சந்திரனை போன்ற
கணவனை நினைத்து
கற்பனையில் வாழும்
சராசரி பெண்களை
போல் அல்லாமல்.
சந்திரன் என்ன
அதை காட்டிலும் எனது
கனவும் ஆசையும் அதிகமென்றே
ஆகாயத்தில் கோட்டை கட்டும்
மனிதரையும் தாண்டியே..
விண்ணில் வாழ்வதை
சிந்தனை செய்து சாதிக்க
துடித்தது போலும்
இவரின் உள்ளம்
அதனால் தானோ
என்னவோ ஆகாயத்தில்
பறப்பதையும் தாண்டி
சிந்தனை சிறகுகளை
விரித்து தடம் பார்த்து
நடந்நு தரணியெல்லாம்
புகழும் வண்ணம்
விண்வெளியில்
ஒப்பற்ற ஓன்பது
மாதங்கள் வாசம் செய்து
வெற்றியோடு
திரும்பி இருக்கிறார் இ்த
விண்வெளி வீராங்கனை
சுனிதா வில்லியம்ஸ்.
No comments:
Post a Comment