753 - அவனைப்போல ஒருவன் அரிது.. .



அது ஓர் அந்தி மாலை பொழுது..
கோவிலின் நடை சாத்தப்படுவதற்கு முன்பாக செய்யப்படும் வழிபாடு அது.

சில நிமிடங்களில் பேசி பழகியவன், யார் என்று கூட விசாரணை செய்யாமல்.. என் பின்னே ஏதொவொரு நம்பிக்கையில் உடன் வந்த நண்பன்...

என்றும் தனியாகவே, கூட்டத்தில் ஒருவனாய் நான்.ஏனோ அந்த நாள் மிகவும் சிறப்பானது..
ஏனென்றால் ஓர் நல்ல நண்பன் என்னுடன் நின்றான்..

அவன் தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை தான்.அவனால் பிறரை எளிதில் நம்ப முடிகிறது. சிலர் அல்ல பலர் அவனது அன்பை தவறாக புரிந்து கொண்டது உண்டு.ஆனாலும் அவன் தனது இயல்பை மாற்றவில்லை..

சின்னஞ்சிறுவர்கள் தாரை தப்பட்டை வாத்திய கருவிகள் முழங்க தயாராயினர்.. எனக்கு இந்த சத்தம் என்பது ... அவன் சொன்ன ஓவ்வொரு சொல்லும் நினைவில் உண்டு..
ஏனோ மனம் கனமானது.அப்படியெனில் எத்தனை ஆழமாக தேடுதல் ரணம் அவனுக்குள்...

அவனுக்குள் இருந்த ரணங்கள் எத்தனையோ தெரியாது.ஆனாலும் தேவை எதுவும் இன்றி இருந்த எனக்கு, சில விஷயங்கள் வாழ்வில் தேவை என்பதை நினைவுபடுத்தியவன்.

பணத்தை பற்றி பேசவில்லை.அதை கேட்கவும் இல்லை.

வழிப்போக்கன் போல வந்து நட்பை விதைத்து விட்டான்.
என்றாவது ஓர் நாள், அந்த இசை கேட்கும் தருணங்களில்.. அல்லது ..இன்றும் அந்த இடத்தை கடக்கும் போது நினைவு வரும்..."...... அவசியம் தான் புரியுது.. ஆனால்" அவன் சொன்ன வார்த்தைகள்.. நெஞ்சில் நினைப்பதுண்டு...

அவனைப்போல ஒருவன் அரிது..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...