டீ உன் புருஷனுக்கு அறிவே இல்லைடீ.சாமியார் பேச்சை கேட்டு இவங்களுக்கு சோறு போட்டா எல்லாம் சரியா போயிடுமா.. இவரோட வயசான அம்மாவும் அப்பாவும் கஷ்டப்படும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரமாட்டேன் சொன்னவர் தானே இழரூ.‌இப்போ வெளிநாட்டு வேலை போயிடுச்சு என்றவுடனே தான் தருமம் பண்ணுறாரே...


ஏனோ மனசு வசிக்கத் தான் செய்தது...

கடவுள் உங்களுக்கு இப்போ கொடுத்து இருக்கும் வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். 

தயவுசெய்து நண்பர்களே உங்களோட வயதான அம்மா அப்பா அல்லது பாட்டி தாத்தா இப்படி யாராவது இருந்தா அவங்களை போய் பாருங்க. அவங்களோட ஆசிர்வாதம் உங்க தலைமுறைக்கும் பாதுகாப்பா இருக்கும்.

கடவுள் எந்த காலத்திலும் நேரில் வர மாட்டார். தன்னோட தூதுவர்களை தான் உலகிற்கு அனுப்பி வைப்பார்.

பல பணக்கார வீடுகளில் பணத்தை தேடி தேடி ஓடும் மனிதர்கள் தங்களின் அம்மா அப்பாவை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. கொஞ்ச நேரம் அவங்க கூட உட்கார்ந்து பேசுங்க.. whatsapp, YouTube Twitter Facebook என்று உலகின் ஏதோவொரு மூலையில் வாழும் மனிதனோடு பேசும் நீங்க கடவுள் உங்களை இந்த உலகில் நல்லா பார்த்து கொள்வதற்காக அனுப்பி வைத்த தூதுவர்கள் தான் உங்க அப்பாவும் அம்மாவும் என்பதை மறந்துடாதீங்க 

எப்படி நீங்கள் உங்கள் குழந்தைகள் உங்களோட பேச்சை கேட்டு நடக்கணும் என்று கண்டிப்பு காட்டுறீங்களோ அதை மாதிரி தானே நீங்க குழந்தையா இருக்கும் போது அவங்க உங்க மேலே கண்டிப்பாக இருந்திருப்பாங்க. தயவுசெய்து அவங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிடாதீங்க.

தயவுசெய்து அவங்களுக்காக நீங்க வாழுங்கள். ஏன்னா அவங்களுக்கு உங்களை விட்டா வேறு யாரையும் தெரியாது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே 

கடவுள் உங்களுக்கு எவ்வளவு அன்பான கணவன் மனைவி குழந்தைகள் இவற்றை கொடுத்து இருக்கார் என்று யோசித்து பாருங்கள். உங்களுக்காகவே வாழும் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான் இந்த உலகின் உன்னதமான சொத்து. அவங்களை விட இந்த உலகில் சிறந்த மனிதர்கள் யாருமே கிடையாது இது தான் உண்மை.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...