747 -அப்துல் கலாம் இந்தியாவின் சிற்பி

இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்து இந்திய தேசத்தின் உயரிய அரியணையில் அமர்ந்த பிறகும்.

அந்த அரியணைக்கு உரிய ஆடம்பரத்தை சிறிதும் தொடாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்த ஓர் மிகச்சிறந்த மனிதர்.

காலம் அவரை மிகவும் சீக்கிரமாக அழைத்து சென்றார்.ஓர் வேளை அவர் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ குழந்தைகளின் மனதில் இந்திய நாட்டின் மாண்பிற்காகவும் முன்னேற்றத்துக்காகவும் இன்னும் பல சிறந்த மாணவர்களை உருவாக்கி இருப்பார்.

தனது குடியரசு தலைவர் பதவி முடிந்த பிறகு, ஓர் வேளை அவர் ஏதாவது அரசியல் கட்சி ஓன்றை ஆரம்பித்து இருந்தால் லட்சக்கணக்கான கல்லுரி மாணவரும் மாணவியரும் அந்த கட்சியில் சேர்ந்து இருப்பார்கள்.

ஆனால் அவருக்கு அரசியல் கட்சி தொடங்குவதில் துளியும் விருப்பமில்லை.

ஏனெனில் மக்களுக்கு நல்லது செய்ய ஓர் அரசியல்லாதியாக பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் நல்லது செய்ய முடியும் என்ற போலி ஜிகினா அவருக்கு தேவைப்படவில்லை.

குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகும் தன்னை ஓர் ஆசிரியராக காட்டிக் கொள்வதில் தான் முனைப்பு காட்டினார்.

ஆம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினால் மட்டுமே இந்திய தேசம் உலகளாவிய வர்த்தகத்திலும் உலக அரங்கிலும் சிறந்து விளங்க முடியும் என்பதை உணர்ந்தே செயல்பட்டார்.

அவர் தனது பேட்டியில் எந்த ஓர் இடத்திலும் கூட சினிமா சீரியல் பார்த்தது போல் சொன்னதில்லை.மாறாக தான் படித்த புத்தகங்களை பற்றி நிறைய பேசி இருக்கிறார்.

நல்ல புத்தகங்களை தேடிப் பிடித்து படியுங்கள்.நீங்கள் படிக்கும் புத்தகம் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதாக இருக்க வேண்டும்.அதேசமயம் இந்த சமூகத்திற்கு பயன் படும் வகையில் உங்களை ஓர் சிறந்த மனிதராக மாற்ற வேண்டும் அப்படிப் பட்ட புத்தஙங்களை வாங்கி படியுங்கள்.

பாட புத்தக கல்வியை தாண்டி நீங்கள் உங்களின் அறிவை கூர்மையாக்கினால் மட்டுமே உங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன சிறந்த தலைவர் அப்துல் கலாம்.

இன்றைய தினத்தில் அப்துல் கலாம் நம்முடன் இல்லை.ஓர் வேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் விண்வெளி சென்று திருப்பிய சுனிதா வில்லியம்ஸ் அவர்களை நேரில் சென்று பாராட்டி இருப்பார் என்பது மறுக்க இயலாத உண்மை.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...