760 - அரசியல் சூதாட்டமா சூழ்நிலை கைதியா

பொறுப்பு துறப்பு -கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே யாராவது ஒருவரின் வாழ்க்கையில் இதே போன்ற சம்பவம் நடந்திருந்தால் அது தற்செயலானதே 

 மன்னன்...அமைச்சரே எனது அரண்மனைக்கு வெளியே என்ன அதற்கு ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார் இவ்வளவு சத்தம் ஏதாவது எதிரி நாட்டு அரசர் படையெடுத்து வந்துவிட்டாரா.


அமைச்சர் -.. நம் மீது படையெடுக்கும் துணிச்சல் எந்த மன்னருக்கும் கிடையாதே..

மன்னன் - ஆமாம்.. ஆமாம் எனது பெயரை சொன்னாலே எதிரி நாட்டு வீரர்கள் ஓடி விடுவார்களே..


அமைச்சர் -- மன்னா என்னை மன்னிக்கவும் நம் நாட்டின் மீது யாருமே படையெடுத்து வர முடியாது அதற்கு நமது எல்லை காவல் இரவு பகலாக காவல் காக்கும் வீரர்களின் தைரியமே போதும்.


மன்னன் -  அமைச்சரே என்னை குழப்பாதீர்கள்...எதிரி நாட்டு வீரன் படையெடுப்பு செய்யவில்லை..பிறகு எதற்காக கோட்டைக்கு வெளியே இவ்வளவு சத்தம் 


அமைச்சர் - மீண்டும் என்னை மன்னிக்கவும் மன்னா..இது அரண்மனைக்கு வெளியே இருந்து கேட்கும் சத்தமல்ல 

மன்னன் - பிறகு எங்கிருந்து வருகிறது ஏதாவது உள்நாட்டு குழப்பமா..

அமைச்சர். -மன்னா  உள்நாட்டு கலகம் எதுவும் இல்லை..இது உங்களின் உள் குடும்பத்து குழப்பம்... நீங்கள் உயிரோடு இருக்கும் போதே உங்களுக்கு பிறகு யார் நாற்காலியில் அமர்வது என்ற போட்டியில் ஓருவரை ஓர் சிக்கலில் மாட்டி விட்டு குடும்பத்திற்குள் சண்டை செய்கின்றனர்.



மன்னன் - என்ன செய்வது அமைச்சரே உலகில் பல சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னராட்சிகள் தங்கள் வாரிசு சண்டையில் தான் ஆட்சியை இழந்திருக்கின்றனர்.



அமைச்சர் -  ஆமாம் மன்னா எல்லாருக்கும் உங்களை போல் விட்டுக் கொடுக்கும் மனநிலை இல்லை... நானே தலைவன் நானே தலைவன் என்று அடித்து கொள்கின்றனர்..

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...