752 - அட்சய திருதியை

இந்த தலைப்பில் எழுதப் போகும் கதைக்கும் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதை பற்றியது அல்ல இந்த கதை.. ஆனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்க போகும் ஓர் குடும்பத்தில் நடக்கும் ஓர் நிகழ்வு பற்றியதே இந்த கதை.. விரைவில்..

அஞ்சு பவுன் நகை வாங்கணும் என்று இந்த மனுஷன்கிட்ட பத்து வருஷமா சொல்லிக்கொண்டே இருப்பேன்..ஏதோ இந்த தடவையாச்சும் உங்க அப்பன் வாங்கி கொடுத்தாரே அதுவே பெரிய விஷயம் 

அட அக்கா அங்கே பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுது 

ஏய் புள்ள அத்தான் அக்காவுக்கு நகை வாங்கி கொடுத்துக்கு தான் இந்த மழையே.. சுற்றி இருந்த மாமனார் மாமியார் கொழுந்தியா மச்சான் என அனைவரும் சிரிப்பாக சிரித்தனர்.

அட சரியா சொன்னீங்க போங்க..

ஆரவாரமான கூட்டத்தில் அவனை அனைவரும் மட்டம் தட்டி பேசினாலும் அவனுக்கு ஆறுதலாக யாருமே வாய்திறக்க வில்லை.

அப்போது இரு மெல்லிய கரங்கள் அவனை தொட்டு தன் பக்கமாக திரும்பியது..

அந்த இரு கரங்களின் சொந்தக்காரன் யார் என்று திரும்பி பார்த்த போது அவன் பெற்று எடுத்த இரு குழந்தைகள்.

அப்பா கொஞ்சம் குனிந்துச்கோ எதுக்கு பாப்பா.. அப்பா சங்கவி சொன்னதை கேளூ.. மகனின் சொல்லை கேட்டு குனிந்தான்..

அப்பா நீ அழாதே உன்னோட கஷ்டம் எங்களுக்கு புரியது என்றன்... பத்து வயது கூட நிரம்பாத சங்கவி மற்றும் ரமேஷ்...

அவனையும் அறியாமல் அவனுக்கு கண்ணீர் பெருகியது.. அப்பா எந்த கஷ்டம் வந்தாலும் அழக்கூடாது என்று சொல்லி தந்த நீயே இப்போ ஏன் குழந்தை மாதிரி அழுறே...

எனக்குத்தான் பேசத் தெரியலை நீங்களாவது நல்லா பேசி பழகுங்க அப்போ தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும்.. சரி... உங்களுக்கு அப்பா ஐஸ்கிரீம் வாங்கித்தரட்டுமா..

வேண்டாம்ப்பா..நீ ஏற்கனவே நிறைய காசு செலவு பண்ணிட்டே...

ஏய் மச்சான் இப்படி இங்கே வாங்க உங்க மாமனார் அதான் எங்க அப்பா உங்க எல்லோருக்கும் டீயும் வடையும் வாங்கி தரப்போறாராம்..

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அந்த நகை கடை பஜாரில் சுற்றி நின்று கொண்டு இருந்த மக்கள் கூட்டம் அனைவரும் கேட்கும் படி சுந்தரேசன் சத்தமாக சொன்னான்.

அவனுக்கு மிகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.. தன்னோட பொண்டாட்டிக்கு பத்து பவுன் நகை வாங்கி கொடுக்க துப்பில்லையா என்ற ஆறு மாசத்துக்கு ஓர் முறை ஓவ்வொரு கல்யாண வீட்டிலும் அவமானபடுத்திய அதே மாமனார் இன்று தன் மகனை வைத்து இப்படி பலர் அறிய சொல்லுறாரே... அவனின் மனதில் எரிச்சலும் கோபமும் வந்தது.

ஆனால் டாக்டர் சொன்ன அறிவுரை மனதில் வந்து போனது சார் உங்க பொண்டாட்டிக்கு இதயத்தில் ஓர் சின்ன பிரச்சினை இருக்கு. அதனால் அவங்களை நீங்க மனசு கஷ்டப்படாம பார்த்துக் கொள்ளணும்.

அப்படி என்ன நோய் என்ன மருந்து இதையெல்லாம் விசாரணை செய்யும் அவளுக்கு நான் என்ன புத்திசாலியா... குடிகார அப்பா.. எப்போதும் சண்டை சச்சரவு என்று வீட்டில் இருந்த காரணமாக படிக்க பிடிக்காமல் போனது.

அவர் குடிகாரனா இருந்தாலும் ஊரில் சிறந்த பள்ளியில் தான் தன் மகனுக்கு சீட் வாங்கி கொடுத்தார்.

டேய் அரவிந்த் இந்த தெருவில் இருக்கிற எல்லா பிச்சைகார பயலுக்கு நீதான்டா போய் சொல்லணும்.. என் பையனுக்கு எல்.கே.ஜி சேர்த்து இருக்கேன்..ஏதா என்னால் முடியாது என்று கேலி பேசினாராமே உங்க சகலைப்பாடி ரஞ்சித்...

இப்போ பார்த்தீயா..சுளையா 50,000 கொடுத்தேன்...பிரின்ஸ்பால் உங்க பையனுக்கு இல்லாத சீட் வேற யாருக்கு கொடுக்க போறோம் என்று காலில் விழாத குறையா எழுந்து நின்று பேசினான்டா..


டேய் பிச்சைக்கார பயலுகளா...எவனாவது எல்.கேஜி -க்கு தன் பையனுக்கு 50,000 கொடுத்து இருக்கீங்களா...போதை தலைக்கு ஏறியது நன்கு வேலை செய்து கொண்டு இருந்தது... அந்த தெருவில் இருந்த எல்லோருமே மாத சம்பள வேலைக்கு செல்லும் உயர் ஜாதி வகுப்பை சார்ந்தவர்கள்..

மாத சம்பளம் வேலைக்கு போகிறவன் தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஓர் அற்ப தனமான சிந்தனை கொண்ட மக்கள்.

ஆனால் பரந்தாமன் அப்படிஇல்வை கிடைச்ச வேலையை நல்லா செய்யணும் அதுக்கு முதலாளி பார்த்து கொடுக்கும் காசை எந்த சத்தமும் இல்லாம வாங்கி கொண்டு வந்து பொண்டாட்டி கையில் முழுவதும் கொடுக்கணும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருந்தான்.

இதெல்லாம் ஆறு மாசத்துக்கு முந்திய கதை.அப்போது சாராய கடை தெரியுமா என்றால்.. சாராயமா அப்படின்னா அது என்னது ..அதை பயன்படுத்தினா வாழை நல்லா வளருமா என்று தான் கேட்டு இருப்பான் ஆனால் இன்றோ அவன் ஓர் ஊருக்கு வேலைக்கு போய் வருகின்றான் என்றால் அந்த ஊரில் இருக்கும் எல்லா சாராய கடையும் அவனுக்கு அத்துப்படி.

ஏன் எப்படி எதனால் இப்படி பரந்தாமன் மாறிப் போனார்..பரந்தாமனுக்கும் இன்று தங்க நகை வாங்கி யவனுக்கும் என்ன சம்பந்தம் அறிந்து கொள்ள காத்திருங்கள் கதை தொடரும்...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...