762 -தன்னம்பிக்கை

 பணத்தை விட 

பாசமே பெரியதென்று 

அடிக்கடி பேசிச் சிரிக்கும் 

மச்சான் கூட தெரு வீதியில் 

முகத்துக்கு நேராக பார்த்த 

பிறகும் விலகியே 

செல்கிறான் .. எதிர்பாராத 

விதமாக வேலையை 

இழந்த அத்தானை ஏதோ 

சாக்கடையில் விழந்த 

புழுவை போல் பார்த்தபோதே 

புரிந்தது.. என்னோட தம்பியின் 

பாசமெல்லாம் வெளி வேஷம் 

உங்களுக்கு பட்டால் தானே 

புத்தி வரும்.. மனைவியின் 

கோபத்தில் உண்மை இருந்தது 

மச்சானின் மயக்கும் மொழியெல்லாம் 

காசைத்தான் தேடியது போலும்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு 

வீடு தேடி வந்த அதே மச்சான்..

அத்தான் உங்களுக்கு பெரிய 

இடத்தில் வேலை கிடைச்சதா 

கேள்விப்பட்டேன்..காசு வந்ததும் 

இந்த ஏழை மச்சானை மறந்துடாதீங்க 

பணத்தை விட பாசம் தான் பெருசு..

சமையலறையில் இருந்தபடி 

ஏதோ சொல்ல வந்தவளை 

கண்சாடையில் சொன்னேன்...

உலகத்தை நல்லா புரிஞ்சு கிட்டேன் 

நீ பேசாம பொறுமையா இரு ..

மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் 

பணத்தை விரும்பியவன் 

பாசத்தை இழக்கிறான்.. ஆனால் 

பாசத்தை நினைத்தவன் 

பணத்தை இழந்தாலும் 

இழக்கவில்லை தன்னம்பிக்கை 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...