இந்த மலர் காய்ந்து விட்டது, இதற்கு மேல் இங்கு இருந்தால் நமக்கு இடைஞ்சல் குப்பையா தெரியும் என்று தூக்கி குப்பையில் வீசப்படும் மலர்கள்.
மன்னிக்கவும் நன்றாக உபயோகப்படுத்திய சுயநல மனிதர்களின் பார்வையில் அது குப்பை.
ஆனால் அந்த குப்பையில் கூட சிறந்த பொருளை காணும் சில அற்புதமான மனிதர்களை கடவுள் படைத்திருக்கிறான்.
ஏனென்றால் உபயோகமற்ற பொருளில் தான் கடவுளுக்கு படைக்கும் பொருட்கள் செய்யப்படுகின்றன.
ஆமாம், மூலப்பொருளை வாங்க கூட காசில்லாத சிலர் அந்த காய்ந்த மலர்களை மிகவும் கவனமாக சேகரித்து, தொட்டாலே தூள் தூளாக போகும் பலனின்றி இருக்கும். அதை சிரமப்பட்டு அதிக அக்கறை எடுத்து மிகுந்த கவனமாக அதில் தங்களின் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து அதிலிருந்து
இருந்து வாசனை மிகுந்த திரவியம் மற்றும் அகர்பத்திகளை செய்கின்றனர்.
என்ன Ram, உனக்கு என்ன பைத்தியமா இப்படி எல்லாம் ஏன் எழுதுற என்று நீங்கள் கேட்கலாம்.
என் மனதில் தோன்றிய சிந்தனை ஓன்றே ஓன்று தான்.
இந்த உலகில் பல திறமையானவர்கள், சில திறமையற்ற மனிதர்களால் உதாசீனம் செய்யப்படுகின்றனர் என்பதே யதார்த்தம்.
தங்களின் தேவையோ கோரிக்கையோ முடிந்த பிறகு, அந்த மனிதரை மிகவும் கேவலமாகவும் ஓர் அற்புதமான புழுவை போலவும் நடத்துகின்றனர்.
சில சுயநலவாதிகள் பல திறமையானவர்களை களிமண், மரமண்டை, மக்கு, பேசத் தெரியாதவன், முன் கோபி, பணக்கார புத்தி, படிச்ச திமிர், பரம்பரை குணம், அரசாங்க சம்பளம் வாங்குற நினைப்பு என்று இன்னும் எப்படி எல்லாமோ கேலியும் நக்கலும் செய்து திறமையானவர்களை திறமையற்றவர் போல நடத்துகின்றனர்.
அப்படிப்பட்ட சில அல்ல பல மனிதர்களை தினமும் வாழ்க்கையில் சந்திப்பதால் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் இறந்து போன அந்த உயர் போலீஸ் அதிகாரியை பற்றிய கருத்துக்கள் கூட அவர் திறமையானவர் நேர்மையானவர், ஆனால் இந்த முடிவு அவர் எடுத்ததை நினைத்து மனம் மிகவும் வேதனைப்படுகிறேன் என மற்றொருவர் சொன்னதை கேட்ட போது, ஏனோ மனம் வலிக்கவே செய்தது.
என் சிறு வயதில் எனது அப்பா தனது அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் "சில நேரங்களில் நான் பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டா" என்ன அப்படின்னு தோணுது என்று பேசிய பேச்சுக்கள் நினைவு வருகிறது.
ஆனால் குழந்தைகளை நினைச்சு அவங்களுக்காவது நாம வாழும் என்று சொன்னதும் நினைவு வருகிறது
அரசு அதிகாரியாக நேர்மையான, இருக்கிறதும், வேலையை விட்டு வெளியே வரும் போதும் அதே நல்ல பெயருடன் வெளியே வரணும் அவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள்.
அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போன தருணங்கள் உண்டு.
மீண்டும் ஓர் விஷயத்தை அழுத்தமாகவும் அதே சமயம் மிகுந்த யோசனைக்கு பிறகுமே இதை எழுதுகிறேன்
சிலரால் தூக்கி வீசும் குப்பையில், இருந்து பொருட்களை சேகரித்து வாழும் மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள்.
ஆம் திறமையற்றவர் என முத்திரை சுமத்தும் சோம்பேறிகளை கண்டு அஞ்சாதீர்கள்
தூக்கி வீசப்பட்ட மனிதர்களின் அருமையான உழைக்கும் குணமும் அர்பணிப்புடன் வேலை பார்க்கும் தன்மையும், கண்ணுக்கே தெரியாத கடவுளுக்கு பயந்து வாழும் நல்ல குணமும், உடனிருப்பவருக்காக அவர்கள் வாழும் தன்னலமற்ற உணர்வு அறிந்தவர்கள் மிகவும் சிலரே.
"Same feather flock together ", என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
பிறரால் துன்பத்தை அனுபவித்த மனிதனால் தான் பிறருக்கு ஏற்படும் வலியும் வேதனையும் புரியும் தன்மை உண்டு.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் youtube-ல் வீடியோ பாருங்கள். ஓர் சில மனிதர்கள் குப்பையில் வீசப்பட்ட காய்ந்த மலர்களை சேகரித்து வாசனை மிகுந்த அகர்பத்தியாக செய்கின்றனர்
காய்ந்த மலர்களை அகர்பத்தியாக மாற்றும் விதத்தை அதில் காண முடியும்.
எந்த மனிதனும் திறமையற்றவர் கிடையாது.. நீங்கள் இருக்கும் இடத்தை பொருந்ததே சிலர் கடுமையான வார்த்தைகள்.
வாழுங்கள் மனிதர்களே, உங்களின் வலிகளையும் வேதனையும் யாருக்கும் தெரியாத வண்ணம்.
அதே சமயம் நீங்கள் வாழும் வாழ்க்கையை பிறர் பின்பற்றும் விதமாக பயனுள்ள வாழ்க்கையை வாழுங்கள்.
மனித வாழ்வு அதிக பட்சமாக 90 வருடங்கள் தான், வாழும் வரையும் வாழந்த பிறகும் உங்களின் செயல் பேசப்படும் அளவுக்கு.
காய்ந்த மலருக்கும் வாழ்வு உண்டு.
https://youtu.be/OLzQiw0sv5s
No comments:
Post a Comment